புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்5 சொகுசு எஸ்யூவி கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

Written By:

1999ம் ஆண்டு பிஎம்டபிள்யூ எக்ஸ்5 சொகுசு ரக எஸ்யூவி கார் அறிமுகம் செய்யப்பட்டது. கால மாற்றத்துக்கு ஏற்ப அவ்வப்போது நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய தலைமுறை மாடலாக அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.

ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டி வெஹிக்கிள் என்ற புதிய ரகத்தில் நிலைநிறுத்தப்பட்ட இந்த சொகுசு எஸ்யூவி வாடிக்கையாளர்களின் தேர்வில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த நிலையில், புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எஸ்யூவியை அண்மையில் டெஸ்ட் டிரைவ் செய்தோம். அந்த அனுபவங்களை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.

 புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எக்ஸ்டிரைவ்30டீ கார் டெஸ்ட் டிரைவ் விமர்சனம்!

செடான் கார் போன்ற மோனோகாக் ஃப்ரேமுடன் கூடிய கட்டமைப்பில் வெளிவந்த முதல் ஜெர்மனிய சொகுசு கார் என்பது இதன் முக்கிய சிறப்பம்சம். கடந்த 1999ம் ஆண்டில் வெளிவந்த முதலாம் தலைமுறை மாடல் பெரிய ஹிட் அடித்த நிலையில், 2006ம் ஆண்டு இரண்டாம் தலைமுறை மாடலும், அதற்கு பின்னர் 7 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போதைய மூன்றாம் தலைமுறை மாடலும் வெளிவந்தன.

 புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எக்ஸ்டிரைவ்30டீ கார் டெஸ்ட் டிரைவ் விமர்சனம்!

கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிடப்பட்டபோது இருந்த அதே சிறப்புகளுடன், நவீன யுகத்துக்கு தக்கவாறு மேம்படுத்தப்பட்ட மூன்றாம் தலைமுறை மாடலை நெருக்கடி மிகுந்த நகர்ப்புற சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் வைத்து டெஸ்ட் டிரைவ் செய்தோம். அந்த அனுபவங்களை தொடர்ந்து காணலாம்.

 புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எக்ஸ்டிரைவ்30டீ கார் டெஸ்ட் டிரைவ் விமர்சனம்!

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் பாரம்பரிய டிசைன் தாத்பரியத்தை இதன் முகப்புடன் வசீகரிக்கிறது. இரட்டை சிறுநீரக வடிவ க்ரில் அமைப்பு, மிக நேர்த்தியான ஹெட்லைட் மற்றும் பம்பர் அமைப்பு முகப்பு பக்கத்திற்கு வலு சேர்க்கின்றன.

 புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எக்ஸ்டிரைவ்30டீ கார் டெஸ்ட் டிரைவ் விமர்சனம்!

ஹெட்லைட்டில் இரண்டு வட்ட வடிவிலான எல்இடி ஹெட்லைட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன் ஊடாகவே, எல்இடி பகல்நேர விளக்குகளும் இருக்கின்றன. ஹெட்லைட்டுகளுக்கு கீழே பனி விளக்குகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. பானட் அமைப்பும் இதற்கு எஸ்யூவி மாடலுக்குரிய கம்பீரத்தை வழங்குகிறது.

 புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எக்ஸ்டிரைவ்30டீ கார் டெஸ்ட் டிரைவ் விமர்சனம்!

முகப்பில் மோதும் காற்றை அழகாக திசை திருப்பி விடுவதற்கான ஏர் கர்டெயின் அமைப்பும் இதற்கு வலு சேர்க்கிறது. காற்றினால் முன் சக்கரங்களுக்கு ஏற்படும் அழுத்தம் குறையும் என்பதுடன், காற்று உராய்வினால் ஏற்படும் இழப்புகளும் தவிர்க்கப்படும்.

 புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எக்ஸ்டிரைவ்30டீ கார் டெஸ்ட் டிரைவ் விமர்சனம்!

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எஸ்யூவியில் அதிக உறுதிவாய்ந்த ஸ்டீல் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனால், முந்தைய தலைமுறை மாடலைவிட இந்த புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எஸ்யூவி 100 கிலோ எடை குறைவாக இருக்கிறது.

 புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எக்ஸ்டிரைவ்30டீ கார் டெஸ்ட் டிரைவ் விமர்சனம்!

பின்புறத்தில் எல்இடி டெயில் லைட்டுகள் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, காருக்கு அழகையும் சேர்க்கிறது. டெயில் லைட்டில் மாற்றங்களை தவிர்த்து, பெரிய அளவிலான மாற்றங்களை பின்புறத்தில் காண முடியவில்லை.

இன்டீரியர்

இன்டீரியர்

டேஷ்போர்டு அமைப்பு மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அலங்கார மரத் தகடுகள் டேஷ்போர்டுக்கு அழகு சேர்க்கிறது. டேஷ்போர்டின் நடுவில் 10.2 இன்ச் திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றிருக்கிறது. மியூசிக், நேவிகேஷன் மற்றும் எஞ்சினின் நிகழ்நேர சக்தி வெளிப்படுத்தும் திறன் குறித்த விபரங்களை பெற முடியும்.

 புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எக்ஸ்டிரைவ்30டீ கார் டெஸ்ட் டிரைவ் விமர்சனம்!

ஸ்டீயரிங் வீலில் கன்ட்ரோல் சுவிட்ச்சுகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. சென்டர் கன்சோலும் மரத் தகடு அலங்காரத்தில் கவர்கிறது. ஆரஞ்ச், நீலம் மற்றும் வெள்ளை ஆகிய வண்ணங்களில் 9 விதமான வண்ணக் கலவைகளில் ஒளிரும் ஆம்பியன்ட் லைட்டுகளும் இந்த காருக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கிறது. இதனை ஐ-டிரைவ் சிஸ்டம் மூலமாக கட்டுப்படுத்த முடியும்.

 புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எக்ஸ்டிரைவ்30டீ கார் டெஸ்ட் டிரைவ் விமர்சனம்!

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை கியர் லிவருக்கு இடது பக்கத்தில் இருக்கும் ஐ- டிரைவ் க்ன்ட்ரோலர் டயல் மூலமாக கட்டுப்படுத்த முடியும். அதேநேரத்தில், இந்த டயல் கொடுக்கப்பட்டு இருக்கும் இடம் சற்று சவுகரியமாக இல்லை. ரிமோட் மூலமாகவும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை கட்டுப்படுத்த முடியும். ஸ்டோரேஜ் வசதிகளுக்கும் குறைவில்லை.

 புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எக்ஸ்டிரைவ்30டீ கார் டெஸ்ட் டிரைவ் விமர்சனம்!

இந்த காரில் 16 ஸ்பீக்கர்களுடன் கூடிய ஹார்மன்- கார்டன் ஆடியோ சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 4 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல், குளிர்ச்சியை வழங்கும் க்ளவ் பாக்ஸ், பானரோமிக் சன்ரூஃப் போன்றவை இதன் கூடுதல் சிறப்பம்சங்கள்.

 புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எக்ஸ்டிரைவ்30டீ கார் டெஸ்ட் டிரைவ் விமர்சனம்!

இதன் சொகுசான இருக்கைகள் உற்சாகம் தருகின்றன. யானை தந்த வண்ணத்திலான இருக்கைகள், நப்பா லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி ஆகியவை இந்த காரின் சொகுசுத் தன்மையை உயர்த்துகின்றன. லம்பார் சப்போர்ட் இருப்பதால், நீண்ட தூர பயணங்களுக்கு இந்த இருக்கைகள் மிக சொகுசாக இருக்கின்றன.

 புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எக்ஸ்டிரைவ்30டீ கார் டெஸ்ட் டிரைவ் விமர்சனம்!

இந்த காரில் 650 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட் ரூம் இடவசதி இருக்கிறது. இரண்டாவது இருக்கைகளை மடக்கினால் 1,870 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட் ரூம் இடவசதியை பெற முடியும்.

செயல்திறன்

செயல்திறன்

நாம் டெஸ்ட் டிரைவ் செய்த காரில் 6 சிலிண்டர்களுடன் கூடிய 3.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 1,700 ஆர்பிஎம்.,மில் இருந்து மிகச் சிறப்பான பவர் டெலிவிரியை போதுமான அளவு வழங்குகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 255 பிஎச்பி பவரையும், 560 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

 புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எக்ஸ்டிரைவ்30டீ கார் டெஸ்ட் டிரைவ் விமர்சனம்!

இந்த காரில் இருக்கும் எக்ஸ்டிரைவ் அமைப்பு மூலமாக 60 சதவீத எஞ்சின் சக்தி பின்புற சக்கரங்களுக்கு செலுத்தப்படுகிறது. இதனால், இந்த கார் ஓட்டுவதற்கு ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட கார் போன்ற உணர்வை தருகிறது. இந்த கார் 0- 100 கிமீ வேகத்தை வெறும் 6.5 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 230 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது.

 புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எக்ஸ்டிரைவ்30டீ கார் டெஸ்ட் டிரைவ் விமர்சனம்!

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்5 காரில் 8 ஸ்பீடு ஸ்போர்ட்ஸ் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், ஸ்டீயரிங் வீலில் பேடில் ஷிஃப்ட் மூலமாக மேனுவல் முறையில் கியர் மாற்றம் செய்து கொள்ள முடியும்.

 புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எக்ஸ்டிரைவ்30டீ கார் டெஸ்ட் டிரைவ் விமர்சனம்!

இந்த காரில் லான்ச் கன்ட்ரோல் என்ற தொழில்நுட்ப வசதி இருக்கிறது. இதனால், ஆரம்ப நிலையில் அதிக ஆக்சிலரேட்டர் கொடுத்தால் கூட எஞ்சின் சீராகவும், விரைவான ஆக்சிலரேஷனையும் சிறப்பான முறையில் வழங்கும். இதனால், அதிசெயல்திறன் மிக்க இந்த கார் ஆரம்ப நிலையில் ஓட்டுனர் எளிதாக கட்டுப்படுத்த முடியும்.

 புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எக்ஸ்டிரைவ்30டீ கார் டெஸ்ட் டிரைவ் விமர்சனம்!

இந்த காரில் நான்குவிதமான டிரைவிங் மோடுகள் இருக்கின்றன. ஈக்கோபுரோ என்ற மோடில் இயக்கும்போது அதிக எரிபொருள் சிக்கனத்தை பெற முடியும். ஆனால், செயல்திறன் குறைவாக இருக்கும். நகர்ப்புறத்தில் ஓட்டுவதற்கு ஏதுவான கம்போர்ட் மோடு உள்ளது. ஸ்போர்ட் மற்றும் ஸ்போர்ட் ப்ளஸ் ஆகிய மோடுகளில் வைத்து இயக்கும்போது எஞ்சின் செயல்திறன் மிகச் சிறப்பாக இருக்கும். எரிபொருள் சிக்கனம் குறைந்துவிடும்.

 புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எக்ஸ்டிரைவ்30டீ கார் டெஸ்ட் டிரைவ் விமர்சனம்!

இருக்கை உயரமாக இருப்பதை தவிர்த்து, இந்த கார் ஓட்டும்போது 2 டன் எடையுடைய எஸ்யூவி ஓட்டுகிறோம் என்ற உணர்வை தரவில்லை. இந்த காரின் எலக்ட்ரிக் ஸ்டீயரிங் சிஸ்டம் ஓட்டுவதற்கு சுலபமான உணர்வை தருவதுடன், அதிவேகத்திலும், வளைவுகளிலும் நம்பிக்கையான உணர்வை தருகிறது. இதன் சஸ்பென்ஷன் அமைப்பும் அனைத்துவிதமான சாலைகளிலும் சிறப்பாக செல்ல உதவுகிறது.

 புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எக்ஸ்டிரைவ்30டீ கார் டெஸ்ட் டிரைவ் விமர்சனம்!

இந்த கார் நகர்ப்புறத்தில் லிட்டருக்கு 8.2 கிமீ மைலேஜையும், நெடுஞ்சாலையில் லிட்டருக்கு 12.8 கிமீ மைலேஜையும் வழங்குகிறது. இந்த காரில் 80 லிட்டர் கொள்திறன் கொண்ட டீசல் டேங்க் இருக்கிறது. எனவே, அடிக்கடி பெட்ரோல் நிலையத்திற்கு செல்லும் பிரச்னையை தவிர்க்கும் என நம்பலாம்.

 புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எக்ஸ்டிரைவ்30டீ கார் டெஸ்ட் டிரைவ் விமர்சனம்!

இந்த கார் 206 மிமீ கிரவுண்ட் கிளிரயன்ஸ் கொண்டதாக இருக்கிறது. சில ஆஃப்ரோடு தகவமைப்புகளையும் பெற்றிருக்கிறது. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும், ஹில் ஹோல்டு தொழில்நுட்ப வசதிகளும் உண்டு. இந்த காரில் 18 இன்ச் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து

டிரைவ்ஸ்பார்க் கருத்து

இந்த மூன்றாம் தலைமுறை பிஎம்டபிள்யூ எக்ஸ்5 கார் நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டிருப்பதுடன், வழக்கமான பிஎம்டபிள்யூ டிசைன் தாத்பரியங்களை பெற்று வாடிக்கையாளர்களை வசீகரித்து வருகிறது.

அதேநேரத்தில், இந்த காரின் ரூ.74.3 லட்சம் விலைதான் இதற்கு எதிர்மறையான விஷயம். சொகுசு அம்சங்களிலும், இடவசதியிலும் இன்னும் சிறப்பாக இருந்தால், இந்த விலைக்கு மதிப்பு வாய்ந்த காராக கூற முடியும்.

English summary
The third-generation X5 deliver the same refined, opulent and sporty package that made BMW's first ever SUV a hit when it debuted 16 years ago. We took the latest X5 for a spin in the city and on the open tarmac to find out!
Please Wait while comments are loading...

Latest Photos