ஆடியின் மலிவான எஸ்யூவி கார், க்யூ2!! ஓட்டுவதற்கு எப்படி உள்ளது? முழு விமர்சனம் இதோ!

ஆடி நிறுவனம் முதன்முதலில் க்யூ2 எஸ்யூவி காரை சர்வதேச சந்தையில் கடந்த 2016ல் அறிமுகப்படுத்தியது. அதன்பின் சமீபத்தில் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடை பெற்றிருந்த இந்த கார் ஆடியின் மிகவும் விலை குறைவான எஸ்யூவி காராகும்.

ஆடியின் மலிவான எஸ்யூவி கார், க்யூ2!! ஓட்டுவதற்கு எப்படி உள்ளது? முழு விமர்சனம் இதோ!

இருப்பினும் இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டது ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடை பெறாத க்யூ2 மாடலாகும். இந்தியாவில் பிராண்டின் க்யூ வரிசையில் ஆரம்ப நிலை மாடலாக இடம்பிடித்துள்ள இந்த புதிய காம்பெக்ட்-எஸ்யூவி காரை சில நாட்கள் ஓட்டி பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. அதன் மூலம் இந்த காரை பற்றி நாங்கள் அறிந்துகொண்ட விஷயங்களை இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

ஆடியின் மலிவான எஸ்யூவி கார், க்யூ2!! ஓட்டுவதற்கு எப்படி உள்ளது? முழு விமர்சனம் இதோ!

டிசைன் & ஸ்டைல்

நாங்கள் இயக்கி பார்த்தது பிராண்டின் ஸ்போர்டியான ‘எஸ்-லைன்' உடன் க்யூ2 எஸ்யூவி காரின் டாப் ‘டெக்னாலஜி' வேரியண்ட் என்பதை முதலில் இங்கு கூறி கொள்கிறோம். இதன் காரணமாக எந்த க்ரோம் பாகங்களையும் கார் கொண்டிருக்கவில்லை. அவை அனைத்தும் கருப்பு நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.

ஆடியின் மலிவான எஸ்யூவி கார், க்யூ2!! ஓட்டுவதற்கு எப்படி உள்ளது? முழு விமர்சனம் இதோ!

முன்பக்கத்தில் க்ரில் அமைப்பு சற்று பெரியதாகவும் சுற்றிலும் கருப்பு நிற பாகங்களை கொண்டதாகவும் உள்ளது. க்ரில்லிற்கு வலது பக்கத்தில் குவாட்ரோ முத்திரை உள்ளது. மன்னித்துவிடுங்கள், ஆடியின் லோகோ மட்டும் க்ரோமில் வழங்கப்பட்டுள்ளது.

ஆடியின் மலிவான எஸ்யூவி கார், க்யூ2!! ஓட்டுவதற்கு எப்படி உள்ளது? முழு விமர்சனம் இதோ!

முன்பக்க பம்பர் இரு பக்கங்களிலும் துளை போன்ற பிளாஸ்டிக் க்ளாடிங்குகளை கொண்டுள்ளது. இதுதான் உண்மையில் காருக்கு ஸ்போர்டியான தோற்றத்தை வழங்குகிறது எனலாம். முழு-எல்இடி தரத்தில் உள்ள ஹெட்லைட்கள் 'T' வடிவிலான எல்இடி டிஆர்எல்களை கொண்டுள்ளன.

ஆடியின் மலிவான எஸ்யூவி கார், க்யூ2!! ஓட்டுவதற்கு எப்படி உள்ளது? முழு விமர்சனம் இதோ!

குறைவான ஒளி பிரகாசத்திற்கு ப்ரோஜெக்டர் யூனிட்டையும், அதிக ஒளி பிரகாசத்திற்காவும் வளைவுகளுக்கான விளக்குகளுக்காகவும் ஒளி எதிரொலிப்பானையும் இந்த ஆடி கார் பெற்றுள்ளது. இருப்பினும் மூடுபனி விளக்குகள் இந்த காரில் இல்லை. இந்த குறையை ஹெட்லைட் க்ளஸ்ட்டர் சரிசெய்து விடுகிறது.

ஆடியின் மலிவான எஸ்யூவி கார், க்யூ2!! ஓட்டுவதற்கு எப்படி உள்ளது? முழு விமர்சனம் இதோ!

அப்படியே காரின் பக்கவாட்டிற்கு சென்றால், அங்கு நம்மை 17 இன்ச் மல்டி-ஸ்போக் அலாய் சக்கரங்கள் கவர்கின்றன. க்யூ2 காரை வாங்குபவர்கள் இந்த காம்பெக்ட் எஸ்யூவி காரின் தோற்றத்தை மேலும் அழக்கூட்டும் விதமாக அலாய் சக்கரங்களையும் அவற்றில் பொருத்தப்படும் ப்ரேக் காலிபர்களையும் பளிச்சிடும் நிறத்தில் பெற்றால் நன்றாக இருக்கும்.

ஆடியின் மலிவான எஸ்யூவி கார், க்யூ2!! ஓட்டுவதற்கு எப்படி உள்ளது? முழு விமர்சனம் இதோ!

காரின் பக்கவாட்டில், ஃபெண்டர்களில் கருப்பு நிறத்தில் பின்பக்கம் பார்க்கும் பக்கவாட்டு கண்ணாடிகளுடன் ‘எஸ்-லைன்' முத்திரையை பார்க்க முடிகிறது. இந்த கண்ணாடிகள் ஒருங்கிணைக்கப்பட்ட எல்இடி இண்டிகேட்டர்களை கொண்டுள்ளன.

ஆடியின் மலிவான எஸ்யூவி கார், க்யூ2!! ஓட்டுவதற்கு எப்படி உள்ளது? முழு விமர்சனம் இதோ!

மேற்கூரை சுறா துடுப்பு வடிவிலான ஆன்டெனா உடன் பாதி சிவப்பு நிறத்திலும் பாதி கருப்பு நிறத்திலும் வழங்கப்பட்டுள்ளது. காரை சுற்றிலும் கூர்மையான லைன்களும் க்ரீஸ்களும் காட்சி தருகின்றன. பின்பக்கத்தில் க்யூ2 முன்பக்கத்தை போன்று முத்திரைகள் க்ரோமில் பெற்றுள்ளது. டெயில்லைட்களின் வடிவம் உண்மையில் அட்டகாசமாக உள்ளது.

ஆடியின் மலிவான எஸ்யூவி கார், க்யூ2!! ஓட்டுவதற்கு எப்படி உள்ளது? முழு விமர்சனம் இதோ!

முன்புறத்தை போல் அல்லாமல் காரின் பின்பக்கத்தில் டைனாமிக் இண்டிகேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் ரிவர்ஸ் பார்க்கிங்கிற்கு உதவியாக அடாப்டிவ் வழிகாட்டுதல்கள் மற்றும் சென்சார்கள் உள்ளன. வெளிப்பக்கத்தில் காரின் தோற்றம் பெரியதாக இல்லாவிடினும் கார் பார்ப்பதற்கு சிறிய அளவில் கவர்ச்சிகரமானதாக உள்ளது.

ஆடியின் மலிவான எஸ்யூவி கார், க்யூ2!! ஓட்டுவதற்கு எப்படி உள்ளது? முழு விமர்சனம் இதோ!

உட்புற வசதி

காரின் உள்ளே நுழைந்தால், கருப்பு மற்றும் சில்வர் நிற கேபின் நன்கு விசாலமானதாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. டேஸ்போர்டின் மையப்பகுதியை தொடுதிரை இல்லாத 8.3 இன்ச் டிஸ்ப்ளே ஆக்கிரமித்துள்ளது. தொடுத்திரைக்கு பதிலாக கியர்-லிவருக்கு பின்பக்கத்தில் டச்பேட் வழங்கப்பட்டுள்ளது.

ஆடியின் மலிவான எஸ்யூவி கார், க்யூ2!! ஓட்டுவதற்கு எப்படி உள்ளது? முழு விமர்சனம் இதோ!

க்யூ2-வின் டேஸ்போர்டு மிகவும் ப்ரீமியம் தரத்தில் இல்லாவிட்டாலும், அவ்வளவு மோசமானதாக இல்லை. இவற்றுடன் ஆடி க்யூ2, பிராண்டின் விர்டியுவல் காக்பிட்டையும் பெற்றுவந்துள்ளது. முழு எல்இடி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரின் மூலம் ஓட்டுனர் தேவையான தகவல்களை பெற்று கொள்ளலாம்.

ஆடியின் மலிவான எஸ்யூவி கார், க்யூ2!! ஓட்டுவதற்கு எப்படி உள்ளது? முழு விமர்சனம் இதோ!

வரைபடம் பார்க்க வேண்டுமென்றால், ஸ்டேரிங் சக்கரத்தில் வழங்கப்பட்டுள்ள ‘வியூ (view)' பொத்தானை அளித்தானலே போதும். டச்சோமீட்டர் மற்றும் வேகமானியை சுருக்கி கொண்டு தேவை என்றால் வரைப்படத்தை பெரிதாகவும் கொண்டுவரலாம்.

ஆடியின் மலிவான எஸ்யூவி கார், க்யூ2!! ஓட்டுவதற்கு எப்படி உள்ளது? முழு விமர்சனம் இதோ!

லெதரால் மூடப்பட்டுள்ள தட்டையான- தாழ்வான ஸ்டேரிங் சக்கரம் அருமையான பிடிமானத்தை வழங்குகிறது. அதேபோல் அதில் வழங்கப்பட்டுள்ள கண்ட்ரோல்களை சாலையில் இருந்து பார்வையை எடுக்காமலேயே ஒட்டுனர் செயல்படுத்தலாம். ரோட்டரி க்னாப்களுடன் ஏசி காற்று வெளிவரும் துளைகள் வட்ட வடிவில் வழங்கப்பட்டுள்ளன.

ஆடியின் மலிவான எஸ்யூவி கார், க்யூ2!! ஓட்டுவதற்கு எப்படி உள்ளது? முழு விமர்சனம் இதோ!

ஏசி காற்றை இரு நிலைகளில் மாற்றி கொள்ளலாம். கேபின் அவ்வளவு பெரியதாக இல்லாததால் பின் இருக்கை பயணிகளுக்கென தனியாக ஏசி வழங்கப்படவில்லை, தேவையுமில்லை. ஆனால் காரின் உட்புறத்தில் பனோராமிக் சன்ரூஃப் வழங்கப்பட்டுள்ளது.

ஆடியின் மலிவான எஸ்யூவி கார், க்யூ2!! ஓட்டுவதற்கு எப்படி உள்ளது? முழு விமர்சனம் இதோ!

இருக்கை அமைப்பை பொறுத்தவரையில், முன் இருக்கைகள் இரண்டும் நன்கு சவுகரியமானதாக வழங்கப்பட்டுள்ளது. முன் இருக்கை பயணிகளுக்கு பக்கவாட்டு போல்ஸ்டர்கள், தொடைகளுக்கான சவுகரிய அமைப்பு மற்றும் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட்டை ஆடி நிறுவனம் வழங்கியுள்ளது.

ஆடியின் மலிவான எஸ்யூவி கார், க்யூ2!! ஓட்டுவதற்கு எப்படி உள்ளது? முழு விமர்சனம் இதோ!

ஆனால் இருக்கை எதையும் எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யும் வசதி கொடுக்கப்படவில்லை. இது சில வாடிக்கையாளர்களுக்கு சற்று ஏமாற்றத்தை தரலாம். ஒட்டுனர் இருக்கையாவது மின்சாரம் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடியதாக வழங்கப்படும் என நாங்கள் எதிர்பார்த்தோம்.

ஆடியின் மலிவான எஸ்யூவி கார், க்யூ2!! ஓட்டுவதற்கு எப்படி உள்ளது? முழு விமர்சனம் இதோ!

இரண்டாவது வரிசையும் சவுகரியமானதாக இருந்தாலும், பின் இருக்கை வரிசையில் உயரம் அதிகம் உடையவர்கள் அமருவது சற்று கடினமே. இந்த் இருக்கை வரிசையில் அதிகப்பட்சமாக 3 நபர்களும், தாரளமாக ஆர்ம்ரெஸ்ட் உடன் 2 நபர்களும் அமரலாம். ட்ரான்ஸ்மிஷன் சுரங்கத்தினால் இரண்டாவது இருக்கை வரிசையின் அடியில் தரையும் தட்டையானதாக இல்லை.

ஆடியின் மலிவான எஸ்யூவி கார், க்யூ2!! ஓட்டுவதற்கு எப்படி உள்ளது? முழு விமர்சனம் இதோ!

கேபினின் கடைசி பகுதியான பொருட்களை வைப்பதற்கான இடம் 355 லிட்டர் கொள்ளளவில் வழங்கப்பட்டுள்ளது. இது போதாது, பொருட்களை அதிகம் வைக்க வேண்டுமென்றால், இரண்டாவது இருக்கை வரிசையையும் குறைத்து கொள்ளலாம்.

ஆடியின் மலிவான எஸ்யூவி கார், க்யூ2!! ஓட்டுவதற்கு எப்படி உள்ளது? முழு விமர்சனம் இதோ!

என்ஜின் & ஹேண்ட்லிங்

கார் அளவில் தான் சிறியது, ஆனால் உள்ளே இருக்கும் என்ஜின் அளவில் பெரியது. க்யூ2 எஸ்யூவி காரில் 2.0 லிட்டர், டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 188 பிஎச்பி மற்றும் 320 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

ஆடியின் மலிவான எஸ்யூவி கார், க்யூ2!! ஓட்டுவதற்கு எப்படி உள்ளது? முழு விமர்சனம் இதோ!

இதனுடன் குவாட்ரோ நிரந்தர அனைத்து-சக்கர ட்ரைவ் சிஸ்டத்தின் மூலமாக அனைத்து சக்கரங்களுக்கும் என்ஜின் ஆற்றலை வழங்கும் 7-ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ஃபோக்ஸ்வேகன் க்ரூப்பின் எம்க்யூபி ப்ளாட்ஃபாரத்தை அடிப்படையாக கொண்டு க்யூ2 எஸ்யூவி கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆடியின் மலிவான எஸ்யூவி கார், க்யூ2!! ஓட்டுவதற்கு எப்படி உள்ளது? முழு விமர்சனம் இதோ!

இதன் காரணமாக இந்த காரில் குறுக்கு என்ஜின் கொண்டுவரப்பட்டுள்ளது. இது முன்-சார்பு அமைப்பு மற்றும் பல-தட்டு கிளட்சின் அடிப்படையில் தேவைப்படும் அனைத்து-சக்கர ட்ரைவ் அமைப்பைக் கொண்டுள்ளது. இருப்பினும் காரை ஹேண்டில் செய்வது மிகவும் வசீகரிக்கும் விதத்தில் உள்ளது.

ஆடியின் மலிவான எஸ்யூவி கார், க்யூ2!! ஓட்டுவதற்கு எப்படி உள்ளது? முழு விமர்சனம் இதோ!

காரை ஈக்கோ, கம்ஃபார்ட், டைனாமிக், தனிப்பட்ட மற்றும் ஆட்டோ என்ற 5 விதமான ட்ரைவ் மோட்களில் இயக்கலாம். இதில் ஈக்கோ மோடில் ஸ்டேரிங் சக்கரம் மற்றும் த்ரோட்டலின் பதில் மிகவும் மந்தமாக உள்ளது. அதுவே டைனாமிக் மோடில் ஸ்டேரிங் சக்கரம் விறைப்பானதாக உள்ளது. த்ரோட்டலின் செயல்பாடும் சிறப்பாக உள்ளது.

ஆடியின் மலிவான எஸ்யூவி கார், க்யூ2!! ஓட்டுவதற்கு எப்படி உள்ளது? முழு விமர்சனம் இதோ!

ஆனால் நாங்கள் கம்ஃபர்ட் மோடிலேயே பெரும்பாலும் காரை இயக்க அறிவுறுத்துகிறோம். ஷிஃப்ட்ஸுக்கும் டிஎஸ்ஜி கியர்பாக்ஸுக்கும் இடையே எந்தவொரு பிரச்சனையும் இல்லை. கியரை மாற்றுவது சற்று வேகமானதாகவே உள்ளது. இதை காட்டிலும் கியரை எளிமையாக மாற்ற பெடல் ஷிஃப்டர்களும் உள்ளன.

ஆடியின் மலிவான எஸ்யூவி கார், க்யூ2!! ஓட்டுவதற்கு எப்படி உள்ளது? முழு விமர்சனம் இதோ!

பிஎஸ்6-க்கு இணக்கமானதாக என்ஜின் மேம்படுத்தப்பட்டுள்ளதால் காருக்கு என்ஜின் ஆற்றல் மிகவும் நேர்த்தியாக வழங்கப்படுகிறது. இதனால் இயக்கத்தின்போது இருக்கையில் முன்னோக்கி அல்லது பின்னோக்கி இழுக்கப்படுதல் இல்லை.

ஆடியின் மலிவான எஸ்யூவி கார், க்யூ2!! ஓட்டுவதற்கு எப்படி உள்ளது? முழு விமர்சனம் இதோ!

சஸ்பென்ஷன் அமைப்பு சிறிது விரைப்பானதாக வழங்கப்பட்டுள்ளது, இது எந்த விதத்திலும் பயணத்தின் தரத்தை கெடுக்கவில்லை. மேலும் இத்தகைய சஸ்பென்ஷன் அமைப்பின் காரணமாக இந்தியாவில் எந்தவொரு குண்டு குழியுமான சாலைக்கும் இந்த ஆடி காரை தாராளமாக எடுத்து செல்லலாம்.

ஆடியின் மலிவான எஸ்யூவி கார், க்யூ2!! ஓட்டுவதற்கு எப்படி உள்ளது? முழு விமர்சனம் இதோ!

வளைவுகளில் ஸ்டேரிங் சக்கரத்தின் செயல்பாடு பாராட்டும் விதத்தில் உள்ளது. மெக்லின் டயர்கள் ஓட்டுனருக்கு பாதுகாப்பான உணர்வை தருகின்றன. காரின் மொத்த எடை 1500 கிலோவிற்கும் குறைவாக இருப்பதால், 0-வில் இருந்து 100kmph வேகத்தை கார் வெறும் 6.5 வினாடிகளில் எட்டிவிடும்.

ஆடியின் மலிவான எஸ்யூவி கார், க்யூ2!! ஓட்டுவதற்கு எப்படி உள்ளது? முழு விமர்சனம் இதோ!

அளவில் சிறிய காராக இருந்ததாலும் க்யூ2-வின் அதிகப்பட்ச வேகம் 228kmph ஆகும். இந்த எஸ்யூவி கார் நகர்புற சாலைகளில் 8.4-இல் இருந்து 11.2 kmpl மைலேஜை வழங்குகிறது. அதுவே நெடுஞ்சாலைகளில் கார் வழங்கும் மைலேஜ் அளவு 14.5kmph-இல் இருந்து 16.82kmph ஆக உள்ளது. ஆக்ஸலரேட்டரை சரியாக பயன்படுத்தினால் இவற்றை காட்டிலும் சற்று அதிகமான மைலேஜ்ஜை நிச்சயம் பெறலாம்.

ஆடியின் மலிவான எஸ்யூவி கார், க்யூ2!! ஓட்டுவதற்கு எப்படி உள்ளது? முழு விமர்சனம் இதோ!

ட்ரைவ்ஸ்பார்க்கின் கருத்து

ஆடி க்யூ2 எஸ்யூவி காரின் ஆரம்ப விலை ரூ.35 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் எங்களுக்கு கிடைத்துள்ள இதன் டாப் டெக்னாலஜி வேரியண்ட்டின் விலை ரூ.48.89 லட்சமாகும். இந்த எக்ஸ்ஷோரூம் விலைகள்தான் இந்த ஆடி காரை மற்ற லக்சரி கார்களுக்கு கடுமையான சவாலாக விளங்குகிறது.

ஆடியின் மலிவான எஸ்யூவி கார், க்யூ2!! ஓட்டுவதற்கு எப்படி உள்ளது? முழு விமர்சனம் இதோ!

இந்திய சந்தையில் க்யூ2 எஸ்யூவி காருக்கு நேரடியாக எந்த போட்டி மாடலும் இல்லை. ஆனால் விலையில் ஆடி க்யூ2 மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்ஏ மற்றும் பிஎம்டபிள்யூ எக்ஸ்1 கார்களுக்கு போட்டியாக விளங்கும். போதுமான வடிவத்தில் லக்சரி பிராண்டில் கட்டுப்படியாகும் விலையில் கார் எடுக்க விரும்புகிறீர்கள் என்றால், ஆடி க்யூ2 உங்களுக்கு மிகவும் பொருத்தமானதே.

Most Read Articles

மேலும்... #ஆடி #audi #review
English summary
Audi Q2 Review (First Drive): Best Entry Level Premium SUV?
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X