புதிய ஹோண்டா ஜாஸ் Vs ஹூண்டாய் எலைட் ஐ20: ஒப்பீட்டு பார்வை

Posted By:

இந்த ஆண்டில் மிக முக்கியமான கார் மாடல்களில் ஒன்று புதிய ஹோண்டா ஜாஸ். ஹோண்டா கார் நிறுவனம் மற்றும் வாடிக்கையாளர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மாடல்.

நம் நாட்டு கார் மார்க்கெட்டின் மிகவும் பிரத்யேகமான பிரிமியம் ஹேட்ச்பேக் கார் செக்மென்ட்டில் முத்தாய்ப்பான மாடலாக வந்திறங்கியுள்ளது. இந்தநிலையில், இந்த செக்மென்ட்டில் வாடிக்கையாளர்களை வளைத்து கட்டி வைத்திருக்கும் ஹூண்டாய் எலைட் ஐ20 காருக்கு விலை, வசதிகள், டிசைன் என அனைத்திலும் நேர் போட்டியாக நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது.

இந்தநிலையில், இரு கார்களிலும் இருக்கும் சிறப்பம்சங்களை இந்த செய்தித் தொகுப்பில் ஒப்பிட்டு பார்க்கலாம்.

விலை ஒப்பீடு

விலை ஒப்பீடு

ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் விலைப்பட்டியலை வைத்தே இந்த காரின் விலையை நிர்ணயித்துள்ளனர். ஆம், புதிய ஹோண்டா ஜாஸ் காரின் பெட்ரோல் பேஸ் மாடல் ரூ.5.31 லட்சத்திலும், டீசல் பேஸ் மாடல் ரூ.6.50 லட்சத்திலும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் பெட்ரோல் பேஸ் மாடல் ரூ.5.30 லட்சத்திலிருந்தும், டீசல் காரின் பேஸ் மாடல் ரூ.6.42 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் வந்திருக்கிறது. விலையில் இரு கார்களுக்கும் பெரிய அளவிலான வித்தியாசங்கள் இல்லை.

டிசைன் - புதிய ஹோண்டா ஜாஸ்

டிசைன் - புதிய ஹோண்டா ஜாஸ்

புத்தம் புதிய டிசைன் தாத்பரியத்தில் உருவாகியிருக்கும் ஹோண்டா ஜாஸ் காரின் வெளிப்புற டிசைன் தனித்துவமாக இருக்கிறது. ஹெட்லைட், முகப்பு கிரில், பம்பர் என அனைத்தும் சிறப்பான விகிதத்தில் ஒருங்கிணைந்து நேர்த்தியான தோற்றத்துடன் காட்சியளிக்கிறது. பக்கவாட்டு டிசைனில் பாடி லைன்கள் சிறப்பானதொரு கவர்ச்சியை தருகிறது. பின்புறத்தை பொறுத்தவரை, டெயில்லைட் க்ளஸ்ட்டர் கண்களை கவரும் விஷயம்.

டிசைன் - ஹூண்டாய் எலைட் ஐ20

டிசைன் - ஹூண்டாய் எலைட் ஐ20

ஒரு பிரிமியம் ஹேட்ச்பேக் என்றால் எப்படியிருக்க வேண்டும் என்று எடுத்துக்காட்டுக்கு இலக்கணமாக டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. முகப்பு கிரில், ஹெட்லைட், பின்புற டெயில்லைட் க்ளஸ்ட்டர் ஆகியவை இந்த காரின் டிசைனை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றுவிட்டன. ஹூண்டாய் நிறுவனத்தின் புளூயிடிக் 2.0 டிசைன் தாத்பரியத்தில் உருவான இந்த காரின் டிசைன் சிலாகித்து கூற வேண்டியது ஏராளம். இரு கார்களையும் நிறுத்தி பார்க்கும்போது கண்கள் ஹூண்டாய் எலைட் ஐ20 பக்கம் திரும்புவதை தவிர்க்க முடியவில்லை. ஆனாலும், ஹோண்டா ஜாஸ் டிசைனில் குறையேதும் கூறமுடியாது. எனவே, வெவ்வேறு ரசனை உள்ள வாடிக்கையாளர்களை இரு கார்களும் கவரும்.

 இன்டிரியர் - புதிய ஹோண்டா ஜாஸ்

இன்டிரியர் - புதிய ஹோண்டா ஜாஸ்

புதிய ஹோண்டா ஜாஸ் காரில் கருப்பு நிற இன்டிரியர் கொடுக்கப்பட்டிருக்கிறது. டேஷ்போர்டு, சென்டர் கன்சோல், ஸ்டீயரிங் வீல், ஏசி வென்ட்டுகள், இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை மிக நேர்த்தியாகவும், பார்க்க அழகாகவும் இருக்கிறது. ஹோண்டாவின் தரமும் இந்த காரில் பளிச்சிடுகிறது. இருக்கைகளின் அமைப்பும் சிறப்பாக இருப்பதோடு, சிறப்பான ஹெட்ரூம் மற்றும் லெக்ரூம் கொண்டிருக்கிறது.

 இன்டிரியர் - ஹூண்டாய் எலைட் ஐ20

இன்டிரியர் - ஹூண்டாய் எலைட் ஐ20

ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் கருப்பு மற்றும் பீஜ் என இரட்டை வண்ணக் கலவையிலான இன்டிரியர் கொடுக்கப்பட்டிருக்கிறது. வழக்கம்போல் ஹூண்டாயின் தரமான பாகங்களும், இன்டிரியர் டிசைனும் கவர்ச்சியாக இருக்கிறது. ஆனால், இடவசதியை பொறுத்தவரை ஹோண்டா ஜாஸ் சிறப்பாக இருக்கிறது. பின்புற இருக்கையில் ஹோண்டா ஜாஸ் அளவுக்கு இல்லாமல், நெருக்கடியான உணர்வை தருகிறது. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது இன்டிரியரில் வெல்வது புதிய ஹோண்டா ஜாஸ் கார்தான்.

வசதிகள் - புதிய ஹோண்டா ஜாஸ்

வசதிகள் - புதிய ஹோண்டா ஜாஸ்

புதிய ஹோண்டா ஜாஸ் காரில் ஐ- பாட் கனெக்ட்டிவிட்டி கொண்ட 5 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. டச் ஸ்கிரீன் கன்ட்ரோல் பேனல், ஆட்டோமேட்டிக் ஏசி, டாப் வேரியண்ட்டில் ஸ்டார்ட்/ ஸ்டாப் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல், உயரத்தை கூட்டிக் குறைக்கும் வசதியுடன் டிரைவர் இருக்கை ஆகியவை உள்ளன.

வசதிகள் - ஹூண்டாய் எலைட் ஐ20

வசதிகள் - ஹூண்டாய் எலைட் ஐ20

ஹோண்டா ஜாஸ் காரில் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றிருக்கும் நிலையில், ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் 1ஜிபி சேமிப்பு திறன் கொண்ட டபுள் டின் ஆடியோ சிஸ்டம் உள்ளது. ஆட்டோமேட்டிக் ஹெட்லைட், ஆட்டோ ஏசி, கூல்டு கிளவ் பாக்ஸ், ஸ்டார்ட்/ஸ்டாப் சிஸ்டம் ஆகியவை உள்ளன. ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் பின்புற இருக்கைக்கு தனியான ஏசி வென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இரு கார்களும் வெவ்வேறு வித்ததில் வசதிகளில் ஒன்றையொன்று விஞ்சுகின்றன.

எஞ்சின் ஒப்பீடு - பெட்ரோல்

எஞ்சின் ஒப்பீடு - பெட்ரோல்

புதிய ஹோண்டா ஜாஸ் காரில் 1.2 லிட்டர் ஐ-விடெக் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 90 பிஎஸ் பவரையும், 110 நியூட்டன் மீட்டர் டார்க்கையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் கொண்ட மாடல்களில் கிடைக்கிறது. அதேநேரத்தில், ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் 83 பிஎஸ் பவரையும், 115 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் எஞ்சின் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஹோண்டாவின் பெட்ரோல் எஞ்சின் மிகவும் நம்பகத்தன்மைக்கு பெயர் போனவை என்பதும், பேடில் ஷிப்ட் வசதியுடன் சிவிடி கியர்பாக்ஸ் மாடலில் ஹோண்டா ஜாஸ் கிடைப்பதும் கூடுதல் பலம்.

 டீசல் எஞ்சின் ஒப்பீடு

டீசல் எஞ்சின் ஒப்பீடு

புதிய ஹோண்டா ஜாஸ் காரில் 1.5 லிட்டர் ஐ- டிடெக் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக இந்த எஞ்சின் 100 பிஎஸ் பவரையும், 200 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்கிறது. அதேநேரத்தில், ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் இருக்கும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 90 பிஎஸ் பவரையும், 220 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இந்த இரு டீசல் மாடல்களும் ஒன்றையொன்று விஞ்சி நின்றாலும், மைலேஜ் எனும் விஷயத்தை வைத்தே முடிவு செய்ய முடியும். எனவே, அடுத்த ஸ்லைடுக்கு வந்துவிடுங்கள்.

மைலேஜ் ஒப்பீடு - பெட்ரோல்

மைலேஜ் ஒப்பீடு - பெட்ரோல்

புதிய ஹோண்டா ஜாஸ் காரின் பெட்ரோல் மாடலின் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட மாடல் லிட்டருக்கு 18.7 கிமீ மைலேஜையும், சிவிடி கியர்பாக்ஸ் கொண்ட மாடல் லிட்டருக்கு 19.0 கிமீ மைலேஜையும் தருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 17.19 கிமீ மைலேஜை வழங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. பெட்ரோல் மாடல்களில் மைலேஜில் புதிய ஹோண்டா ஜாஸ் காரின் சிவிடி கியர்பாக்ஸ் மாடல் சிறந்ததாக இருக்கிறது.

மைலேஜ் ஒப்பீடு - டீசல்

மைலேஜ் ஒப்பீடு - டீசல்

புதிய ஹோண்டா ஜாஸ் காரின் டீசல் மாடல் லிட்டருக்கு 27.3 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேநேரத்தில், ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் டீசல் மாடல் லிட்டருக்கு 22.54 கிமீ மைலேஜ் தரும். எனவே, எஞ்சின் மைலேஜ் என ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, புதிய ஹோண்டா ஜாஸ் காரின் டீசல் மாடல் வெற்றி பெறுகிறது

 பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

இரண்டு கார்களிலும் டியூவல் ஏர்பேக்ஸ், எலக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரிபியூஷன் தொழில்நுட்பம் கொண்ட ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இடம்பெற்றிருக்கிறது. இரண்டிலும் ரியர் பார்க்கிங் அசிஸ்ட் வசதியும் உள்ளன. அதேநேரத்தில், புதிய ஹோண்டா ஜாஸ் காரில் லோடு லிமிட்டர் நுட்பம் கொண்ட ப்ரீ டென்ஷனர் சீட் பெல்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே, பாதுகாப்பு விஷயத்திலும் புதிய ஹோண்டா ஜாஸ் கார் சற்று முன்னிலை பெறுகிறது.

எது பெஸ்ட்?

எது பெஸ்ட்?

விலை, சிறப்பம்சங்கள், டிசைன், எஞ்சின் என பல விதங்களில் இரு கார்களுமே ஒன்றையொன்று சளைத்ததாக இல்லை. ஆனால், சாலைகளில் ஏராளமான ஹூண்டாய் எலைட் ஐ20 கார்களை பார்த்துவிட்டு, புதிய மாடலாக இருக்க வேண்டும் என்பவர்களுக்கு புதிய தலைமுறை ஹோண்டா ஜாஸ் சிறப்பான சாய்ஸ். இரு கார்களுக்கும் விலை அதிக வித்தியாசம் இல்லை என்பதால், அதைவிடுத்து பார்த்தால், புதிய டிசைன், வசதிகள், பாதுகாப்பு, செயல்திறன் மிக்க எஞ்சின், மைலேஜ் என அனைத்திலும் புதிய ஹோண்டா ஜாஸ் கார்தான் பெஸ்ட் என்று கூறலாம்.

 
English summary
Honda Jazz vs Hyundai Elite i20 comparison. Now what happens when the newcomer, the Jazz takes on the king of hot hatches, the Elite i20? Let’s find out!

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark