ஆடி ஏ3 எஸ்-லைன் சொகுசு கார் மாடலின் டெஸ்ட் டிரைவ் விமர்சனம்

Written By:

கார் பிரியர்களின் கனவு பிராண்டுகளில் ஒன்று ஆடி. அரசியல்வாதிகள் முதல் ஆடம்பரர்கள் வரை அனைத்து தரப்பினரின் ஆசைகளில் ஒன்றாக ஆடி பிராண்டு மாறியிருக்கிறது. அசத்தலான டிசைனால் கவர்ந்து வரும் ஆடி காரை சொந்தமாக்கிக் கொள்ள விரும்புவோர்க்காக, ஆரம்ப ரக சொகுசு செடான் கார் மாடலாக ஏந்தளவுக்கு ஆசை கொண்டிருப்பவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக ஆடி கார் நிறுவனம் விற்பனை செய்யும் குறைவான விலை சொகுசு செடான் கார் மாடல் ஆடி ஏ3 காரை ஆடி விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில், ஆடி ஏ3 காரின் டாப் வேரியண்ட் மாடலாக விற்பனை செய்யப்படும் ஆடி ஏ3 எஸ் லைன் காரை சமீபத்தில் மும்பையில் வைத்து டெஸ்ட் டிரைவ் செய்தோம். சாதாரண ஏ3 காரில் கூடுதல் பாடி கிட் உள்ளிட்ட இத்யாதிகளுடன் வசீகரித்த இந்த மாடலை டெஸ்ட் டிரைவ் செய்த போது கிடைத்த அனுபவத்தையும், தகவல்களையும் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

குறைவான விலை ஆடி செடான் கார்

குறைவான விலை ஆடி செடான் கார்

கடந்த 1996ல் அறிமுகம் செய்யப்பட்ட ஆடி ஏ3 கார் தற்போது மூன்றாம் தலைமுறை மாடலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2014ம் ஆண்டில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஃபோக்ஸ்வேகன் எம்க்யூபி பிளாட்ஃபார்மில் இந்த கார் உருவாக்கப்பட்டிருப்பதுடன், ஃபோக்ஸ்வேகன் குழும கார்களின் பல டிசைன் தாத்பரியங்களையும் ஆங்காங்கே கொண்டுள்ளதை காண முடிகிறது.

 டிசைன்

டிசைன்

மிக பிரம்மாண்டமான அறுகோண வடிவ முகப்பு க்ரில் அமைப்பு காரின் வசீகரத்தை பன்மடங்கு கூட்டுவதாக அமைந்துள்ளது. க்ரில் அமைப்பின் மேல் புறத்தில், ஆடியின் சின்னமாகிய 4 வலையங்கள் க்ரோம் பூச்சுடன் பளபளக்கின்றன. க்ரில்லின் மேற்புறத்திற்கு இணையாக அமைக்கப்பட்டிருக்கும் ஹெட்லைட்ஸ், அதன் ஊடாக காட்சி தரும் எல்இடி பகல்நேர விளக்குகள் ஆகியவை கவரும் அம்சங்களாக கூறலாம். பம்பரும் கச்சிதமாக இருக்கிறது. பக்வாடடில் ஆடி ஏ3 காரைவிட அதிக வித்தியாசங்கள் இல்லை. ஆனால், 17 இன்ச் அலாய் வீல்கள் கூடுதல் கம்பீரத்தை வழங்குகிறது. பின்புறதில் ஸ்கஃப் பிளேட்டுகள், ஆடி ஏ3 எஸ் லைன் பேட்ஜ் ஆகியவை வித்தியாசங்களை தருகிறது. மேலும், இரட்டை குழல் சைலென்சர் சிறப்பான கவர்ச்சியை தருகிறது.

எஞ்சின்

எஞ்சின்

ஆடி ஏ3 எஸ் லைன் மாடலில் 1.8 லிட்டர் டிஎஃப்எஸ்ஐ பெட்ரோல் எஞ்சின் பயன்டுத்தப்பட்டு இருக்கிறது. டர்போசார்ஜர் துணையுடன் இயங்கும் இந்த டைரக்ட் இன்ஜெக்ஷன் எஞ்சின் அதிகபட்சமாக 178 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க்கையும் வழங்கும். 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. ஆடி ஏ3 எஸ்- லைன் கார் லிட்டருக்கு 16.6 கிமீ மைலேஜ் தரும் என்று அராய் சான்று கூறுகிறது. எமது டெஸ்ட் டிரைவின்போது சராசரியாக லிட்டருக்கு 14 கிமீ மைலேஜ் தந்தது.

இன்டீரியர்

இன்டீரியர்

முற்றிலும் கருப்பு வண்ண இன்டீரியரை கொண்டிருக்கிறது ஆடி ஏ3 எஸ்-லைன் கார். காரின் உள்ளே நுழைந்ததும், எம்எம்ஐ திரை டேஷ்போர்டுக்குள் இருந்து வெளியே தலை நீட்டுகிறது. இது கவனத்தை மிகவும் ஈர்த்தது. அத்துடன், காரின் எஞ்சினை அணைத்துவிட்டால், உடனடியாக ஆமைபோல அந்த திரை உள்ளே சென்றுவிடுகிறது. இந்த காரின் ஏர் வென்ட்டுகள் மிகவும் சிறப்பானவை. அதாவது, ஜெட் விமானங்களின் டர்போஃபேன் போன்று வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சென்டர் கன்சோலில் சிடி பிளேயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. அத்துடன், இந்த காரில் பாடல்களை ஸ்டோர் செய்து வைக்க ஏதுவாக 20 ஜிபி சேமிப்பு திறன் கொண்ட ஹார்டு டிரைவ் உள்ளது.

 மீட்டர் கன்சோல்

மீட்டர் கன்சோல்

மீட்டர் கன்சோலில் கருப்பு வண்ண பின்னணிக்கு மத்தியில் வேகம் மற்றும் எஞ்சின் சுழல் வேகத்தை காட்டுவதற்காக சிவப்பு நிற காட்டும் முட்கள் மிக தெளிவான காட்டுகின்றன. அதற்கடுத்து, ஸ்டீயரிங் வீலிலேயே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை கட்டுப்படுவதற்கான பட்டன்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. மேலும், மொபைல்போன் அழைப்புகளை எடுப்பதற்கும், அழைப்பு செய்வதற்குமான வசதியையும் இந்த பட்டன்கள் வழங்குகின்றன.

இருக்கைகள்

இருக்கைகள்

மிக உயர்வகை லெதர் இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. முன் இருக்கைகள் மிக சிறப்பான இடவசதியை அளிக்கின்றன. அதேநேரத்தில் பின் இருக்கையில் உயரமானவர்கள் அமரும்போது தலை இடிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

 ஓட்டுதல் தரம்

ஓட்டுதல் தரம்

சாதாரண ஓட்டுதல் மோடில் வைத்து செலுத்தும்போது இயக்குவதற்கு எளிதாக இருக்கிறது. எஸ் மோடில் வைத்து ஓட்டும்போது எஞ்சின் சக்தி அதிகரிப்பதுடன், சஸ்பென்ஷன் அதிக இறுக்கமாக மாறுகிறது. இதன்மூலமாக, அதிவேகத்தில் செலுத்துவதற்கு ஏதுவாகிறது என்பதுடன், வளைவுகளிலும் சிறப்பான கையாளுமையை உணர முடிகிறது. அதற்கு ஏற்றாற்போல் ஸ்டீயரிங் வீலும் அட்ஜெஸ்ட் செய்து, சிறப்பான ஓட்டுதல் அனுபவத்தை வழங்குகிறது.

பாதுகாப்பு

பாதுகாப்பு

டிராக்ஷன் கனட்ரோல் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட், ஹில் ஹோல்டு கன்ட்ரோல், ஆன்ட்டி லாக்கிங் பிரேக்கிங் சிஸ்டம், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், இபிடி போன்ற பல நவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்களை பெற்றிருக்கிறது.

பிடித்தது

பிடித்தது

டிசைன்

பிரத்யேகமான பாகங்கள்

கையாளுமை

பாதுகாப்பு அம்சங்கள்

பிடிக்காதவை

பிடிக்காதவை

  • கூடுதல் விலைக்கு ஏற்றாற்போல் கூடுதல் சிறப்பம்சங்கள் இல்லை
  • இறுக்கமாக சஸ்பென்ஷன்
  • அதிக விலை
விலை

விலை

ரூ.31.40 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் ஆடி ஏ3 எஸ்- லைன் கார் விற்பனை செய்யப்படுகிறது.

ஏமாற்றம்?

ஏமாற்றம்?

ஆடி ஏ3 எஸ்- லைன் காரை வாங்க செல்வோர்க்கு பெரும் ஏமாற்றம் அளிக்கும் விஷயங்களில் ஒன்றாக பேடில் ஷிஃப்ட் வசதி இல்லை. ஆனால், இந்த காரின் எஞ்சின் மிகவும் மென்மையான உணர்வை தருகிறது. மைலேஜும் நிச்சயம் வாடிக்கையாளர்களை கவரும் அம்சம். எனவே, தினசரி பயன்பாட்டுக்கு ஏற்ற சொகுசு கார் மாடலாக இருக்கும். இந்த காரில் 4 பேர் தாராளமாக அமர்ந்து செல்லும் இடவசதியை கொண்டிருக்கிறது. அதேநேரத்தில், இதனைவிட சிறப்பான அம்சங்கள் கொண்ட வேறு மாடல்கள் இருப்பதும் வாடிக்கையாளர்களின் கவனத்தை திசை திருப்பும்.

ஆடி ஏ3 ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

ஆடி ஏ3 சொகுசு செடான் டீசல் காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

 

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Audi A3 S-Line Review: Normal Yet Sporty Sedan.
Story first published: Tuesday, March 15, 2016, 11:50 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark