கொடுக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் மதிப்பு வாய்ந்த கார்... 2021 ஸ்கோடா ஆக்டேவியா ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

முதல் தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் இந்திய சந்தையில் கடந்த 2002ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரை வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பியதால், விற்பனை அதிகரித்தது. இதன்பின் ஆக்டேவியா காரின் பெர்ஃபார்மென்ஸ் வெர்ஷனை விஆர்எஸ் என்ற பெயரில், கடந்த 2004ம் ஆண்டு ஸ்கோடா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

கார் ஆர்வலர்கள் பலரின் மனதை இந்த மாடல் கொள்ளை கொண்டது. எம்கே1 ஆக்டேவியா விஆர்எஸ் இன்றளவும் பலராலும் விரும்பப்படும் காராக திகழ்கிறது. அதே நேரத்தில் இரண்டாவது தலைமுறை ஆக்டேவியா கார் இந்திய சந்தையில் லாரா என அழைக்கப்பட்டது. லாராவின் விற்பனையும் சிறப்பாக இருந்ததால், அதிலும் விஆர்எஸ் வெர்ஷனை ஸ்கோடா நிறுவனம் அறிமுகம் செய்தது.

இதன் பின் மூன்றாவது தலைமுறை ஆக்டேவியா காரை ஸ்கோடா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த மாடல், முற்றிலும் புதிய டிசைனில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நான்காவது தலைமுறை ஆக்டேவியாவை ஸ்கோடா நிறுவனம் இந்தியாவில் நாளை (ஜூன் 10) விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

இந்த புதிய மாடலை டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. நகர பகுதிகளில் நாங்கள் அந்த காரை ஓட்டி பார்த்தோம். சந்தையை விட்டு வெளியேறும் மாடலுடன், இந்த புதிய மாடல் எதையும் பகிர்ந்து கொள்ளவில்லை. இது முற்றிலும் புதிய செடான் ஆகும். அத்துடன் ஏராளமான வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. புதிய ஸ்கோடா ஆக்டேவியா கார் பற்றிய முழுமையான விபரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

கொடுக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் மதிப்பு வாய்ந்த கார்... 2021 ஸ்கோடா ஆக்டேவியா ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

டிசைன்

முதல் பார்வையிலேயே ஒவ்வொரு கோணத்திலும் புதிய ஸ்கோடா ஆக்டேவியா நம்மை ஈர்க்கிறது. ஹெட்லைட்கள் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில், ஸ்கோடா க்ரிஸ்ட்டல் லைட்டிங் இடம்பெற்றுள்ளது. அதே நேரத்தில் பகல் நேர விளக்குகள் இந்த காருக்கு ஸ்போர்ட்டியான நிலைப்பாட்டை தருகின்றன. ஹை மற்றும் லோ பீம்களுக்கு, எல்இடி ப்ரொஜெக்டர் செட்-அப் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்கோடா நிறுவனம் மிகவும் பிரகாசமான எல்இடி பனி விளக்குகளையும் வழங்கியுள்ளது.

ஸ்டைல் மற்றும் எல்&கே என மொத்தம் 2 வேரியண்ட்களில் புதிய ஸ்கோடா ஆக்டேவியா கிடைக்கும். இதில், டாப் வேரியண்ட்டான எல்&கே மாடலை நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்தோம். இதன் முன் பகுதியில் க்ரோம் வேலைப்பாடுகளை அதிகம் காண முடிகிறது. அத்துடன் இரு பக்கமும் வெண்ட்கள் உடன் ஸ்போர்ட்டியான பம்பரை இந்த கார் பெற்றுள்ளது. இதன் மூலம் சிறப்பான ஏரோ டைனமிக்ஸ் கிடைக்கிறது. அதே நேரத்தில் மற்ற ஸ்கோடா செடான் கார்களை போலவேதான் இந்த காரின் ஹூட் பகுதியிலும் மடிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

கொடுக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் மதிப்பு வாய்ந்த கார்... 2021 ஸ்கோடா ஆக்டேவியா ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

ஸ்கோடா ஆக்டோவியா காரின் சர்வதேச மாடல், 360 டிகிரி பார்க்கிங் கேமரா வசதியை பெற்றுள்ளது. ஆனால் விலையை குறைக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்திய மாடலில் இந்த வசதியை ஸ்கோடா நிறுவனம் வழங்கவில்லை. பக்கவாட்டு பகுதியில் இருந்து பார்க்கும்போது, ஏரோ பிளாக் 17 இன்ச் மல்டி-ஸ்போக் ட்யூயல் டோன் அலாய் வீல்கள்தான் ஒருவரின் கவனத்தை ஈர்க்கும் முதல் விஷயமாக இருக்கும். எல்&கே வேரியண்ட்டில் மட்டுமே இந்த வீல்கள் கிடைக்கும். அலாய் சக்கரங்களின் ஒட்டுமொத்த டிசைன் கவர்ச்சிகரமாக உள்ளது.

