2017 ஆடி ஏ4 சொகுசு காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

Written By:

ஜெர்மனியை சேர்ந்த ஆடி நிறுவனத்தின் வெற்றிகரமான மாடல் ஆடி ஏ4 சொகுசு செடான் கார். கடந்த 2008ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு வந்த இந்த கார், அதற்கு பிறகு பெரிய மாற்றங்கள், மேம்படுத்தும் நடவடிக்கைகள் இல்லாமல் இருந்தது.

போட்டியாளர்களான பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் கார்கள் பல மாற்றங்களுடன் புதிய தலைமுறை மாடல்களாக மாறிவிட்ட நிலையில், ஆடி ஏ4 மட்டும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை பெறவில்லை. ஒருவழியாக, தொழில்நுட்ப அளவிலும், சொகுசு வசதிகள் அளவிலும் தற்போது புதிய ஆடி ஏ4 கார் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. வடிவமைப்பிலும் சிறிய மாற்றங்களை கண்டிருக்கிறது.

இந்த நிலையில், இந்த புதிய ஆடி ஏ4 காரை சமீபத்தில் டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பை டிரைவ்ஸ்பார்க் தளம் பெற்றது. பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் கார்களை எதிர்கொள்ள இந்த மாற்றங்கள் போதுமா? புதிய ஆடி ஏ4 சொகுசு கார் எவ்வாறு இருக்கிறது என்பதை எமது டெஸ்ட் டிரைவ் மூலம் கிடைத்த அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.

ஆடி ஏ4 சொகுசு காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

2008-2016ம் ஆண்டு வரையில் விற்பனையில் இருந்த முந்தைய தலைமுறை மாடலுக்கும் இந்த புதிய மாடலுக்கும் தோற்றத்தில் அதிக வேறுபாடுகள் தெரியவில்லை. ஆனால், சற்று நுணுக்கமாக பார்த்தால் நவீன சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டு இருப்பதை உணர்ந்து கொள்ளலாம்.

ஆடி ஏ4 சொகுசு காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

குறிப்பாக, புதிய எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள் மிக முக்கிய மாற்றம். அத்துடன் பாடி லைன் மிக சற்று தடிமனமாக தெரிவதும், அதன் தாக்கம் பானட்டில் இருப்பதும் குறிப்பிடத்தக்க மாற்றம். இது புதிய தலைமுறை மாடல் என்பதற்கு சாட்சியாக இருக்கிறது.

ஆடி ஏ4 சொகுசு காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய தலைமுறை ஆடி ஏ4 காரின் முன், பின் சக்கரங்களுக்கு இடையிலான இடைவெளி[வீல் பேஸ்] 0.5 இன்ச் அளவுக்கும், காரின் அகலம் 0.6 இன்ச் அளவிற்கும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. ஒட்டுமொத்த நீளம் ஒரு இன்ச் அளவிற்கு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

ஆடி ஏ4 சொகுசு காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பழைய மாடலைவிட பெரிய காராக தோற்றமளித்தாலும், எடை கிட்டத்தட்ட 120 கிலோ குறைக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, பழமை மாறாமல் புதிய தொழில்நுட்பங்களுடன் புதுப்பிக்கப்பட்டு இருப்பது தெரிகிறது.

ஆடி ஏ4 சொகுசு காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

முன்புறத்தில் பரந்து விரிந்த ஆடியின் டிரேட்மார்க் அறுகோண வடிவ க்ரில் அமைப்பு காரின் முகப்புக்கு மிக மிக கவர்ச்சியாக இருக்கிறது. அத்துடன், மட்டி உயிரினத்தின் கூடு போன்ற வரிகளை கொண்ட பானட் அமைப்பும் நவீன கார் என்பதை பரைசாற்றும் விஷயங்கள். வெளிப்புறத்தைவிட குறிப்பிடத்தக்க மாற்றங்கள் உட்புறத்தில்தான் நிகழ்ந்துள்ளன.

ஆடி ஏ4 சொகுசு காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஓட்டுனர் இருக்கை, டேஷ்போர்டு மற்றும் ஓட்டுனருக்கான தகவல்களை தரும் கருவிகள் அனைத்தும் குறிப்பிட்டத்தக்க மாற்றங்களுடன் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும், ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தவுடன் மிகவும் சவுகரியமாகவும், நெருக்கடியில்லாத உணர்வையும் தருகிறது.

ஆடி ஏ4 சொகுசு காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டிரைவர் சீட்டில் உட்கார்ந்தவுடன் நம் கண்ணில் பட்ட விஷயம், டேஷ்போர்டு முழுமைக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் ஏசி வென்ட்டுகள்தான். வேறு எந்த காரிலும் இதுபோன்ற அமைப்பு காண்பது அரிதான விஷயம்.

ஆடி ஏ4 சொகுசு காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

அடுத்ததாக, டேஷ்போர்டின் மேல்புறத்தில் நடுநாயகமாக வீற்றிருக்கும் 8.3 இன்ச் டச்ஸ்கிரீனுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம். இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ சாஃப்ட்வேர்களை சப்போர்ட் செய்யும். பொழுதுபோக்கு வசதிகள், நேவிகேஷன் வசதி உள்ளிட்ட பல வசதிகளை ஒருங்கே தரும் சாதனமாக இது இருக்கிறது.

ஆடி ஏ4 சொகுசு காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

தகவல்களை படங்களுடன் விளக்கும் விர்ச்சுவல் காக்பிட் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இதன் மற்றொரு முக்கிய அம்சம். ஸ்மார்ட்போன்களை வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்யும் வசதி, ஃப்ரேம்லெஸ் உட்புற ரியர் வியூ கண்ணாடியும் முக்கியமான வசதிகள்.

ஆடி ஏ4 சொகுசு காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

முன் இருக்கைகள் மிக சொகுசாக இருக்கின்றன. பின் இருக்கைகள் சொகுசாகவும், போதிய இடவசதியுடன் இருந்தாலும், இந்த அகலத்திற்கு இரண்டு பேர் மட்டுமே வசதியாக அமர்ந்து செல்ல முடியும்.

ஆடி ஏ4 சொகுசு காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

சொகுசு கார்களில் இருக்கும் கீ மெமரி வசதி மூலமாக இருக்கையின் உயரத்தையும், சாய்மான கோணத்தையும் வசதிகேற்ப பதிவு செய்து வைத்துக் கொள்ள முடியும். ஆனால், இந்த காரின் கீ மெமரி வசதியின் மூலமாக ஏசி, டிரைவிங் மோடு மற்றும் பொழுதுபோக்கு சாதனங்களின் செயல்பாட்டையும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பதிவு செய்து வைத்துக் கொள்ள முடியும்.

ஆடி ஏ4 சொகுசு காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பழைய மாடலில் 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் இருந்த நிலையில், அதற்கு மாற்றாக தற்போது புதிய 1.4 லிட்டர் TFSI பெட்ரோல் எஞ்சினுடன் வந்துள்ளது. மேலும், பழைய எஞ்சின் 170 பிஎச்பி பவரை வெளிப்படுத்திய நிலையில், புதிய 1.4 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 150 பிஎச்பி பவையும், 250 என்எம் டார்க்கையும் வழங்கும்.

ஆடி ஏ4 சொகுசு காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இருந்தாலும், எடைக் குறைப்பு காரணமாக, பழைய மாடலைவிட மிகச் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும் என்கிறது ஆடி. அதனை நிரூபிப்பது போலவே எமது டெஸ்ட் டிரைவின்போது ஆரம்ப நிலையில் மிகச்சிறப்பான பிக்கப்பை தருகிறது. 0- 100 கிமீ வேகத்தை இந்த கார் 8.5 வினாடிகளில் எட்டிவிடும். பழைய மாடலைவிட 3 வினாடிகள் குறைவான நேரத்திலேயே இந்த வேகத்தை கடந்துவிடும்.

ஆடி ஏ4 சொகுசு காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய ஆடி ஏ4 கார் மணிக்கு 210 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது. பழைய காரில் சிவிடி கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டிருந்த நிலையில், புதிய மாடலில் 7 ஸ்பீடு டியூவல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது.

ஆடி ஏ4 சொகுசு காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய ஆடி ஏ4 கார் லிட்டருக்கு 17 கிமீ வரை மைலேஜ் தரும் என்று ஆடி தெரிவிக்கிறது. இந்த காரில் விடுபட்ட மிக முக்கியமான விஷயம் ஆடி நிறுவனத்தின் விசேஷமான க்வாட்ரோ ஆல் வீல் டிரைவ் தொழில்நுட்பம்தான். முன்புற சக்கரங்களுக்கு பவரை அளிக்கும் ஃப்ரண்ட் வீல் டிரைவ் டெக்னாலஜியுடன் இயங்குகிறது.

ஆடி ஏ4 சொகுசு காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த காரின் கையாளுமை மிகச் சிறப்பாக இருக்கிறது. அதேபோன்று, அதிவேகத்திலும், வளைவுகளிலும் அதிக நிலைத்தன்மையுடன், சொகுசான பயணத்தை வழங்குகிறது. இந்த காரில் 8 ஏர்பேக்குகள், மோதலை தவிர்க்கும் தானியங்கி பிரேக்கிங் சிஸ்டம், தடம் மாறுதலை எச்சரிக்கும் வசதி உள்ளன.

ஆடி ஏ4 சொகுசு காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

தவிர, கண்ணுக்கு புலப்படாத பகுதிகளில் வரும் வாகனங்கள் குறித்து ஓட்டுனரை எச்சரிக்கும் வசதி, நெடுஞ்சாலை பயணங்களின்போது சீரான வேகத்தில் காரை இயக்கும் ஆக்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் வசதி, ஓட்டுனர் அயர்வதை கண்டறிந்து எச்சரிக்கும் வசதி என்று பாதுகாப்பு அம்சங்களுக்கு குறைவில்லை.

விலை விபரம்

விலை விபரம்

ஆடி ஏ4 ப்ளஸ்: ரூ.38.10 லட்சம்

ஆடி ஏ4 டெக்னாலஜி: ரூ.41.20 லட்சம்

போட்டியாளர்களை வெல்லுமா?

போட்டியாளர்களை வெல்லுமா?

சொகுசு வசதிகள், கையாளுமை, செயல்திறன், தொழில்நுட்பங்கள், பாதுகாப்பு, தோற்றம் மற்றும் விலை என அனைத்து அம்சங்களிலும் புதிய ஆடி ஏ4 கார் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் அம்சங்களை பெற்றிருக்கிறது. தரத்திலும் சிறப்பான மாடலாக இருப்பதும், ஆடி பிராண்டின் மீதான கவர்ச்சியும் வாடிக்கையாளர்களின் கவனத்தை நிச்சயம் ஈர்க்கும்.

எமது அபிப்ராயம்

எமது அபிப்ராயம்

நவீன தொழில்நுட்பம், தனித்துவமான தோற்றம், சிறப்பான ஓட்டுதல் அனுபவம் என சரியான விகிதத்தில் கலக்கப்பட்ட தொழில்நுட்ப அம்சங்களுடன் வந்திருக்கும் புதிய ஆடி ஏ4 கார் இதுவரை வந்த 9 தலைமுறை ஆடி ஏ4 மாடல்களில் மிகவும் சிறப்பானதாகவே கூறலாம்.

டாடா டியாகோ காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டாடா டியாகோ [முன்பு ஸீக்கா] காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

English summary
First Drive: The 2017 Audi A4 Back In Form — The Best A4 — After 9 Generations. Read the complete test drive details in Tamil.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark