புதிய ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் கார் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

Posted By:

தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற செயல்திறன் மிக்க சொகுசு கார்களுக்கான வரவேற்பு கூடி வருகிறது. இந்த செக்மென்ட்டில் தனது ஆதிக்கத்தை உயர்த்திக் கொள்ளும் விதத்தில், தனது புதிய எஸ்5 காரை இந்தியாவில் களமிறக்க உள்ளது ஆடி கார் நிறுவனம்.

புதிய ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் கார் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

கடந்த 28 மற்றும் 29 தேதிகளில் ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் நடந்த மீடியா டிரைவ் நிகழ்ச்சியில் புதிய ஆடி எஸ்5 காரை டெஸ்ட் டிரைவ் செய்தோம். இந்த டெஸ்ட் டிரைவின்போது கார் குறித்த எமது அனுபவத்தை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.

புதிய ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் கார் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஆடி ஏ5 சொகுசு செடான் காரின் அதி செயல்திறன் மிக்க மாடல்தான் ஆடி எஸ்5 கார். தற்போது இரண்டாவது தலைமுறை கண்டிருக்கும் இந்த மாடல் எதிர்பார்ப்பை நிரூபிக்கும் விதத்தில் செயல்திறன் கொண்ட மாடலாக இருக்கிறதா, இந்த காரின் சிறப்பம்சங்கள் போன்ற தகவல்களை தொடர்ந்து காணலாம்.

டிசைன்

டிசைன்

ஆடி எஸ்5 காரின் டிசைன் எல்லோரையும் திரும்பி பார்க்க வைக்கும் விதத்தில் இருக்கிறது. ஆடி நிறுவனத்தின் கார்களுக்குரிய பிரம்மாண்ட முகப்பு க்ரில் அமைப்பு. லோகோ, ஹெட்லைட் அமைப்பு ஆகியவை செயல்திறன் மாடலாக காட்டுவதற்கான மிடுக்குடன் இருக்கின்றன. எல்இடி ஹெட்லைட்டுகள் கொடுக்கப்பட்டிருப்பதும் இதன் பிரிமியத்தை உயர்த்துகிறது.

Recommended Video - Watch Now!
Datsun rediGO Gold 1.0-Litre Launched In India | In Tamil- DriveSpark தமிழ்
புதிய ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் கார் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

விசேஷ பூச்சுடன் கூடிய ரியர் வியூ மிரர்கள், வலிமையான பாடி லைன்கள், பின்புறம் வெகுவாக தாழ்ந்த கூரை அமைப்பு ஆகியவை காருக்கு தனித்துவமான வடிவமைப்பை பெற்று தருகின்றன. குறிப்பாக, காரின் அலாய் வீல்கள் காரின் தோற்றத்திற்கு பிரம்மாண்டத்தை தருகின்றன. இரட்டை குழல் புகைபோக்கியும் செயல்திறன் மாடல் என்பதை காட்டுவதாக இருக்கிறது.

புதிய ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் கார் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

அதேநேரத்தில், ஏற்கனவே வந்த ஆடி கார்களில் இருந்த முத்தாய்ப்பான டிசைன் விஷயங்கள் அதிகம் இல்லை. ஆடி நிறுவனத்தின் டிசைனரான பீட்டர் ஷ்ரெயரை ஹூண்டாய் நிறுவனம் வளைத்து போட்டதும், இந்த தடுமாற்றத்திற்கு காரணமாக இருக்கலாம்.

ஆடி டிடி காரின் வடிவமைப்பில் முக்கிய பங்காற்றிய பீட்டர் ஷ்ரெயர் தற்போது ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்களின் தலைமை டிசைனர் என்பது உப தகவல்.

புதிய ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் கார் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

சரி, வெளிப்புறம் நிச்சயம் ஆடி கார்களுக்குரிய தனித்துவ அம்சங்களை பெற்றிருக்கும் நிலையில், உட்புறத்திலும் அதே நிலை தொடர்கிறது. நேர்த்தியான டேஷ்போர்டு அமைப்பும், பாகங்களின் தரமும் சிறப்பாக இருக்கின்றன.

நப்பா லெதர் இருக்கைகள் சொகுசாக இருப்பதுடன், இன்டீரியர் மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டு இருக்கிறது. ஆம்பியன்ட் லைட் செட்டிங் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் கார் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

போட்டியாளர்களை ஒப்பிடும்போது இந்த காரின் முன் இருக்கைகளில் அமரும்போது போதுமான ஹெட்ரூம், லெக் ரூம் இருக்கிறது.

போட்டியாளர்களைவிட மிகவும் கவர்ச்சியாகவும் இருக்கிறது. இருக்கைகள் அமர்ந்து கொள்வதற்கு சொகுசாகவும், வசதியாகவும் உள்ளன.

புதிய ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் கார் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

அதேநேரத்தில், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தின் இயக்குதல் முறை பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் பென்ஸ் கார்களின் சாதனங்களுக்கு இணையாக இல்லை என்பது குறை.

புதிய ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் கார் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஆடி எஸ்5 காரின் வெளிப்புற டிசைனும், உட்புற டிசைனும் ஒரு சில ஏமாற்றங்களை தவிர்த்து சிறப்பாக இருக்கிறது. இனி செயல்திறனில் எப்படி இருக்கிறது? என்பதை பார்த்துவிடலாம். இந்த காரில் 349 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல 3.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.

