பிஎம்டபிள்யூ 320டீ ஜிடி காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

Written By:

சொகுசு கார் வாங்கும் பெரும்பாலானோர் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டு சற்று சாவகாசமாக பயணிக்க விரும்புவது வழக்கம். அவர்களுக்கு தோதுவான சொகுசு கார் மாடல்களில் ஒன்று பிஎம்டபிள்யூ 320டீ ஜிடி மாடல்.

வழக்கமான பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரைவிட மிகச் சிறப்பான இடவசதியை கொண்ட இந்த காரை அண்மையில் டிரைவ்ஸ்பார்க் டீம் டெஸ்ட் டிரைவ் செய்தது. இந்த காரின் சாதக, பாதக அம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

பிஎம்டபிள்யூ 320டீ ஜிடி காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

வழக்கமான பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரின் கிராண் டூரிங் வகையிலான மாடல்தான் இந்த கார். அதாவது, அதி வேகத்தில் நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற கார் என்பதே இந்த கிராண் டூரிங் வகை.

பிஎம்டபிள்யூ 320டீ ஜிடி காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரைவிட நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால், இடவசதி அதிகரித்து இருப்பதுடன், காரின் தோற்றமும் வித்தியாசப்படுகிறது.

பிஎம்டபிள்யூ 320டீ ஜிடி காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஃப்ரேம் இல்லாத ஜன்னல்கள், வலிமையாக தோற்றமளிக்கும் பூட் ரூம். பூட் லிட் ஸ்பாய்லர், பிஎம்டபிள்யூ கார்களுக்குரித்தான டிசைனில் ஜொலிக்கும் அலாய் சக்கரங்கள் ஆகியவை டிசைனில் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. மேலும், சாதாரண பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரிலிருந்து முற்றிலும் தனித்துவம் பெற்ற மாடலாக காட்சி தருகிறது.

பிஎம்டபிள்யூ 320டீ ஜிடி காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகள், எல்இடி பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. எல்இடி இண்டிகேட்டர்கள், சிறு நீரக வடிவ முகப்பு க்ரில் அமைப்பு ஆகியவை தனித்துவமாக இருக்கின்றன.

பிஎம்டபிள்யூ 320டீ ஜிடி காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

காரின் பக்கவாட்டில் லக்சுரி வேரியண்ட் பேட்ஜ் பொருத்தப்பட்டு இருக்கிறது. மெல்லிய பாடி லைன்களும் இந்த காருக்கு சிறப்பு சேர்க்கிறது. ஏர் இன்டேக் டிசைனிலும் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதுடன், முகப்பு மூன்று பாகங்களாக காட்சி தருகிறது.

பிஎம்டபிள்யூ 320டீ ஜிடி காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

முந்தைய தலைமுறை மாடலில் இருந்தது போன்ற ஆக்டிவ் ஏரோடைனமிக் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதிவேகத்தில் செல்லும்போது போதுமான டவுன்ஃபோர்ஸை ரியர் ஸ்பாய்லர் தானியங்கி முறையில் இயங்கி வழங்குகிறது.

பிஎம்டபிள்யூ 320டீ ஜிடி காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய பிஎம்டபிள்யூ 320டீ ஜிடி காரில் இரட்டைக் குழல் சைலென்சர் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஜிடி பேட்ஜ் பின்புற பூட் ரூம் மூடியில் பதிக்கப்பட்டு இருக்கிறது. மொத்தத்தில் இதன் வெளிப்புற டிசைன் எல்லோரையும் கவரும் என்று கூற முடியாது.

பிஎம்டபிள்யூ 320டீ ஜிடி காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

உட்புறத்தில் சாடில் பிரவுன் மற்றும் வெனிட்டோ பீயேஜ் என்ற இரட்டை வண்ணத்திலான பாகங்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது. டகோட்டா லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி கொடுக்கப்பட்டு இருப்பது காரின் பிரிமியம் தரத்தை உயர்த்தும் விஷயம்.

பிஎம்டபிள்யூ 320டீ ஜிடி காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

உட்புறத்தில் அதிக மாற்றங்கள் இல்லை. புதிய கியர் செலக்டர் மற்றும் ஐ-ட்ரைவ் கன்ட்ரோலர் கொடுக்கப்பட்டு இருப்பது புதிய அம்சமாக இருக்கிறது. முந்தைய மாடலைவிட குறிப்பிட்டு கூறும்படியான இன்டீரியர் மாற்றங்கள் இல்லை.

பிஎம்டபிள்யூ 320டீ ஜிடி காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஓட்டுனர் மற்றும் இதர பயணிகள் இருக்கைகள் மிகவும் சொகுசாகவே இருக்கின்றன. இருக்கைகளை விரும்பியவாறு மாற்றம் செய்து அதனை பதிவு செய்து கொள்ளும் மெமரி ஃபங்ஷன் வசதி உள்ளது.

பிஎம்டபிள்யூ 320டீ ஜிடி காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரைவிட இந்த 320டீ ஜிடி கார் 70 மிமீ கூடுதல் வீல் பேஸ் கொண்டது. இதன் காரணமாக, பின் இருக்கை மிகச் சிறப்பான ஹெட்ரூம் மற்றும் வசதியாக கால்களை வைத்துக் கொள்வதற்கு ஏதுவான லெக்ரூம் இடவசதியை கொண்டுள்ளது. எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் பனோரோமிக் சன் ரூஃப் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

பிஎம்டபிள்யூ 320டீ ஜிடி காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த காரில் போதுமான அளவு பாட்டில் ஹோல்டர்கள் இருக்கின்றன. மேலும், புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதி, டியூவல் க்ளைமேட் கன்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளும் இருக்கின்றன. இந்த காரில் 6 ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

பிஎம்டபிள்யூ 320டீ ஜிடி காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பிஎம்டபிள்யூ 320டீ ஜிடி காரில் நவீன தொழில்நுட்ப வசதிகள் நிறைந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. பிஎம்டபிள்யூ ஐ-டிரைவ் பிஎம்டபிள்யூ அப்ளிகேஷன்கள், ரேடியோ பிஎம்டபிள்யூ புரோஃபஷனல், பார்க் டிஸ்டன்ஸ் கன்ட்ரோல், நேவிகேஷன் சிஸ்டம் புரொபஷனல் உள்ளிட்ட வசதிகளை இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மூலமாக பெற முடியும்.

பிஎம்டபிள்யூ 320டீ ஜிடி காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த காரில் மிக நெருக்கமான பகுதிகளில் பார்க்கிங் செய்வதற்கான வசதியுடன் கூடிய ரிவர்ஸ் கேமரா பொருத்தப்பட்டு இருக்கிறது. அனைத்து தகவல்களையும் 8.8 இன்ச் அளவுடைய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் திரையில் காண முடியும். இவற்றை திருகு மற்றும் சில பட்டன்கள் மூலமாக கட்டுப்படுத்த முடியும்.

பிஎம்டபிள்யூ 320டீ ஜிடி காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஓட்டுனரின் இடதுபக்கத்தில் இந்த டயல் இருப்பதால் இயக்குவதற்கு எளிதாக இருக்கிறது. அதேநேரத்தில், ஓட்டுனரின் கவனம் குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஹெட் அப் டிஸ்ப்ளே இருந்தால் சிறப்பாக இருக்கும்.

பிஎம்டபிள்யூ 320டீ ஜிடி காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த காரில் 520 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட் ரூம் இருக்கிறது. பின்புற இருக்கைகளை மடக்கிக் கொண்டால், 1,600 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட் ரூம் இடவசதியை பெற முடியும். இந்த காரின் மிகப்பெரிய சிறப்பம்சமாக இதனை கூறலாம்.

பிஎம்டபிள்யூ 320டீ ஜிடி காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த காில் 2.0 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 187 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலமாக எஞ்சின் ஆற்றல் சக்கரங்களுக்கு செலுத்தப்படுகிறது.

பிஎம்டபிள்யூ 320டீ ஜிடி காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பிஎம்டபிள்யூ 320டீ ஜிடி கார் 0- 100 கிமீ வேகத்தை 7.5 வினாடிகளில் எட்டிவிடும். அதிகபட்சமாக மணிக்கு 235 கிமீ வேகம் வரை செல்லும். இந்த காரின் கியர் மாற்றம் வெகு விரைவாகவும், சீராகவும் இருப்பது சிறப்பு.

பிஎம்டபிள்யூ 320டீ ஜிடி காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

எந்த ஒரு எஞ்சின் சுழல் வேகத்திலும் சிறப்பான செயல்திறனை இந்த கார் எஞ்சின் வெளிப்படுத்துகிறது. இந்த காரில் பேடில் ஷிஃப்ட் மூலமாக கியர் மாற்றம் செய்யும் வசதியும் இருக்கிறது.

பிஎம்டபிள்யூ 320டீ ஜிடி காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த காரில் ஈக்கோ புரோ, கம்ஃபோர்ட், ஸ்போர்ட் மற்றும் ஸ்போர்ட் ப்ளஸ் ஆகிய 4 விதமான டிரைவிங் மோடுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இதன்மூலமாக விருப்பம்போல் கார் செயல்திறனை மாற்ற முடியும்.

பிஎம்டபிள்யூ 320டீ ஜிடி காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

அதேபோன்று, இந்த கார் மிகச் சிறப்பான மைலேஜை வழங்குகிறது. நகர்ப்புறத்தில் லிட்டருக்கு 14 கிமீ மைலேஜையும், நெடுஞ்சாலைகளில் லிட்டருக்கு 22 கிமீ மைலேஜையும் வழங்கி அசர வைத்தது. சொகுசு காரில் இது மிகச் சிறப்பான மைலேஜ். இந்த காரில் இருக்கும் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் மூலமாக சிறப்பான மைலேஜ் கிடைக்கிறது.

பிஎம்டபிள்யூ 320டீ ஜிடி காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஈக்கோ புரோ மோடு மற்றும் கம்ஃபோர்ட் மோடில் சீரான செயல்திறனை வெளிப்படுத்தும் இந்த கார் ஸ்போர்ட் மோடில் வைக்கும்போது மெச்சத்தகுந்த அளவுக்கு செயல்திறனை வெளிப்படுத்துகிறது. அதேபோன்று, ஸ்டீயரிங் சிஸ்டமும் கடினமாக மாறிவிடுவதால் நம்பிக்கையுடன் ஓட்ட வழி வகுக்கிறது.

பிஎம்டபிள்யூ 320டீ ஜிடி காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஸ்போர்ட் ப்ளஸ் மோடில் வைக்கும்போது கார் அதிவேகத்தில் கட்டுப்பாட்டை இழந்தால் தானியங்கி முறையில் கார் அதிக தரைப்பிடிப்புடன் செல்வதற்கான தொழில்நுட்பங்கள் மூலமாக விபத்து தவிர்க்கப்படும். இதனால், அதிவேகத்தில் வளைவுகளில் கூட பாடி ரோல் அதிகம் இல்லாமல் பயணிக்கிறது.

பிஎம்டபிள்யூ 320டீ ஜிடி காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

விலை சற்று கூடுதலாக இருந்தாலும், அதிக இடவசதியுடன், செயல்திறன் மிக்க சொகுசு காரை விரும்புவோருக்கு பிஎம்டபிள்யூ320டீ ஜிடி கார் சிறந்த தேர்வாக இருக்கும். இது எல்லோரையும் கவரும் என்று கூற முடியாவிட்டாலும், குறிப்பிட்ட வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை கச்சிதமாக பூர்த்தி செய்யும் அம்சங்கள் உள்ளன.

எடிட்டர் கருத்து

எடிட்டர் கருத்து

பிஎம்டபிள்யூ 320டீ ஜிடி லக்சுரி லைன் கார் ரூ.46.5 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. சாதாரண பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரைவிட ரூ.5 லட்சம் விலை கூடுதல். ஆனால், இந்த விலைக்கு ஏற்ற கூடுதல் விஷயங்கள் நிரம்பவே இருப்பதாக கூற முடியும்.

English summary
Ever wondered what a slightly deep-pocketed Indian luxury car buyer wants? Well, the people who prefer sitting in the back seat reading and listening to some good music and want to stand out from the average. These are the kinds for whom the BMW 3 Series Gran Turismo (GT) is a perfect match.
Story first published: Friday, June 2, 2017, 15:40 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark