பிஎம்டபிள்யூ ஐ8 ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார்; டிரைவ்ஸ்பார்க் குழுவினரின் எக்ஸ்கிளூசிவ் ரிவ்யூ..!

Written By:

உலகப் புகழ்மிக்க பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 'பிஎம்டபிள்யூ ஐ8' ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் காரை டிரைவ் ஸ்பார்க் குழுவினர் டெஸ்ட் டிரைவ் செய்துள்ளனர். அதில் அடங்கியுள்ள சிறப்புகளை இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.

பிஎம்டபிள்யூ ஐ8 ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார்: எக்ஸ்கிளூசிவ் ரிவ்யூ..!

பிஎம்டபிள்யூ ஐ8 தான், உலகில் அதிகம் விற்பனையாகும் ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் காருக்கான பட்டத்தை தக்கவைத்து கொண்டுள்ளது.

பிஎம்டபிள்யூ ஐ8 ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார்: எக்ஸ்கிளூசிவ் ரிவ்யூ..!

ஐ8 காரின் கார்சப்ட் வெர்ஷனை முதன் முதாலாக 2009ல் பிஎம்டபிள்யூ நிறுவனம் அறிமுகம் செய்தது. பின்னர் 2011 ஜெர்மனி ஆட்டோ கண்காட்சியில் இந்த கார் அறிமுகம் ஆனது.

பிஎம்டபிள்யூ ஐ8 ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார்: எக்ஸ்கிளூசிவ் ரிவ்யூ..!

இந்த காரை 2014 ஆம் ஆண்டு முதல் தான் அதிகாரப்பூர்வமாக உற்பத்தி செய்து வருகிறது பிஎம்டபிள்யூ நிறுவனம். இந்தியாவில் 2015ல் சச்சின் டெண்டுல்கர் இக்காரை அறிமுகம் செய்துவைத்தார்.

பிஎம்டபிள்யூ ஐ8 ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார்: எக்ஸ்கிளூசிவ் ரிவ்யூ..!

உலகின் அதிகம் விற்பனை ஆகும் ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார் என்ற பெருமையை பிஎம்டபிள்யூ ஐ8 கார் பெற்றுள்ளது.

பிஎம்டபிள்யூ ஐ8 ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார்: எக்ஸ்கிளூசிவ் ரிவ்யூ..!

ஹாலிவுட்டின் மிகப்பிரபலமான மிஷன் இம்பாஸிபிள் - கோஸ்ட் புரோட்டோகால் படத்தில் பயன்படுத்தப்பட்ட இந்த கார் பலரையும் ஈர்த்தது.

பிஎம்டபிள்யூ ஐ8 ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார்: எக்ஸ்கிளூசிவ் ரிவ்யூ..!

இதற்கு முக்கிய காரணம் இந்த காரின் கவர்ச்சியான டிசைன் தான். எந்தப்பக்கத்தில் இருந்து பார்தாலும் கண் இமைக்காமல் இந்த காரை பார்க்கவைக்கிறது இதன் டிசைன்.

பிஎம்டபிள்யூ ஐ8 ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார்: எக்ஸ்கிளூசிவ் ரிவ்யூ..!

நம் டிரைவ் ஸ்பார்க் குழுவினர் சமீபத்தில் இந்த பிஎம்டபிள்யூ ஐ8 காரை புனேவில் வைத்து டெஸ்ட் டிரைவ் செய்தனர்.

பிஎம்டபிள்யூ ஐ8 ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார்: எக்ஸ்கிளூசிவ் ரிவ்யூ..!

பல தொழில்நுட்ப அம்சங்கள் இந்த காரில் நிறைந்துள்ளது. டிசைனுக்கு அடுத்தபடியாக இந்த காரின் முக்கிய அம்சமாக உள்ளது இதன் பட்டர்ஃபிளை கதவுகள் தான்.

பிஎம்டபிள்யூ ஐ8 ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார்: எக்ஸ்கிளூசிவ் ரிவ்யூ..!

ரஜினிகாந்த் நடித்த‘படையப்பா படத்தில் நடிகை ரம்யாகிருஷ்னன் அறிமுக காட்சியில் ஒரு காரின் கதவுகளை மேல்பக்கமாக திறந்து கொண்டு வருவார். அது சிஸர் அல்லது பட்டர்ஃபிளை கதவு என்றழைக்கப்படுகிறது.

பிஎம்டபிள்யூ ஐ8 ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார்: எக்ஸ்கிளூசிவ் ரிவ்யூ..!

அந்த விஷேச பட்டர்ஃபிளை கதவுகள் இந்த காரில் இடம்பெற்றுள்ளது. இது இரண்டு கதவுகள் கொண்ட ஸ்போர்ட்ஸ் கார் என்றாலும் இதில் பின்புற இருக்கைகளும் உள்ளன.

பிஎம்டபிள்யூ ஐ8 ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார்: எக்ஸ்கிளூசிவ் ரிவ்யூ..!

பிஎம்டபிள்யூ ஐ8 கார் முழுவதுமே கார்பன் ஃபைபரால் உருவாக்கி உள்ளதால் இதன் எடை வெறும் 1,485 கிலோ மட்டுமே என்பது ஸ்போர்ட்ஸ் காருக்கு சிறப்பான ஒன்றாகும்.

பிஎம்டபிள்யூ ஐ8 ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார்: எக்ஸ்கிளூசிவ் ரிவ்யூ..!

சிறந்த ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார் என்ற அந்தஸ்தை பெற்றுள்ள இந்த காரில் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.5 லிட்டர் பெட்ரோல் இஞ்சின் மற்றும் மின்சார மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ ஐ8 ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார்: எக்ஸ்கிளூசிவ் ரிவ்யூ..!

பெட்ரோல் என்ஜின் 228 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும், மேலும் எலெக்ட்ரிக் மோட்டார் 129 பிஎச்பி ஆற்றல் தரவல்லதாகும். இரண்டும் இனைந்து ஒட்டுமொத்தமாக 357 பிஎச்பி ஆற்றலை தருகிறது.

பிஎம்டபிள்யூ ஐ8 ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார்: எக்ஸ்கிளூசிவ் ரிவ்யூ..!

பிஎம்டபிள்யூ ஐ8 கார் 0-100கிமீ வேகத்தினை வெறும் 4.4 விநாடிகளில் எட்டிவிடும். வரையறுக்கபட்ட உச்சகட்ட வேகம் மணிக்கு 250கிமீ ஆகும்.

பிஎம்டபிள்யூ ஐ8 ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார்: எக்ஸ்கிளூசிவ் ரிவ்யூ..!

எலக்ட்ரிக் மோட்டார் மூலம் மட்டுமே 37 கிமீ பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பிஎம்டபிள்யூ ஐ8 ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார்: எக்ஸ்கிளூசிவ் ரிவ்யூ..!

ஐ8 காரில் கம்ஃபர்ட் (Comfort), ஈகோ ப்ரோ (Eco Pro) மற்றும் ஸ்போர்ட் (Sport) என்ற 3 டிரைவிங் மோட்கள் தரப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ ஐ8 ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார்: எக்ஸ்கிளூசிவ் ரிவ்யூ..!

இதில் கம்ஃபர்ட் என்பது இயல்பான (Default) மோட் ஆகும். ஈகோ ப்ரோ என்பது எரிபொருள் சிக்கனத்தை அளிக்கும். ஸ்போர்ட் என்பது பந்தய விரும்பிகளுக்கானது.

பிஎம்டபிள்யூ ஐ8 ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார்: எக்ஸ்கிளூசிவ் ரிவ்யூ..!

இந்த காரில் பேடில் ஷிப்டர்களுடன் கூடிய 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் உள்ளது.

பிஎம்டபிள்யூ ஐ8 ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார்: எக்ஸ்கிளூசிவ் ரிவ்யூ..!

இந்த காரை ஸ்டார்ட் செய்தவுடன் அருகில் இருப்பவர்களை நிச்சயம் திருப்பி பார்க்க வைத்துவிடும், அந்தளவுக்கு இதன் இஞ்சின் சப்தம் வித்தியாசமானதாகவும் அதிக ஒலியுடனும் உள்ளது.

