புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் டிபிஇ மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் டிபிஇ கார் மாடலின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்டை இந்த செய்தியில் படிக்கலாம்.

சில கார்கள் ஓட்டும்போது உற்சாகத்தை வழங்கும் விதத்திலும், சில கார்கள் பின்னால் அமர்ந்து செல்லும்போது உற்சாகத்தை தரும் விதத்திலும் இருக்கும். அந்த வகையில், ஓட்டுனரை அமர்த்தி, பின் இருக்கையில் அமர்ந்து செல்வதற்கான உயர் சொகுசு வசதிகள் கொண்ட மாடல்களில் ஒன்று பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார்.

ரூ.1.5 கோடி மதிப்புடைய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரின் 740Li Design Pure Excellence(DPE) சிக்னேச்சர் மாடலை அண்மையில் டெஸ்ட் டிரைவ் செய்தோம். பின்னால் அமர்ந்து செல்லும் கோடீஸ்வர வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை மனதில் வைத்து இந்த கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

 புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் டிபிஇ மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

மசாஜ் இருக்கைகள், ரிமோட் கன்ட்ரோல் மூலமாக வெளியில் இருந்தபடி இந்த பிரம்மாண்ட காரை பார்க்கிங் செய்யும் வசதி உள்ளிட்டவை இந்த காரை புதிய பரிமாணத்தில் எடுத்துச் செல்கின்றன. வாடிக்கையாளர்களின் ஆதரவுடன் 6ம் தலைமுறை கண்டிருக்கும் இந்த கார் உண்மையிலேயே, உன்னதமான சொகுசு வசதிகளை பெற்றிருக்கிறதா என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

 புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் டிபிஇ மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த பிரம்மாண்டமான சொகுசு செடான் காரின் தோற்றம், கோடீஸ்வர வாடிக்கையாளர்களை நிச்சயம் நிறைவை தரும். வலிமையும், பாந்தமும் இந்த காரின் வடிவமைப்பு நிச்சயம் எல்லோரையும் திரும்பி பார்க்க வைக்கிறது.

 புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் டிபிஇ மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

முகப்பில் பிஎம்டபிள்யூ கார்களுக்குரிய சிறுநீரக வடிவ க்ரில் அமைப்பு முத்தாய்ப்பாக இடம்பெற்றிருக்கிறது. தேவைப்படும்போது ஏரோடைனமிக்ஸை கூட்டிக் கொள்ளும் விதத்திலும், எஞ்சினை குளிர்விக்கவும், இது ஆக்டிவ் க்ரில் அமைப்பாக செயல்படுகிறது.

 புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் டிபிஇ மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த காரின் மிக முக்கிய அம்சங்களில் ஒன்று, லேசர் எல்இடி ஹெட்லைட். காரின் வேகத்திற்கு தக்கவாறு, இந்த எல்இடி ஹெட்லைட்டின் ஒளி பாய்ச்சும் தூரம் அட்ஜெஸ்ட் செய்யப்படும். சாதாரண எல்இடி ஹெட்லைட்டுகள் 300மீட்டர் வரை ஒளி வெள்ளத்தை பாய்ச்சும் நிலையில், இந்த லேசர் எல்இடி ஹெட்லைட் 600 மீட்டர் வரை ஒளி வெள்ளத்தை பாய்ச்சும்இதனால், ஓட்டுனர் இரவிலும் மிக தெளிவாக சாலையை கண்காணித்து ஓட்ட முடியும்.

Recommended Video

[Tamil] Tata Nexon Review: Specs
 புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் டிபிஇ மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

மிக நீளமான மூக்குப்பகுதி, தாழ்வான அமைப்பு, லிமோசின் கார் போன்ற தோற்றம் என ஒட்டுமொத்த தோற்றமும் மிகச் சிறப்பாகவும், உயர்வகை சொகுசு கார் போன்ற உணர்வை வெகுவாக வழங்குகிறது.

 இன்டீரியர்

இன்டீரியர்

இந்த காரின் இன்டீரியர் சொகுசாகவும், மிக விசாலமாகவும் இருக்கிறது. உயர் வகை லெதர், மர வேலைப்பாடுகள் மற்றும் அலுமினிய பாகங்களால் உட்புறம் கவர்ச்சியாக இருக்கிறது. டேஷ்போர்டு அமைப்பு மிகச் சிறப்பாக அமைக்கப்பட்டு இருக்கிறது.

 புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் டிபிஇ மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த காரின் இருக்கைகள் மிக சொகுசாக இருக்கின்றன. இதுபோன்ற கார்களை ஓட்டுனர் அமர்த்தி ஓட்டுவார்கள் என்பதால், பின் இருக்கைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருக்கிறது. பின் இருக்கைகள் மசாஜ் வசதி இருப்பதுடன், இந்த காரில் இரண்டு 10 அங்குல திரையுடன் கூடிய பொழுதுபோக்கு வசதி கொடுக்கப்பட்டு இருக்கிறது. இருக்கையை 42.3 டிகிரி கோணம் வரை சாய்த்துக் கொள்ளலாம்.

இந்த காரின் பின்புற ஆர்ம் ரெஸ்ட்டில் கொடுக்கப்பட்டு இருக்கும் 7 அங்குல தொடுதிரை கொண்ட டேப்லெட் சாதனத்தின் மூலமாக பல்வேறு சாதனங்களை கட்டுப்படுத்த முடியும். தனியாக கையில் எடுத்துக் கொள்ளவும் முடியும். ஏசி, ஜன்னல் திரைசீலைகளை மூடுவது, திறப்பது, சன்ரூஃபை இயக்குவது, ஆம்பியன்ட் லைட் செட்டிங்கை இயக்குவது என பல்வேறு வசதிகளை கட்டுப்படுத்த முடிகிறது.

 புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் டிபிஇ மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

தனது கீழ் செயல்படும் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் தனது கார்களில் அளிக்கும் இரண்டு பிரிவுகளாக இருக்கும் சன்ரூஃப் மாதிரியிலேயே, இந்த பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரிலும் எல்இடி சன்ரூஃப் பொருத்தப்பட்டு இருக்கிறது. மிக நுண்ணிய எல்இடி விளக்குகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

மற்றொரு முத்தாய்ப்பான வசதியும் இந்த காரில் இருக்கிறது. அதாவது, கை விரல் அசைவு மூலமாக இந்த காரின் பிஎம்டபிள்யூ ஐ-ட்ரைவ் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை கட்டுப்படுத்தலாம். மொபைல்போன் அழைப்புகளை எடுத்து பேசுவதற்கு, ரத்து செய்வதற்கு, மியூசிக் சிஸ்டத்தின் சப்தத்தை கூட்டி குறைப்பது என பல வசதிகளை கை அசைவுகள் மூலமாக கடுப்படுத்தலாம்.

ரிமோட் மூலமாக பார்க்கிங் செய்யும் வசதியும் குறிப்பிடத்தக்கது. மொத்ததில், இந்த காரின் இன்டீரியர் சொகுசும், வசதிகளும் நிரம்பி வழிகிறது. உயர்தர பாகங்கள் மூலமாக வாடிக்கையாளர்களின் மனதை கொள்ளை கொள்ளும். குறிப்பாக, பின் இருக்கையில் மிக விசாலமான இடவசதியும் கவர்கிறது.

 புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் டிபிஇ மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பின் இருக்கையில் அமர்ந்து அனைத்து வசதிகளும் கவர்ந்தாலும், ஓட்டும்போதும் எந்த குறைவையும் இந்த கார் வைக்கவில்லை. ஓட்டுனருக்கும் மிகச் சிறப்பான காராகவே இதனை கூற முடியும்.

 புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் டிபிஇ மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த காரில் 6 சிலிண்டர்கள் கொண்ட 3.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. 8 ஸ்பீடு இசட்எஃப்ட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 322 பிஎச்பி பவரையும், 450 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

இந்த பிரம்மாண்ட காரை இதன் எஞ்சின் மிக இலகுவாகவே கையாள்கிறது. பவர் டெலிவிரி மிக சீராக இருக்கிறது. இதனால், ஓட்டும்போது ஒரு பெரிய காரை ஓட்டுகிறோம் என்ற உணர்வை தரவில்லை. மேலும், இதன் ஏர் சஸ்பென்ஷன் அமைப்பு நெடுஞ்சாலையில் செல்லும்போது மிக ஓய்வான மனநிலையுடன், நம்பிக்கையுடன் செலுத்த உதவுகிறது.

 புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் டிபிஇ மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த காரில் ஈக்கோ ப்ரோ, கம்போர்ட், கம்போர்ட் ப்ளஸ் மற்றும் ஸ்போர்ட் ஆகிய 4 விதமான டிரைவிங் மோடுகள் உள்ளன. ஈக்கோ ப்ரோ மோடு அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்கும். கம்போர்ட் மற்றும் கம்போர்ட் ப்ளஸ் மற்றும் ஸ்போர்ட் மோடுகளில் மாற்றும்போது எஞ்சின் செயல்திறனுக்கு தக்கவாறு, கியர்பாக்ஸ் மற்றும் சஸ்பென்ஷனில் மாறுதல்களை செய்து கொள்கிறது.

இந்திய சாலைநிலைகளை பொறுத்தவரையில், அடாப்டிவ் மோடு சிறப்பானதாக இருக்கிறது. இந்த மோடில் வைத்து இயக்கும்போது பாடி ரோல் வெகு குறைவாக இருப்பதுடன், கார் மிகுந்த கட்டுப்பாட்டில் இருப்பது போன்ற உணர்வை தருகிறது. ஸ்போர்ட் மோடில் வைத்து செலுத்தும்போது சஸ்பென்ஷன் கடினமாக மாறுவதுடன், 5.21 மீட்டர் நீளமுடைய இந்த கார் வளைவுகளில் மிக துல்லியமாக திரும்புகிறது.

 ஜோபோ குருவில்லா கருத்து

ஜோபோ குருவில்லா கருத்து

தொழில்நுட்பங்களும், லிமோசின் கார் போன்ற விசாலமான இடவசதியும் இந்த காரில் பயணிப்பதை ஒரு புதிய அனுபவத்தை தருகிறது. ஓட்டுனர் அமர்த்தி செல்வோருக்கு சிறப்பான சாய்ஸாக இருக்கும். விமானங்களில் நெருக்கடி அடித்துக் கொண்டு அண்டை மாநில நகரங்களுக்கு பயணிப்போருக்கு இந்த கார் சிறந்த மாற்றாக இருக்கும்.

புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் டிபிஇ மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

உலகின் மிகச் சிறந்த சொகுசு கார் மாடலாக நீண்ட நாட்களாக ஸ்தாபிதம் செய்து வைத்துள்ள மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காருடன் இந்த கார் நேரடியாக மோதும் அனைத்து அம்சங்களையும் பெற்றிருக்கிறது. பாதுகாப்பு, டிசைன், சொகுசு, சக்திவாய்ந்த எஞ்சின் என அனைத்து விதத்திலும் மிகச் சிறப்பான சொகுசு கார் மாடலாகவே இதனை கூறலாம்.

பிஎம்டபிள்யூ 740எல்ஐ டிபிஇ சிக்னேச்சர் vs மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் 400

பிஎம்டபிள்யூ 740எல்ஐ டிபிஇ சிக்னேச்சர் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் 400
எஞ்சின்: 3.0லிட்டர் இன்லைன் சிக்ஸ் டர்போ பெட்ரோல் 3.0 லிட்டர் வி6 டர்போ பெட்ரோல்
பவர்/டார்க் திறன்: 322பிஎச்பி/450என்எம் 329பிஎச்பி/480என்எம்
டிரான்ஸ்மிஷன்: 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக், ரியர் வீல் டிரைவ் 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக், ரியர் வீல் டிரைவ்
0 - 100 கிமீ வேகம்: 5.6 வினாடிகள் 6.1 வினாடிகள்
டாப் ஸ்பீடு: 250 கிமீ வேகம் 250 கிமீ வேகம்
மைலேஜ்: 100 கிமீ.,க்கு 9.5 லிட்டர்கள் 100கிமீ.,க்கு 12 லிட்டர்கள்
இந்தியாவில் விற்பனை நிலவரம்: விற்பனைக்கு கிடைக்கிறது விற்பனைக்கு கிடைக்கிறது
ஆன்ரோடு விலை: ரூ.1.5 கோடி ரூ.1.5 கோடி
Most Read Articles
English summary
Does BMW's flagship 7 Series luxury sedan line, in its sixth generation, offer an overabundance of opulence? And would this be my pick of chauffeur-driven executive cars, the day I ripen onto CEO payrolls? Mr Hebbar are you listening?
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X