புதிய ஸ்டைல் அப்டேட்களை பெற்ற ரெனால்ட் கைகர் கார் எப்படி இருக்கிறது? - ரிவியூ

ரெனால்ட் நிறுவனம் தனது சப்-காம்பேக்ட் கிராஸ் ஓவர் எஸ்யூவியான ரெனால்ட் கைகர் கார் எப்படி இருக்கிறது. பழைய காரிலிருந்து என்னென்ன விஷயங்கள் எல்லாம் அப்டேட் ஆகியுள்ளது? முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

புதிய ஸ்டைல் அப்டேட்களை பெற்ற ரெனால்ட் கைகர் கார் எப்படி இருக்கிறது ? - ரிவியூ

இந்திய மார்கெட்டில் எஸ்யூவி கார்களை விட ஹேட்ச்பேக் கார்கள் தான் அதிகம் விற்பனையாகி வருகிறது. ஆனால் சமீபகாலமாக மக்கள் எஸ்யூவி ரக கார்களை அதிகம் விரும்பத் துவங்கிவிட்டன. எஸ்யூவி ரக கார்களின் விற்பனை மெல்லமெல்ல அதிகரித்து வருகிறது. இந்தியாவில் எஸ்யூவி கார்களிலேயே பல கேட்டகிரிகள் உள்ளன. முழு சைஸ் எஸ்யூவி, மிட் சைஸ் எஸ்யூவி, காம்பேக்ட் எஸ்யூவி, சப் - காம்பேக்ட் எஸ்யூவி, மைக்ரோ எஸ்யூவி ஆகிய பல ரகங்கள் வந்துவிட்டது.

புதிய ஸ்டைல் அப்டேட்களை பெற்ற ரெனால்ட் கைகர் கார் எப்படி இருக்கிறது ? - ரிவியூ

இதில் சப்-காம்பேக்ட் கிராஸ்ஓவர் எஸ்யூவி கார்கள் தான் அதிக அளவில் மக்கள் விரும்பி வாங்கும் வாகனமாக இருக்கிறது. இந்த செக்மெண்டில் சிறப்பாக விற்பனையாகும் கார் ரெனால்ட் எஸ்யூவி, பல்வேறு அம்சங்கள், சிறப்பான பெர்பாமென்ஸ், மற்றும் பணத்திற்கு ஏற்ற காராக மார்கெட்டில் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் ரெனால்ட் நிறுவனம் 2022 கைகர் காரை ஒரு சில அப்டேட்களை செய்து அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அப்டேட் காரை அழகுபடுத்தும் அப்டேட்தான். நாங்கள் இந்த காரை கேரளாவில் ஓட்டிப்பார்த்தோம். எங்களது ரிவியூவை கீழே வழங்கியுள்ளோம் காணுங்கள்

புதிய ஸ்டைல் அப்டேட்களை பெற்ற ரெனால்ட் கைகர் கார் எப்படி இருக்கிறது ? - ரிவியூ

டிசைன் மற்றும் ஸ்டைல்

இந்த பகுதியில்தான் ரெனால்ட் நிறுவனம் இந்த 2022 கைகர் காரில் சில மாற்றங்களைச் செய்துள்ளது. முக்கிய மாற்றமாக 2022 ரெனால்ட் கைகர் காரில் Stealth Black என்ற புதிய கலர் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காரின் முன்பக்கம் முழுவதும் 2021 ரெனால்ட் கைகர் மாடலில் உள்ள அதே ஆப்ஷன் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்பிலிட் ஹெட்லைட், தனித்துவமான க்ரோம் க்ரில் மற்றும் எல்இடி டிஆர்எல், பெரிய ரெனால்ட் லோகோ, பம்பரில் எல்இடி ஃபாக் லைட் மற்றும் புதிய ஸ்கிட் பிளேட்கள் உள்ளது.

புதிய ஸ்டைல் அப்டேட்களை பெற்ற ரெனால்ட் கைகர் கார் எப்படி இருக்கிறது ? - ரிவியூ

இந்த 2022 ரெனால்ட் கைகர் காரின் பக்கவாட்டு பகுதியைப் பொருத்தவரை 16 இன்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளது. அலாய் வீல் டிசைனை பொருத்தவரை சிலர் அதிகமாக டிசைன் செய்திருப்பதாக உணர்கிறார்கள். சில அதில் கொடுக்கப்பட்டுள்ள டிசைன் பிரிமியமாகவும், ஸ்டைலாகவும் இருப்பதாக உணர்கிறார்கள். இது போக காரை சுற்றிலும் பாடி கிளாடிங் கொடுக்கப்பட்டுள்ளது. காரின் பின் பின்பகுதியைப் பொருத்தவரை சிம்பிளாக கொடுக்கப்பட்டுள்ளது. பின்புறமும் ரெனால்ட் லோகா சிறப்பான தோற்றத்தைப் பெறுகிறது. C வடிவ டெயில் லைட் பார்க்க அம்சமாக இருக்கிறது. குறிப்பாக புதிய Stealth Black நிற காருக்கு இது கச்சிதமாகப் பொருந்துகிறது.

புதிய ஸ்டைல் அப்டேட்களை பெற்ற ரெனால்ட் கைகர் கார் எப்படி இருக்கிறது ? - ரிவியூ

காக்பிட் & உட்புற கட்டமைப்பு

ரெனால்ட் கைகர் கார் இந்த செக்மெண்டிலேயே மிகவும் ஸ்டைலான ஒரு காராக இருக்கிறது. அதனால் அதே ஸ்டைலிங் காரின் உள்ளேயே இருக்க வேண்டும் என எல்லோரும் நினைப்பார்கள். ஆனால் காரை திறந்து உள்ளே சென்று அமர்ந்தால் பெரியதாகச் சொல்லிக்கொள்ளும்படி எதுவும் இல்லை. வழக்கமாக இந்த செக்மெண்ட் காரில் உள்ள விஷயம் எல்லாம் இந்த காரில் இருந்தாலும் இன்னும் ஏதாவது சிறப்பாக இருந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.

புதிய ஸ்டைல் அப்டேட்களை பெற்ற ரெனால்ட் கைகர் கார் எப்படி இருக்கிறது ? - ரிவியூ

முன்புறத்தைப் பொருத்தவரை டிரைவருக்கு 3 ஸ்போக் ஸ்டியரிங் வீல் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஆடியோ கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல் என எல்லாவிதமான கண்ட்ரோல் ஆப்ஷன்களும் உள்ளன. ஸ்டியரிங் வீலுக்கு பின்னால் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் கொடுக்கப்பட்டுள்ளது. நடுவில் 7 இன்ச் டிஎஃப் ஸ்கிரீன் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஏராளமான தகவல்கள் வருகிறது. இந்த ஸ்கிரீனிற்கு இடதுபுறம் டெம்பரேச்சர் காஜ் மற்றும் இடது புறம், ஃப்யூயல் காஜ் ஆகிய அம்சங்கள் இருக்கிறது.

புதிய ஸ்டைல் அப்டேட்களை பெற்ற ரெனால்ட் கைகர் கார் எப்படி இருக்கிறது ? - ரிவியூ

காரின் முன்பகுதியில் மத்திய பகுதியைப் பொருத்தவரை 8 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே போன்ற அம்சங்களை எல்லாம் கொண்டு செயல்படும். இது ஆப்ரேட் செய்யச் சுலபமாக இருக்கிறது. இதன் பக்கவாட்டில் ஏசி வென்ட்கள் உள்ளன. இந்த ஸ்கிரினிற்கு கீழே அதன் கண்ட்ரோல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 3 கண்ட்ரோல்கள் இருக்கின்றனர். டெம்பரேச்சர், ஃபேன் ஸ்பீடு, மற்றும் ஏசி மோடுகளைத் தேர்வு செய்யும்படி இது அமைக்கப்பட்டுள்ளது.

புதிய ஸ்டைல் அப்டேட்களை பெற்ற ரெனால்ட் கைகர் கார் எப்படி இருக்கிறது ? - ரிவியூ

ஏசி கண்ட்ரோல்களுக்கு கீழே ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன். யூஎஸ்பி போர்ட் ஆக்ஸ் இன் போர்ட் ஆகிய பட்டன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் இதில் வயர்லெஸ் சார்ஜர் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் தனித்துவம் என்னவென்றால் இந்த வயர்லெஸ் சார்ஜரை ஆன்/ஆஃப் செய்யும் தொழிற்நுட்பமும் இதில் உள்ளது. போனிற்கு சார்ஜ் ஏற வேண்டிய தேவையில்லை என்றால் அந்த இடத்தை போன் ஹோல்டராக கூட பயன்படுத்திக்கொள்ளலாம். டோர் பேட்களில் உள்ள ஸ்டைலிங் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் டேஷ்போர்டில் உள்ள ரெட் ஃபேட் இதிலும் உள்ளது. மேலும் சிவப்பு நிற நூல் கொண்ட தையலும் கொடுக்கப்பட்டுள்ளது. இது பிராக்டிக்கலாகவும் ஃபங்சனாலாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய ஸ்டைல் அப்டேட்களை பெற்ற ரெனால்ட் கைகர் கார் எப்படி இருக்கிறது ? - ரிவியூ

பிராக்கடிகாலிட்டி, கம்ஃபோர்ட் மற்றும் ஃபூட் ஸ்பேஸ்

ரெனால்ட் கார்களை பொருத்தவரை உட்புறத்தில் பிராக்கடிலாட்டியும், சொகுசு வசதியும் நிறைந்திருக்கும், வெளிப்புறத்திலிருந்து பார்க்கும் போது ஸ்டைலாகவும் இருக்கும். இந்த கைகர் காரும் எந்த வித மாறுபாடும் இல்லாமல் அதே போலேவே இருக்கிறது. சீட்கள் எல்லாம் கம்ஃபர்டபுளாக இருக்கிறது. டிரைவர் சீட்உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் ஆப்ஷனை கொண்டிருக்கிறது. பயணிகள் சீட்களில் பக்கவாட்டு பகுதிகளில் உயர்த்தப்பட்ட குஷன் வசதி இருக்கிறது. இதனால் கார் வேகமாகச் சென்று திரும்பும் போது காருக்குள் இருக்கும் பயணிகள் சீட்டில் வழுக்கிக் கொண்டு செல்ல மாட்டார்கள்.

புதிய ஸ்டைல் அப்டேட்களை பெற்ற ரெனால்ட் கைகர் கார் எப்படி இருக்கிறது ? - ரிவியூ

முன்பக்க சீட்டிலும் குறை சொல்ல எதுவும் இல்லை. பின்புற சீட்டில் தலைக்கு மேல் உள்ள பகுதியைச் சற்று உயர்த்தி வைத்திருக்கலாம். அதே போலத் தொடைப் பகுதிக்கும் வசதியாக இல்லை. உயரமானவர்களுக்கு இந்த கார் சற்று அசௌகரியமாகத் தான் இருக்கும். சராசரி உயரம் உள்ளவர்களாக்கு நீண்ட தூரம் பயணிக்கும் போது அசௌகரியங்கள் ஏற்படலாம். பின்பக்க சீட்டில் உள்ளவர்களுக்கான அட்ஜெஸ்டபுள் ஹெட்ரெஸ்ட், தனியான ஏசி வென்ட், சீட்டின் நடுவே மடக்கி வைக்கும் ஆர்ம் ரெஸ்ட் மற்றும் கப் ஹோல்டர்கள் இருக்கின்றன.

புதிய ஸ்டைல் அப்டேட்களை பெற்ற ரெனால்ட் கைகர் கார் எப்படி இருக்கிறது ? - ரிவியூ

இந்த ரெனால்ட் கைகர் காரில் கேபிஹோல்கள் தேவையான இடங்களில் இருக்கின்றன. முன்பக்கத்தில் 2 கிளவ் பாக்ஸ்கள், சென்டர் கன்சோலில் கப் ஹோல்டர்கள், முன்பக்க ஆர்ம் ரெஸ்டிற்கு கீழே இட வசதி, டோர் பேட்களில் இடவசதி என பிராக்டிகல் காராக இந்த கார் இருக்கிறது. ரெனால்ட் கைகர் கார் இந்த செக்மெண்டிலேயே அதிக ஃபூட் வசதி கொண்ட காராக இருக்கிறது. இதில் 405 லிட்டர் ஃபூட் வசதி இருக்கிறது.

புதிய ஸ்டைல் அப்டேட்களை பெற்ற ரெனால்ட் கைகர் கார் எப்படி இருக்கிறது ? - ரிவியூ

இன்ஜின் செயல்திறன் மற்றும் டிரைவிங் இம்பிரஷன்

நாம் முன்பே சொன்னது போல ரெனால்ட் கைகர் காரின் மெக்கானிக்கல் அம்சங்கள் எதுவும் பழைய காரிலிருந்து மாறவில்லை. பழைய காரில் உள்ள அதே இன்ஜின் தான் இந்த காரிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காரில் ENERGY 1.0 பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 999 சிசி திறன் கொண்டது. 3 சிலிண்டர் யூனிட்டில் அதிகபட்சமாக 71 பிஎச்பி பவரை6250 ஆர்பிஎம்மில் வழங்குகிறது. இது 96 என்எம் டார்க் திறனை 3500 ஆர்பிஎம்மில் வெளிப்படுத்துகிறது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் அல்லது 5 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் வருகிறது.

புதிய ஸ்டைல் அப்டேட்களை பெற்ற ரெனால்ட் கைகர் கார் எப்படி இருக்கிறது ? - ரிவியூ

இதே இன்ஜின் இன்னும் அதிகம் பவர் கொண்ட மற்றொரு ஆப்ஷனுடனும் வருகிறது. இது 999 சிசி டர்போ சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் இருக்கிறது. இதில் 98.6 பிஎச்பி பவர் 5000 ஆர்பிஎம்மிலும், 152 என்எம் டார்க் திறன் 2200 மற்றும் 4400 ஆர்பிஎம்மபிலும் கிடைக்கிறது. இந்த இன்ஜினும் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 5 ஸ்பீடு சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்களுடன் வருகிறது

புதிய ஸ்டைல் அப்டேட்களை பெற்ற ரெனால்ட் கைகர் கார் எப்படி இருக்கிறது ? - ரிவியூ

நாங்கள் ஓட்டிப்பார்த்த கார் டர்போ பெட்ரோல் இன்ஜின், சிவிடி கியர் பாக்ஸ் உடன் இருந்தது. இது சிறப்பான பெர்ஃபாமென்ஸை வழங்குகிறது. நாங்கள் மேனுவல் கியர் பாக்ஸ் காரை தான் கேட்டோம். சிவிடி கியர் பாக்ஸ் சிறப்பாக வேலை செய்ய வில்லை என்பதற்காக அல்ல. இந்த காரின் சிவிடி கியர் பாக்ஸ் மிகச் சரியாக வேலை செய்தது. ஆனால் மேனுவல் கியர் பாக்ஸ்தான் எக்கேஜிங்கான டிரைவிங் எக்ஸ்பிரியஸை வழங்கும்.

புதிய ஸ்டைல் அப்டேட்களை பெற்ற ரெனால்ட் கைகர் கார் எப்படி இருக்கிறது ? - ரிவியூ

நீங்கள் ஒரே வேலை காரில் என்கேஜிகான டிரைவிங் எக்ஸ்பிரியஸை விரும்பாதவராக இருந்தால் நீங்கள் கைகர்காரின் சிவிடி கியர் பாக்ஸை தாராளமாகத் தேர்வு செய்யலாம். நாங்கள் கேட்டதற்குப் பின்னர் எங்களுக்கு ரெனால்ட் கைகர் காரின் மேனுவல் வேரியன்ட் வழங்கப்பட்டது.

புதிய ஸ்டைல் அப்டேட்களை பெற்ற ரெனால்ட் கைகர் கார் எப்படி இருக்கிறது ? - ரிவியூ

2022 ரெனால்ட் கைகர் காரின் சஸ்பென்சனை பொருத்தவரை ஸ்டிஃபாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் குண்டும் குழியுமான சாலைகளில் நீங்கள் சற்று மெதுவாகத் தான் செல்ல வேண்டும். ஸ்டிஃப்பான சஸ்பென்சன் என்றால் ரெனால்ட் கைகர் கார் பாடி ரோலை சிறப்பாகக் கையாளும், கார் ஓட்டும் போது கண்ட்ரோல் சிறப்பாக இருக்கும். இந்த காரின் பிரேக்கள் எல்லாம் சிறப்பாக இருக்கிறது. மொத்தத்தில் ரெனால்ட் கைகர் காரின் இன்ஜின் பழைய காரில் இருப்பது தான். சிறப்பாக இருக்கிறது. சிவிடி கியர் பாக்ஸ் தேவைப்படுபவர்கள் மட்டும் பயன்படுத்தும் விதத்தில் இருக்கிறது.

புதிய ஸ்டைல் அப்டேட்களை பெற்ற ரெனால்ட் கைகர் கார் எப்படி இருக்கிறது ? - ரிவியூ

பாதுகாப்பு மற்றும் முக்கிய அம்சங்கள்

ரெனால்ட் கைகர் அதன் செக்மெண்டிலேயே பாதுகாப்பான காராக இருக்கிறது. புதிய மாற்றத்திலும் பாதுகாப்பு அம்சங்களில் மாற்றம் எதுவும் இல்லை.

ரெனால்ட் கைகர் பாதுகாப்பு அம்சங்கள்

-4 ஏர்பேக்கள்

-இபிடி உடன் கூடிய ஏபிஎஸ்

- ரியர் வியூ கேமரா

- முன்பக்க பார்க்கிங் சென்சார்

ரெனால்ட் கைகர் முக்கிய அம்சம்

- 29-லிட்டர் கேபின் ஸ்டோரேஜ் வசதி

-கூல்டு லோயர் க்ளவ் பாக்ஸ்,

- 8 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட்

- ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே

-வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர்

- ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல்

-க்ரூஸ் கண்ட்ரோல்

- டிரைவ்மோட்கள்

- கீலெஸ் என்ட்ரி அண்ட் கோ

புதிய ஸ்டைல் அப்டேட்களை பெற்ற ரெனால்ட் கைகர் கார் எப்படி இருக்கிறது ? - ரிவியூ

கலர் ஆப்ஷன்

சிங்கிள் டோன் :

- கேஸ்பியன் ப்ளு

- மூன் லைட் சில்வர்

- ஐஸ் கூல் ஒயிட்

- மஹோகானி ப்ரெளன்

- ஸ்டெல்த் பிளாக்

டூயல் டோன்:

- ரெடியண்ட் ரெட்

- மெட்டல் மஸ்டர்ஸ்டு

- கேஸ்பியன் ப்ளு

- மூன் லைட் சில்வர்

தீர்ப்பு

ரெனால்ட் கைகர் கார் பல அம்சங்களுடன் கொடுக்கும் காசுக்குச் சிறந்த காராக இருக்கிறது. ஏற்கனவே இந்த கார் நல்ல ஸ்டைலான காராக இருக்கிறது. தற்போது புதிய மாற்றங்களுடன் மேலும் ஸ்டைலாக மாறியுள்ளது. அதில் Stealth Black நிறம் மேலும் அதற்கு ஸ்டைல் ஆப்ஷனை சேர்க்கிறது. நீங்கள் ரெனால்ட் கைகர் காரை வாங்குகிறீர்கள் என்றால் டர்போ பெட்ரோல் இன்ஜின் மேனுல் கியர் பாக்ஸை கண்களை மூடிக்கொண்டு தேர்வு செய்யலாம்.

Most Read Articles
English summary
2022 Renault Kiger review engine performance interiors colour options all other details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X