பென்ஸ் ஏ கிளாஸ் Vs பிஎம்டபிள்யூ 1 சீரிஸ்: சிறப்பம்சங்கள் ஒப்பீடு

இந்தியாவில் ஆடி, பிஎம்டபிள்யூவை அடித்து மேலே வர ஒரே வழி சிறிய சொகுசு கார்கள்தான் என்பதை உணர்ந்துகொண்டு முதலாவதாக விலை குறைந்த சொகுசு கார்களை பென்ஸ் அறிமுகம் செய்தது. பி கிளாஸ் காரையும், அத்தோடு நில்லாமல் துணைக்கு ஏ கிளாஸ் காரையும் நிலை நிறுத்தியுள்ளது. பென்ஸ் கணித்தது போலவே இரண்டு கார்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

இந்த நிலையில், பிஎம்டபிள்யூவும் ஏ கிளாஸ் காருக்கு நேரடி போட்டியாளராக 1 சீரிஸ் சொகுசு ஹேட்ச்பேக் காரை நேற்று முன்தினம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. விலை, ரகம் என அனைத்திலும் இரு கார்களும் நேருக்கு நேர் போட்டியிடுகின்றன. இந்த நிலையில், இரு கார்களிலும் இருக்கும் அம்சங்களை ஒப்பிட்டு பார்க்கலாம்.

வேரியண்ட் ஒப்பீடு

வேரியண்ட் ஒப்பீடு

ஏ கிளாஸ் வேரியண்ட்டுகள்

ஏ180 ஸ்போர்ட் என்ற பெட்ரோல் வேரியண்ட்டிலும் 180சிடிஐ என்ற ஒரே ஒரு டீசல் வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கிறது. இது வாடிக்கையாளர்களுக்கான தேர்வு ஆப்ஷன் குறைவாக இருக்கிறது. ஆனால், பிஎம்டபிள்யூவில்...

வேரியண்ட் ஒப்பீடு

வேரியண்ட் ஒப்பீடு

1 சீரிஸ் வேரியண்ட்டுகள்

116ஐ என்ற ஒரே பெட்ரோல் வேரியண்ட்டில் அறிமுகம் செய்யப்பட்டாலும், , 118டி, 118டி ஸ்போர்ட் லைன் மற்றும் 118டி ஸ்போர்ட் ப்ளஸ் ஆகிய மூன்று டீசல் வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. இது வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு தக்க தேர்வு செய்ய ஏதுவாகும்.

 வடிவமைப்பு அளவுகள்

வடிவமைப்பு அளவுகள்

ஏ- கிளாஸ்

நீளம்: 4292 மிமீ

உயரம்: 1430 மிமீ

அகலம்: 1553 மிமீ

வீல் பேஸ்: 2699 மிமீ

 வடிவமைப்பு அளவுகள்

வடிவமைப்பு அளவுகள்

1 சீரிஸ்

நீளம்: 4324 மிமீ

உயரம்: 1421 மிமீ

அகலம்: 1535 மிமீ

வீல் பேஸ்: 2690 மிமீ

பூட் ரூம் ஒப்பீடு

பூட் ரூம் ஒப்பீடு

ஏ- கிளாஸ் காரில் 341 லிட்டர் கொள்ளளவு கொண்ட டிக்கியும், 1 சீரிஸ் காரில் 360 லிட்டர் கொள்ளளவு கொண்ட டிக்கியும் இருக்கிறது. ஏ- கிளாஸ் காரைவிட கூடுதல் பொருட்களை வைப்பதற்கான இடவசதி 1 சீரிஸ் காரில் இருக்கிறது.

 விலை ஒப்பீடு

விலை ஒப்பீடு

ஏ- கிளாஸ் பெட்ரோல் ரூ.22.73 லட்சத்திலும், டீசல் மாடல் ரூ.21.93 லட்சத்திலும் கிடைக்கிறது.விலை நிர்ணய வித்தியாசம் அடுத்த ஸ்லைடரில் கொடுக்கப்பட்டுள்ளது.

விலை ஒப்பீடு

விலை ஒப்பீடு

1 சீரிஸ் பெட்ரோல் மாடல் ரூ.20.90 லட்சத்திலும், டீசல் வேரியண்ட்டின் பேஸ் மாடல் ரூ.22.9 லட்சத்திலும், மிட் வேரியண்ட் ரூ.25.9 லட்சத்திலும், டீசல் டாப் வேரியண்ட் ரூ.29.9 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலைகளில் கிடைக்கிறது. ஏ- கிளாஸ் பெட்ரோல் மாடலைவிட பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் ரூ.1.83 லட்சம் குறைவான விலையில் வந்துள்ளது. அதேவேளை, ஏ- கிளாஸ் டீசல் மாடலைவிட 1 சீரிஸ் பேஸ் மாடல் ஒரு லட்சம் ரூபாய் வரை கூடுதலான விலையை கொண்டிருக்கிறது.

எஞ்சின் ஒப்பீடு

எஞ்சின் ஒப்பீடு

ஏ- கிளாஸ் காரில் 122 எச்பி ஆற்றலையும், 200 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சினும், 109 எச்பி ஆற்றலையும், 250என்எம் டார்க்கையும் வழங்கும் 2.2 லிட்டர் டர்போ டீசல் எஞ்சினுடன் கிடைக்கிறது.

எஞ்சின் ஒப்பீடு

எஞ்சின் ஒப்பீடு

பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் காரில் 136 எச்பி ஆற்றலையும், 220 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 143 எச்பி ஆற்றலையும், 320 என்எம் டார்க்கையும் வழங்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சினும் செயலாற்றுகின்றன.

 டிரான்ஸ்மிஷன் ஒப்பீடு

டிரான்ஸ்மிஷன் ஒப்பீடு

இரண்டு கார்களும் ஆட்டோமேட்டிக் மாடல்களில் மட்டுமே கிடைக்கிறது. ஏ- கிளாஸ் காரில் 7 ஸ்பீடு டியூவல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனும், 1சீரிஸ் காரில் ஸீடி 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனும் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதில், 1சீரிஸ் கார் ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டிருப்பதால் டிரைவிங்கின்போது கூடுதல் சுகத்தை தரும்.

பெர்ஃபார்மென்ஸ் ஒப்பீடு

பெர்ஃபார்மென்ஸ் ஒப்பீடு

ஏ- கிளாஸ் பெட்ரோல் மாடல் 0- 100 கிமீ வேகத்தை 9.2 வினாடிகளிலும், டீசல் மாடல் 10.6 வினாடிகளையும் எடுத்துக் கொள்கின்றன. 1 சீரிஸ் காரின் பெட்ரோல் மாடல் 0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 8.7 வினாடிகளையும், டீசல் மாடல் 8.6 வினாடிகளையும் எடுத்துக்கொள்ளும்.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

ஏ- கிளாஸ் பெட்ரோல் மாடல் அதிகபட்சமாக மணிக்கு 202 கிமீ வேகத்திலும், டீசல் மாடல் மணிக்கு 190 கிமீ வேகத்திலும் செல்லும் அம்சங்கள் கொண்டுள்ளன. மறுபுறம் 1 சீரிஸ் காரின் பெட்ரோல் மாடல் அதிகபட்சமாக மணிக்கு 210 கிமீ வேகத்திலும், டீசல் மாடல் மணிக்கு 212 கிமீ வேகத்திலும் செல்லும் திறன் கொண்டதாக இருக்கின்றன.

மைலேஜ் ஒப்பீடு

மைலேஜ் ஒப்பீடு

ஏ- கிளாஸ் காரின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 15.50 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 20.06 கிமீ மைலேஜையும் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 சீரிஸ் காரின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 16.28 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 20.58 கிமீ மைலேஜையும் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்சங்கள் ஒப்பீடு

அம்சங்கள் ஒப்பீடு

1 சீரிஸ் கார் அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் வந்திருக்கிறது. அதேவேளை, ரூ.23 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் ஏ- கிளாஸ் காரில் எலக்ட்ரிக் பனரோமிக் சன்ரூஃப், 14.7 செமீ கலர் இன்போடெயின்மென்ட் திரை உள்ளிட்டவை ஏ- கிளாஸ் காரில் நிரந்தர அம்சங்களாக இடம் பெற்றுள்ளன. ஆனால், பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் காரில் ஐடிரைவ் 16.5 செமீ திரை மற்றும் இதர பிரிமியம் வசதிகள் அனைத்தும் டாப் வேரியண்ட்டுகளில் மட்டுமே கிடைக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் தீர்ப்பு

டிரைவ்ஸ்பார்க் தீர்ப்பு

தோற்றம், விலை, இடவசதி, அம்சங்கள் என அனைத்திலும் கொடுக்கும் பணத்திற்கு அதிக மதிப்புடைய காராக பென்ஸ் ஏ- கிளாஸ் காரை கூறலாம். பெர்ஃபார்மென்ஸ், கூடுதல் பாதுகாப்பு வசதிகள் கொண்ட சொகுசு கார்தான் வேண்டும் என்பவர்கள் தாராளமாக 1 சீரிஸ் பக்கம் போகலாம்.

Most Read Articles
English summary
Mercedes-Benz stuck gold first when it launched the A Class in India earlier this year. The compact luxury car market was non existent and the A Class devoured the opportunity thus offered. Result: Merc's luxury hatch received a record 400+ bookings in the first 10 days itself.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X