பிஎம்டபிள்யூ ஐ8 ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார்: எக்ஸ்கிளூசிவ் ரிவ்யூ..!

எனினும் இது செயற்கையாக ஸ்பீக்கர்கள் மூலம் உருவாக்கப்படும் ஒலி என்பது கவனிக்கத்தக்கது.

பிஎம்டபிள்யூ ஐ8 ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார்: எக்ஸ்கிளூசிவ் ரிவ்யூ..!

எலெக்ட்ரிக் மோட்டார் காரின் முன்சக்கரங்களுக்கு ஆற்றலை அளிக்கிறது. கம்பஸ்ஷன் இஞ்சின் பின்சக்கரங்களுக்கு ஆற்றலை அளிக்கிறது. ஒட்டுமொத்தத்தில் இது ஒரு ஆல் வீல் டிரைவ் கார் ஆகும்.

பிஎம்டபிள்யூ ஐ8 ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார்: எக்ஸ்கிளூசிவ் ரிவ்யூ..!

எலெக்ட்ரிக் மோட்டார் உதவியுடன் இந்த கார் போக்குவரத்து நிரம்பிய நகரச் சாலைகளுக்கு ஏற்றதாக உள்ளது. இந்தக் காரின் மைலேஜ் லிட்டருக்கு 47.75 கிமீ ஆகும்.

பிஎம்டபிள்யூ ஐ8 ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார்: எக்ஸ்கிளூசிவ் ரிவ்யூ..!

இந்தியாவில் இந்த காரை நடிகர் ஷாருக் கான், சச்சின் டெண்டுல்கர் போன்ற பிரபலங்கள் முதலில் புக் செய்து வாங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎம்டபிள்யூ ஐ8 ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார்: எக்ஸ்கிளூசிவ் ரிவ்யூ..!

முழுதாக கட்டமைக்கப்பட்ட காராக இறக்குமதி செய்யப்படுவதால் இந்தியாவில் ஐ8 காரின் விலை ரூ. 2.29 கோடி (எக்ஸ்ஷோரூம்) ஆக உள்ளது. ஆன் ரோடு விலை ஏறத்தாழ 3 கோடி ரூபாயாக உள்ளது.

பிஎம்டபிள்யூ ஐ8 ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார்: எக்ஸ்கிளூசிவ் ரிவ்யூ..!

பார்ப்போரை மயக்கும் டிசைன், சிறந்த பெர்ஃபார்மன்ஸ் கொண்ட இந்த கார் உலகில் பலராலும் விரும்பப்படுகிறது.

பிஎம்டபிள்யூ ஐ8 ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார்: எக்ஸ்கிளூசிவ் ரிவ்யூ..!

தற்போது நம் ரிவ்யூவின் கிளைமேக்ஸ்-ற்கு வருவோம். இந்த காரை வாங்குவது கொடுக்கும் விலைக்கு ஏற்றதா? இந்த கேள்விக்கான பதிலை கீழே காணலாம்.

பிஎம்டபிள்யூ ஐ8 ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார்: எக்ஸ்கிளூசிவ் ரிவ்யூ..!

நீங்கள் ஸ்போர்ட்ஸ் கார் வாங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக இருந்தால் ஆடி ஆர்8, ஜாகுவார் டைப் எஸ், ஃபெராரி, லம்போர்கினி கார்களை வாங்குவது சிறந்தது.

பிஎம்டபிள்யூ ஐ8 ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார்: எக்ஸ்கிளூசிவ் ரிவ்யூ..!

ஆனால் நீங்கள் ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் காரை வாங்க நினைத்தீர்கள் என்றால் சந்தேகமே தேவையில்லை. உங்களுக்கு பிஎம்டபிள்யூ ஐ8 கார் தான் சிறந்த சாய்ஸ்..!

பிஎம்டபிள்யூ ஐ8 ஹைபிரிட் ச்போர்ட்ஸ் காரை நமது டிரைவ் ஸ்பார்க் குழுவினர் சோதனை செய்த வீடியோவை மேலே காணுங்கள்..

English summary
Read in Tamil about BMW's hybrid sports car i8 review in tamil. know the price, mileage, features with video.
Story first published: Friday, April 28, 2017, 14:17 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark