புதிய நம்பிக்கை... 'ஏஎம்டி' கியர்பாக்ஸ் கொண்ட சிறந்த கார் மாடல்கள்

By Saravana

போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில், கால் வலிக்க க்ளட்ச் பெடலை மிதித்துக் ஓட்டுவதிலிருந்து விடுதலை பெறுவதற்கு, ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட கார்கள்தான் ஒரே தீர்வு. அதேசமயம், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட கார் மாடல்களின் அதிக விலை மற்றும் அதிக பராமரிப்பு செலவும் பலருக்கு எட்டாக்கனியாக இருந்ததோடு, குறைவான மைலேஜ் பலரையும் விலகி இருக்கச் செய்தது.

மேலே படித்த குறைகளை போக்கும் விதத்தில், நிறைவான மைலேஜ், சாதாராண கியர்பாக்ஸ் கொண்ட மாடல்களைவிட சற்றே கூடுதல் விலை என வரப்பிரசாதமாக ஆட்டோமேட்டட் மேனுவல் கியர்பாக்ஸ்[AMT] எனப்படும் புதிய வகை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கார் மாடல்கள் வந்தன. கடந்த ஆண்டு மாருதி செலிரியோவில் முதல்முதலாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது.

இதைத்தொடர்ந்து, தற்போது ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல்களுக்கு வரவேற்பும், வருகையும் அதிகரித்துள்ளது. இந்தநிலையில், தற்போது தோதான விலையில் கிடைக்கும் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட மாடல்களின் விபரங்களை இங்கே தொகுத்து வழங்கியிருக்கிறோம். புதிய கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்கள், இந்த பட்டியலையும் ஒரு பார்வையிட்டு செல்வது உங்களது முடிவை சிறப்பானதாக்க உதவும்.

01. டாடா ஜென்எக்ஸ் நானோ கார்

01. டாடா ஜென்எக்ஸ் நானோ கார்

கடந்த மே மாதம் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட புதிய டாடா ஜென்எக்ஸ் நானோ கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. கல்லூரி அல்லது திருமணமாகாத வேலைக்கு செல்லும் மகள் பாதுகாப்பாக சென்று வருவதற்கு ஓர் பட்ஜெட் கார் வாங்க திட்டமிடும் பெற்றோர் இந்த காரை நிச்சயம் பரிசீலிக்கலாம். மிக குறைவான விலை ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட கார் மாடல் என்பதோடு, அதிக மைலேஜும் இந்த காரை முன்னிலைப்படுத்துகிறது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

இந்த கார் லிட்டருக்கு 21.9 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 24 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்கும் இருப்பதால், அடிக்கடி பெட்ரோல் நிலையத்திற்கு செல்ல வேண்டியிருக்காது. பவர் ஸ்டீயரிங் இருப்பதால், பெண்கள் முன்பைவிட எளிதாக ஓட்ட முடியும். பொழுதுபோக்கிற்கு 4 ஸ்பீக்கர்கள் கொண்ட மியூசிக் சிஸ்டம், மொபைல்போன் சார்ஜர் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. ஏஎம்டி மாடல் இரு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. சென்னையில், XMA வேரியண்ட் ரூ.3.22 லட்சம் ஆன்ரோடு விலையிலும், XTA வேரியண்ட் ரூ.3.43 லட்சம் ஆன்ரோடு விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

02. மாருதி ஆல்ட்டோ கே10

02. மாருதி ஆல்ட்டோ கே10

பட்ஜெட் ரகத்தில் சிறப்பான செயல்திறன் மிக்க எஞ்சின், குறைவான விலை மற்றும் சிறப்பம்சங்கள் மிகுந்த குட்டிக் கார் மாடல். இரு பாலருக்கும் ஏற்ற மாடலாக இதனை கூறலாம். குறிப்பாக, முதல்முறையாக கார் வாங்குவோருக்கு இது சிறந்த மாடலாக இருக்கும். சாதாராண ஆல்ட்டோ 800 காரைவிட பிரிமியம் அம்சங்கள் கொண்ட இந்த காரும் வசதிகள், விலை, குறைவான பராமரிப்பு செலவு அனைத்து விதத்திலும் நிறைவை தரும் ஏஎம்டி மாடலாக கூறலாம்.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

இந்த கார் லிட்டருக்கு 24.07 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. புதிய இன்டிரியர் அமைப்பு, மொபைல்போன் சார்ஜர், மியூசிக் சிஸ்டம் போன்ற அனைத்து வசதிகளுடன் கிடைக்கிறது. விஎக்ஸ்ஐ வேரியண்ட்டில் கிடைக்கும் ஆல்ட்டோ கே10 ஏஎம்டி மாடல் சென்னையில் ரூ.4.74 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

03. மாருதி வேகன் ஆர்

03. மாருதி வேகன் ஆர்

மாருதியின் அதிகம் விற்பனையாகும் பட்ஜெட் கார் மாடல் வேகன் ஆர். இந்த கார் சமீபத்தில் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட மாடலிலும் அறிமுகம் செய்யப்பட்டது. உயரமானவர்களும் எளிதில் ஓட்டக்கூடிய அம்சங்கள் கொண்ட மாருதி வேகன் ஆர் வசதிகளிலும் நிறைவை தருவதுடன், யூஸ்டு கார் மார்க்கெட்டிலும் நல்ல மதிப்பை தக்க வைத்து வருகிறது. இந்த கார் லிட்டருக்கு 20.51 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விஎக்ஸ்ஐ மற்றும் விஎக்ஸ்ஐ ஆப்ஷனல் என இரு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. இதில், ஓட்டுனர் பக்கத்திற்கான ஏர்பேக் ஆப்ஷனலாக வழங்கப்படுகிறது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

மாருதி வேகன் ஆர் மற்றும் ஸ்டிங்ரே மாடல்களில் பனி விளக்குகள், கீ லெஸ் என்ட்ரி, டில்ட் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய பவர் ஸ்டீயரிங், பவர் ஸ்டீயரிங் மற்றும் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய சைடு மிரர்கள் ஆகியவை முக்கிய வசதிகளாக இருக்கின்றன. ரியர் வைப்பர் மற்றும் தண்ணீர் தெளித்து துடைக்கும் வாஷரும் உள்ளது. மேனுவல் ஏசி வசதி, மியூசிக் சிஸ்டம் போன்ற வசதிகளும் நிரந்தர வசதியாக இடம்பெற்று இருக்கின்றன. மீட்டர் கன்சோலில் கியர் ஷிஃப்ட் இன்டிகேட்டர் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. ஆட்டோ கியர் ஷிஃப்ட் மாடலில் 14 இன்ச் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சென்னையில் ரூ.5.56 லட்சம் ஆன்ரோடு விலையிலும், விஎக்ஸ்ஐ ஆப்ஷனல் வேரியண்ட் ரூ.5.94 லட்சம் ஆன்ரோடு விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

 04. மாருதி செலிரியோ

04. மாருதி செலிரியோ

முதல்முதலாக ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்ட சிறந்த பட்ஜெட் கார் மாடல். சிறிய குடும்பத்தினருக்கு பயன்பாட்டிற்கு ஏற்ற அட்டகாசமான கார். வடிவமைப்பு, வசதிகளிலும் நிறைவை தருகிறது. இந்த காரில் மேக்னெட்டி மரெல்லி நிறுவனத்திடமிருந்து பெறப்படும் ஏஎம்டி கியர்பாக்ஸ் பயன்படுத்தப்படுகிறது.

 சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

மாருதி செலிரியோ காரின் ஏஎம்டி மாடல் லிட்டருக்கு இந்த காரின் எல்எக்ஸ்ஐ பேஸ் வேரியண்ட் சென்னையில் ரூ.5.18 லட்சம் ஆன்ரோடு விலையிலும், விஎக்ஸ்ஐ வேரிண்ட் ரூ.5.47 லட்சம் ஆன்ரோடு விலையிலும், இசட்எக்ஸ்ஐ வேரியண்ட் ரூ.5.85 லட்சம் ஆன்ரோடு விலையிலும் கிடைக்கிறது.

05. டாடா ஸெஸ்ட்

05. டாடா ஸெஸ்ட்

முதல்முறையாக டீசல் மாடலில் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்டதாக வந்த டாடா ஸெஸ்ட் கார் தற்போதும் மிக குறைவான விலை கொண்ட ஆட்டோமேட்டிக் காராக இருந்து வருகிறது. சிறந்த தோற்றம், நவீன வசதிகள், சரியான விலை கொண்ட இந்த காம்பேக்ட் செடான் கார் வாடிக்கையாளர்களிடத்தும் துவக்கத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், தொடர்ந்து அந்த வரவேற்பை போட்டியாளர்கள் முன்னால் நின்று சமாளிக்க தவறியது. ஆனாலும், குறைவான விலையில், டீசல் மாடலில் கிடைக்கும் ஒரே ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட மாடல் இது மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

 சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

இந்த காரின் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் XMA என்ற ஒரேயொரு வேரியண்ட்டில் விற்பனை செய்யப்படுகிறது. அராய் சான்றுபடி, லிட்டருக்கு 23 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஹார்மன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்றவற்றை கொண்டிருக்கிறது. சென்னையில் ரூ.8.36 லட்சம் ஆன்ரோடு விலையில் இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது.

06. மஹிந்திரா டியூவி300

06. மஹிந்திரா டியூவி300

எஸ்யூவி மாடலை விரும்புவோர் ஏஎம்டி மாடலை நினைத்துக் கூட பார்க்கக்கூடாது என்ற விதியை மாற்றி எழுதியிருக்கும் மாடல் இது. டீசல் மாடலில் விற்பனைக்கு வந்திருக்கும் காரின் 50 சதவீத முன்பதிவு ஏஎம்டி மாடலுக்குத்தான் என்பதை கணக்கில் கொள்ள வேண்டிய விஷயம்.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட இந்த கார் குறைவான இடவசதியில் பார்க்கிங் செய்யக்கூடிய எஸ்யூவி மாடல். அத்துடன் பின்புறத்தில் ஜம்ப் இருக்கைகள் மூலமாக 7 சீட்டர் ஆப்ஷனிலும் கிடைக்கிறது. லிட்டருக்கு 18.49 கிமீ மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஏர்பேக்குகளுடன் கிடைக்கிறது. சென்னையில் பேஸ் ஏஎம்டி மாடல் ரூ.10.07 லட்சம் விலையிலும், டாப் வேரியண்ட் ரூ.10.77 லட்சம் ஆன்ரோடு விலையிலும் கிடைக்கிறது.

07. விரைவில் மாருதி டிசையர்

07. விரைவில் மாருதி டிசையர்

இந்திய கார் மார்க்கெட்டின் நட்சத்திர கார் மாடலாக விளங்கும் மாருதி டிசையர் காரின் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட மாடல் அடுத்த மாதம் விற்பனைக்கு வர இருக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரு மாடல்களிலும் வர இருப்பதால், அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. எனவே, உங்களது தேர்வு பட்டியலில் மாருதி டிசையர் ஏஎம்டி மாடலையும் சேர்த்துக் கொள்ளலாம்.

Image Source: gaadiwaadi.com

Most Read Articles
English summary
Affordable Cars With AMT in India.
Story first published: Monday, December 28, 2015, 17:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X