செம ஸ்டைல்... சூப்பரான பெர்ஃபார்மென்ஸ்... பிஎம்டபிள்யூ 220ஐ எம் ஸ்போர்ட் ஆரம்ப நிலை சொகுசு காரை வாங்கலாமா?

பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட 2 சீரிஸ் க்ரான் கூபே ஆரம்ப நிலை சொகுசு கார் மாடலை பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் நடப்பாண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்தது. ஸ்போர்ட் மற்றும் எம் ஸ்போர்ட் என இரண்டு பெட்ரோல் வேரியண்ட்களில், பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே கார் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது.

இதில், பிஎம்டபிள்யூ 220ஐ எம் ஸ்போர்ட் வேரியண்ட்டை நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்தோம். சென்னையில் உள்ள பிஎம்டபிள்யூ ஆலையில், 220ஐ எம் ஸ்போர்ட் வேரியண்ட் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த செடான் இந்திய சந்தையில், 3 சீரிஸ் மாடலுக்கு கீழாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த வேரியண்ட்டின் டிசைன், என்னென்ன வசதிகள் வழங்கப்பட்டுள்ளன? செயல்திறனும், ஓட்டுவதற்கும் எப்படி உள்ளது? என்பது உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

செம ஸ்டைல்... சூப்பரான பெர்ஃபார்மென்ஸ்... பிஎம்டபிள்யூ 220ஐ எம் ஸ்போர்ட் ஆரம்ப நிலை சொகுசு காரை வாங்கலாமா?

டிசைன்

பிஎம்டபிள்யூ 220ஐ எம் ஸ்போர்ட் மிகவும் ஸ்போர்ட்டியாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக எங்களிடம் வழங்கப்பட்ட கருப்பு நிற கார் கவர்ச்சிகரமாக இருந்தது. இந்த காரின் முன் பகுதியில் எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் எல்இடி பகல் நேர விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன. ஹெட்லைட் மிகவும் பிரகாசமாக ஒளிர்வதால், இரவு நேரங்களில் காரை ஓட்டுவது எளிமையாக உள்ளது.

அதே நேரத்தில் இந்த காரின் பனி விளக்குகளும் எல்இடி யூனிட்கள்தான். பம்பரின் மீது சற்று தாழ்வாக அவை வழங்கப்பட்டுள்ளன. மேலும் பம்பரின் இரு பக்கமும் வெண்ட்களும் இடம்பெற்றுள்ளன. அத்துடன் பிஎம்டபிள்யூ நிறுவனத்திற்கே உரித்தான சிறுநீரக வடிவ க்ரில் அமைப்பு இந்த காரில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில், க்ரோம் பூச்சுக்களும் இடம்பெற்றுள்ளன.

செம ஸ்டைல்... சூப்பரான பெர்ஃபார்மென்ஸ்... பிஎம்டபிள்யூ 220ஐ எம் ஸ்போர்ட் ஆரம்ப நிலை சொகுசு காரை வாங்கலாமா?

பக்கவாட்டு பகுதியை பொறுத்த வரை, 17 இன்ச் எம் ஸ்போர்ட் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. காரின் ஒட்டுமொத்த அளவுடன் அவை நன்றாக பொருந்தி போகின்றன. எனினும் பிரேக் காலிபர்களை ரேஸிங் ப்ளூ போன்ற கவர்ச்சிகரமான நிறத்தில் வழங்கியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்ற உணர்வு ஏற்படுகிறது.

செம ஸ்டைல்... சூப்பரான பெர்ஃபார்மென்ஸ்... பிஎம்டபிள்யூ 220ஐ எம் ஸ்போர்ட் ஆரம்ப நிலை சொகுசு காரை வாங்கலாமா?

அதே நேரத்தில் காரின் பக்கவாட்டில் முன் பக்க ஃபெண்டரில், எம் பேட்ஜ் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் கார் பாடியின் நிறத்திலேயே ஓஆர்விஎம்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் விண்டோக்களை சுற்றிலும் க்ரோம் பூச்சு அலங்காரத்திற்கு பதிலாக கருப்பு வண்ணம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் ஃப்ரேம்லெஸ் டோர்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

செம ஸ்டைல்... சூப்பரான பெர்ஃபார்மென்ஸ்... பிஎம்டபிள்யூ 220ஐ எம் ஸ்போர்ட் ஆரம்ப நிலை சொகுசு காரை வாங்கலாமா?

பின் பகுதியிலும் பல்வேறு விஷயங்கள் உங்கள் கவனத்தை ஈர்க்கும். இதில், நேர்த்தியான டெயில்லைட்கள், பெரிய இரட்டை சைலென்சர்கள் ஆகியவை மிகவும் முக்கியமானவை. அதே நேரத்தில் 220ஐ பேட்ஜ், க்ரோம் பூச்சுக்கள் உடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் ரியர் பார்க்கிங் கேமராவை பெற்றிருக்கிறது என்பதுடன், காரை சுற்றிலும் பார்க்கிங் சென்சார்களும் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே நெருக்கடியான இடங்களிலும் காரை எளிதாக பார்க்கிங் செய்ய முடியும். ஒட்டுமொத்தத்தில் எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும், காரின் தோற்றம் மிகவும் கவர்ச்சிகரமாக உள்ளது.

செம ஸ்டைல்... சூப்பரான பெர்ஃபார்மென்ஸ்... பிஎம்டபிள்யூ 220ஐ எம் ஸ்போர்ட் ஆரம்ப நிலை சொகுசு காரை வாங்கலாமா?

இன்டீரியர்

இனி காரின் உள்ளே செல்வோம். காரின் கேபினில் இடவசதி நன்றாக உள்ளது. பெரிய பனரோமிக் சன்ரூஃப் காரின் கேபினை பெரிதாக காட்டுகிறது. அத்துடன் கேபின் காற்றோட்டமாக இருக்கவும் உதவி செய்கிறது.

செம ஸ்டைல்... சூப்பரான பெர்ஃபார்மென்ஸ்... பிஎம்டபிள்யூ 220ஐ எம் ஸ்போர்ட் ஆரம்ப நிலை சொகுசு காரை வாங்கலாமா?

அதே நேரத்தில் டேஷ்போர்டின் மைய பகுதியில், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே என 2 வசதிகளும் வழங்கப்பட்டுள்ள நிலையில், டச்ஸ்க்ரீன் பயன்படுத்துவதற்கு நன்றாக உள்ளது.

செம ஸ்டைல்... சூப்பரான பெர்ஃபார்மென்ஸ்... பிஎம்டபிள்யூ 220ஐ எம் ஸ்போர்ட் ஆரம்ப நிலை சொகுசு காரை வாங்கலாமா?

மேலும் இந்த காரில் 10.25 இன்ச் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரும் வழங்கப்பட்டுள்ளது. காரை பற்றிய பல்வேறு தகவல்களை இது வழங்குகிறது. காரின் டிரைவ் மோடு மாற்றப்படும்போதெல்லாம், இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் டிஸ்ப்ளேவின் பின்னணி வண்ணம் மாறும் வசதி வழங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விஷயமாகும். இதன்படி ஈக்கோப்ரோ மோடில் கூல் ப்ளூ வண்ணத்திற்கும், கம்ஃபோர்ட் மோடில் ஆரஞ்ச் வண்ணத்திற்கும், ஸ்போர்ட் மோடில் சிகப்பு வண்ணத்திற்கும் மாறும்.

செம ஸ்டைல்... சூப்பரான பெர்ஃபார்மென்ஸ்... பிஎம்டபிள்யூ 220ஐ எம் ஸ்போர்ட் ஆரம்ப நிலை சொகுசு காரை வாங்கலாமா?

அத்துடன் கியர் லிவருக்கு அருகே வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜிங் பேனலையும் இந்த கார் பெற்றுள்ளது. மேலும் இந்த காரில் ட்யூயல்-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. டேஷ்போர்டு மற்றும் டோர் பேனல்களில் சாஃப்ட் டச் மெட்டீரியல்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு கதவிலும், பாட்டில் வைப்பதற்கான இடவசதி உள்ளது.

செம ஸ்டைல்... சூப்பரான பெர்ஃபார்மென்ஸ்... பிஎம்டபிள்யூ 220ஐ எம் ஸ்போர்ட் ஆரம்ப நிலை சொகுசு காரை வாங்கலாமா?

அதே நேரத்தில் இந்த காரில் லெதர் சுற்றப்பட்ட ஸ்டியரிங் வீல் வழங்கப்பட்டுள்ளது. இது ஓட்டுனருக்கு நல்ல க்ரிப்பை வழங்குகிறது. அத்துடன் ஸ்டியரிங் வீலில் வழங்கப்பட்டுள்ள பல்வேறு கண்ட்ரோல்களுக்கான ஸ்விட்ச்கள் சரியான இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. எனவே இன்போடெயின்மெண்ட்டை இயக்கி கொண்டிருந்தாலும் கூட, ஓட்டுனர் சாலையில் முழுமையாக கவனம் செலுத்த முடியும். இந்த காரின் ஸ்டியரிங் வீலிலும் எம் பேட்ஜ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இது தட்டையான அடிப்பாகம் கொண்டது கிடையாது.

செம ஸ்டைல்... சூப்பரான பெர்ஃபார்மென்ஸ்... பிஎம்டபிள்யூ 220ஐ எம் ஸ்போர்ட் ஆரம்ப நிலை சொகுசு காரை வாங்கலாமா?

முன் பகுதியில் உள்ள இரண்டு இருக்கைகளையும் மின்னணு முறையில் அட்ஜெஸ்ட் செய்ய முடியும். ஆனால் ஓட்டுனர் இருக்கைக்கு மட்டுமே சீட் மெமரி வசதி உள்ளது. முன் பக்க இருக்கைகள் சௌகரியமாக உள்ளன. ஆனால் பின் பகுதி இருக்கைகள் நெருக்கடியான உணர்வை தருகின்றன. மிகவும் உயரமான பயணிகள் அசௌகரியத்தை சந்திக்க நேரிடலாம். பின் பகுதி இருக்கைகள் 2 பேர் அமர்வதற்கு மட்டுமே ஏற்றதாக இருக்கும்.

செம ஸ்டைல்... சூப்பரான பெர்ஃபார்மென்ஸ்... பிஎம்டபிள்யூ 220ஐ எம் ஸ்போர்ட் ஆரம்ப நிலை சொகுசு காரை வாங்கலாமா?

எனினும் பின் இருக்கை பயணிகளின் வசதிக்காக இரண்டு ஏசி வெண்ட்களும், இரண்டு டைப்-சி சார்ஜிங் சாக்கெட்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரின் பூட் ஸ்பேஸ் 460 லிட்டர்கள். ஒரு வேளை இன்னும் அதிக இடவசதி தேவைப்பட்டால், பின் இருக்கைகளை முழுவதுமாகவோ அல்லது 60:40 விகிதத்திலோ மடித்து வைத்து கொண்டு, கூடுதல் இடவசதியை ஏற்படுத்தி கொள்ள முடியும்.

செம ஸ்டைல்... சூப்பரான பெர்ஃபார்மென்ஸ்... பிஎம்டபிள்யூ 220ஐ எம் ஸ்போர்ட் ஆரம்ப நிலை சொகுசு காரை வாங்கலாமா?

இன்ஜின் & செயல்திறன்

பிஎம்டபிள்யூ 220ஐ எம் ஸ்போர்ட் காரில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 5,000 ஆர்பிஎம்மில் 189 பிஎச்பி பவரையும் மற்றும் 1,350-4,600 ஆர்பிஎம்மில் 280 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த இன்ஜினுடன் 7 ஸ்பீடு ஸ்டெப்ட்ரானிக் ஸ்போர்ட் ட்யூயல் கிளட்ச் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இன்ஜின் சக்தி தற்போது முன் சக்கரங்களுக்கு செலுத்தப்படுகிறது. பின் சக்கரங்களுக்கு கிடையாது.

இது ஃப்ரண்ட் வீல் டிரைவ் கார் என்பதால், டார்க் ஸ்டீர் அதிகமாக உள்ளது. நீங்கள் அதிகமாக ஆக்ஸலரேஷன் கொடுக்கும்போது, கார் ஒரு பக்கமாக இழுத்து செல்லலாம் என்பதால், ஸ்டியரிங்கை கவனமாக கையாள்வது முக்கியம். ஸ்டியரிங்கை இறுக்கமாக பிடித்து கொள்வது நன்மை பயக்கும். அதே நேரத்தில் இந்த காரில் லான்ச் கண்ட்ரோல் மோடு இடம்பெற்றுள்ளது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் என்ற வேகத்தை வெறும் 7.1 வினாடிகளில் இந்த கார் எட்டி விடும்.

அதே சமயம் இந்த காரில் ஈக்கோ ப்ரோ, கம்ஃபோர்ட் மற்றும் ஸ்போர்ட் என மொத்தம் 3 டிரைவிங் மோடுகள் உள்ளன. ஈக்கோ ப்ரோ மோடில் ஸ்டியரிங் வீல் இலகுவாக உள்ளது. த்ராட்டில் ரெஸ்பான்ஸ் அவ்வளவு சிறப்பாக இல்லை. ஆனால் எரிபொருள் சேமிக்கப்படும். கம்ஃபோர்ட் மோடில் ஸ்டியரிங் வீல் மற்றும் த்ராட்டில் ரெஸ்பான்ஸ் இரண்டுமே சற்று மேம்படுகிறது. நகர பகுதிகளில் ஓட்டுவதற்கு இந்த மோடை நாங்கள் பரிந்துரைக்கிறோம். ஸ்போர்ட் மோடில், ஸ்டியரிங் சிஸ்டம் போதுமான அளவிற்கு இறுக்கம் பெறுவதுடன், த்ராட்டில் ரெஸ்பான்சும் சிறப்பாக உள்ளது.

செம ஸ்டைல்... சூப்பரான பெர்ஃபார்மென்ஸ்... பிஎம்டபிள்யூ 220ஐ எம் ஸ்போர்ட் ஆரம்ப நிலை சொகுசு காரை வாங்கலாமா?

ரைடு & ஹேண்ட்லிங்

பிஎம்டபிள்யூ 220ஐ எம் ஸ்போர்ட் காரின் பவர் டெலிவரி சீராக உள்ளது. இந்த காரில் வழங்கப்பட்டுள்ள பேடில் ஷிஃப்டர்களும் பயனுள்ளதாக இருக்கின்றன. அதே நேரத்தில் சஸ்பெண்ஸன், சௌகரியமான பயணத்திற்கு உதவுவதுடன், இந்த காரின் ஸ்போர்ட்டியான பண்பிற்கு ஏற்றதாகவும் உள்ளது. குண்டும், குழியுமான சாலைகளில் பயணம் செய்தாலும், கேபினில் அதனை பெரிதாக உணர முடியவில்லை.

அதே நேரத்தில் இந்த காரில், பிரிட்ஜ்ஸ்டோன் டுரான்சா டயர்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த டயர்களின் லோ ஃப்ரொபைல் காரணமாக சத்தம் வருகிறது. அதே நேரத்தில் என்விஹெச் லெவல்களும் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம். மேலும் சிறிய அளவில் பாடி ரோலையும் உணர முடிகிறது.

எரிபொருள் சிக்கனத்தை பொறுத்தவரை, நகர பகுதிகளில் ஒரு லிட்டருக்கு 7.2 கிலோ மீட்டர் முதல் 8.7 கிலோ மீட்டர் வரையிலான மைலேஜ் கிடைத்தது. அதே நேரத்தில் நெடுஞ்சாலைகளில் ஒரு லிட்டருக்கு 10.5 கிலோ மீட்டர் முதல் 11.7 கிலோ மீட்டர் வரையிலான மைலேஜ் கிடைத்தது. இதனை மோசமான மைலேஜ் என சொல்ல முடியாது. ஓரளவிற்கு நல்ல மைலேஜ்தான்.

செம ஸ்டைல்... சூப்பரான பெர்ஃபார்மென்ஸ்... பிஎம்டபிள்யூ 220ஐ எம் ஸ்போர்ட் ஆரம்ப நிலை சொகுசு காரை வாங்கலாமா?

டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?

இது இந்திய சந்தையில் கிடைக்கும் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஆரம்ப நிலை சொகுசு கார் ஆகும். இதில், தேவையான வசதிகள் இருப்பதுடன், பார்ப்பதற்கும் கவர்ச்சிகரமாக இருக்கிறது. மேலும் செயல்திறனும் நன்றாக உள்ளது. ஆனால் இருக்கைகள் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம். அதேபோன்று என்விஹெச் லெவல்களும் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம் என்பதுடன், பின் இருக்கை பயணிகளுக்கு இன்னும் கொஞ்சம் லெக்ரூம் வழங்கப்பட்டிருக்கலாம். இதை தவிர இந்த காரில் வேறு எந்த குறையும் இல்லை. உங்களுடைய முதல் சொகுசு செடான் காரை வாங்குவதாக இருந்தால், நீங்கள் இந்த காரை பற்றி யோசிக்கலாம்.

Most Read Articles
English summary
BMW 220i M Sport Road Test Review: Design, Features, Engine, Performance, Handling And More. Read in Tamil
Story first published: Wednesday, June 23, 2021, 11:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X