புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காரை அண்மையில் டெஸ்ட் டிரைவ் செய்தோம். அந்த அனுபவத்தை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

கடந்த 1972ம் ஆண்டு விற்பனைக்கு வந்த மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் கார் உலகின் மிகச் சிறந்த சொகுசு கார் என்ற நன்மதிப்பை நீண்ட காலமாக தக்க வைத்து வருகிறது.

கால மாற்றத்துக்கும், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கும் தக்கவாறு அவ்வப்போது மேம்படுத்தப்பட்டு வரும் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் உயர் வகை சொகுசு கார் மார்க்கெட்டில் நம்பர்- 1 மாடலாக வலம் வருகிறது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ்... என்றென்றும் ஏ க்ளாஸ்...!!

கார் நிறுவனங்களின் மிக உயர் வகை மாடல்களை ஜெர்மானிய மொழியில் 'சண்டர்க்ளாஸ்' என்று குறிப்பிடப்படுவதுண்டு. அந்த வகையில், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் சண்டர்க்ளாஸ் மாடல்தான் இந்த எஸ் க்ளாஸ்.

வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தேர்வு வசதியை வழங்கும் விதத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காரில் இடைக்கால மேம்பாட்டு பணிகளுடன் புதிய மாடல் அண்மையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடலை ஹைதராபாத்தில் வைத்து டிரைவ்ஸ்பார்க் டீம் அண்மையில் டெஸ்ட் டிரைவ் செய்தது. அப்போது இந்த கார் குறித்து கிடைத்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

டிசைன்

டிசைன்

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் கார் தோற்றத்தில் பழைய மாடலை போன்றே ஒத்திருக்கிறது. கூர்ந்து கவனிக்கும்போது, காரின் தோற்றத்தை மெருகேற்றும் விதத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன.

பாரம்பரியமான மூன்று க்ரோம் பட்டைகளுடன் கூடிய பிரம்மாண்ட க்ரில் அமைப்பு தக்கவைக்கப்பட்டு இருக்கிறது. புதிய ரேட்டியேட்டர் க்ரில் அமைப்பு கருப்பு வண்ணப் பூச்சு கொடுக்கப்பட்டு வசீகரிக்கிறது. புதிய எல்இடி ஹெட்லைட் ஹவுசிங் மற்றும் தனித்துவமான மூன்று வரிக்கோடுகள் போன்று ஒளிரும் எல்இடி பகல்நேர விளக்குகள் முத்தாய்ப்பான விஷயமாக இருக்கிறது.

இந்த எல்இடி பகல்நேர விளக்குகளில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் அடங்கியிருக்கிறது. ரக வாரியாக இந்த எல்இடி பகல்நேர விளக்குகள் வரிசை கொடுக்கப்படுகிறது. சி க்ளாஸ் காரில் ஒரு வரிசை எல்இடி பகல்நேர விளக்கும், இ க்ளாஸ் காரில் இரண்டு வரிசை எல்இடி பகல்நேர விளக்கும், எஸ் க்ளாஸ் காரில் மூன்று வரிசைகளும் கொடுக்கப்பட்டு இருப்பது கவனிக்கத்தக்கது.

முன்புற பம்பர் அமைப்பு 24மிமீ வரையிலும், பின்புற பம்பர் அமைப்பு 31மிமீ வரையிலும் அகலம் கூடி இருக்கிறது. பம்பரில் சில க்ரோம் அலங்கார வேலைப்பாடுகளும் வசீகரத்தை கூட்டும் விஷயமாக இருக்கின்றன.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ்... என்றென்றும் ஏ க்ளாஸ்...!!

பக்கவாட்டு டிசைன் சொகுசு கார்களுக்கு உரிய அந்த மிடுக்கான தோற்றத்தையும், க்ரோம் அலங்காரங்களும் காரின் தோற்றத்தை சிறப்பானதாக மாற்றி காட்டுகிறது. முன்புற வீல் ஆர்ச் முதல் பின்புற டெயில் லைட் க்ளஸ்ட்டரை இணைக்கும் விதத்தில் வலிமையான பாடி லைன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. கண்ணாடி ஜன்னல்கள் மற்றும் கீழ்புறத்தில் க்ரோம் பட்டை அலங்காரம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கார் 3,035மிமீ வீல் பேஸ் கொண்டிருப்பதால் பெரிய காருக்குரிய தோற்றத்தையும் கம்பீரமாக காட்டுகிறது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ்... என்றென்றும் ஏ க்ளாஸ்...!!

காரின் பின்புறம் பழைய மாடலை ஒத்திருக்கிறது. எல்இடி டெயில் லைட்டுகள் டிசைனில் கூட மாற்றங்கள் செய்யப்படவில்லை என்பது சற்று ஏமாற்றம். பின்புற பம்பரின் இருமருங்கிலும் இரண்டு புகைப்போக்கி குழல்களும் க்ரோம் பட்டைகள் புடைசூழ காட்சி தருகிறது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ்... என்றென்றும் ஏ க்ளாஸ்...!!

இந்த காரின் ஒட்டுமொத்த டிசைன் பழைய மாடலை அப்படியே ஒத்திருப்பது போன்று சிலருக்கு தோன்றலாம். எனினும், சிறிய மாற்றங்கள் மூலமாக காரின் வசீகரம் தொடர்ந்து தக்கவைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி. எனவே, தோற்றத்தில் வாடிக்கையாளர் மனதில் எளிதில் இடம்பிடிக்கும்.

இன்டீரியர்

இன்டீரியர்

சொகுசு கார் என்றவுடனே உள்ளே ஏறும்போது ஏகப்பட்ட வசதிகளும், ரம்மியமான சூழலும் எதிர்பார்ப்பது மனித இயல்பு. இதனை கச்சிதமாக நிறைவேற்றும் விதத்தில், இந்த காரின் ஏசியுடன் வாசனை திரவியங்கள் நறுமணம் சேர்ந்து வரும் விதத்தில் புதிய வசதி சேர்க்கப்பட்டு இருக்கிறது. இது நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு புது வித அனுபவத்தை தரும்.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ்... என்றென்றும் ஏ க்ளாஸ்...!!

அதேநேரத்தில், காரின் உட்புற டிசைனில் பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லை. தொடு உணர் பட்டன்கள் மற்றும் கன்ட்ரோல் நாப் வசிதியுடன் கூடிய ஸ்டீயரிங் வீல் முக்கிய அம்சம். இதன்மூலமாக, இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை எளிதாக கட்டுப்படுத்த முடியும். அதாவது, ஸ்மார்ட்போனை எளிதாக இயக்குவது போன்ற இந்த வசதி ஓட்டுனருக்கு சிறப்பானதாக இருக்கும்.

இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்

இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்

புதிய எஸ் க்ளாஸ் காரில் இரண்டு 12.3 அங்குல திரைகள் டேஷ்போர்டில் பொருத்தப்பட்டு இருக்கின்றன. ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமாகவும் மற்றொன்று இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டராகவும் பயன்படுகிறது. தொடு உணர் பட்டன்கள், டச்பேடு மூலமாக இந்த சாதனங்களை கட்டுப்படுத்த முடியும். அத்துடன், வாய்மொழி உத்தரவு மூலமாகவும் கட்டுப்படுத்தலாம். ஒரு கண்ணாடி அமைப்பில் இந்த இரண்டு திரைகளும் கொடுக்கப்பட்டு இருப்பது மிக நேர்த்தியான தோற்றத்தை டேஷ்போர்டிற்கு தருகிறது.

முக்கிய வசதிகள்

முக்கிய வசதிகள்

இந்த காரில் இடம்பெற்றிருக்கும் சில கூடுதல் வசதிகளை கீழே காணலாம்.

  • 64 வண்ணங்களில் ஒளிரும் ஆம்பியன்ட் லைட் சிஸ்டம்
  • 6 விதமான நறுமணத்தை வழங்கும் ஏர் பேலன்ஸ் பேக்கேஜ்
  • எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் வசதியுடன் 43.5 டிகிரி கோணத்தில் சாய்மான வசதியை வழங்கும் பின் இருக்கை
  • சாஃபர் பேக்கேஜ் - முன்பக்க பயணி இருக்கையை முன்புறமாக நகர்த்தி வைக்கும் வசதி
  • பனோரமிக் ஸ்லைடிங் சன்ரூஃப்
  • வயர்லெஸ் சார்ஜர்
  • 13 உயர் துல்லிய பர்ம்ஸ்டெர் ஸ்பீக்கர்கள்
  • ஒட்டுமொத்தத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் காரின் இன்டீரியர் வாடிக்கையாளர்களின் எண்ண ஓட்டத்தை கச்சிதமாக பூர்த்தி செய்யும் வசதிகளை பெற்றிருக்கிறது. கூடுதலாக மர அலங்கார வேலைப்பாடுகள், உயர் வகை லெதர் இருக்கைகள் மற்றும் இதர அலங்கார அம்சங்களை விருப்பம்போல் தேர்வு செய்து கொள்ளலாம்.

    எஞ்சின்:

    எஞ்சின்:

    புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காரில் முக்கிய மாற்றமாக 3.0 லிட்டர் வி6 எஞ்சினுக்கு பதிலாக 6 சிலிண்டர்கள் கொண்ட 3.0 லிட்டர் டர்போசார்ஜ்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரக் கட்டுப்பாட்டுக்காக இந்த புதிய எஞ்சின் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், எஸ் க்ளாஸ் 350டீ என்று குறிப்பிடப்படும் இந்த எஞ்சின்தான் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தர நிர்ணயத்திற்கு இணையான இந்தியாவின் முதல் கார் மாடலாகவும் வந்துள்ளது.

    இந்த எஞ்சின் அதிகபட்சமாக 282 குதிரைசக்தி திறனையும், 600 என்எம் முறுக்குவிசையையும் வெளிப்படுத்தும். இரண்டு டன் எடை கொண்ட மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காரை இந்த சக்திவாய்ந்த டீசல் எஞ்சின் 0 - 100 கிமீ வேகத்தை 6 வினாடிகளில் எட்டிவிடும். மறுபுறத்தில் எஸ்-450 என்ற பெட்ரோல் மாடலில் இருக்கும் 3.0 லிட்டர் டர்போசார்ஜ்டு எஞ்சின் அதிகபட்சமாக 362 குதிரைசக்தி திறனை வழங்கும்.

    புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ்... என்றென்றும் ஏ க்ளாஸ்...!!
    மாடல் எஸ் 350டீ எஸ் 450
    எஞ்சின் 3.0 லி [டீ] 3.0 லி [பெ]
    பவர் (பிஎச்பி) 282 362
    டார்க் (என்எம்) 600 500
    டிரான்ஸ்மிஷன் 9ஜி ட்ரோனிக் 9ஜி ட்ரோனிக்
    ஆக்சிலரேஷன் [0-100km/h] 6.0 வினாடிகள் 5.1 வினாடிகள்
    டாப் ஸ்பீடு (km/h) 250 250
    விலை (எக்ஸ்ஷோரூம், டெல்லி) ரூ.1.33 கோடி ரூ.1.37 கோடி
    புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ்... என்றென்றும் ஏ க்ளாஸ்...!!

    புதிய எஸ் க்ளாஸ் காரின் டீசல் எஞ்சின் கார் ஐட்லிங்கில் நிற்கும்போதும் சரி, முழு செயல்திறனை வெளிப்படுத்தும் நிலையிலும் மிக மென்மையாக இருக்கிறது. அதிர்வுகள் மிக குறைவாக, இது டீசல் மாடல் என்பதை நம்ப முடியாத அளவுக்கு மிக சிறப்பாக இருக்கிறது. டர்போசார்ஜர்கள் சிறப்பாக ட்யூனிங் செய்யப்பட்டிருக்கின்றன. இதனால், டர்போலேக் குறைவாகவும், மிக சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துகிறது.

    இந்த காரில் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் துல்லியமாக இருப்பதுடன், விரைவாக ஆக்சிலரேட்டரை பொறுத்து விரைவான கியர் மாற்றத்தை வழங்குகிறது. இந்த கார் மணிக்கு 220 கிமீ வேகம் வரை எட்டும் வல்லமை கொாண்டது.

    கையாளுமை

    கையாளுமை

    பொதுவாக இதுபோன்ற கார்களை ஓட்டுனர் வைத்தே இதன் உரிமையாளர்கள் ஓட்டுவது இயல்பு. எனினும், உரிமையாளர் ஓட்டுவதற்கு விரும்பினாலும் சிறப்பான உணர்வை தரும். அதேநேரத்தில், இந்த காரின் கையாளுமை பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காருக்கு இணையாக துல்லியமாக இல்லை என்றாலும், ஓட்டுபவரை திருப்திப்படுத்தும் அளவில் இருக்கிறது.

    இந்த காரில் அடாப்டிவ் ஏர் சஸ்பென்ஷன் கொாடுக்கப்பட்டு இருப்பதால், அதிர்வுகள் இல்லாத சுகமான பயணத்தை வழஹ்குகிறது. மோசமான சாலைகளில் கூட பயணிப்பவருக்கு அதிக அலுங்கல் குலுங்கல் இல்லாத பயண அனுபவத்தை வழங்குகிரது. இந்த காரில் மிகச் சிறப்பான சப்தம் மற்றும் அதிர்வுகள் தடுப்பு அமைப்புடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

    முதல்முறையாக...

    முதல்முறையாக...

    புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காரில் அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டென்ஸ் சிஸ்டம்ஸ்[ADAS] கொடுக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பிட்ட தூரத்திற்கு ஓட்டுனர் உதவி இல்லாமல் இயங்கும் வசதியை இது அளிக்கும். இந்த காரில் லெவல்-2 என்ற தானியங்கி முறையில் இயங்கும் தொழில்நுட்ப வசதி உள்ளது. இதன்மூலமாக, ஓட்டுனர் உதவி இல்லாமல், இந்த கார் தானியங்கி முறையில் ஆக்சிலரேட்டர் கொடுத்து செல்லும். தேவையான சமயங்களில் தானியங்கி முறையில் பிரேக் பிடித்து நிற்கும். ரேடார், சென்சார்கள் மற்றும் கேமரா உதவியுடன் இந்த வசதியை அளிக்கிறது.

    லெவல்-2 ஆட்டோநாமஸ் தொழில்நுட்ப வசதி இருந்தாலும், இந்த காரின் ஸ்டீயரிங் வீலில் ஓட்டுனர் 15 வினாடிகளுக்கு ஒருமுறை கை வைத்து பிடித்தபடி செல்வது அவசியம். ஓட்டுனர் கவனம் சாலையில் இருப்பதற்காக இந்த தொழில்நுட்ப முறை பின்பற்றப்படுகிறது.

    புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ்... என்றென்றும் ஏ க்ளாஸ்...!!

    இந்த ஏடிஏஎஸ் எனப்படும் தானியங்கி டிரைவிங் தொழில்நுட்பம் மெர்சிடிஸ் நிறுவனம் டிஸ்ட்ரோனிக் சிஸ்டம் என்று குறிப்பிடுகிறது. டிஸ்ட்ரோனிக் மோடில் வைக்கும் முன்னால் மற்றும் பின்னால் வரும் வாகனங்களை கண்காணித்து போதிய இடைவெளியில் காரை செலுத்தும். அவசர சமயத்தில் தானியங்கி முறையில் காரை நிறுத்தும் வசதியும் உள்ளது. இந்த தொழில்நுட்ப வசதியுடன் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கும் முதல் கார் மாடல் இதுதான்.

    இந்த காரில் ஆக்டிவ் பிரேக் அசிஸ்ட் என்ற தொழில்நுட்பம் முன்னால் செல்லும் வாகனத்துடன் மோதுவதை தவிர்ப்பதற்கு உதவுகிறது. ஓட்டுனர் பிரேக் பிடிக்க தவறினாலும் சரியாக காரை நிறுத்திவிடும். லேன் கீப் அசிஸ்ட் மற்றும் பிளைன்ட் ஸ்பாட் டிடெக்ஷன் சிஸ்டம் போன்ற தொழில்நுட்ப வசதிகளும் உள்ளது.

    டிரைவ்ஸ்பார்க் கருத்து

    டிரைவ்ஸ்பார்க் கருத்து

    சொகுசான பயணம், கையாளுமை, வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள், தானியங்கி டிரைவிங் தொழில்நுட்பம் என்று பல்வேறு விதத்தில் மிகச் சிறந்த சொகுசு கார் மாடலாக தொடர்ந்து தன்னை தக்க வைத்துக் கொள்கிறது புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் கார். பின்னால் அமர்ந்து பயணம் செய்யும் பெரும் பணக்காரர்களுக்கான நம்பர்-1 சாய்ஸாக தொடர்ந்து இருப்பதற்கான அனைத்து அம்சங்களையும் பெற்றிருக்கிறது.

    ஜோபோ குருவில்லா கருத்து

    ஜோபோ குருவில்லா கருத்து

    புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் கார் தொடர்ந்து தன்னை ஒரு 5 நட்சத்திர அந்தஸ்து கொண்ட மாடலாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. சொகுசு கார்களின் அரசனமாக தொடர்ந்து தன்னை உயர்த்திப் பிடித்துக் கொள்கிறது. நேற்று, இன்றல்ல... எப்போதுமே சொகுசு கார் மார்க்கெட்டில் மிகச் சிறந்த தேர்வு மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் என்றால் மிகையில்லை.

    உங்களுக்கு தெரியுமா?

    உங்களுக்கு தெரியுமா?

    முதல்முறையாக பாஷ் நிறுவனத்தின் எலக்ட்ரானிக் 4 வீல் மல்டி சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் அறிமுகமான உலகின் முதல் கார் மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் [116 சீரிஸ்] கார்தான். அதன்பிறகே இந்த முக்கிய பாதுகாப்பு தொழில்நுட்பம் பிற கார்களிலும் இடம்பெற துவங்கியது.

Most Read Articles
English summary
For 2018, the S-Class sees a mid-cycle update. The big-league change comes in the form of an Advanced Driver Assistance System (ADAS). With this, the 2018 S-Class becomes the first Mercedes in India to feature ADAS — a vehicle system that helps automate/adapt/enhance better and safer driving.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X