அலுங்காமல், குலுங்காமல் சொகுசான பயணம்... பிஎம்டபிள்யூ 730எல்டி ரோடு டெஸ்ட் ரிவியூ...

பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் சீனா மற்றும் அமெரிக்காவில் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக உள்ளது. இந்திய சந்தையிலும் லக்ஸரி செடான் செக்மெண்ட்டில், மிக முக்கியமான தேர்வுகளில் ஒன்றாக பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் இருந்து வருகிறது. இந்த சூழலில் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார், ஃபேஸ்லிஃப்ட் அப்டேட் மூலம் இன்னும் மெருகேற்றப்பட்டுள்ளது. பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் 730எல்டி ஃபேஸ்லிஃப்ட் மாடலை டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பு எங்களுக்கு சமீபத்தில் கிடைத்தது. இந்த லக்ஸரி செடான் காரை நகர சாலைகளிலும், நெடுஞ்சாலைகளிலும் நாங்கள் ஓட்டி பார்த்தோம். அப்போது பல்வேறு அம்சங்களில் இந்த கார் எங்களை ஆச்சரியப்படுத்தியது. இந்த காரின் டிசைன், ஹேண்ட்லிங், இன்ஜின் செயல்திறன் உள்பட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

அலுங்காமல், குலுங்காமல் சொகுசான பயணம்... பிஎம்டபிள்யூ 730எல்டி ரோடு டெஸ்ட் ரிவியூ...

டிசைன்

முதலில் இந்த காரின் டிசைன் பற்றி பார்ப்போம். முன் பகுதியில் பிஎம்டபிள்யூ-வின் லேசர் எல்இடி ஹெட்லைட் யூனிட்களை இந்த செடான் பெற்றுள்ளது. அவை மிகவும் பிரகாசமாக உள்ளன. அத்துடன் எல்இடி பகல் நேர விளக்குகளும் வழங்கப்பட்டுள்ளன. தற்போது ஹை-பீமில், லேசர் எல்இடி 500 மீட்டர்கள் வரை ஒளியை பாய்ச்சும் என பிஎம்டபிள்யூ நிறுவனம் தெரிவிக்கிறது. ஹெட்லைட் மிகவும் பிரகாசமாக இருப்பதால், பனி விளக்குகளே தேவையில்லை என்ற நிலை காணப்படுகிறது.

அலுங்காமல், குலுங்காமல் சொகுசான பயணம்... பிஎம்டபிள்யூ 730எல்டி ரோடு டெஸ்ட் ரிவியூ...

அதே போல் இந்த காரின் க்ரில் அமைப்பும் மிகவும் பிரம்மாண்டமாக உள்ளது. அத்துடன் ஆக்டிவ் வெண்ட்களும் வழங்கப்பட்டுள்ளன. இன்ஜின் பே-வில் அதிக காற்று தேவைப்படும் சமயங்களில் எல்லாம் அவை திறந்து கொள்ளும். தேவையில்லாத சமயங்களில் மூடிக்கொள்ளும். அவை மூடிக்கொண்டவுடன் சிறப்பான ஏரோடைனமிக்ஸை வழங்கும். இது நல்ல வசதியாகும். அதே சமயம் முன் பகுதியில் வழங்கப்பட்டுள்ள பம்பர் இந்த காருக்கு கம்பீரமான தோற்றத்தை வழங்குகிறது. மேலும் காரை சுற்றிலும் க்ரோம் பூச்சுக்கள் அதிகளவில் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக முன் பகுதியில் க்ரோம் வேலைப்பாடுகளை அதிகம் காண முடிகிறது.

அலுங்காமல், குலுங்காமல் சொகுசான பயணம்... பிஎம்டபிள்யூ 730எல்டி ரோடு டெஸ்ட் ரிவியூ...

இனி பக்கவாட்டு பகுதிக்கு நகர்வோம். இங்கே 19 இன்ச் சிங்கிள்-டோன் மல்டி-ஸ்போக் அலாய் வீல்கள்தான் உங்களின் கவனத்தை ஈர்க்கும் முதல் விஷயமாக இருக்கும். அத்துடன் ஃபெண்டரின் இருபுறமும் வழங்கப்பட்டுள்ள வெண்ட்கள் காரின் அழகியலை மேம்படுத்துவதற்கு உதவி செய்கின்றன. மேலும் பக்கவாட்டு பகுதி முழுவதும் இரண்டு கதவுகளையும் இணைக்கும் வகையில் க்ரோம் பட்டை ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் மேற்கூரையில் பெரிய பனரோமிக் சன்ரூஃப் மற்றும் சுறா துடுப்பு ஆன்டெனா ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

அலுங்காமல், குலுங்காமல் சொகுசான பயணம்... பிஎம்டபிள்யூ 730எல்டி ரோடு டெஸ்ட் ரிவியூ...

பின் பகுதியை பொறுத்தவரை நேர்த்தியான தோற்றம் கொண்ட எல்இடி டெயில்லைட்களும், ட்வின்-எக்ஸாஸ்ட் செட்-அப்பும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இரண்டு டெயில்லைட்களையும் இணைக்கும் வகையில், பூட் பகுதி முழுவதும், சிகப்பு நிற எல்இடி பட்டையையும் இந்த கார் பெற்றுள்ளது. மேலும் ரிவர்ஸ் பார்க்கிங் கேமராவையும் இந்த கார் பெற்றுள்ளது. நெருக்கடியான இடங்களில் காரை எளிதாக பார்க்கிங் செய்வதற்கு இந்த வசதி உதவி செய்யும். இந்த கேமராவின் தரம் நன்றாக உள்ளது.

அத்துடன் பிஎம்டபிள்யூ 730எல்டி கார், எலெக்ட்ரானிக் பூட் வசதியை பெற்றுள்ளது. பூட் பகுதியை திறப்பதற்கு பிரத்யேகமான பட்டன் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் பூட் ஸ்பேஸ் 515 லிட்டர்கள் ஆகும். ஆனால் கூடுதல் இடவசதி தேவைப்பட்டால், பின் வரிசை இருக்கைகளை மடக்கி வைத்து கொள்ள முடியாது என்பது துரதிருஷ்டவசமானது.

அலுங்காமல், குலுங்காமல் சொகுசான பயணம்... பிஎம்டபிள்யூ 730எல்டி ரோடு டெஸ்ட் ரிவியூ...

இன்டீரியர் & வசதிகள்

பிஎம்டபிள்யூ 730 எல்டி காரின் கேபின் கருப்பு மற்றும் பழுப்பு என ட்யூயல்-டோன் வண்ணத்தில் வழங்கப்பட்டுள்ளது. டேஷ்போர்டு மற்றும் டோர் பேனல்களில் சாஃப்ட் டச் மெட்டீரியல்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளன. டேஷ்போர்டின் மைய பகுதியில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே சப்போர்ட் வசதிகளுடன், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்த டச்ஸ்க்ரீன் பயன்படுத்துவதற்கு நன்றாக இருக்கிறது. மேலும் சைகை மூலம் வால்யூமை கூட்டுதல் மற்றும் குறைத்தல், பாடல்களை மாற்றுதல் போன்ற வசதிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த காரில் தற்போது 12.3 இன்ச் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே வசதியை இந்த கார் பெறவில்லை.

அலுங்காமல், குலுங்காமல் சொகுசான பயணம்... பிஎம்டபிள்யூ 730எல்டி ரோடு டெஸ்ட் ரிவியூ...

அதே சமயம் இந்த காரில் லெதர் சுற்றப்பட்ட ஸ்டியரிங் வீல் வழங்கப்பட்டுள்ளது. இது பிடித்து ஓட்டுவதற்கு நன்றாக உள்ளது. ஆனால் தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டியரிங் வீலை இந்த கார் பெறவில்லை. எனினும் ஸ்டியரிங் வீலில் வழங்கப்பட்டுள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுக்கான கண்ட்ரோல்கள் சரியான இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. எனவே இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை பயன்படுத்துவது எளிமையாக உள்ளது.

அலுங்காமல், குலுங்காமல் சொகுசான பயணம்... பிஎம்டபிள்யூ 730எல்டி ரோடு டெஸ்ட் ரிவியூ...

அதேபோல் இந்த காரின் முன் பகுதியில் லெதர் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. அவை மிகவும் சௌகரியமாக இருக்கின்றன. அவற்றை எலெக்ட்ரிக் முறையில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும். ஆனால் ஓட்டுனர் இருக்கைக்கு மட்டுமே சீட் மெமரி வசதி வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் முன் பகுதியில் உள்ள இரண்டு இருக்கைகளும் வென்டிலேட்டர் வசதியை பெற்றுள்ளன.

அலுங்காமல், குலுங்காமல் சொகுசான பயணம்... பிஎம்டபிள்யூ 730எல்டி ரோடு டெஸ்ட் ரிவியூ...

பின் பகுதியை பொறுத்தவரை மூன்று பேர் அமர்வதற்கு இடம் உள்ளது. ஆனால் இரண்டு பேர் அமர்ந்தால் மிகவும் சௌகரியமாக இருக்கும். பின் இருக்கைகளுக்கும் வென்டிலேட்டர் வசதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் அவற்றை எலெக்ட்ரிக் முறையில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும். சென்டர் ஆர்ம்ரெஸ்ட்டில் வழங்கப்பட்டுள்ள பட்டன்கள் மூலம் இருக்கைகளில் அட்ஜெஸ்ட் செய்யலாம்.

அலுங்காமல், குலுங்காமல் சொகுசான பயணம்... பிஎம்டபிள்யூ 730எல்டி ரோடு டெஸ்ட் ரிவியூ...

முன் பகுதி பயணியின் இருக்கையை தவிர, இந்த காரின் மற்ற அனைத்து இருக்கைகளும் மசாஜ் வசதியை பெற்றுள்ளன. எனினும் பின் பகுதியில் இடது பக்க இருக்கையில்தான் அனைத்து மேஜிக்கும் நடக்கிறது. பட்டனை அழுத்துவதன் மூலம் இந்த இருக்கை அட்ஜெஸ்ட் ஆவதுடன் மட்டுமல்லாது, முன் பக்க பயணியின் இருக்கை முன்னால் சென்று மடிந்து கொள்கிறது. அத்துடன் அதன் பின் பகுதியில் ஃபுட்ரெஸ்ட்டும் வருகிறது. இதன் மூலம் நீங்கள் கால்களை நீட்டியபடி பின்னால் சாய்ந்து கொண்டு, மசாஜ் செய்து கொள்ளலாம். நீண்ட நேர வேலைக்கு பின் வீடு திரும்பும் உங்களுக்கு இது ரிலாக்ஸை கொடுக்கும். மேலும் உங்களது பொழுது போக்கிற்காக முன் பக்க இருக்கைகளின் பின்னால் இரண்டு தனித்தனி டச்ஸ்க்ரீன் டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளன.

அலுங்காமல், குலுங்காமல் சொகுசான பயணம்... பிஎம்டபிள்யூ 730எல்டி ரோடு டெஸ்ட் ரிவியூ...

இன்ஜின் & ஹேண்ட்லிங்

பிஎம்டபிள்யூ 730 எல்டி காரில், 3 லிட்டர், ஆறு-சிலிண்டர், டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 4,000 ஆர்பிஎம்மில் 261 பிஎச்பி பவரையும், 2,000-2,500 ஆர்பிஎம்மில் 620 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 8 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இன்ஜின் சக்தி பின் சக்கரங்களுக்கு மட்டுமே செலுத்தப்படுகிறது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை இந்த கார் வெறும் 7 வினாடிகளுக்கு உள்ளாக எட்டிவிடும்.

அலுங்காமல், குலுங்காமல் சொகுசான பயணம்... பிஎம்டபிள்யூ 730எல்டி ரோடு டெஸ்ட் ரிவியூ...

ஈக்கோ ப்ரோ, கம்ஃபோர்ட், ஸ்போர்ட் மற்றும் அடாப்டிவ் என மொத்தம் 4 டிரைவிங் மோடுகள் வழங்கப்படுகின்றன. ஈக்கோ ப்ரோ மோடில் ஸ்டியரிங் வீல் மிகவும் இலகுவாக உள்ளது. அதே சமயம் த்ராட்டில் ரெஸ்பான்ஸில் பின்னடைவு காணப்படுகிறது. எனினும் இந்த மோடில் நீங்கள் எரிபொருளை சேமிக்கலாம். அதே சமயம் கம்ஃபோர்ட் மோடில், ஸ்டியரிங் வீல் மற்றும் த்ராட்டில் ரெஸ்பான்ஸ் கொஞ்சம் மேம்படுகின்றன. நகர பகுதிகளில் ஓட்டுவதற்கு இந்த மோடை நாங்கள் உங்களுக்கு பரிந்துரை செய்கிறோம். அதே சமயம் ஸ்போர்ட் மோடில் ஸ்டியரிங் சிஸ்டம் இறுக்கம் பெறுகிறது. த்ராட்டில் ரெஸ்பான்சும் ஷார்ப் ஆக உள்ளது. காரின் அதிகபட்ச செயல்திறனை நீங்கள் ஸ்போர்ட் மோடில் பயன்படுத்தி கொள்ளலாம்.

அதேசமயம் இந்த காரில் பவர் டெலிவரி சீராக உள்ளது. ஆனால் பேடில் ஷிஃப்டர்கள் வழங்கப்படவில்லை. எனினும் ஏர்-மேட்டிக் செட்-அப் இடம்பெற்றுள்ளதால், சஸ்பென்ஸன் அட்டகாசமாக உள்ளது. இந்த காரின் சஸ்பென்ஸன், சௌகரியமான பயணத்தை உறுதி செய்கிறது. குண்டும், குழியுமான சாலைகளில் கார் பயணிக்கும்போது, அதனை கேபினில் உணர முடியவில்லை. அதேபோல் இந்த காரின் என்விஹெச் லெவல்களும் மிகவும் சிறப்பாக உள்ளன.

அலுங்காமல், குலுங்காமல் சொகுசான பயணம்... பிஎம்டபிள்யூ 730எல்டி ரோடு டெஸ்ட் ரிவியூ...

இது லிமோசின் கார் ஆகும். எனவே எத்தகைய கரடுமுரடான நிலப்பரப்பிற்கு வேண்டுமானாலும் வேகமாக ஓட்டி செல்ல கூடிய கார் இது கிடையாது. பின் இருக்கையில் ரிலாக்ஸாக பயணம் செய்பவர்களுக்கு ஏற்ற காராகதான் இதனை பார்க்க வேண்டும். சரி, நீங்கள் காரை ஓட்ட நேர்ந்தால் எப்படி இருக்கும்? பிஎம்டபிள்யூ நிறுவனம் 7 சீரிஸ் காரில் கார்பன் கோர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளது. அதாவது காரின் எடையை குறைப்பதற்காக சேஸிஸில் கார்பன் ஃபைபர் அதிகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த காரின் ஹேண்ட்லிங் சிறப்பாக உள்ளது. ஆனால் இது பெரிய மற்றும் நீளமான காராக இருப்பதால், குறிப்பிடத்தக்க அளவில் பாடி ரோல் உள்ளது.

பாதுகாப்பை பொறுத்தவரை, 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ், டிராக்ஸன் கண்ட்ரோல், கார்னரிங் பிரேக் கண்ட்ரோல் உள்பட டைனமிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஆட்டோ ஹோல்டு உடன் எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக் உள்ளிட்ட வசதிகளை இந்த கார் பெற்றுள்ளது.

அதேசமயம் எரிபொருள் சிக்கனத்திலும் இந்த கார் அசத்துகிறது. நகர பகுதிகளை பொறுத்தவரை, போக்குவரத்து சூழலுக்கு ஏற்ப எங்களுக்கு ஒரு லிட்டருக்கு 12.5 முதல் 13.8 கிலோ மீட்டர் வரையிலான மைலேஜ் கிடைத்தது. அதே சமயம் நெடுஞ்சாலைகளை பொறுத்தவரை வேகத்தை பொறுத்து, லிட்டருக்கு 13.5 முதல் 17 கிலோ மீட்டர் வரையிலான மைலேஜ் கிடைத்தது.

அலுங்காமல், குலுங்காமல் சொகுசான பயணம்... பிஎம்டபிள்யூ 730எல்டி ரோடு டெஸ்ட் ரிவியூ...

டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?

பிஎம்டபிள்யூ 730எல்டி கார், 1.67 கோடி ரூபாய் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் மற்றும் போர்ஷே பனமெரா உள்ளிட்ட கார்களுடன் போட்டியிட்டு வருகிறது. டிசைன் மற்றும் சொகுசு வசதிகளில் இந்த கார் அசத்துகிறது. அதேபோல் ஏர்-மேட்டிக் சஸ்பென்ஸன் காரணமாக சொகுசான பயணமும் கிடைக்கிறது. டிரைவரை அமர்த்தி கொண்டு, பின் இருக்கையில் நீங்கள் சொகுசாக அமர்ந்து பயணம் செய்யலாம். நீங்களே ஓட்டுவதாக இருந்தாலும், இலகுவான சேஸிஸ் காரணமாக ஹேண்ட்லிங் சிறப்பாக உள்ளதால், உங்களுக்கு உற்சாகமான ஓட்டுதல் அனுபவம் கிடைக்கும்.

Most Read Articles

English summary
BMW 730ld Road Test Review: Design, Interior, Features, Engine, Handling, Price And More. Read in Tamil
Story first published: Wednesday, March 24, 2021, 13:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X