ஆடி ஏ6 மேட்ரிக்ஸ் செடான் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

Posted By:

சொகுசு கார் மார்க்கெட்டில் ஜெர்மனியை சேர்ந்த ஆடி, பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால், வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில், நவீன தொழில்நுட்ப அம்சங்களை அறிமுகம் செய்வதில் மூன்று நிறுவனங்களும் போட்டா போட்டி போடுகின்றன.

அந்த வகையில், நடுத்தர வகை சொகுசு மார்க்கெட்டில், தற்போது ஆடி நிறுவனம் புதிய ஏ6 செடான் காரின் டீசல் மாடலை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்த மாடலின் மிக முக்கிய அம்சமாக கூறப்படுவது, மேட்ரிக்ஸ் ஹெட்லைட் சிஸ்டம்தான். அதுதவிர, கூடுதல் மாற்றங்களுடன் வந்திருக்கும் இந்த புதிய காரை சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் வைத்து டெஸ்ட் டிரைவ் செய்தோம். அப்போது, இந்த கார் பற்றி மனதுக்குள் விழுந்த பதிவுகளை உங்கள் பார்வைக்கு வழங்குகிறோம்.

ஆடி ஏ6 மேட்ரிக்ஸ் மாடல்

ஆடி ஏ6 மேட்ரிக்ஸ் மாடல்

முதல்முதலாக மேட்ரிக்ஸ் ஹெட்லைட் சிஸ்டம் ஆடி ஏ8 சொகுசு காரில் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு பிராங்க்ஃபர்ட் ஆட்டோ ஷோவில், ஆடி ஏ6 காரிலும் மேட்ரிக்ஸ் ஹெட்லைட் சிஸ்டம் கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டது.

முன்பக்க டிசைன்

முன்பக்க டிசைன்

ஆடி ஏ6 மேட்ரிக்ஸ் காரில் முகப்பில் இதன் ஹெட்லைட் சிஸ்டம் முக்கிய அம்சமாக கூறலாம். அதுதவிர்த்து, ஆடி லோகோவுடன் கூடிய புதிய சிங்கிள் ஃப்ரேம் க்ரில் அமைப்பு முகப்பை அதிக அளவில் ஆக்கிரமித்திருப்பதோடு, மிக கவர்ச்சியான தோற்றத்தையும் வழங்குகிறது. பம்பர் டிசைனும் மாற்றம் கண்டுள்ளது.

பக்கவாட்டு டிசைன்

பக்கவாட்டு டிசைன்

இது புதுப்பொலிவு கொடுக்கப்பட்ட மாடலாக வந்திருப்பதால், பக்கவாட்டில் பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லை. பின்புறத்திலிருந்து மெதுவாக மேலெழுந்து செல்லும் கூரை, ஜன்னல்களை தனியாக எடுத்துக் காட்டும் க்ரோம் பீடிங் சிறப்பு சேர்க்கிறது. அதேநேரத்தில், S-Line பேட்ஜ் மட்டும் கூடுதலாக இடம்பெற்றிருக்கிறது. இதன் 10 ஸ்போக்ஸ் கொண்ட 18 இன்ச் அலாய் வீல்கள் கம்பீரத்தை தருகின்றது.

பின்புற டிசைன்

பின்புற டிசைன்

பின்புறத்தில் சிறப்பான ஏரோடைனமிக்ஸ் வழங்க வல்ல பின்புற பூட் லிட், டைனமிக் எல்இடி டெயில் லைட்டுகள், சரிவக வடிவிலான புகைப்போக்கி குழாய் முனை மிகவும் கவர்கிறது.

மேட்ரிக்ஸ் ஹெட்லைட் சிஸ்டம்

மேட்ரிக்ஸ் ஹெட்லைட் சிஸ்டம்

ஆடி எல்இடி ஹெட்லைட் சிஸ்டத்தை தழுவி, மேம்படுத்தப்பட்ட ஹெட்லைட் சிஸ்டம்தான் மேட்ரிக்ஸ் ஹெட்லைட் சிஸ்டம்.ஏ6 காரில் இடம்பெற்றிருக்கும் மேட்ரிக்ஸ் ஹெட்லைட் சிஸ்டத்தில், 19 எல்இடி விளக்குகள் இடம்பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு எல்இடி விளக்கும் தேவைப்படும்போது அணைக்கவும் மீண்டும் உடனடியாக எரியும் கட்டுப்பாட்டு அமைப்பு கொண்டது. இந்த மேட்ரிக்ஸ் ஹெட்லைட் சிஸ்டத்தில் இடம்பெற்றிருக்கும் எல்இடி விளக்குகள் பல்வேறு கோணங்களில், வெவ்வேறு அளவிலான பிரகாசத்தில் ஒளியை பாய்ச்சும் திறன் கொண்டது. இந்த காரின் முன்புறத்தில் இருக்கும் கேமரா மூலமாக எதிரில் வரும் வாகனங்களின் தூரம் மற்றும் கோணத்தை கண்டறிந்து அந்த பகுதியில் ஹெட்லைட் பிரகாசம் குறைக்கப்படும்.

பாதுகாப்பான பயணம்

பாதுகாப்பான பயணம்

மேட்ரிக்ஸ் ஹெட்லைட் சிஸ்டத்திலிருந்து வெளியிடப்படும் ஒளிக்கதிர்கள், எதிரில் வரும் வாகன ஓட்டிகளுக்கு கண் கூச்சம் ஏற்படாது. அத்துடன், அந்த வாகனம் வரும் இடத்தை தவிர்த்து, சாலையின் அனைத்து பகுதிகளிலும் ஒளி வெள்ளத்தை இந்த மேட்ரிக்ஸ் ஹெட்லைட் சிஸ்டம் தரும். இதன்மூலமாக, இரவு நேரத்தில் பாதுகாப்பான பயணத்தை வழங்கும். எமது டெஸ்ட் டிரைவின்போதும், இந்த கூற்று உண்மையானதாகவே உணர்ந்தோம்.

இன்டிரியர்

இன்டிரியர்

இந்த காரின் இன்டிரியரின் மிக முக்கியமான அம்சம், சொகுசான இருக்கைகள் மட்டுமின்றி, மர வேலைப்பாடுகள் மிகவும் கவர்கின்றன. க்ரோம் அலங்காரம் குறைவாக பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

மீட்டர் கன்சோல்

மீட்டர் கன்சோல்

இரண்டு பெரிய டயல்களுடன் மீட்டர் கன்சோல் காட்சியளிக்கிறது. இந்த மீட்டர் கன்சோல் மூலமாக காரின் வேகம், எஞ்சின் சுழல் வேகம் போன்றவை மட்டுமின்றி, ஓட்டுனருக்கு தேவையான ஏராளமான தகவல்களை அளிக்கும். மேலும், பார்ப்பதற்கும், படிப்பதற்கும் எளிதாகவும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

முன் இருக்கை

முன் இருக்கை

முன் இருக்கைகள் மிகவும் சொகுசாகவும், வசதியாகவும் இருக்கிறது. மேலும், ஓட்டுனர் மற்றும் பயணியின் வசதிக்கு தக்கவாறு மாற்றிக் கொள்ள முடியும். நீண்ட தூர பயணங்களை இனிமையானதாக மாற்றும் அம்சங்களுடன் இருக்கிறது.

பின் இருக்கை

பின் இருக்கை

இந்த வகை கார்களில் பின் இருக்கைதான உரிமையாளர்களின் இடமாக கருதப்படும். அந்த வகையில், உரிமையாளர்களை மகிழ்விக்கும் வகையிலான மிக தாராளமான இடவசதியை கொண்டுள்ளதுடன், லெதர் இருக்கைகள் சொகுசாகவும் இருக்கிறது. பின் இருக்கை பயணிகள் முன் இருக்கை முன்னாலும், பின்னாலும் நகர்த்துவதற்கான பட்டனும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ரியர் ஏசி

ரியர் ஏசி

பின் இருக்கை உரிமையாளர்களுக்கானதாக இருப்பதால், அவர்களது மனதை மட்டுமல்ல, உடலையும் குளிர்ச்சியாக இருப்பதற்காக டியூவல் ஸோன் ஏர்கண்டிஷன் சிஸ்டம் தனியாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், சூரிய ஒளி வரும் திசையை வைத்து, கேபினுக்குள் குளிர்ச்சியை வழங்கும் 4 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டமும் குறிப்பிட்டு கூற வேண்டிய வசதியாக இருக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

ஆடி ஏ6 மேட்ரிக்ஸ் கார் 2.0 லிட்டர் டிடிஐ எஞ்சின் கொண்டதாக ஒரேயொரு வேரியண்ட்டில் இந்தியாவில் கிடைக்கிறது. இந்த காரில் இருக்கும் இந்த 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 190 எச்பி பவரையு்ம், 400 என்எம் டார்க்கையும் வழங்கும். இதனுடன் 7 ஸ்பீடு எஸ் ட்ரோனிக் கியர்பாக்ஸ் இணைந்து செயலாற்றுகிறது. அதிகபட்சமாக மணிக்கு 232 கிமீ வேகம் வரை தொட வல்லது.

கியர்பாக்ஸ்

கியர்பாக்ஸ்

ஆடி ஏ6 மேட்ரிக்ஸ் காரில் இருக்கும் டியூவல் க்ளட்ச் 7 ஸ்பீடு எஸ் ட்ரோனிக் கியர்பாக்ஸின் செயல்திறன் மிகவும் சிறப்பாக இருக்கிறது. கியர்மாற்றங்கள் விரைவாகவும், அதிர்வுகள் இல்லாமலும் ஓர் புதிய ஓட்டுதல் அனுபவத்தை தந்தது. நகர்ப்புற போக்குவரத்து நெரிசலில் ஓட்டுவதாகட்டும், காலியான நெடுஞ்சாலைகளாட்டும், இந்த கியர்பாக்ஸ் ஓட்டுனருக்கு ஒரு வரமாகவே இருக்கும்.

டிரைவ் செலக்ட்

டிரைவ் செலக்ட்

கம்ஃபோர்ட், டைனமிக் என்ற இருவிதமான டிரைவிங் ஆப்ஷன்களில் மாற்றிக் கொள்ள முடியும். கம்ஃபோர்ட் மோடில் வைத்து செல்லும்போது சொகுசான பயண அனுபவத்தை வழங்கும். டைனமிக் மோடில் வைத்து செல்லும்போது சஸ்பென்ஷன் அமைப்பும், ஸ்டீயரிங் வீல் செயல்பாடும் இறுக்கமாக மாறி, மிகச்சிறப்பான கையாளுமையை வழங்கும். இதுதவிர்த்து, ஓட்டுனர் விருப்பத்திற்கு ஏற்ப, சஸ்பென்ஷன் அமைப்பிலும், ஸ்டீயரிங் செயல்பாட்டிலும் மாறுதல்களை செய்ய முடியும்.

ஓட்டுதல் தரம்

ஓட்டுதல் தரம்

ஆடி ஏ6 காரின் பழைய மாடலைவிட இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல் வடிவமைப்பில் மட்டுமல்ல, ஓட்டுதல் சுகத்திலும் மிகச்சிறப்பானதாக இருக்கிறது. ஓட்டுனருக்கும், பயணிகளுக்கும் ஓர் சிறப்பான மாடலாக, இதனை மேம்படுத்தியுள்ளனர்.

போட்டி

போட்டி

ஆடி ஏ6 மேட்ரிக்ஸ் கார் ஓட்டுனர்களுக்கும், பயணிகளுக்கும் மிகச்சிறப்பான பயண அனுபவத்தை ஒவ்வொரு முறையும் வழங்கும். போட்டியாளர்களான பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் இ- க்ளாஸ் கார்களைவிட டிசைனிலும், சிறப்பம்சங்களிலும் ஒரு படி முன்னே நிற்கிறது.

 
English summary
We take the Audi A6 Matrix out for a spin in the city of lakes, Udaipur. A perfect location for a vehicle that displays elegance and performance in a single package.
Story first published: Wednesday, September 16, 2015, 11:51 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark