செம ஸ்பீடு... 2021 டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் எப்படி இருக்கு தெரியுமா? ரிவியூ!

வரும் காலங்களில் எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் சாலைகளை ஆளப்போகின்றன என்பது உறுதியாகி விட்டது. உலகின் முன்னணி நிறுவனங்கள் பலவும் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து வருவதுடன், புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளன. இந்தியாவை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. கடந்த சில ஆண்டுகளாகவே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்கும் பணிகளில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2017ம் ஆண்டு டிகோர் (Tata Tigor EV) எலெக்ட்ரிக் காரை உருவாக்கியது. ஆரம்பத்தில் ஃப்ளீட் ஆபரேட்டர்களுக்கு என பிரத்யேகமாகதான் இந்த எலெக்ட்ரிக் நோட்ச்பேக் (Electric Notchback) உருவாக்கப்பட்டது. இதன்பின் இஇஎஸ்எல் நிறுவனத்திடம் இருந்து எலெக்ட்ரிக் கார்களை சப்ளை செய்வதற்கான ஒப்பந்தத்தை டாடா மோட்டார்ஸ் வென்றது.

இதன்பின் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஜிப்ட்ரான் ஹை-வோல்டேஜ் பவர்ட்ரெயினை உருவாக்கிய டாடா மோட்டார்ஸ் நிறுவனம், நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை அறிமுகம் செய்தது. இதனை தொடர்ந்து புதிய 2021 டிகோர் எலெக்ட்ரிக் காரையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. புதிய டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் 11.99 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் காரை ஒரு சில மணி நேரங்கள் டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. அப்போது எங்களுக்கு கிடைத்த அனுபவங்களை இந்த செய்தியின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

செம ஸ்பீடு... 2021 டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் எப்படி இருக்கு தெரியுமா? ரிவியூ!

டிசைன்

பழைய மாடலுடன் ஒப்பிடுகையில், புதிய மாடலில் அடிப்படை டிசைன் தக்கவைக்கப்பட்டுள்ளது. ஹெட்லேம்ப் மற்றும் டெயில்லேம்ப் ஆகியவற்றின் வடிவம் கூட அப்படியேதான் உள்ளது. எனினும் புதிய மாடலை தனித்து தெரிய செய்யும் வகையில் சிறு சிறு மாற்றங்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டிசைனர்கள் செய்துள்ளனர்.

முன் பக்க க்ரில் அமைப்பில் டாடா லோகோ கம்பீரமாக வழங்கப்பட்டுள்ளது. க்ரில் அமைப்பிற்கும், பம்பருக்கும் இடையே சிறிய வெண்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இன்னும் கம்பீரமாக காட்சியளிக்கும் வகையில் பம்பர் ரீ-டிசைன் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் முன் பக்க பம்பர் மற்றும் க்ரில் அமைப்பில் அம்புக்குறி வடிவ டிசைன் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் எல்இடி ஹெட்லேம்ப்களை அறிமுகம் செய்வதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தவறி விட்டதை போல் தெரிகிறது. ஹெட்லேம்ப்பில் லோ பீமை ஹாலோஜன் ப்ரொஜெக்டர் கையாளும் நிலையில், ஹை பீமை ஹாலோஜன் ரெஃப்லெக்டர் கவனிக்கிறது. ஹெட்லேம்ப்பிற்கு கீழே எலெக்ட்ரிக் ப்ளூ நிறத்தில் பட்டை ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் 'EV' பேட்ஜ் க்ரில் அமைப்பில் இடம்பெற்றுள்ளது. பக்கவாட்டு ஃபெண்டர்களும் அதே எலெக்ட்ரிக் ப்ளூ நிறத்தில்தான் கொடுக்கப்பட்டுள்ளன. அதே சமயம் விண்டோக்களுக்கு கீழே க்ரோம் பட்டை வழங்கப்பட்டுள்ளது. கதவு கைப்பிடிகளிலும் க்ரோம் பூச்சுக்களை காண முடிகிறது. எனினும் வீல்கள்தான், அனைவரின் கவனத்தையும் உடனடியாக ஈர்க்க கூடிய வகையில் இருக்கின்றன.

செம ஸ்பீடு... 2021 டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் எப்படி இருக்கு தெரியுமா? ரிவியூ!

புதிய டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரின் வீல்கள் ட்ரை-டோன் யூனிட்கள் ஆகும். இதில், கருப்பு மற்றும் க்ரே ஆகியவை முதன்மையான நிறமாக உள்ளன. அதே சமயம் இதன் கால்வாசி பகுதி நீல நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. எனினும் நன்றாக உற்று நோக்கினால், பேஸிக் 4-ஸ்போக் வீலில் பிளாஸ்டிக் வீல் கவர் வழங்கப்பட்டிருப்பதை உணர முடியும். குறைவான செலவில் பிரீமியமான தோற்றத்தை டாடா மோட்டார்ஸ் புத்திசாலிதனமாக கொடுத்துள்ளது என்று சொல்லலாம்.

செம ஸ்பீடு... 2021 டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் எப்படி இருக்கு தெரியுமா? ரிவியூ!

அதே சமயம் பின் பகுதியில் ஸ்பிளிட் எல்இடி டெயில்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. தடிமனான க்ரோம் பட்டை மூலம் அவை இணைக்கப்பட்டுள்ளன. மேல் பகுதியில் ஸ்பாய்லர் இடம்பெற்றுள்ளது. இதனுடன் எல்இடி ஸ்டாப் லைட் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. பின் பகுதியில் Tata, Tigor, EV மற்றும் Ziptron பேட்ஜ்களை நீங்கள் பார்க்கலாம். ஒட்டுமொத்தத்தில் புதிய டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரின் டிசைன் அருமையாக உள்ளது. பழைய மாடலுடன் ஒப்பிடுகையில், குறிப்பாக இந்த டீல் ப்ளூ நிறத்தில் நன்றாக மேம்பட்டுள்ளது.

செம ஸ்பீடு... 2021 டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் எப்படி இருக்கு தெரியுமா? ரிவியூ!

இன்டீரியர்

காரின் உள்ளே சென்றதும், புதிய மாடலில் உள்ள வித்தியாசங்களை உடனடியாக உணர முடிகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய டிசைன் மொழியை கேபின் முழுவதும் காண முடிகிறது. இந்த காரின் இருக்கைகளில், வெளிப்புறத்தில் இருப்பதை போன்ற அம்புக்குறி வடிவ எம்ப்ராய்டரி வழங்கப்பட்டுள்ளது. இருக்கைகள் கருப்பு நிறத்தில் உள்ளன. அதே சமயம் டேஷ்போர்டு மற்றும் டோர் பேனல்களுக்கு ட்யூயல்-டோன் டிசைன் வழங்கப்பட்டுள்ளது.

கேபினில் ஏசி வெண்ட்கள் உடனடியாக உங்களின் கவனத்தை ஈர்த்து விடும். இதற்கு ஏசி வெண்ட்களை சுற்றிலும் வழங்கப்பட்டுள்ள எலெக்ட்ரிக் ப்ளூ வண்ணமே காரணம். சென்ட்ரல் ஏசி வெண்ட்களுக்கு கீழாக இன்போடெயின்மெண்ட் யூனிட் வழங்கப்பட்டுள்ளது. இது 7.0 இன்ச் டச்ஸ்க்ரீன் ஆகும். ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளுடன், மேலும் சில ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

செம ஸ்பீடு... 2021 டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் எப்படி இருக்கு தெரியுமா? ரிவியூ!

க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் சக்தி வாய்ந்த ஏர்-கண்டிஷனிங் சிஸ்டம் ஆகியவற்றுடன் புதிய டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் வந்துள்ளது. இதற்கான கண்ட்ரோல்கள் இன்போடெயின்மெண்ட் திரைக்கு அடியில் வழங்கப்பட்டுள்ளன. க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் ஏசி தொடர்பான தகவல்கள், இன்போடெயின்மெண்ட் திரையில் காட்டப்படும். இதனை டச்ஸ்க்ரீன் மூலமாகவும் கட்டுப்படுத்தலாம்.

அதே சமயம் இந்த காரில் சென்டர் கன்சோல் எளிமையாக உள்ளது. கியர் செலக்டர் நாப், கப் ஹோல்டர்கள் மற்றும் 12V பவர்அவுட்லெட் ஆகியவற்றை இது பெற்றுள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் ஸ்டியரிங் வீல் ஃபேன்ஸியாக இருக்கிறது.

செம ஸ்பீடு... 2021 டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் எப்படி இருக்கு தெரியுமா? ரிவியூ!

புதிய டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரில், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்பட்டுள்ளது. மைய பகுதியில் எல்சிடி திரை இடம்பெற்றுள்ளது. கியர் பொஷிஷன், இன்னும் எவ்வளவு தூரம் பயணம் செய்ய முடியும்?, நேரம், டெம்ப்ரேச்சர் மற்றும் ஓடோமீட்டர் உள்ளிட்ட தகவல்களை இது வழங்குகிறது.

பின் வரிசை இருக்கைகளிலும் இதே டிசைன் மொழியை காண முடிகிறது. பின் வரிசை இருக்கைகளில் 3 பேர் சௌகரியமாக அமர முடியும். இங்கே மடிக்க கூடிய ஆர்ம்ரெஸ்ட் இடம்பெற்றுள்ளது. இதில், கப் ஹோல்டர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

செம ஸ்பீடு... 2021 டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் எப்படி இருக்கு தெரியுமா? ரிவியூ!

சௌகரியம், நடைமுறை பயன்பாடு மற்றும் பூட் ஸ்பேஸ்

பொதுவாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்கள் மிகவும் சௌகரியமாக இருக்கும். இந்த வகையில் புதிய டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரும் பயணிகளுக்கு சௌகரியமாக இருக்கிறது.

குறிப்பாக இடவசதி என்ற விஷயத்தில் புதிய டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் அசத்துகிறது. இந்த காரின் கேபின் விசாலமாக இருப்பதுடன், காற்றோட்டமாகவும் உள்ளது. கூரை தாழ்ந்து செல்லும் வகையில் இருந்தாலும் கூட ஹெட்ரூம் மிகவும் சிறப்பாக இருக்கிறது. எனினும் கீழ் தொடைக்கு இன்னும் கொஞ்சம் நல்ல சப்போர்ட் கிடைக்கும் வகையில் இருந்திருக்கலாம்.

அதே சமயம் இது நடைமுறை பயன்பாட்டிற்கு மிகவும் ஏற்ற கார். பொருட்களை வைப்பதற்கு கார் முழுவதும் சிறு சிறு இடவசதி வழங்கப்பட்டுள்ளது. முன் பக்க கதவுகளில் அரை லிட்டர் பாட்டில்களை வைக்க முடியும். அதே சமயம் பின் பக்க டோர்களில் 1 லிட்டர் பாட்டில்களை வைக்க முடியும்.

செம ஸ்பீடு... 2021 டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் எப்படி இருக்கு தெரியுமா? ரிவியூ!

அதே சமயம் டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரின் பூட் ஸ்பேஸ் 316 லிட்டர்கள் ஆகும். இதனை போதுமான இடவசதியாக கூறலாம். எனினும் இரண்டு விஷயங்கள் எங்களை கவலையடைய செய்தன. பூட் பகுதியில் ஸ்பேர் வீல் இடத்தை அடைத்து கொள்கிறது. அதேபோல் பூட் ரூம் இடவசதியை அதிகரிக்கும் வகையில், பின் வரிசை இருக்கைகளை மடக்கி வைக்கும் வசதியும் வழங்கப்படவில்லை.

செம ஸ்பீடு... 2021 டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் எப்படி இருக்கு தெரியுமா? ரிவியூ!

மோட்டார் செயல்திறன் மற்றும் ஓட்டுதல் அனுபவம்

இந்த பகுதியில்தான் புதிய டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் பெரிய அளவில் மேம்படுத்தப்பட்டுள்ளது. பழைய டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற கார்தான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதன் செயல்திறன் அவ்வளவு சிறப்பாக இருக்காது. வேகம் மற்றும் ரேஞ்ச் என இரண்டும் வரையறுக்கப்பட்டதாகவே இருக்கும்.

ஆனால் 2021ம் ஆண்டில் புதிய டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் புதிய உச்சத்திற்கு சென்றுள்ளது. நாங்கள் ஏற்கனவே கூறியபடி புதிய டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார், ஜிப்ட்ரான் ஹை-வோல்டேஜ் பிளாட்பார்ம் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நிறைய நன்மைகள் கிடைக்கின்றன.

புதிய டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரில், 26kWh லித்தியம்-அயான் பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. பேட்டரி தொகுப்பிற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 8 ஆண்டுகள் வாரண்டி வழங்குகிறது. அதே சமயம் இந்த காரின் எலெக்ட்ரிக் மோட்டார் அதிகபட்சமாக 55kW பவர் அவுட்புட்டை கொண்டுள்ளது. அதாவது சுமார் 72 பிஹெச்பி. அதே சமயம் 172 என்எம் டார்க் அவுட்புட்தான், இந்த காரை ஓட்டுவதற்கு மிகவும் சிறப்பான ஒன்றாக மாற்றுகிறது.

செம ஸ்பீடு... 2021 டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் எப்படி இருக்கு தெரியுமா? ரிவியூ!

டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரை ஓட்டுவது உற்சாகமான அனுபவத்தை தருகிறது. அத்துடன் எளிமையாகவும் உள்ளது. பொதுவாகவே எலெக்ட்ரிக் வாகனங்களை ஓட்டுவது எளிமையான விஷயம்தான். குறிப்பாக பம்பர் டூ பம்பர் டிராபிக் இருக்கும் சூழல்களில், இந்த காரை ஓட்டுவது எளிமையாக இருக்கிறது. அதேபோல் புதிய டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரின் வேகமும், ஆக்ஸலரேஷனும் ஆச்சரியம் அளிக்கிறது. மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்யும்போது, முதல் வேக எச்சரிக்கை வருகிறது. அதுவரை என்ன வேகத்தில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம்? என்பதை உண்மையில் உணர முடியவில்லை. எனினும் மணிக்கு 120 கிலோ மீட்டருக்கும் மேலான வேகத்தில் பயணிப்பது கடினமாக இருக்கிறது. குறிப்பாக ஸ்போர்ட்ஸ் மோடில் ஆக்ஸலரேஷன் மிகவும் நன்றாக இருக்கிறது. இந்த மோடில் பயணம் செய்வது உற்சாகமான அனுபவத்தை நமக்கு வழங்கும்.

வேகத்தை போலவே, புதிய டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரின் கையாளுமையும் மிகவும் சிறப்பாக இருப்பது நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. ஸ்டியரிங் வீல் மற்றும் சஸ்பென்ஸன் என இரண்டும் மிக சிறப்பான ட்யூனிங் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக கார்னர்களில் இந்த காரின் கையாளுமையை பாராட்டியே ஆக வேண்டும்.

குறைவான வேகத்தில் ஸ்டியரிங் வீல் இலகுவாக உள்ளது. ஆனால் வேகம் அதிகரிக்க அதிகரிக்க ஸ்டியரிங் சிஸ்டம் தேவையான அளவிற்கு இறுக்கம் பெறுகிறது. எனவே நம்மால் நம்பிக்கையுடன் காரை முன்னோக்கி செலுத்த முடிகிறது. ஆனால் குண்டும், குழியுமான சாலைகளில் பயணம் செய்யும்போதும், சாலையில் சிறிய ஏற்ற, இறக்கங்களை சந்திக்கும்போதும் கேபினில் அதனை உணர முடிகிறது.

எனினும் புதிய டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரின் பிரேக்குகள் தங்களது வேலையை மிகவும் சிறப்பாக செய்கின்றன. ஆனால் பிரேக்குகள் சிறிய அளவில் சத்தத்தை ஏற்படுத்துகின்றன. எலெக்ட்ரிக் மோட்டார் மிகவும் அமைதியாக இருப்பதால், இந்த சத்தம் கேபினுக்கு உள்ளே கேட்கிறது. மற்ற வகைகளில் புதிய டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் சிறப்பாக இருக்கிறது.

செம ஸ்பீடு... 2021 டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் எப்படி இருக்கு தெரியுமா? ரிவியூ!

சார்ஜிங்

புதிய டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரை சார்ஜ் செய்வது பெரிய வேலை கிடையாது. சாதாரண வால் சாக்கெட் பயன்படுத்தினால், டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரின் பேட்டரி சுமார் 8.5 மணி நேரத்தில் சார்ஜ் ஆகிவிடும். அதேசமயம் ஒரு சில டாடா மோட்டார்ஸ் டீலர்ஷிப்கள் மற்றும் டாடா பவர் நிறுவனத்தின் சார்பில் சில இடங்களில் பொருத்தப்பட்டுள்ள டிசி ஃபாஸ்ட் சார்ஜர்களை பயன்படுத்தி கொள்ளும் வாய்ப்பும் உங்களுக்கு உள்ளது. ஆனால் இந்த சார்ஜர்களை தொடர்ச்சியாக பயன்படுத்த வேண்டாம் என நாங்கள் வலியுறுத்துகிறோம். ஏனெனில் இது பேட்டரி சார்ஜிங் சைக்கிளில் பாதிப்பை ஏற்படுத்தும். அவசர சூழல் என்றால் மட்டும் இந்த ஃபாஸ்ட் சார்ஜர்களை பயன்படுத்த வேண்டும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் தெரிவித்துள்ளது.

செம ஸ்பீடு... 2021 டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் எப்படி இருக்கு தெரியுமா? ரிவியூ!

ரேஞ்ச்

டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 306 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும் என அராய் அமைப்பு சான்று வழங்கியுள்ளது. ஆனால் நடைமுறை பயன்பாட்டில், புதிய டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரின் ரேஞ்ச் 200-210 கிலோ மீட்டர்களாகதான் இருக்கும் என தெரிகிறது. இதுவும் கூட டிரைவிங் ஸ்டைல் மற்றும் எந்த மோடில் கார் ஓட்டப்படுகிறது? என்பதை பொறுத்ததுதான்.

அனைத்து நேரங்களிலும் ஸ்போர்ட்ஸ் மோடை பயன்படுத்தினால், ரேஞ்ச் வெகுவாக குறைந்து விடும். ஸ்போர்ட்ஸ் மோடில் மட்டும் காரை ஓட்டி கொண்டிருந்தால், டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரின் ரேஞ்ச் 130-140 கிலோ மீட்டர்களாக மட்டுமே இருக்கும் என தெரிகிறது.

செம ஸ்பீடு... 2021 டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் எப்படி இருக்கு தெரியுமா? ரிவியூ!

பாதுகாப்பு மற்றும் முக்கியமான வசதிகள்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எப்போதும் பாதுகாப்பான கார்களைதான் தயாரித்து வருகிறது. இதற்கு புதிய டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரும் விதிவிலக்கு அல்ல. க்ளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில் இந்த கார் 4 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது. இது மிகப்பெரிய சாதனை என்பதில் சந்தேகம் இல்லை.

புதிய டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரின் பாதுகாப்பு வசதிகள் பின்வருமாறு:

 • ட்யூயல் ஏர்பேக்குகள்
  • இபிடி உடன் ஏபிஎஸ்
   • எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல்
    • IP67 ரேட்டிங் பேட்டரி தொகுப்பு
    • இதுபோல் இன்னும் பல்வேறு பாதுகாப்பு வசதிகளை புதிய டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் பெற்றுள்ளது.

     செம ஸ்பீடு... 2021 டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் எப்படி இருக்கு தெரியுமா? ரிவியூ!

     வேரியண்ட்கள், வண்ண தேர்வுகள் மற்றும் விலை

     2021 டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் மொத்தம் 4 வேரியண்ட்களில் கிடைக்கும். வேரியண்ட் வாரியான விலை விபரம் பின்வருமாறு:

     • XE: 11.99 லட்ச ரூபாய்
      • XM: 12.49 லட்ச ரூபாய்
       • XZ+: 12.99 லட்ச ரூபாய்
        • XZ+ Dual Tone: 13.14 லட்ச ரூபாய்
        • அதே சமயம் வெறும் இரண்டு வண்ண தேர்வுகள் மட்டுமே இந்த காரில் வழங்கப்படுகிறது. அவை பின்வருமாறு:

         • டேடோனா க்ரே
          • டீல் ப்ளூ
          • செம ஸ்பீடு... 2021 டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் எப்படி இருக்கு தெரியுமா? ரிவியூ!

           டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?

           இந்தியாவில் பயணிகள் வாகன சந்தையில் விலை குறைவான எலெக்ட்ரிக் வாகனம் என்றால், அது டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார்தான். இந்த விலைக்கு இவ்வளவு சிறப்பான ஒரு காரை டாடா மோட்டார்ஸ் வழங்கியிருப்பது உண்மையிலேயே மிகவும் சிறப்பான விஷயம். இந்தியாவில் தற்போது எரிபொருள் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. விரைவில் விலை குறைவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. எனவே இந்த நேரத்தில் டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் வாடிக்கையாளர்களுக்கு மிக சிறப்பான தேர்வாக இருக்கும்.

Most Read Articles

English summary
2021 tata tigor ev review design motor performance driving impressions range price
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X