ஆடி க்யூ3 எஸ்யூவியின் புதிய டைனமிக் டீசல் மாடல் - விமர்சனம்!

போட்டியாளர்களை பின்தொடராமல் புதிய செக்மென்ட்டுகளில் கூடுதல் வசதிகளுடன் கார்களை அறிமுகம் செய்வதில் ஆடி சொகுசு கார் நிறுவனம் எப்போதுமே முன்னோடியாகவே விளங்குகிறது. இதனை மெய்ப்பிக்கும் வகையில், தனது க்யூ3 எஸ்யூவியில் ஏடிஎஸ் எனப்படும் டிரைவ் செலக்ட் வசதி கொண்ட புதிய புதிய டாப் வேரியண்ட்டை கடந்த மாதம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்தது ஆடி.

ஏற்கனவே ஆடி க்யூ3 எஸ்யூவி இந்திய வாடிக்கையாளர் மத்தியில் பிரபலமான சொகுசு எஸ்யூவி மாடலாக திகழும் நிலையில், அந்த மாடலை பலப்படுத்தும் விதத்தில் இந்த டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் குவாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட டீசல் மாடலை இறக்கியுள்ளது. மேலும், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய ஜிஎல்ஏ எஸ்யூவியை நேரடியாக எதிர்கொள்ளும் விதத்தில் இந்த புதிய மாடலை ஆடி அறிமுகம் செய்திருக்கிறது.

மிக ஸ்டைலான பிரிமியம் மாடலான க்யூ3 டைனமிக் மாடலின் வசதிகள் நிச்சயம் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுப்பதாக உள்ளது. இந்த புதிய மாடலை கோவையில் உள்ள கரி மோட்டார் ஸ்பீடுவே வளாகத்தில் வைத்து சமீபத்தில் டெஸ்ட் டிரைவ் செய்தோம். அதில் இந்த எஸ்யூவியின் சில சாதக, பாதகங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்களை ஸ்லைடரில் பகிர்ந்து கொண்டுள்ளோம்.


கார் வேரியண்ட் விபரம்

கார் வேரியண்ட் விபரம்

ஆடி க்யூ3 35 டிடிஐ குவாட்ரோ டைனமிக்

எரிபொருள்: டீசல்

டிரைவ் சிஸ்டம்: ஆல் வீல் டிரைவ் சிஸ்டம்

இடம்: கோவை கரி மோட்டார் ஸ்பீட்வே

விலை: ரூ.38 லட்சம் (டெல்லி எக்ஸ்ஷோரூம்)

 கண்ணோட்ட்ம்

கண்ணோட்ட்ம்

ஆடி க்யூ3 பிரிமியம் எஸ்யூவி இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு டீசல் மாடலின் பொதுவான அம்சங்களை காணலாம்.

138 பிஎச்பி பவரை அளிக்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின்(ஃப்ரணட் வீல் டிரைவ்)

175 பிஎச்பி பவரை அளிக்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் 7 ஸ்பீடு ட்ரோனிக் டிரான்ஸ்மிஷன்(நிரந்தர ஆல் வீல் டிரைவ் சிஸ்டம்)

ஆடி க்யூ3 பெட்ரோல்

211 பிஎச்பி பவரை அளிக்கும் 2.0 லிட்டர் டைனமிக் 7 ஸ்பீடு ட்ரோனிக் டிரான்ஸ்மிஷன்(நிரந்தர ஆல் வீல் டிரைவ் சிஸ்டம்)

முகப்பு டிசைன்

முகப்பு டிசைன்

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பிரிமியம் எஸ்யூவி மாடல்களில் டிசைனக்கு பெயர் பெற்ற மாடல் இது. வெளிப்புறம், உட்புறத்தில் சிறப்பான டிசைன் செய்யப்பட்ட மாடல். முகப்பில் பானட்டையும், பம்பரையும் இணைக்கும் ஆடி எஸ்யூவிகளுக்கு உரித்தான கம்பீரமான குரோம் பூச்சுடன் கூடிய கிரில், பகல்நேர ரன்னிங் விளக்குகளுடன் கூடிய ஸினான் ஹெட்லைட், குரோம் வளையத்துடன் பனி விளக்குகள் போன்றவை கவர்ச்சியை தருகின்றன.

 பக்கவாட்டு டிசைன்

பக்கவாட்டு டிசைன்

பக்கவாட்டு டிசைனிலும் கவர்கிறது. டி பில்லர் சரிவாக இருப்பதே பக்கவாட்டு டிசைனை மிக கவர்ச்சியாக தெரிகிறது. மேலும், கூரையையுடன் இயைந்து சென்று முடியும் வைன்ட்ஸ்கிரீன், பாடி லைன், வீல் ஆர்ச்சுகள், 17 இஞ்ச் அலாய் வீல்கள் போன்றவை பக்கவாட்டு கவர்ச்சியை கூட்டும் அம்சங்கள்.

பின்புற டிசைன்

பின்புற டிசைன்

கிளியர் லென்ஸ் எல்இடி டெயில் விளக்குகள் சொக்க வைக்கிறது. பிளாஸ்டிக் கிளாடிங் மற்றும் ஸ்கிட் பிளேட்டும் கொடுக்க்பபட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில் டிசைன் உள்ளத்தை கொள்ளை கொள்ள செய்கிறது.

 இன்டிரியர்

இன்டிரியர்

க்யூ3 எஸ்யூவியின் பிரிமியம் ப்ளஸ் வேரியண்ட்டை போன்ற இந்த டைனமிக் வேரியண்ட்டின் இன்டிரியரும் உள்ளது. உயர்தர பாகங்கள், சாபர் டோன் இன்டிரியர், எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் வசதி கொண்ட முன் இருக்கைகள், ரியர் ஏசி வென்ட்டுகள், பனரோமிக் சன்ரூஃப் போன்றவை குறிப்பிட்டு கூறலாம். டைனமிக் வேரியண்ட்டில் முக்கியமான மாற்றம் சென்டர் கன்சோலில் டிரைவ் செலக்ட் ஆப்ஷன் நாப் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை எம்எம்ஐ திரை மூலமும் தேர்வு செய்ய முடியும்.

மைலேஜ் மற்றும் செயல்திறன்

மைலேஜ் மற்றும் செயல்திறன்

இதில் பொருத்தப்பட்டிருக்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் குவாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்தின் ஒத்துழைப்புடன் மிகச்சிறப்பான டார்க்கை அளிக்கிறது. 0- 100 கிமீ வேகம் வரை வீல்களுக்கு தேவையான டார்க்கை பிரித்தளிக்கும் தொழில்நுட்ப வசதி கொண்டுள்ளது. இதனால், ஆஃப் ரோடு, நகர்ப்புற டிரைவிங் மற்றும் மலைப்பாங்கான சாலைகளில் இதன் ஓட்டுவதற்கு சிறப்பாக இருக்கும். அராய் சான்றுபடி இந்த மாடல் லிட்டருக்கு 15.73 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கரி மோட்டார் ஸ்பீட்வே டிராக்கிலும், அங்கு அமைக்கப்பட்டிருந்த ஆஃப்ரோடு சாலைகளில் மட்டுமே ஓட்டியதால், இதன் உண்மையான மைலேஜை சரியாக கணக்கிட முடியவில்லை. டைனமிக் மாடலில் comfort, auto மற்றும் dynamic ஆகிய மூன்று டிரைவிங் ஆப்ஷன்கள் உள்ளன.

 முக்கிய சிறப்பம்சங்கள் - 1

முக்கிய சிறப்பம்சங்கள் - 1

ஆடி டிரைவ் செலக்ட்(ஏடிஎஸ்)

சாலை நிலைகளை பொறுத்து டிரைவிங்கை மாற்றிக் கொள்ளும் வகையில் கம்போர்ட், ஆட்டோ மற்றும் டைனமிக் ஆகிய டிரைவிங் ஆப்ஷன்கள் உள்ளன. எஞ்சினை ஸ்டார்ட் செய்யும்போது ஆட்டோ டிரைவிங் ஆப்ஷன்களில் இருக்கும். தேவைப்பட்டால் விருப்பம்போல் பிற ஆப்ஷன்களில் மாற்றிக்கொள்ளலாம்.

கம்போர்ட்: இந்த டிரைவிங் ஆப்ஷனில் வைக்கும்போது சஸ்பென்ஷன் டேம்பர் மென்மையாக மாறிவிடுகிறது. நகர்ப்புறத்தில் போக்குவரத்து மிகுந்த சாலைகளில் ஓட்டுவதற்கு வசதியாக இருக்கும்.

ஆட்டோ: இந்த டிரைவிங் ஆப்ஷனில் ஓட்டுனரின் டிரைவிங் செயல்பாட்டை கண்காணித்து அதர்கு ஏற்ப செயல்திறனையும், சஸ்பென்ஷன் அமைப்பையும் மாறுதல்களை செய்து கொள்ளும்.

டைனமிக்: அதி வேகத்தில் ஓட்ட முயன்றால் இந்த ஆப்ஷனிற்கு மாற்றிக் கொள்ளலாம். இந்த டிரைவிங் ஆப்ஷனில் சிறப்பான கையாளுமையையும், செயல்திறனையும் க்யூ3 எஸ்யூவி வெளிப்படுத்தும். டைனமிக் ஆப்ஷனில் சஸ்பென்ஷன் ஹார்டு செட்டிங்கில் மாறுவிடும்.

முக்கிய சிறப்பம்சங்கள் - 1(தொடர்ச்சி)

முக்கிய சிறப்பம்சங்கள் - 1(தொடர்ச்சி)

ஏடிஎஸ் சிறப்பம்சங்கள்

டிரைவிங் ஆப்ஷன்களை மாற்றும்போது முக்கியமான 4 மாற்றங்கள் நிகழ்கின்றன. அவற்றை கீழே காணலாம்.

டைனமிக் ஸ்டீயரிங்:குறைந்த மற்றும் அதிவேகத்தில் செல்லும்போது ஸ்டீயரிங் அசிஸ்ட் உதவியுடன் கார் செலுத்தப்படும். இது பாதுகாப்பை உறுதி செய்யும்.

சஸ்பென்ஷன் டேம்பிங்: ஒரு வினாடிக்கு அதிகபட்ச மாற்றங்களை செய்து மிக சொகுசான பயணத்தை உறுதி செய்யும் வகையில் சஸ்பென்ஷன் டேம்பரில் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டேயிருக்கும்.

டிரான்ஸ்மிஷன்:டிரைவிங் ஆப்ஷனை பொறுத்து கியர் ஷிப்டுகள் நடைபெறும். குறிப்பாக, கம்போர்ட் மோடில் மென்மையாக கியர் ஷிப்ட் நடக்கும். டைனமிக் ஆப்ஷனுக்கு மாறும்போது எஞ்சின் செயல்திறன் மிக அதிகமாக இருப்பதற்கு தக்க கியர் ஷிப்ட் மிக விரைவாக நடக்கும்.

த்ராட்டில் மேப்பிங்: கம்போர்ட் ஆப்ஷனில் எஞ்சின் மென்மையான செயல்திறனை வழங்கும். அதுவே, டைனமிக் ஆப்ஷனில் அதிகபட்ச உந்துசக்தியையும், செயல்திறனையும் வழங்கும் வகையில் மாறிக் கொள்கிறது.

முக்கிய சிறப்பம்சங்கள்- 2

முக்கிய சிறப்பம்சங்கள்- 2

எல்இடி டெயில்லைட்டுகள்

கிளியர் லென்ஸ் கொண்ட ஆடி க்யூ3 எஸ்யூவியின் எல்இடி டெயில் லைட்டுகள் காரின் அழகை பன்மடங்கு கூட்டுகிறது. எனவே, டாப் சிறப்பம்சங்களின் பட்டியலில் இதுவும் இடம்பெறுகிறது.

முக்கிய சிறப்பம்சங்கள் - 3

முக்கிய சிறப்பம்சங்கள் - 3

அலாய் வீல்

காரின் வெளிப்புற அழகை கூட்டுவதில் அலாய் வீல்கள் முக்கிய பங்குண்டு. அந்த வகையில், இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும் 5 ஸ்போக் 17 இஞ்ச் அலாய் வீல்கள் குறிப்பிட்டு கூறும் சிறப்பம்சம்.

முக்கிய சிறப்பம்சங்கள் - 4

முக்கிய சிறப்பம்சங்கள் - 4

எல்இடி ஹெட்லைட்டுகள்

இந்த க்யூ3 டைனமிக் மாடலில் எல்இடி பகல்நேர ரன்னிங் விளக்குகளுடன் கூடிய ஹெட்லைட் ஹவுசிங் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஹெட்லைட் ரேஞ்ச் கன்ட்ரோல் வசதி கொண்டது. இதனால், எதிரில் வரும் வாகனங்களை கண்டுணர்ந்து பிரகாசத்தை குறைக்கும் வசதியுள்ளது. இது கவர்ச்சியை தருவதோடு, மிகுந்த பாதுகாப்பையும் வழங்கும்.

முக்கிய சிறப்பம்சங்கள்- 5

முக்கிய சிறப்பம்சங்கள்- 5

பானரோமிக் சன்ரூஃப்

காரின் 70 சதவீத கூரையை ஆக்கிரமிக்கும் வகையில் பெரிய அளவிலான கண்ணாடி கூரை அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் வெளிச்சத்தையும், சுத்தமான வெளிக்காற்றையும் பெறலாம்.

 போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

தற்போது மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஜிஎல்ஏ எஸ்யூவியுடன் போட்டியாக கூறலாம். ஆனால், பென்ஸ் ஜிஎல்ஏ எஸ்யூவி ஃப்ரண்ட் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாக மட்டுமே கிடைக்கிறது. எனவே, குவாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட இந்த க்யூ3 மாடல் கூடுதல் மதிப்பு கொண்டதாக கூறலாம்.

விலை ஒப்பீடு

விலை ஒப்பீடு

ஆடி க்யூ3 டைனமிக் 35 டிடிஐ குவாட்ரோ

டெல்லி ஆன்ரோடு விலை: ரூ.44,94,731

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ 200சிடிஐ

டெல்லி ஆன்ரோடு விலை ரூ.42,57,284

சாதகங்கள்

சாதகங்கள்

  1. வெளிப்புற டிசைன், பிரிமியம் உணர்வை தரும் இன்டிரியர்
  2. நகர்ப்புறத்தில் ஓட்டுவதற்கு எளிதான மாடல்
  3. குவாட்ரோ ஆல் வீல் டிரைவ் மூலம் ஆஃப்ரோடு சாகசங்களுக்கு ஏற்றது.
  4. மென்மையான மற்றும் விரைவான கியர்ஷிப்ட்
  5. ஏராளமான சிறப்பு வசதிகள்
  6. இதன் செக்மென்ட்டில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட ஒரே மாடல்
பாதகங்கள்

பாதகங்கள்

  1. பின்புற இடவசதி குறைவு
  2. ஸ்டீயரிங் ரெஸ்பான்ஸ் எதிர்பார்த்த அளவு இல்லை
  3. ஏடிஎஸ் ஆப்ஷனில் சஸ்பென்ஷன் அமைப்பு சிறப்பாக மாறுவதில்லை.

Most Read Articles
English summary
Audi has introduced a top of the line Q3. Sound familiar? An educated guess says that the all-new Q3 Dynamic with Audi Drive Select (ADS) has been launched in India to take on Mercedes's latest offering—the GLA-CLass. Let the sales begin! So how does this premium compact SUV fair in real world conditions? Its time to crack the book open and find out what you're likely to love and what you probably won't. Click through the slides for more on Audi Q3 Dynamic design, performance, pricing, specifications, and verdict.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X