கால் வலிக்க க்ளட்ச் பெடலை மிதிக்க வேணாம், மைலேஜும் அதிகம்... ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட 5 கார்கள்!

Posted By:

நகர்ப்புறத்தில் மேனுவல் கியர்பாக்ஸ் கார்களில் க்ளட்ச்சை மிதித்து, மிதித்து கால் வலி கண்டவர்களுக்கு, ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடல்கள்தான் சிறந்த சாய்ஸ். ஆனால், விலை, பராமரிப்பு செலவு அதிகம், மைலேஜ் குறைவு போன்ற காரணங்கள் ஆட்டோமேட்டிக் கார் பக்கம் நம்மவர்கள் தலை வைத்து படுப்பதில்லை.

ஆட்டோமேட்டிக் கார்களின் சில பாதக அம்சங்களால், ஏக்கமாக பார்த்து வெம்பி நின்ற இந்தியர்களுக்கு, ஏஎம்டி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட கார் மாடல்கள் வரப்பிரசாதமாக மாறியிருக்கின்றன. மேலும், மலிவான விலை கொண்ட ஏஎம்டி மாடல்கள் வருகையால், வாடிக்கையாளர்கள் இரு கைகளையும் கொடுத்து வாரி அணைத்து ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

ஏஎம்டி கியர்பாக்ஸ் செயல்படும் விதம்

நகர்ப்புறத்தில் ஓட்டும் ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்கள் எளிதாக ஓட்டுவதற்கும், முதல்முறையாக கார் ஓட்டுபவர்களுக்கும் இந்த கார் மாடல்கள் மிகச்சிறந்ததாக இருக்கின்றன. இந்தநிலையில், இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் 5 ஏஎம்டி கார் மாடல்கள் குறித்து விபரங்களை உங்கள் பார்வைக்கு வழங்குகிறோம். இந்த பண்டிகை காலத்தில் கார் முன்பதிவு செய்பவர்கள் இந்த ஏஎம்டி கியர்பாக்ஸ் பற்றிய தகவல்களை தெரிந்து கொண்டு முன்பதிவு செய்வது நலம்.

 01. டாடா நானோ ஜென்எக்ஸ்

01. டாடா நானோ ஜென்எக்ஸ்

நகர்ப்புறத்திற்கு ஏற்ற அடக்கமான கார் மாடல். அலுவலகம் செல்லும் பெண்களுக்கு ஏற்றதாக கூறப்பட்டாலும், முன்பு பவர் ஸ்டீயரிங் இல்லாதது குறையாக இருந்தது. தற்போது பவர் ஸ்டீயரங், ஏஎம்டி கியர்பாக்ஸ் என்ற இரண்டும் இந்த கார் நகர்ப்புர வாசிகளுக்கும், பெண்களுக்கும் மிகச்சிறப்பான சாய்ஸாக மாற்றியிருக்கிறது. விலையும் குறைவு. பின்புற கதவை திறந்து பொருட்களை வைப்பதற்கான வசதியும் இப்போது ஏற்படுத்தப்பட்டிருப்பதும் கூடுதல் சிறப்பாக கூறலாம். இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.

 சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

இந்த காரில் 38.19 பிஎஸ் பவரையும், 51 என்எம் டார்க்கையும் வழங்கும் 624சிசி பெட்ரோல் எஞ்சின் உள்ளது. மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 25.4 கிமீ மைலேஜையும், ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட மாடல் லிட்டருக்கு 21.9 கிமீ மைலேஜையும் வழங்கும். பெட்ரோல் மாடல்களில் மிகச்சிறப்பான மைலேஜ் தரும் ஏஎம்டி கார் மாடலாகவும் இருப்பதையும் கவனிக்க வேண்டிய விஷயம். சென்னையில், டாடா ஜென்எக்ஸ் நானோ காரின் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட பேஸ் மாடல் ரூ.3.23 லட்சம் ஆன்ரோடு விலையிலும், டாப் வேரியண்ட் மாடல் ரூ.3.43 லட்சம் ஆன்ரோடு விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

டாடா ஜென்எக்ஸ் நானோ கூடுதல் விபரம்

 02. மாருதி ஆல்ட்டோ கே10

02. மாருதி ஆல்ட்டோ கே10

புதிய மாருதி ஆல்ட்டோ கே10 காரும் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட மாடல்களில் கிடைக்கிறது. சிறந்த செயல்திறன் கொண்ட 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் வரும் மாருதி ஆல்ட்டோ கே10 காருக்கு மாருதியின் பரந்து விரிந்த சர்வீஸ் நெட்வொர்க் பெரிய ப்ளஸ் பாயிண்ட். குறைவான பராமரிப்பு செலவு, உதிரிபாகங்கள் விலை குறைவு போன்றவையும் இந்த காரை இருவேறு கருத்து இல்லாமல் தேர்வு செய்யலாம். இதன் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட மாடல் விஎக்ஸ்ஐ என்ற ஒரு வேரியண்ட்டில் மட்டும் கிடைக்கிறது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

இந்த காரில் 67 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க்கையும் அதிகபட்சம் வழங்க வல்ல, 998சிசி பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்ப்டடு இருக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட மாடல்களில் கிடைக்கிறது. இந்த கார் லிட்டருக்கு 24.07 கிமீ மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இது மிக அதிக மைலேஜ் தரும் பெட்ரோல் ஏஎம்டி மாடலாகவும் இருப்பதை கவனிப்பட வேண்டிய ஒன்று. ஏசி, பவர் ஸ்டீயரிங், பவர் விண்டோஸ், சென்ட்ரல் லாக்கிங் உள்ளிட்ட வசதிகள் உண்டு. சென்னையில், மாருதி ஆல்ட்டோ கே10 காரின் ஏஎம்டி மாடல் ரூ.4.74 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

மாருதி ஆல்ட்டோ கே10 காரின் கூடுதல் விபரம்

03. மாருதி செலிரியோ

03. மாருதி செலிரியோ

ஏஎம்டி கியர்பாக்ஸுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட முதல் கார் மாடல். அறிமுகம் செய்யப்பட்ட நாள் முதல் இதன் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலுக்கு சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது. ரூ.5 லட்சம் பட்ஜெட்டில் மிகச்சிறந்த கார் மாடல்களில் ஒன்று. முதலில் எல்எக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ என்ற இரு வேரியண்ட்டுகளில் மட்டும் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் கிடைத்து வந்தது. சில மாதங்களுக்கு முன் அதிக வசதிகள் கொண்ட இசட்எக்ஸ்ஐ வேரியண்ட்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஓட்டுனர் பக்கத்திற்கான ஏர்பேக் இதில் இடம்பெற்றிருக்கிறது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

இந்த காரில் 67 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க்கையும் வழங்கும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் உள்ளது. ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட மாடல் லிட்டருக்கு 23.1 கிமீ மைலேஜை தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. சென்னையில், மாருதி செலிரியோ காரின் ஏஎம்டி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட எல்எக்ஸ்ஐ வேரியண்ட் ரூ.5.18 லட்சம் ஆன்ரோடு விலையிலும், விஎக்ஸ்ஐ வேரியண்ட் ரூ.5.47 லட்சம் ஆன்ரோடு விலையிலும், இசட்எக்ஸ்ஐ வேரியண்ட் ரூ.5.84 லட்சம் ஆன்ரோடு விலையிலும் கிடைக்கிறது.

மாருதி செலிரியோ காரின் கூடுதல் விபரம்

04. டாடா ஸெஸ்ட்

04. டாடா ஸெஸ்ட்

ஏஎம்டி கியர்பாக்ஸுடன் வந்த முதல் டீசல் கார் மாடல்தான் டாடா ஸெஸ்ட். சிறப்பான டிசைன், இடவசதி, வசதிகள், விலை என அனைத்திலும் நிறைவை தருகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனைக்கு பிந்தைய சேவையின் மீதுள்ள பயம் மற்றும் உதிரிபாகங்கள் விலை போன்றவை இந்த காரை பின்தங்க செய்திருக்கிறது. ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட டீசல் மாடல் XMA என்ற ஒரு வேரியண்ட்டில் கிடைக்கிறது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

டாடா ஸெஸ்ட் காரில் இந்தியாவின் நம்பகமான ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க்கையும் வழங்கும். லிட்டருக்கு 23 கிமீ மைலேஜ் வழங்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. சென்னையில் ரூ.8.36 லட்சம் ஆன்ரோடு விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

டாடா ஸெஸ்ட் காரின் கூடுதல் விபரம்

 05. மஹிந்திரா டியூவி 300

05. மஹிந்திரா டியூவி 300

சமீபத்தில் மார்க்கெட்டுக்கு வந்து கலக்கிக் கொண்டிருக்கும் அடக்கமான வகை எஸ்யூவி மாடல். எஸ்யூவி பிரியர்களை கவரும் தோற்றம், வசதிகள், போட்டியாளர்களைவிட குறைவான விலை போன்றவை இந்த எஸ்யூவியின் ஈர்க்கும் அம்சங்களாக இருக்கின்றன. அடக்கமானதாக குறிப்பிட்டாலும், 7 பேர் செல்வதற்கான இருக்கை வசதி கொண்டிருக்கிறது. ஏஎம்டி மாடலில் கிடைப்பதும் கூடுதல் வலு சேர்க்கும் அம்சமாக இருக்கிறது.

 சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

இந்த எஸ்யூவியில் இருக்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 81 பிஎச்பி பவரையும், 230 என்எம் டார்க்கையும் வழங்கும். லிட்டருக்கு 18.49 கிமீ மைலேஜை தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. 60 லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் டேங்க் உள்ளது. 384 லிட்டர் பூட் ரூம் கொள்ளளவும், 720 லிட்டர் வரை கொள்ளளவை கூட்டிக் கொள்ளும் வசதியும் உள்ளது. இந்த எஸ்யூவியின் ஏஎம்டி மாடல் டி6+ மற்றும் டி8 என்ற இரு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. சென்னையில், மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியின் டி6+ ஏஎம்டி வேரியண்ட் ரூ.10.07 லட்சம் ஆன்ரோடு விலையிலும், டி8 ஏஎம்டி மாடல் ரூ.10.77 லட்சம் ஆன்ரோடு விலையிலும் கிடைக்கிறது.

மஹிந்திரா டியூவி 300 எஸ்யூவியின் முழு விபரம்

ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட கார் மாடல்களும், சிறப்பம்சங்களும்

பட்ஜெட்டையும், பயன்பாட்டையும் பொறுத்து இந்த ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல்களில் ஒன்றை நீங்கள் எளிதாக தேர்வு செய்ய முடியும் என்று நம்புகிறோம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் ஃபேஸ்புக் பக்கம்

டிரைவ்ஸ்பார்க் தமிழ் டுவிட்டர் பக்கம்

 
English summary
We take a look at the present and future offerings in the world of affordable AMTs.
Please Wait while comments are loading...

Latest Photos