புதிய ஆடி ஆர்எஸ்-5 ஸ்போர்ட்பேக் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஆடி ஏ5 சொகுசு கார் குடும்பத்தில் 2 டோர் மாடலாக வடிவமைக்கப்பட்ட ஆடி ஆர்எஸ்5 ஸ்போர்ட்பேக் மாடல் பெர்ஃபார்மென்ஸ் செடான் கார் பிரியர்கள் மத்தியில் பிரபலமாக விளங்குகிறது. கடந்த 2010ம் ஆண்டு முதலாம் தலைமுறை ஆடி ஆர்எஸ்-5 ஸ்போர்ட்பேக் கார் அறிமுகம் செய்யப்பட்டது.

புதிய ஆடி ஆர்எஸ்-5 ஸ்போர்ட்பேக் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இரண்டாம் தலைமுறை மாடல்

இதைத்தொடர்ந்து, இரண்டாம் தலைமுறையாக மேம்படுத்தப்பட்ட புதிய ஆடி ஆர்எஸ்5 ஸ்போர்ட்பேக் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த காரை அண்மையில் டெஸ்ட் டிரைவ் செய்தோம். அப்போது இந்த கார் குறித்த கிடைத்து சாதக, பாதகங்களை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.

புதிய ஆடி ஆர்எஸ்-5 ஸ்போர்ட்பேக் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டிசைன்

ஆடி ஏ5, ஆடி எஸ்5, ஆடி ஏ5 கேப்ரியோலே ஆகிய மாடல்களின் குடும்ப வரிசையிலான இந்த புதிய ஆடி ஆர்எஸ்5 கார் டிசைனில் வேறுபடுத்தும் விதத்தில் பல்வேறு விசேஷ ஆக்சஸெரீகள் மற்றும் உருமாற்றங்களை பெற்றிருக்கிறது.

புதிய ஆடி ஆர்எஸ்-5 ஸ்போர்ட்பேக் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

முகப்பு டிசைன்

வெளிப்புறத்தில் சிவப்பு வண்ணத்தில் கருப்பு வண்ண பாகங்கள் அட்டாகசமான தோற்றத்துடன் காட்டுகிறது. கருப்பு வண்ண பின்னணியுடன் கூடிய மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட், ஆடி பிராண்டு சின்னத்துடன் கூடிய வலிமையான தோற்றத்தை தரும் அறுகோண வடிவிலான க்கரில் அமைப்பு இந்த காரின் வசீகரத்தை வெகுவாக கூட்டுகிறது. ஆர்எஸ்-5 பேட்ஜ் முகப்பு க்ரில் அமைப்பில் இடம்பெற்றுள்ளது.

புதிய ஆடி ஆர்எஸ்-5 ஸ்போர்ட்பேக் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பக்கவாட்டு டிசைன்

பக்கவாட்டில் கூபே கார்களுக்கு உரிய பின்புறம் தாழ்ந்து செல்லும் கூரை அமைப்பும்,, வலிமையான 19 அங்குல அலாய் சக்கரங்களும் அட்டகாசமான தோற்றத்தை தருகின்றன. 20 அங்குல அலாய் சக்கரங்கள் ஆப்ஷனலாக கிடைக்கிறது.

புதிய ஆடி ஆர்எஸ்-5 ஸ்போர்ட்பேக் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பின்புற டிசைன்

பின்புறத்தில் பூட் லிட் ஸ்பாய்லர், இரட்டை குழல் சைலென்சர் ஆகியவை முத்தாய்ப்பான அம்சங்களாக காட்சி தருகின்றன. பின்புறத்தில் இடம்பெற்றிருக்கும் டிஃபியூசர் அமைப்பு இது பெர்ஃபார்மென்ஸ் கூபே என்பதை சொல்வதுடன், அதிவேகத்தில் கார் நிலைத்தன்மையுடன் செல்வதற்கு தன்னால் முடிந்த பங்களிப்பை வழங்கும். மொத்தத்தில் எல்லோரையும் திரும்பி பார்க்கும் வைக்கும் வகையில் டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய ஆடி ஆர்எஸ்-5 ஸ்போர்ட்பேக் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

உட்புற வடிவமைப்பு

உட்புறம் கருப்பு வண்ண தீம் பயன்படுத்தப்பட்டு இருப்பதுடன் அலுமினியம் மற்றும் க்வாட்ரோ பேட்ஜுடன் கூடிய கார்பன் ஃபைபர் சட்டம் உள்ளிட்ட உயர்தர பாகங்கள் மிகவும் பிரிமீயமாக காட்டுகிறது. டேஷ்போர்டின் மத்திய பகுதியில் நீள வாக்கில் ஏசி வென்ட்டுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. மின்னணு திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை சிறப்பான அம்சங்களாக இருக்கின்றன.

புதிய ஆடி ஆர்எஸ்-5 ஸ்போர்ட்பேக் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஸ்டீயரிங் வீல்

இது ஸ்போர்ட்ஸ் ரக செடான் என்பதை பரைசாற்றும் விதமாக தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டீயரிங் வீல் கொடுக்கப்பட்டு இருக்கிறது. லெதர் உறையுடன் கூடிய இந்த ஸ்டீயரிங் வீலில் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் இடம்பெற்றுள்ளன. கைகள் பிடிப்பதற்கு இலகுவாகவும், ஓட்டுவதற்கு ஏதுவாகவும் இருக்கிறது.

புதிய ஆடி ஆர்எஸ்-5 ஸ்போர்ட்பேக் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

இந்த காரில் ஆடி நிறுவனத்தின் ஃப்ளோட்டிங் திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த திரையில் தொடு உணர் வசதி இல்லை என்பது பெரிய ஏமாற்றம். அதேநேரத்தில், டச்பேடு மற்றும் டயல் மூலமாக இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸடத்தை கட்டுப்படுத்த முடியும்.

புதிய ஆடி ஆர்எஸ்-5 ஸ்போர்ட்பேக் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

மியூசிக் சிஸ்டம்

இந்த காரில் 19 ஸ்பீக்கர்கள் கொண்ட பேங் அண்ட் ஒலுஃப்சென் ஆடியோ சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. சர்ரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் தொழில்நுட்பம் மிகச் சிறந்த ஒலிதரத்தை வழங்குகிறது. நவீன கட்டமைப்பு வசதிகள் கொண்ட தியேட்டரில் அமர்ந்து பாடல் கேட்பது போன்ற உணர்வை தருகிறது.

புதிய ஆடி ஆர்எஸ்-5 ஸ்போர்ட்பேக் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

முன் இருக்கைகள்

ஆடி ஆர்எஸ்5 ஸ்போர்ட்பேக் காரில் பக்கெட் இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன. எனினும், நடைமுறை பயன்பாட்டிற்கும் ஏற்ற வகையில் சொகுசான உணர்வை இந்த இருக்கைகள் தருவது ப்ளஸ் பாயிண்ட். அல்காண்ட்ரா லெதர் இருக்கைகளில் ஆர்எஸ்-5 முத்திரைகள் பொறிக்கப்பட்டுள்ளன. முன் இருக்கைகளில் எலக்ட்ரானிக் அட்ஜெஸ்ட் வசதியும், மசாஜ் வசதியும் உள்ளன.

புதிய ஆடி ஆர்எஸ்-5 ஸ்போர்ட்பேக் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பின் இருக்கை

இது 2 டோர் மாடல் என்பதால், முன் இருக்கைகளை முன்புறமாக நகர்த்தி விட்டு பின் இருக்கைக்கு செல்ல வேண்டி இருக்கிறது. இது கூபே மாடல் என்பதாால், பின் இருக்கைகள் உயரமானவர்களுக்கு சவுகரியமாக இருக்காது என்பது தெரிந்த விஷயம். சிறியவர்கள் மட்டுமே அமர்ந்து கொள்ள முடியும்.

புதிய ஆடி ஆர்எஸ்-5 ஸ்போர்ட்பேக் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

வசதிகள்

இந்த காரில் 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம் இடம்பெற்றிருப்பதுடன், பனோரமிக் சன்ரூஃப் இடம்பெற்றிருக்கிறது. இந்த காரில் 455 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதி உள்ளது. பின் இருக்கைகளை 40: 60 என்ற விகிதத்தில் மடக்கி வைத்து பொருட்கள் வைப்பதற்கான இடவசதியை அதிகரித்துக் கொள்ள முடியும்.

