பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்யூவி எப்படி இருக்கிறது?- டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

எம்டபிள்யூ நிறுவனத்தின் தனித்துவமான எஸ்யூவி மாடல்களுக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் தனி வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில், அந்நிறுவனத்தின் ஆரம்ப விலை கொண்ட எஸ்யூவியான எக்ஸ்1 ஃபேஸ்லிஃப்ட் மாடலை அண்மையில் டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பு டிரைவ்ஸ்பார்க் தளத்திற்கு கிடைத்தது. இந்த கார் குறித்த பல முக்கிய விஷயங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

 புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்யூவி எப்படி இருக்கிறது?- டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டிசைன்

முதல் பார்வையிலேயே புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்யூவியின் டிசைன் வசீகரித்து விடுகிறது. பிஎம்டபிள்யூவியின் பாரம்பரியமான இரட்டை சிறுநீரக வடிவிலான க்ரில் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. பிற பிஎம்டபிள்யூ கார்களில் ஆக்டிவ் வென்ட்டுகள் கொண்ட க்ரில் அமைப்பு கொடுக்கப்படுகிறது. ஆனால், இந்த மாடலில் அந்த திறந்து மூடும் வசதி இல்லை. முகப்பு க்ரில் அமைப்பு க்ரோம் பூச்சுடன் அலங்காரமாக தெரிகிறது.

 புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்யூவி எப்படி இருக்கிறது?- டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

எஸ்யூவியில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்வேளை விளக்குகள் முகப்பை பிரம்மாண்டமாகவும், நவீனமாகவும் காட்டுகின்றன. முன்புற பம்பர் டிசைன் மறுவடிவமைப்பு பெற்றுள்ளது. மேலும், எல்இடி பனி விளக்குகள் இடம்பெற்றுள்ளன. நாம் டெஸ்ட் டிரைவ் செய்த சன்செட் ஆரஞ்ச் வண்ணம் சிறப்பானதாக இருந்தது.

 புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்யூவி எப்படி இருக்கிறது?- டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பக்கவாட்டில் 17 அங்குல சிங்கிள் டோன் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை பார்ப்பதற்கு நன்றாகவே இருந்தது. ஹெட்லைட்டையும், டெயில் லைட் க்ளஸ்ட்டர்களையும் இணைக்கும் விதத்தில் உள்ள பாடி லைன்கள் காரின் கம்பீரத்தை கூட்டுவதாக உள்ளது.

 புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்யூவி எப்படி இருக்கிறது?- டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

எல்இடி டர்ன் இன்டிகேட்டர்கள் கொண்ட ரியர் வியூ மிரர்கள் பாதி அளவுக்கு மேட் பிளாக் என்ற கருப்பு வண்ண பூச்சுடன் கவனத்தை ஈர்க்கிறது. ஜன்னல்களை சுற்றிலும் கருப்பு வண்ண அலங்காரமும் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்.

 புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்யூவி எப்படி இருக்கிறது?- டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பின்புறத்திலும் நேர்த்தியான டிசைனுடன் வசீகரிக்கிறது பிஎம்டபிள்யூ எக்ஸ்1 கார். பார்த்தவுடன் நம் கவனம் இதன் அழகிய டெயில் லைட்டுகள் மீதும், இரட்டை குழல் அமைப்புடைய சைலென்சர் மீதுதான் விழுகிறது. இந்த இரட்டை புகைப் போக்கி குழல்கள் அலங்காரத்திற்கு மட்டுமானதாக இல்லாமல் செயல்படும் வகையில் இருப்பது முக்கிய விஷயமாக இருக்கிறது.

 புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்யூவி எப்படி இருக்கிறது?- டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பின்புற கதவில் காரின் வேரியண்ட்டை குறிக்கும் வகையில் S-drive 20d என்ற க்ரோம் பூச்சுடன் எழுத்துக்கள் கொண்ட விபரம் இடம்பெற்றுள்ளது. மேலும், பார்க்கிங் சென்சார்கள் மற்றும் கேமராவும் இடம்பெற்றுள்ளது. மொத்தத்தில் பிஎம்டபிள்யூ எக்ஸ்1 கார் தோற்றத்தில் சிறப்பாக இருக்கிறது.

 புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்யூவி எப்படி இருக்கிறது?- டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இன்டீரியர் மற்றும் வசதிகள்

காரின் உள்ளே சென்றதுடன் மிக விசாலமான உணர்வை தரும் வகையில் கேபின் இடவசதி இருப்பது மிக முக்கிய அம்சமாக குறிப்பிடலாம். பெரிய சன்ரூஃப் இருப்பதால் இந்த உணர்வை கொடுக்கிறது. அத்துடன் ஏராளமான வசதிகளையும் இந்த கார் பெற்றிருக்கிறது.

 புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்யூவி எப்படி இருக்கிறது?- டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பிஎம்டபிள்யூ எக்ஸ்1 காரில் 8.8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த சாதனம் ஆப்பிள் கார் ப்ளே செயலியை சப்போர்ட் செய்கிறது. ஆனால், ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலியை சப்போர்ட் செய்யாது என்பதை மிகப்பெரிய குறை. இந்த பட்ஜெட்டில் கார் வாங்கும் பலரும் இப்போது ஆன்ட்ராய்டு சாதனங்களை பயன்படுத்தும் நிலையில், இதில் இல்லாதது குறையாகவே இருக்கிறது.

 புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்யூவி எப்படி இருக்கிறது?- டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்1 காரில் டிஜிட்டல் மற்றும் அனலாக் டயல்கள் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதன் மூலமாக கார் இயக்கம் குறித்த பல்வேறு தகவல்களை பெற முடிவதுடன் ஓட்டுனர் பார்ப்பதற்கும் தெளிவான வகையில் எழுத்து மற்றும் எண் அளவுகளை பெற்றிருப்பது சிறப்பு.

 புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்யூவி எப்படி இருக்கிறது?- டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஆம்பியன்ட் லைட் சிஸ்டம் கதவுகளின் பேனல்களில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஏழு விதமான ஆம்பியன்ட் லைட்டுகள் இடம்பெற்றுள்ளன. டேஷ்போர்டில் மரத் தகடுகளுடன் அலங்கார வேலைப்பாடுகள் பிரிமீயமாக காட்டுகிறது. டேஷ்போர்டில் மென்மையான தொடு உணர்வை தரும் சாஃப்ட் டச் பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டுள்ளது.

 புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்யூவி எப்படி இருக்கிறது?- டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த காரில் டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளது. வெப்ப நிலை அளவு உள்ளிட்டவற்றை காட்டுவதற்காக நெகட்டிவ் எல்சிடி திரை கொடுக்கப்பட்டு இருக்கிறது. கதவுகள் உள்பட உள்புறத்தில் பல இடங்களில் ஸ்டோரேஜ் வசதி இருப்பதும் இதன முக்கிய அம்சமாக இருக்கிறது.

 புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்யூவி எப்படி இருக்கிறது?- டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

லெதர் உறையுடன் கூடிய ஸ்டீயரிங் வீல் பொருத்தப்பட்டு இருக்கிறது. இது ஓட்டுனர் கைகளுக்கு மிகச் சிறந்த பிடிமானத்தை வழங்குகிறது. அத்துடன், ஸ்டீயரிங் வீலில் கொடுக்கப்பட்டு இருக்கும் கட்டுப்பாட்டு பொத்தான்களும் இயக்குவதற்கு எளிதாக இருக்கின்றன. தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டீயரிங் வீல் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

 புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்யூவி எப்படி இருக்கிறது?- டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

முன்புற இருக்கைகள் சொகுசாக இருக்கின்றன. ஆனால், கூடுதலாக மெத்தை கொடுக்கப்பட்டு இருந்தால் இன்னும் சொகுசாக இருக்கும்.ஓட்டுனர் இருக்கைக்கு மெமரி வசதி இருக்கிறது. இரண்டு விதமான முறைகளில் மெமரி வசதியை பதிவு செய்து கொள்ளலாம். இருக்கைகள் போதுமான அளவு சைடு போல்ஸ்ட்ர் இருந்தாலும், மிக நீண்ட தூர பயணங்களின்போது ஓட்டுனர் அயர்ந்து போவதற்கு வாய்ப்புகள் உண்டு.

 புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்யூவி எப்படி இருக்கிறது?- டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பின்புற இருக்கைகள் போதுமான அளவு ஹெட்ரூம் மற்றும் லெக்ரூம் இடவசதியை பெற்றிருககின்றன. முன் இருக்கைகளின் பின்புறத்தில் ஸ்கூப் வடிவமைப்புடன் இருப்பதால், பின் இருக்கை பயணிகளின் கால் முட்டி இடிக்காத வகையில் உள்ளது. இரண்டு பேர் வசதியாக அமர்ந்து பயணிக்கலாம். இரண்டு ஏசி வென்ட் அமைப்பு மற்றும் டைப்-சி சார்ஜர் ஆகியவை கொடுக்கப்பட்டு இருப்பது சிறப்பானதாக கூறலாம்.

 புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்யூவி எப்படி இருக்கிறது?- டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

எஞ்சின் மற்றும் கையாளுமை

பிஎம்டபிள்யூ எக்ஸ்1 ஃபேஸ்லிஃப்ட் மாடலில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 190 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஃப்ரண்ட் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாக இருக்கிறது.

 புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்யூவி எப்படி இருக்கிறது?- டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த கார் ஃப்ரணட் வீல் என்பதால், அதிக அளவில் டார்க் ஸ்டீயரிங் உள்ளது. முதல் மூன்று கியர்களில் ஆக்சிலரேட்டரை அதிகம் கொடுக்கும்போது ஸ்டீயரிங் வீலையும் அதிக பிடிமானத்துடன் காரை இயக்க வேண்டி இருக்கிறது.

 புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்யூவி எப்படி இருக்கிறது?- டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த காரில் ஈக்கோ புரோ, கம்ஃபோர்ட் மற்றும் ஸ்போர்ட் என மூன்று விதமான டிரைவிங் மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில், ஈக்கோ புரோ மோடில் வைத்து இயக்கும்போது ஸ்டீயரிங் வீல் இயக்குவதற்கு மிகவும் இலகுவாகவும், துல்லியமான உணர்வு குறைவாகவும் இருக்கிறது. அதிக மைலேஜை பெறுவதற்கு இந்த மோடு சிறப்பானதாக இருக்கும். கம்ஃபோர்ட் மோடில் வைத்து இயக்கும்போது ஸ்டீயரிங் வீல் சற்றே இருக்கமானதாகவும், டைனமிக் மோடில் அதிக துல்லியமாகவும், ஸ்டீயரிங் வீல் இறுக்கமான உணர்வையும் வழங்குகிறது. அதிவேகத்தில் இயக்குவதற்கு டைனமிக் மோடு சிறந்ததாக இருக்கும்.

 புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்யூவி எப்படி இருக்கிறது?- டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த டீசல் எஞ்சினின் பவர் டெலிவிரி மிகவும் சீராக உள்ளது. அதேநேரத்தில், ஆக்சிலரேட்டரை அழுத்தும்போது அதற்கு ஏற்ப உடனடி பவரை வெளிக்காட்டவும் தவறவில்லை. மேலும், பேடில் ஷிஃப்ட்டர் மூலமாக மேனுவலாக கியரை மாற்றும்போது இதன் செயல்திறனை விருப்பம்போல் பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது.

 புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்யூவி எப்படி இருக்கிறது?- டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

சஸ்பென்ஷன்

இந்த காரின் சஸ்பென்ஷன் சற்று மென்மையான தன்மையை பெற்றிருக்கிறது. சொகுசான பயண அனுபவத்தை வழங்குவதற்காக இந்த மென்மையான சஸ்பென்ஷன் செட்டிங்கை பிஎம்டபிள்யூ வழங்கி இருக்கிறது. பள்ளம், மேடுகளை இந்த சஸ்பெஷன் சிறப்பாகவே கையாளுகிறது. அதேபோன்று, கேபினில் வெளிப்புற சப்தம் மிகவும் குறைவாக இருப்பதும் சிறப்பான விஷயமாக குறிப்பிடலாம்.

 புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்யூவி எப்படி இருக்கிறது?- டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய எக்ஸ்1 எஸ்யூவியில் மென்மையான சஸ்பென்ஷன் இருப்பதால், வளைவுகளில் திரும்பும்போது சிறிய அளவிலான பாடி ரோல் இருப்பதை சொல்லியாக வேண்டும். ஆனால், ஸ்டீயரிங் சிஸ்டம் போதுமான அளவு துல்லியமான உணர்வை தருவதால் சமாளிக்க முடிகிறது.

 புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்யூவி எப்படி இருக்கிறது?- டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்1 ஃபேஸ்லிஃப்ட் கார் நகர்ப்புறத்தில் லிட்டருக்கு 12 முதல் 14 கிமீ வரையிலான மைலேஜையும், நெடுஞ்சாலையில் லிட்டருக்கு 19 முதல் 20 கிமீ மைலேஜையும் வழங்கியது. இது நிச்சயம் இந்த காரின் மிக சிறப்பான விஷயமாக இருக்கிறது.

 புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்யூவி எப்படி இருக்கிறது?- டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

தீர்ப்பு

பிஎம்டபிள்யூ எக்ஸ்1 ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி சொகுசு விஷயத்தில் மிகச் சிறப்பானதாக இருக்கிறது. அதேபோன்று, பிஎம்டபிள்யூ கார்கள் ஓட்டுனர்களுக்கானது என்பதை பரைசாற்றும் வகையில் இதன் எஞ்சின் செயல்திறன் இருப்பதும் குறிப்பிடத்தக்க விஷயம். பழைய மாடலைவிட சற்றே அளவில் பெரிதாகவும், அதிக வசதிகளுடன் இருப்பதால் இந்த கார் நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு மதிப்பை வழங்கும். மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ மற்றும் ஆடி க்யூ3 கார்களுக்கு போட்டியாக இருக்கிறது. ரூ.35.90 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது. பிஎம்டபிள்யூ எஸ்யூவி காதலர்களுக்கு மிகச் சரியான விலையில் சிறந்த தேர்வாக அமையும்.

Most Read Articles
English summary
BMW India launched the facelifted X1 SUV in the Indian market with a starting price of Rs 35.90 lakh, ex-showroom (India). We got our hand on the facelifted X1 and drove it around the city and on the highway, and the car impressed us in many ways. Read on to find out more about the facelifted X1.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X