புதிய ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் கார் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

க்வாட்ரோ பர்மெனென்ட் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் 8 ஸ்பீடு ட்ரிப்ட்ரோனிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரின் செயல்திறன் மிகவும் சிறப்பாக உள்ளது.

எஞ்சினின் சக்தியை வெளிப்படுத்தும் திறனில் ஆக்ரோஷத்தை காட்டுகிறது. டைனமிக் மோடில் வைத்து ஓட்டும்போது 4,500 முதல் 6,500 ஆர்பிஎம் எஞ்சின் சுழல் வேகத்தில் இந்த ஆக்ரோஷத்தை உணரலாம்.

புதிய ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் கார் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

செடான் ரகத்தில் மிகவும் சிறப்பான பிக்கப் கொண்ட மாடலாக கூறலாம். இந்த கார் நின்ற நிலையில் இருந்து 100 கிமீ வேகத்தை வெறும் 4.7 வினாடிகளில் எட்டிவிடுகிறது.

புதிய ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் கார் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த கார் கம்ஃபோர்ட், ஆட்டோ மற்றும் டைனமிக் என்ற மூன்றுவிதமான டிரைவிங் மோடுகளை கொண்டுள்ளது.

சாலை நிலை மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப எஞ்சின் செயல்திறன் மற்றும் இயக்கத்தை விருப்பம் போல் தேர்வு செய்து கொள்ளலாம். இதில், டைனமிக் மோடு மிகச் சிறப்பான ஓட்டுதல் அனுபவத்தை தருகிறது.

புதிய ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் கார் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த செயல்திறன் மிக்க காரின் போக்கிற்கு இதன் சஸ்பென்ஷன் அமைப்பும் துணை நிற்கிறது. இதனால், கையாளுமையிலும் நன்றாகவே இருக்கிறது. அதேநேரத்தில், ஸ்டீயரிங் ஃபீட் பேக் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என்ற உணர்வு எழுகிறது.

புதிய ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் கார் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

எமது டெஸ்ட் டிரைவின்போது நகர்ப்புறம் மற்றும் நெடுஞ்சாலை பயணத்தில் சராசரியாக லிட்டருக்கு 10 கிமீ வரை மைலேஜ் தந்தது. இந்த காரின் கியர்பாக்ஸ் மாற்றம் மிகவும் மென்மையாகவும், அதிர்வுகள் குறைவாகவும் இருக்கிறது. குறிப்பாக, கியர்களை கூட்டும்போது சிறப்பான உணர்வை தருகிறது.

எடிட்டர் கருத்து

எடிட்டர் கருத்து

டிசைன், செயல்திறன், வசதிகள் ஆகியவற்றுடன் நடைமுறை பயன்பாட்டுக்கு ஏற்ற சக்திவாய்ந்த கார் மாடலாக ஆடி எஸ்5 கார் இருக்கிறது. சாதாரண ஆடி கார் பிரியர்களுக்கு புதிய ஏ5 செடான் சிறந்த தேர்வாக இருக்கும். ஆனால், செயல்திறன் மிக்க மாடலை விரும்பும் ஆடி பிரியர்களுக்கு இந்த காரும் அவர்களது தேர்வில் முக்கிய இடம்பிடிக்கும்.

பரிந்துரை

பரிந்துரை

எனினும், இந்த காரை வாங்க விரும்புவோர் மெர்சிடிஸ் பென்ஸ் சி43 ஏஎம்ஜி காரையும் ஒருமுறை டெஸ்ட் டிரைவ் செய்துவிட்டு முடிவு எடுத்தல் நலமாக இருக்கும் என்று நாம் பரிந்துரை செய்யலாம். ஏனெனில், தனிப்பட்ட விருப்ப தேர்வுகளில் மாறுபாடு இருக்கும்.

முக்கிய அம்சங்கள்

முக்கிய அம்சங்கள்

எஞ்சின்: 3.0 லிட்டர் வி6 டர்போ பெட்ரோல்

பவர்/டார்க்: 349பிஎச்பி/500 என்எம்

டிரான்ஸ்மிஷன்: 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக், ஆல் வீல் டிரைவ் சிஸ்டம்

செயல்திறன்: 0 -100 கிமீ வேகத்தை 4.7 வினாடிகளில் எட்டிவிடும்

டாப் ஸ்பீடு: மணிக்கு 250கிமீ வேகம்

மைலேஜ்: சராசரி 10 கிமீ/லி [100 கிமீ தூரத்திற்கு 9.5 லிட்டர்கள்]

அறிமுக தேதி: அக்டோபர் 5, 2017

எதிர்பார்க்கும் விலை: ரூ.80 லட்சம் முதல் ரூ.85 லட்சம் ஆன்ரோடு

Test Drive And Words: Jobo Kuruvilla

In Tamil: Saravana Rajan

English summary
We drive the 2017 Audi S5 Sportback, the high-performance variant of Audi's A5, in Rajasthan's beautiful Pink City, Jaipur. Upon the conclusion of the drive, I contemplated - the S5 Sportback is a sure-enough performance-brat? Or is it?

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more