கொடுக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் மதிப்பு வாய்ந்த கார்... 2021 ஸ்கோடா ஆக்டேவியா ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

அதே சமயம் இது எல்&கே வேரியண்ட் என்பதால் ஃபெண்டரின் இரு பக்கமும் Laurin & Klement பேட்ஜ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஜன்னல்களை சுற்றிலும் க்ரோம் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் ஹெட்லைட்டில் இருந்து டெயில்லைட் வரை நுட்பமான பாடி லைனையும் பார்க்க முடிகிறது. புதிய ஸ்கோடா ஆக்டேவியா காரின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 140 மிமீ. இது சிறப்பான க்ரவுண்ட் க்ளியரன்ஸ் இல்லை என நீங்கள் நினைக்கலாம். ஆனால் நடைமுறை பயன்பாட்டில் நன்றாகவே இருக்கிறது. நாங்கள் நகர பகுதியில் காரை டெஸ்ட் டிரைவ் செய்த நிலையில், அடி பகுதி எங்குமே தரையில் மோதவில்லை.

கொடுக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் மதிப்பு வாய்ந்த கார்... 2021 ஸ்கோடா ஆக்டேவியா ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

பின் பகுதியை பொறுத்தவரை நேர்த்தியான எல்இடி டெயில்லைட் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் பின் பகுதியிலும் ஓரளவிற்கு க்ரோம் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இந்த காரின் பின் பகுதியில் ஸ்கோடா லோகோ வழங்கப்படவில்லை. எனினும் பூட் பகுதியில் ‘SKODA' என பெரிதாக எழுதப்பட்டுள்ளது. இதுதான் இந்த நிறுவனத்தின் லேட்டஸ்ட் டிசைன் மொழியாகும். அதே நேரத்தில் நெருக்கடியான இடங்களில் எளிதாக பார்க்கிங் செய்ய வசதியாக, ரியர் பார்க்கிங் கேமரா மற்றும் ஆட்டோ பார்க் அஸிஸ்ட் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

கொடுக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் மதிப்பு வாய்ந்த கார்... 2021 ஸ்கோடா ஆக்டேவியா ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

இன்டீரியர் & வசதிகள்

இனி காரின் கேபினுக்கு உள்ளே செல்வோம். இங்கே ஸ்கோடா நிறுவனம் நிறைய லெதர் மற்றும் அல்காண்ட்ராவை பயன்படுத்தியிருப்பதை நீங்கள் காணலாம். இந்த காரின் டேஷ்போர்டு ட்யூயல்-டோன் வண்ணத்தில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. மேலும் அல்காண்ட்ரா மற்றும் சாஃப்ட் டச் மெட்டீரியல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் ஏசி வெண்ட்கள் மற்றும் டோர் ஹேண்டில்கள் உள்ளிட்ட பாகங்களில் க்ரோம் வேலைப்பாடுகளை அதிகமாக காண முடிகிறது.

கொடுக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் மதிப்பு வாய்ந்த கார்... 2021 ஸ்கோடா ஆக்டேவியா ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

டேஷ்போர்டின் மைய பகுதியில், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே வசதியுடன் 10 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. காரை பற்றிய பல்வேறு தகவல்களையும் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்குகிறது. இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கான வால்யூம் கண்ட்ரோல் பேன்ஸியாக உள்ளது. இது பட்டன் அல்லது நாப் கிடையாது. அதற்கு பதிலாக திரைக்கு கீழே டச் பார் வழங்கப்பட்டுள்ளது. வால்யூமை குறைக்க அல்லது அதிகரிக்க வேண்டுமென்றால், உங்கள் விரலை முறையே இடது அல்லது வலது பக்கம் நகர்த்த வேண்டும். அதே நேரத்தில் எல்&கே வேரியண்ட்டில் வழங்கப்பட்டுள்ள கேன்டன் சர்ரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் மிகவும் சிறப்பாக உள்ளது.

கொடுக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் மதிப்பு வாய்ந்த கார்... 2021 ஸ்கோடா ஆக்டேவியா ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

எனினும் ஸ்டியரிங் வீல்தான் கேபினில் குறிப்பிட்டாக வேண்டிய முக்கியமான அம்சமாகும். இந்த கார் இரண்டு-ஸ்போக் ஸ்டியரிங் வீலை பெற்றுள்ளது. இது பிரீமியமான உணர்வை தருகிறது. ஸ்டியரிங் வீலில் வழங்கப்பட்டுள்ள பட்டன்களில் க்ரோம் பூச்சுக்கள் இடம்பெற்றுள்ளன. இந்த பட்டன்களை பயன்படுத்துவது எளிமையாக உள்ளதால், டிரைவர் முழுமையாக சாலையில் கவனம் செலுத்த முடியும்.

கொடுக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் மதிப்பு வாய்ந்த கார்... 2021 ஸ்கோடா ஆக்டேவியா ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

அதே நேரத்தில் இந்த கார் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை பெற்றுள்ளது. இதனை ஸ்கோடா நிறுவனம் விர்ச்சூவல் காக்பிட் என அழைக்கிறது. இது 10.25 இன்ச் திரை ஆகும். காரை பற்றிய தகவல்களை இது வழங்குகிறது. ஸ்டியரிங் வீலில் உள்ள பட்டன் மூலமாக டிஸ்ப்ளே லே-அவுட்டை மாற்றி கொள்ள முடியும்.

கொடுக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் மதிப்பு வாய்ந்த கார்... 2021 ஸ்கோடா ஆக்டேவியா ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

அதே சமயம் இந்த காரின் அனைத்து இருக்கைகளிலும் லெதர் கவர் கொடுக்கப்பட்டுள்ளது. முன் பகுதியில் உள்ள 2 இருக்கைகளையும், மின்னணு முறையில் 12 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும். ஆனால் ஓட்டுனர் இருக்கைக்கு மட்டுமே சீட் மெமரி வசதி வழங்கப்பட்டுள்ளது. முன் பகுதியில் உள்ள இரண்டு இருக்கைகளும் மிகவும் சௌகரியமாக உள்ளன.

கொடுக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் மதிப்பு வாய்ந்த கார்... 2021 ஸ்கோடா ஆக்டேவியா ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

அதேபோல் பின் இருக்கைகளும் சௌகரியமாக இருக்கின்றன. இங்கு தொடைக்கு நல்ல சப்போர்ட் கிடைக்கிறது. அத்துடன் முதுகுக்கும் நல்ல சப்போர்ட் கிடைப்பதால், தொலை தூர பயணங்களின்போது யாரும் அவ்வளவு எளிதாக சோர்ந்து விட மாட்டார்கள். இந்த காரில் ரியர் ஏசி வெண்ட்களும் வழங்கப்பட்டுள்ளன. கேபினை குளிர்ச்சியாக வைத்திருப்பதில் இவை மிகவும் சிறப்பாக செயலாற்றுகின்றன. ரியர் ஏசி வெண்ட்களுக்கு கீழாக 2 டைப்-சி சார்ஜிங் சாக்கெட்கள் வழங்கப்பட்டுள்ளன.

கொடுக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் மதிப்பு வாய்ந்த கார்... 2021 ஸ்கோடா ஆக்டேவியா ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

பூட் ரூம் இடவசதி என வந்து விட்டால், ஸ்கோடா கார்கள் எப்போதுமே சிறப்பானவைதான். இந்த வகையில் புதிய ஆக்டேவியா சுமார் 600 லிட்டர் பூட் ரூம் இடவசதியை பெற்றுள்ளது. இன்னும் அதிக இடவசதி தேவையா? அப்படியானால் பின் இருக்கைகளில் 60:40 ஸ்பிளிட் வசதி உள்ளது. எனவே உங்கள் லக்கேஜ் அளவை பொறுத்து, பின் இருக்கைளை மடக்கி இட வசதியை அதிகரித்து கொள்ள முடியும்.

கொடுக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் மதிப்பு வாய்ந்த கார்... 2021 ஸ்கோடா ஆக்டேவியா ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

இன்ஜின் & செயல்திறன்

புதிய ஸ்கோடா ஆக்டேவியா காரில், 2.0 லிட்டர் TFSI பெட்ரோல் இன்ஜின் தேர்வு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த காரின் இரண்டு வேரியண்ட்களிலும் இதே இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது. இந்த டர்போ-பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 4,180 - 6,000 ஆர்பிஎம்மில் 187.4 பிஎச்பி பவரையும், 1,500 - 3,990 ஆர்பிஎம்மில் 320 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இன்ஜின் சக்தியானது, 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் மூலம் முன் சக்கரங்களுக்கு அனுப்பப்படுகிறது.

இந்த காரில் ஷிஃப்ட்-பை-வயர் தொழில்நுட்பத்தை ஸ்கோடா நிறுவனம் பயன்படுத்தியுள்ளது. இது என்ன செய்யும் தெரியுமா? முன்பு டிஎஸ்ஜி கியர்பாக்ஸில் நீங்கள் கியர் போடும்போது (ஃப்ரண்ட் அல்லது ரிவர்ஸ்), பல்வேறு இணைப்புகள் மற்றும் வயர்கள் இருக்கும். ஒன்றில் இருந்து மற்றொன்றுக்கு கியரை மாற்ற அவை உதவி செய்யும். ஆனால் ஷிஃப்ட்-பை-வயர் தொழில்நுட்பத்தில், நீங்கள் கியரை மாற்றும்போது அதற்குண்டான வேலைகள் சென்சார்கள், கம்ப்யூட்டர் மூலமாக மேற்கொள்ளப்படும்.

கொடுக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் மதிப்பு வாய்ந்த கார்... 2021 ஸ்கோடா ஆக்டேவியா ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

ஆனால் கியர் மாற்றுவதில் இந்த புதிய தொழில்நுட்பம் ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதா? என்பதை எங்களால் சொல்ல முடியவில்லை. ஏனெனில் பொதுவாகவே டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் மிகவும் வேகமானதுதான். அதே நேரத்தில் இதன் இன்ஜின் ரீஃபைன்மெண்ட் மிகவும் சிறப்பாக உள்ளது. பவர் டெலிவரியும் சீராக இருக்கிறது.

ஆனால் இந்த காரில் டிரைவ் மோடுகள் எதுவும் வழங்கப்படவில்லை. அதற்கு பதிலாக கியர் பாக்ஸில் D மற்றும் S மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் பேடில் ஷிஃப்டர்கள் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இது ஓட்டுனர்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

கொடுக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் மதிப்பு வாய்ந்த கார்... 2021 ஸ்கோடா ஆக்டேவியா ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

ரைடு & ஹேண்ட்லிங்

இந்த காரின் ரைடு குவாலிட்டியும் சிறப்பாக உள்ளது. கரடு முரடான சாலைகளையும் சஸ்பெண்ஸன் எளிதாக எதிர்கொள்வதால், பயணிகளுக்கு அமைதியான மற்றும் சௌகரியமான பயணம் கிடைக்கும். மேலும் இந்த காரின் என்விஹெச் லெவல்களும் சிறப்பாக உள்ளன. வெளிப்புற சத்தம் கேபினுக்குள் பெரிதாக கேட்பதில்லை. எனினும் கார் வேகமாக செல்லும்போது சத்தம் கேட்கிறது. ஆனால் பெரிய தொந்தரவு என கூறும் அளவிற்கெல்லாம் இல்லை.

கொடுக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் மதிப்பு வாய்ந்த கார்... 2021 ஸ்கோடா ஆக்டேவியா ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பை பொறுத்தவரை புதிய ஸ்கோடா ஆக்டேவியாக காரில் 8 ஏர்பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் ஏபிஎஸ், இபிடி, பார்க் அஸிஸ்ட், டிரைவர் தூங்கினால் எச்சரிக்கும் வசதி உள்பட பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

வண்ண தேர்வுகள்

வண்ண தேர்வுகளை பொறுத்தவரை ஸ்டைல் வேரியண்ட்டானது, கேன்டி ஒயிட், லாவா ப்ளூ மற்றும் மேஜிக் பிளாக் என மொத்தம் 3 வண்ணங்களில் கிடைக்கும். அதே நேரத்தில் எல்&கே வேரியண்ட், பிரில்லியண்ட் சில்வர், மேப்பில் ப்ரவுண், கேன்டி ஒயிட், லாவா ப்ளூ மற்றும் மேஜிக் ப்ளாக் என மொத்தம் 5 வண்ணங்களில் கிடைக்கும். நாங்கள் ஓட்டிய கார் மேஜிக் பிளாக் வண்ணத்தில் பெயிண்ட் செய்யப்பட்டிருந்தது.

கொடுக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் மதிப்பு வாய்ந்த கார்... 2021 ஸ்கோடா ஆக்டேவியா ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?

இந்திய சந்தையில் ஆக்டேவியா கார் மிக நீண்ட காலமாக விற்பனையில் இருந்து வருகிறது. ஆனால் 2021 மாடலை பொறுத்தவரை அனைத்தும் புதியது. உட்புறம், வெளிப்புறம் என அனைத்தும் புதியதுதான். அத்துடன் நாங்கள் ஆரம்பத்திலேயே கூறியபடி, முந்தைய தலைமுறை மாடலுடன் எதையும் இந்த புதிய மாடல் பகிர்ந்து கொள்ளவில்லை.

ஆனால் இந்த காரில் சன்ரூஃப் இல்லை என்பது ஒரு குறையாக பார்க்கப்படுகிறது. டாப் வேரியண்ட்டான எல்&கே வேரியண்ட்டில் கூட சன்ரூஃப் வசதி இல்லை. எனினும் கேபின் நன்கு விசாலமாகதான் உள்ளது. அத்துடன் காரின் செயல்திறனும் நன்றாக இருக்கிறது.

எனவே நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் இது மதிப்பு வாய்ந்த தயாரிப்புதான். ஆனால் இந்த காரின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதிகாரப்பூர்வ விலை வரும் ஜூன் 10ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
2021 Skoda Octavia First Drive Review: Design, Features, Engine, Performance, Handling, Safety. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X