புதிய ஆடி ஆர்எஸ்-5 ஸ்போர்ட்பேக் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

எஞ்சின்

முதலாம் தலைமுறை மாடலுக்கும், இரண்டாம் தலைமுறைக்கும் உள்ள மிக முக்கிய வித்தியாசங்களில் ஒன்றாக இதனை எஞ்சினை கூறலாம். முந்தைய மாடலில் வி8 சிலிண்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட்டது. ஆனால், தற்போதைய மாடலில் வி6 எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த புதிய 2.9 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 445 பிஎச்பி பவரையும், 600 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

புதிய ஆடி ஆர்எஸ்-5 ஸ்போர்ட்பேக் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

கியர்பாக்ஸ்

ஆடி ஆர்எஸ்-5 காரில் க்வாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் இருப்பதால், எஞ்சின் சக்தியானது 8 ஸ்பீடு டிரிப்ட்ரோனிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலமாக அனைத்து சக்கரங்களுக்கும் கடத்தப்படுகிறது. இந்த கியர்பாக்ஸ் மிக துல்லியமாக இருப்பது சிறப்பான விஷயம்.

புதிய ஆடி ஆர்எஸ்-5 ஸ்போர்ட்பேக் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டிரைவிங் மோடுகள்

இந்த காரில் எஃபிசியன்சி, கம்ஃபோர்ட், ஆட்டோ மற்றும் டைனமிக் என்று 4 விதமான நிலைகளில் செல்லும் டிரைவிங் மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் திறன் வாய்ந்த எஞ்சின் ஆரம்ப நிலையிலேயே போதுமான டார்க் திறனை அள்ளி வழங்குவதால், ஓட்டுபவரை உற்சாகத்தில் திக்குமுக்காட வைக்கிறது. இந்த கார் 0 -100 கிமீ வேகத்தை 4.1 வினாடிகளில் எட்டிவிடுவதுடன், 250 கிமீ வேகம் வரை செல்லும் திறன் பெற்றிருக்கிறது.

புதிய ஆடி ஆர்எஸ்-5 ஸ்போர்ட்பேக் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

செயல்திறன்

ஆக்சிலரேட்டரை கொடுக்கும்போதெல்லாம் எஞ்சின் சக்தி அபரிமிதமாக வெளிப்படுவதுடன், மிக துல்லியமான த்ராட்டில் ரெஸ்பான்ஸ் இருப்பதால் கணித்து ஓட்டுவதற்கும் உகந்த ஸ்போர்ட்ஸ் செடான் மாடலாக கூற முடியும். குறிப்பாக, டைனமிக் மோடில் அதிகப்பட்ச பவரை வாரி இறைக்கிரது.

புதிய ஆடி ஆர்எஸ்-5 ஸ்போர்ட்பேக் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

கையாளுமை

நாம் டெஸ்ட் டிரைவ் செய்த காரில் 20 அங்குல அலாய் வீல்கள் மற்றும் லோ புரோஃபைல் டயர்கள் பயன்படுத்தப்பட்டு இருந்தன. இதில், சாலை நிலைகளுக்கு தக்கவாறு மாறும், அடாப்டிவ் சஸ்பென்ஷன் அமைப்பு இல்லை. எனினும், மென்மையாகவும் இல்லாமல், இறுக்கமாகவும் இல்லாமல் சஸ்பென்ஷன் ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால், நடைமுறை பயன்பாட்டின்போது சொகுசான அனுபவத்தை தருகிறது. வளைவுகளிலும் நம்பிக்கையுடன் திரும்புவதற்கு இதன் சஸ்பென்ஷன் அமைப்பு வெகுவாக உதவுகிறது.

புதிய ஆடி ஆர்எஸ்-5 ஸ்போர்ட்பேக் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பிரேக் செயல்திறன்

சஸ்பென்ஷன் அமைப்பு சிறப்பாக இருப்பது போன்றே, இந்த கட்டுக்கடங்கா காளையாக திமிறும் இந்த காரை கட்டுப்படுத்துவதற்கு பிரேக்குகள் பெரிதும் துணைநிற்கின்றன. அதிவேகத்தில் சென்றாலும் கூட சில வினாடிகளுக்குள் காரை கட்டுக்குள் கொண்டு வந்துவிடுகிறது இதன் துல்லியமான பிரேக்குகள். பிரேக் காலிபர்களிலும் ஆர்எஸ் பேட்ஜ் கொடுக்கப்பட்டு இருப்பது சிறப்பு.

புதிய ஆடி ஆர்எஸ்-5 ஸ்போர்ட்பேக் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

மைலேஜ்

ஆடி ஆர்எஸ்5 ஸ்போர்ட்பேக் கார் லிட்டருக்கு 11 கிமீ மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. எமது டெஸ்ட் டிரைவின்போது பெரும்பாலும் டைனமிக் மோடில் வைத்து ஓட்டினோம். டெஸ்ட் டிரைவின்போது லிட்டருக்கு 4 முதல் 5 கிமீ வரை அதிகபட்ச மைலேஜே வழங்கியது.

Engine 2.9-litre twin-turbo V6 petrol
Displacement (CC) 2894
Power (bhp) 445
Torque (Nm) 600
Transmission 8-speed Tiptronic automatic
Tyre (mm)

265/30R20
Acceleration 0-100kms (seconds) 4.1
Top Speed (km/h)

250 (electronically-limited)
புதிய ஆடி ஆர்எஸ்-5 ஸ்போர்ட்பேக் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பாதுகாப்பு வசதிகள்

ஆடி ஆர்எஸ்5 ஸ்போர்ட்பேக் காரில் 6 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் டிஃபரன்ஷியல் லாக், சக்கரங்கள் சறுக்குவதை தவிர்க்கும் ஆன்ட்டி ஸ்லிப் ரெகுலேஷன், கார் நிலைத்தன்மையுடன் செல்வதற்கான எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், சக்கரங்களுக்கு சரியான விகிதத்தில் டார்க் திறனை செலுத்தும் டார்க் வெக்டரிங் தொழில்நுட்பங்கள் உள்ளன.

டயரில் காற்றழுத்த குறைவு குறித்து எச்சரிக்கும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், தடம் மாறுதல் குறித்து எச்சரிக்கும் லேன் டிபார்ச்சர் சிஸ்டம், மோதல் வாய்ப்பு முன்கூட்டியே எச்சரிக்கும் வசதி, தானாக பார்க்கிங் செய்யும் பார்க்கிங் அசிஸ்ட் வசதிகள் உள்ளன.

புதிய ஆடி ஆர்எஸ்-5 ஸ்போர்ட்பேக் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

போட்டியாளர்கள்

ஆடி ஆர்எஸ்5 ஸ்போர்ட்பேக் கார் மாடலானது பிஎம்டபிள்யூ எம்-4, மெர்சிடிஸ் ஏஎம்ஜி சி63 ஆகிய கார் மாடல்களுடன் போட்டி போடுகிறது.

Model Displacement (CC) Power/Torque (bhp/Nm) Top Speed (km/p)
Audi RS5 2894 445/600 250
BMW M4 2979 425/550 245
Mercedes AMG C63 3982 510/700 250
புதிய ஆடி ஆர்எஸ்-5 ஸ்போர்ட்பேக் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ரிவ்யூ எடிட்டர் கருத்து

இரண்டாம் தலைமுறை ஆடி ஆர்எஸ்-5 கார் மாடலானது செயல்திறன், நடைமுறை பயன்பாடு, சொகுசு, தொழில்நுட்பங்கள் என அனைத்திலும் ஓர் சிறந்த பெர்ஃபார்மென்ஸ் கூபே என்பதை ஒவ்வொரு விதத்திலும் நிரூபிக்கிறது. இந்த கார் ரூ.1.10 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. தினசரி பயன்பாட்டுக்கு ஏற்ற பெர்ஃபார்மென்ஸ் கூபே கார் மாடலாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. நிச்சயம் பெர்ஃபார்மென்ஸ் கார் பிரியர்களுக்கு சிறந்த சாய்ஸாக கூற முடியும்.

Tamil
மேலும்... #ஆடி #audi
English summary
The second-generation Audi RS5 is a bit different. The engine has been downsized, which means that the car is now a V6 and not a V8. So, will the new RS5 keep up to its bratty nature? We took it out for a spin and here's what we have to say about it?
Story first published: Saturday, January 12, 2019, 16:39 [IST]
 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more