ஃபெர்பாமென்ஸில் பிச்சு உதறும் சிட்ரோன் சி3 கார் ரிவியூ...

பிரான்ஸ் நாட்டு கார் தயாரிப்பாளரான சிட்ரோன் நிறுவனம் இந்தியாவில் தனது இரண்டாவது காரான சி3 காரை அறிமுகப்படுத்துகிறது. இந்த காரின் ரிவியூவை காணலாம் வாருங்கள்.

ஃபெர்பாமென்ஸில் பிச்சு உதறும் சிட்ரோன் சி3 கார் ரிவியூ . . .

இந்தியர்களுக்கு எஸ்யூவி கார்கள் மீதான மோகம் பற்றி உங்களுக்குச் சொல்லித்தெரிய வேண்டியதில்லை. ஆனால் ஒரு ரெகுலர் எஸ்யூவி கார்களில் விலை மிக அதிகமாக இருக்கிறது. இதனால் இந்தியர்கள் பலர் அவர்கள் பட்ஜெட்டிற்கு தகுந்த ஹேட்ச்பேக் கார்களையே அதிகம் வாங்கி வந்தனர். இந்த நேரத்தில் தான் கார் வடிவமைப்பாளர்களின் சிந்தனை சற்று மாறியது. காம்பேக்ட் எஸ்யூவி மற்றும் மினி எஸ்யூவி கார்களை தயாரிக்கத் துவங்கினர்.

ஃபெர்பாமென்ஸில் பிச்சு உதறும் சிட்ரோன் சி3 கார் ரிவியூ . . .

இதனால் ஹேட்ச் பேக் காரின் விலையில் மினி எஸ்யூவி மற்றும் அதை விடச் சற்று அதிகமான விலையில் காம்பேக்ட் எஸ்யூவி கார்கள் மார்கெட்டிற்கு வரத்துவங்கின. இதனால் கார்களின் விற்பனை எண்ணிக்கை அதிகரித்தது. தற்போது இந்திய மார்கெட்டிற்கு புதிதாக வந்துள்ள சிட்ரோன் நிறுவனம் தனது முதல் மினி அல்லது சப் கான்பேக்ட் எஸ்யூவி காராக சி3 காரை இந்தியாவிற்குள் களம் இறக்குகிறது.

ஃபெர்பாமென்ஸில் பிச்சு உதறும் சிட்ரோன் சி3 கார் ரிவியூ . . .

பிரான்ஸ் நாட்டு நிறுவனமான சிட்ரோன், ஏற்கனவே இந்தியாவில் சி5 ஏர்கிராஸ் என்ற காரை பிரிமியம் மிட் சைஸ் எஸ்யூவி காராக அறிமுகப்படுத்தியது. தற்போது அதிக கார்கள் விற்பனையாகும் செக்மெண்டான சப் காம்பேக்ட் எஸ்யூவி கார்களில் கூட்டத்தில் தனது சி3 காரை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரை நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்து இது எப்படி இருக்கிறது எனச் சோதனை செய்தோம்.சிட்ரோன் நிறுவனம் இந்தியாவில் தன் தடத்தைப் பலமாகப் பதிக்குமா? அதன் தயாரிப்பு மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா? மேலும் பல கேள்விகளுடன் சென்ற எங்களுக்குக் கிடைத்த விடையை ரிவியூவாக கீழே வழங்கியுள்ளோம் காணுங்கள்

ஃபெர்பாமென்ஸில் பிச்சு உதறும் சிட்ரோன் சி3 கார் ரிவியூ . . .

டிசைன் மற்றும் ஸ்டைல்

இந்த கார் ஒரு தனித்துவமா ஸ்டைலை பெற்றுள்ளது. எந்த அளவிற்கு தனித்துவம் என்றால் தூரத்திலிருந்து பார்த்தாலும் இந்த கார் சிட்ரோன் கார் என்று கண்டுபிடிக்கும் அளவிற்கு மற்ற எந்த காரின் லுக்கும் கொஞ்சம் கூட இல்லாமல் முழுமையாக சிட்ரோன் நிறுவனத்திற்கு எனத் தனி ஸ்டைலை காரின் டிசைனில் கொண்டு வந்தது. இந்த நிறுவனம் இந்தியா மக்கள் மத்தியில் தன் பெயரை நிலை நிறுத்த எடுத்த முக்கிய முயற்சி

ஃபெர்பாமென்ஸில் பிச்சு உதறும் சிட்ரோன் சி3 கார் ரிவியூ . . .

இந்த காரை பார்த்ததும் உங்களை முதலில் ஈர்ப்பது இந்த காரின் பிரைட்டான கலர்கள் தான். இந்த கார் 10 வித்தியாசமான கலர் ஆப்ஷன்களின் வருகிறது. சிங்கிள் டோன், டூயல் டோன் என ஏகப்பட்ட ஆப்ஷன்கள் உள்ளன. இது மட்டுமல்ல காரின் ஆக்ஸசரீஸ்களிலும் ஆப்ஷன் உள்ளது. 3 பேக்களில் மொத்தம் 56 கஸ்டமைஸ்டு ஆப்ஷன்களும் உள்ளன. இதனால் இந்த காரை வாங்க விரும்பினால் உங்களுக்கு ஏகப்பட்ட தேர்வுகள் இருக்கிறது.

ஃபெர்பாமென்ஸில் பிச்சு உதறும் சிட்ரோன் சி3 கார் ரிவியூ . . .

இந்த காரின் டிசைன் மொழியைப் பொருத்தவரை வழக்கமான சிட்ரோன் நிறுவன கார்களின் டிசைன் மொழியே பின்பற்றப்பட்டுள்ளது. காரின் முகப்பு பக்க கிரில் வழக்கம் போல சிட்ரோன் காரின் டிசைனே இதில் உள்ளது. முன்பக்கம் நடுவே சின்ரோன் நிறுவன லோகோ இருக்கிறது. அந்த லோகோவிலிருந்து க்ரோம் பட்டைகள் எல்இடி டிஆர்எல் மற்றும் ஹெட்லைட் வரை நீண்டிருக்கிறது. இந்த காரில் ஸ்பிலிட் ஹெட்லைட் டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவும் வழக்கமான சிட்ரோன் டிசைன் தான்.

ஃபெர்பாமென்ஸில் பிச்சு உதறும் சிட்ரோன் சி3 கார் ரிவியூ . . .

முன்பக்கத்தின் கீழ்ப் பகுதியைப் பொருத்தவரை சில்வர் நிற ஸ்கார்ப் பிளேட் உடன் புதிய பம்பர் கொடுக்கப்பட்டுள்ளது. ஃபாக் லைட்டை சுற்றி ஆரஞ்சு நிற பட்டை கொடுக்கப்பட்டுள்ளது. சிட்ரோன் சி3 காரில் இந்த ஆரஞ்சு நிறம் பல இடங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. காரின் ORVM மற்றும் ரூஃப் பகுதியிலும் இந்த நிறம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஃபெர்பாமென்ஸில் பிச்சு உதறும் சிட்ரோன் சி3 கார் ரிவியூ . . .

காரின் பக்கவாட்டு டிசைனை பொருத்தவரை ஸ்போர்ட்ஸ் லுக்கில் கொடுக்கப்பட்டுள்ளது. சிட்ரோன் சி3 காரை மேலும் அழகுபடுத்த ஆரஞ்சு நிற எம்பெட்பட்டைகள் கொடுக்கப்பட்டுள்ளது. காரின் கீழ்ப் பகுதியில் கருப்பு நிற கிளாடிங் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காரின் ஏ மற்றும் பி பில்லர்கள் கருப்பு நிறத்திலும், சி பில்லர் காரின் பாடி நிறத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது. சி பில்லரின் மேல் பகுதியில் கருப்பு பேனல் உடன் கூடிய ஆரஞ்சு நிற பட்டை கொடுக்கப்பட்டுள்ளது. ரூஃப் ரெயில்கள் ஸ்டைலுக்காக சேர்க்கப்பட்டுள்ளன.

ஃபெர்பாமென்ஸில் பிச்சு உதறும் சிட்ரோன் சி3 கார் ரிவியூ . . .

சிட்ரோன் சி3 காரின் பின்பகுதியில் ஸ்டைல் அம்சங்களுடன் தான் கொடுக்கப்பட்டுள்ளது. பின்பக்க லைட்களை பொருத்தவரை சிறப்பாக இடத்தில் கச்சிதமாகப் பொருத்தப்பட்டுள்ளது. நடுவில் சிட்ரோன் பேட்ஜிங் கொடுக்கப்பட்டுள்ளது. காரின் பம்பர் பகுதியைப் பொருத்தவரை க்ரோம் ரிஃப்லெக்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இது சி3 காருக்கு பிரிமியம் லுக்கை கொடுக்கிறது.

ஃபெர்பாமென்ஸில் பிச்சு உதறும் சிட்ரோன் சி3 கார் ரிவியூ . . .

சிட்ரோன் சி3 காரில் பல பிரிமியம் மற்றும் ஸ்டைல் அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இருந்தாலும் காரின் விலையைக் குறைப்பதற்காக சில மாற்றங்களைச் செய்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. இந்த காரின் பின்புறம் ரூஃபில் ஷார்க் ஃபின் ஆண்டனா பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு மாறாகப் பழைய ஆண்டனாவை காரின் முன் பகுதியில் பொருத்தியுள்ளன. இந்த காரன் கலரிங் முழுவதும் காண்ட்ராஸ்ட் நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஃபெர்பாமென்ஸில் பிச்சு உதறும் சிட்ரோன் சி3 கார் ரிவியூ . . .

அடுத்தாக விலையைக் கணக்கில் கொண்டு சிட்ரோன் சி3 காரில் அலாய் வீல் ஆப்ஷன் இல்லை. ஸ்டீல் வீல்கள் தான் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கு பிளாஸ்டிக் வீல் கேப்கள் பொருத்தப்பட்டுள்ளது. இது காரின் லுக்கை மேலும் மேம்படுத்திக் காட்டியுள்ளது. அலாய் வீல் இல்லாதது இதன் வாடிக்கையாளர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது.

ஃபெர்பாமென்ஸில் பிச்சு உதறும் சிட்ரோன் சி3 கார் ரிவியூ . . .

டிசைனை பொருத்தவரை அலாய் வீல் மற்றும் ஷார்க் ஆண்டனாவை மட்டுமே இதன் பின்னடைவு இதை ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால் சிட்ரோன் சி3 கார் சிறப்பான ஸ்டைல் மற்றும் பிரிமியம் அம்சங்கள் தற்போது மார்கெட்டில் உள்ள சப் காம்பேக்ட் எஸ்யூவிகளுக்கு செம போட்டியாக இருக்கும்.

ஃபெர்பாமென்ஸில் பிச்சு உதறும் சிட்ரோன் சி3 கார் ரிவியூ . . .

உட்புற வடிவமைப்பு

சிட்ரோன் சி3 காரை பொருத்தவரை டேஷ்போர்டு ஃபங்கி ஸ்டைலில் உள்ளது. சீட்கள் சிம்பிளான வடிவமைப்பிலுள்ளது. சீட்களில் டூயல் டோன் கொடுக்கப்பட்டுள்ளது. கலர்களும் பேட்டன்களும் சிம்பிளாக உள்ளன. டேஷ்போர்டுகளின் பெரும்பாலான பகுதிகள் ஆரஞ்சு நிறத்தைப் பெற்றுள்ளது. ஏசி வென்ட்கள் சிறப்பாக வடிவமைக்பகப்ட்டுள்ளன. டேஷ்போர்டின் ஓரத்தில் கொடுக்கப்பட்டு ஏசி வென்ட் வெர்டிக்கல் போசிஷனிலும், மத்தியில் உள்ள ஏசி வென்ட் ஹரிசான்டல் போசிஷனிலும் இருக்கிறது.

ஃபெர்பாமென்ஸில் பிச்சு உதறும் சிட்ரோன் சி3 கார் ரிவியூ . . .

டிரைவர் சீட்டை பொறுத்தவரை ஃபிளாட் பாட்டம் ஸ்டியரிங் வீல் பொருத்தப்பட்டுள்ளது. இதில் சிட்ரோன் லோகோ மையத்தில் இருக்கிறது. ஸ்டியரிங்கில் ஆடியோ கண்ட்ரோல் செட்டிங்ஸ்கள் உள்ளது கீழ் உள்ள ஸ்போக்கில் வித்தியாசமான டிசைனில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஃபெர்பாமென்ஸில் பிச்சு உதறும் சிட்ரோன் சி3 கார் ரிவியூ . . .

ஸ்டியரிங்கிற்கு பின்னால் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் டிரிப் மீட்டர், இன்னும் கார் எவ்வளவு தூரம் செல்லும், மைலேஜ், குறைவான எரிபொருள் எச்சரிக்கை, கியர், டோர்கள் அடைப்பது குறித்த எச்சரிக்கை எனப் பல ஏகப்பட்ட தகவல்கள் அதில் வருகிறது. ஆனால் இதில் டேக்கோ மீட்டர் இல்லை. இதன் மூலம் தான் ஆர்பிஎம் கணக்கிடப்படும். இது சற்று ஏமாற்றம் தான்.

ஃபெர்பாமென்ஸில் பிச்சு உதறும் சிட்ரோன் சி3 கார் ரிவியூ . . .

காரின் மத்திய பகுதியைப் பொருத்தவரை 10.25 இன்ச் சிட்ரோன் கனெக்ட்ர இன்ஃபோடெயிண்மெண்ட் யூனிட் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ப்ளுடூத் கனெக்ட்டிவிட்டி, 4 ஸ்பீக்கர்கள் இணைப்பு, வசதிகள் உள்ளது. மேலும் இதில் முக்கிய வசதியாக வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் வயர்லெஸ் ஆப்பிள் கார் பிளே ஆப்ஷன்கள் உள்ளன. இது இந்த செக்மெண்டிலேயே இந்த காரில் மட்டும் தான். இருக்கிறது.

ஃபெர்பாமென்ஸில் பிச்சு உதறும் சிட்ரோன் சி3 கார் ரிவியூ . . .

அதே போல இதனுடன் ஸ்மார்ட் போன்களை இணைப்பதும் எளிமையாக இருக்கிறது. எந்த வித பிரச்சனையும் இல்லாமல் எளிமையாக இணைகிறது. சென்டர் கன்சோலில் அடுத்தாக ஏசி கண்ட்ரோல்கள் இருக்கிறது. பழைய மாதரியான ரோட்டேட்டரி நாப்கள் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது இன்ஃபோடெயின்மெண்ட்களிலேயே கண்ட்ரோல் செய்யும் வசதி இருக்கிறது. ஆனால் இதில் அது இல்லை.

ஃபெர்பாமென்ஸில் பிச்சு உதறும் சிட்ரோன் சி3 கார் ரிவியூ . . .

அடுத்தாக USB Type-A ஸ்லோ ஒன் சைடு 12V பவர் சாக்கெட்கள் இருக்கின்றனர். அதற்குக் கீழ் ஸ்மார்ட்போன்களை வைக்க கேப்ஹோல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த சென்டர் கண்சோல் கியர் லிவர் உடன் முடிவடைகிறது. கியர் லிவரை சுற்றி சில்வர் பட்டைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதான் காரின் உட்புற கட்டமைப்பாக உள்ளது. காரில் விலையைக் கட்டுக்குள் வைக்க சில அம்சங்கள் இதில் இடம் பெறவில்லை. குறிப்பாக மேனுவல் அட்ஜெஸ்ட் கண்ணாடிகளே கொடுக்கப்பட்டுள்ளன.

ஃபெர்பாமென்ஸில் பிச்சு உதறும் சிட்ரோன் சி3 கார் ரிவியூ . . .

சிட்ரோன் போல பிரிமியம் கார் நிறுவனம் இப்படியாக ஆப்ஷன்களை மேனுவலாக பிரிமியம் அம்சங்களாக இல்லாதது ஷாக்காக உள்ளது. 10.25 இன்ஃபோடெயிண்ட் ஸ்கிரின் உள்ள ஒரு காரில் மேனுவல் அட்ஜெஸ்டிங் கண்ணாடி இருப்பது விசித்திரமாக இருக்கிறது.

ஃபெர்பாமென்ஸில் பிச்சு உதறும் சிட்ரோன் சி3 கார் ரிவியூ . . .

இந்த சிட்ரோன் சி3 காரில் உள்ள 4 கதவுகளிலுமே பவர் விண்டோ உள்ளது. ஆனால் இதன் கண்ட்ரோல்கள் விசித்திரமாக கியர் லிவருக்கு பின்னால் வைக்கப்பட்டுள்ளது. டிரைவர் கதவுக்கு மட்டும் கதவிலேயே பவர் விண்டோ வைக்கப்பட்டுள்ளது. பின்பக்க கதவுகளிலுமே பட்டன்கள் இல்லை.

ஃபெர்பாமென்ஸில் பிச்சு உதறும் சிட்ரோன் சி3 கார் ரிவியூ . . .

அதே போல பவர் விண்டோவில் ஒன் டச் ஃபங்சன் ஆப்ஷன் இல்லை. ஒரு விண்டோவில் கூட இந்த ஆப்ஷன் இல்லை. இந்த சிட்ரோன் சி3 காரில் பல ஃபேன்சியான அம்சங்கள் இருந்தாலும் டிசைன் அட்டகாசமாக இருந்தாலும் தொழிற்நுட்ப அசம்ங்கள் சில பேசிக் ஆப்ஷன்களுடன் தான் இருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் காரின் விலை தான் எனக் குறிப்பிடப்படுகிறது.

ஃபெர்பாமென்ஸில் பிச்சு உதறும் சிட்ரோன் சி3 கார் ரிவியூ . . .

கம்ஃபோர்ட், பிராக்டிகாலிட்டி மற்றும் பூட் ஸ்பேஸ்

1948ம் ஆண்டு சிட்ரோன் நிறுவனம் தனது முதல் காரான 2சிவி காரை அறிமுகப்படுத்தும் போதே அந்நிறுவனம் கம்ஃபோர்ட்டிற்கு முக்கியத்துவம் அளித்தது. அதே போல இந்தியாவில் ஏற்கனவே அறிமுகமான சி5 ஏர்கிராஸ் காரிலும் கம்ஃபோர்ட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த சிட்ரோன் சி3 கார் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஃபெர்பாமென்ஸில் பிச்சு உதறும் சிட்ரோன் சி3 கார் ரிவியூ . . .

நாம் எதிர்பார்ப்பை சிட்ரோன் சி3 கார் பூர்த்தி செய்துள்ளது. காரின் ரைடு குவாலிட்டி சிறப்பாக இருக்கிறது. காரின் முன் பக்க சீட்களில் எல்லா இடங்களில் தேவையான அளவு குஷன் வசதி உள்ளது. இது காலின் தொடை மற்றும் இடுப்பு பகுதிகளிலும் சிறப்பான சப்போர்ட் உள்ளது.

ஃபெர்பாமென்ஸில் பிச்சு உதறும் சிட்ரோன் சி3 கார் ரிவியூ . . .

இந்த சிட்களின் ஹெட்ரெஸ்ட்கள் ஃபிக்ஸடாக இருக்கிறது. இது சற்று ஏமாற்றம் தான். அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் இருந்தால் சிறப்பாக இருக்கும். பின்புற சீட்டிலும் இதே கதை தான்.

ஃபெர்பாமென்ஸில் பிச்சு உதறும் சிட்ரோன் சி3 கார் ரிவியூ . . .

சிட்ரோல் சி3 காரை பொறுத்தவரை பிராக்டிக்கல் வாகனமாக உள்ளது தேவையான அளவு கேபி ஹோல்கள் உள்ளன. கார் முழுவதும் தொழிற்நுட்பங்களை பயன்படுத்த முடியும். காரின் டேஷ்போர்டில் ஸ்மார்ட்ஃபோன்களை வைக்க இடம் இருக்கிறது. காரின் க்ளவ் பாக்ஸூம் ஆழமாகவும் வளைவாகவும் இருப்பதால் அதிக இட வசதி இருக்கிறது. சிட்களின் பின்பக்க பாக்கெட்களை பொருத்தவரை டாப்-ஸ்பெக் வேரியன்டிலும் இருக்கிறது. ஆனால் பேஸ் வேரியன்டில் இந்த ஆப்ஷன்கள் உள்ளன.

ஃபெர்பாமென்ஸில் பிச்சு உதறும் சிட்ரோன் சி3 கார் ரிவியூ . . .

பின் பக்க சீட்டை பொறுத்தவரை ஒரு கப் ஹோல்டர் உள்ளது. இது போல காின் விண்டே பட்டன்களுக்கு அடுத்து 2 யூஎஸ்பி ஸ்லாட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. காரின் பூட் பகுதியில் 315 லிட்டர் அளவு இடம் இருக்கிறது. அதனால் பெரிய லக்கேஜ்களையும் வைக்க இடம் கிடைக்கும்.

ஃபெர்பாமென்ஸில் பிச்சு உதறும் சிட்ரோன் சி3 கார் ரிவியூ . . .

இன்ஜின் செயல்திறன் மற்றும் டிசைங் இம்பிரஷன்

சிட்ரோன் சி3 காரை பொருத்தவரை 2 இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளது. நாங்கள் இரண்டு காரையும் டெஸ்ட் டிரைவ் செய்தோம். இந்த காரின் பேஸ் வேரியன்டில் 1.2 லிட்டர் நேச்சுரல் அஸ்பயர்டு 3 சிலிண்டர் PURETECH 82 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஆம் 82 என்பது இந்த இன்ஜின் வெளிப்படுத்தும் பவர். இது 115 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இது நேரடியாக 5- ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது.

ஃபெர்பாமென்ஸில் பிச்சு உதறும் சிட்ரோன் சி3 கார் ரிவியூ . . .

இரண்டாவது ஆப்ஷனை பொருத்தவரை இன்ஜினில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் இதில் டர்போ சார்ஜர் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் இது PURETECH 110 இன்ஜினாக இருக்கிறது. இது 108.4 பிஎச்பி பலரையும், 190என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இது 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது.

ஃபெர்பாமென்ஸில் பிச்சு உதறும் சிட்ரோன் சி3 கார் ரிவியூ . . .

இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை சிறப்பாகச் செயல்படுகிறது. அதிகமான ஆர்பிஎம்மில் மட்டும் லேசாகச் சத்தம் கேட்கிறது. குறைந்த ஆர்பிஎம்மில் பெரிய அளவில் குறை சொல்ல ஒன்றும் இல்லை. காரின் கிளட்ச் லைட்டாக இருக்கிறது. மேலும் இந்த கார் விரைவாக வேகம் எடுக்கிறது. பக்கப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.

ஃபெர்பாமென்ஸில் பிச்சு உதறும் சிட்ரோன் சி3 கார் ரிவியூ . . .

இந்த காரின் டார்க்கை பொருத்தவரை சிறிய இன்ஜினில் சிறப்பான டார்க்கை வெளிப்படுத்துகிறது. அதனால் டர்போ லேக் குறைவாக இருக்கிறது. அதனால் சாலைகளில் நீங்கள் துணிந்து ஓவர்டேக் செய்ய முடியும். கியர் பாக்ஸை பொருத்தவரை கிளிக் ஸிஃப்ட் கியர் பொருத்தப்பட்டுள்ளது. ரிவர்ஸ் கியர் போடும் போது எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அதிலிருந்து நியூட்ரல் கொண்டுவரக் கொஞ்சம் சிரமப்பட்டோம். இதுபோல வேறு எந்த காரின் டெஸ்ட் டிரைவிலும் நாங்கள் உணரவில்லை.

ஃபெர்பாமென்ஸில் பிச்சு உதறும் சிட்ரோன் சி3 கார் ரிவியூ . . .

இந்த கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 10 நொடியில் தொட்டுவிட்டது. இந்த காரில் டிரைவ் மோடுகள் எதுவுமில்லை. இது பலருக்கு ஏமாற்றம் தான். இந்த காிரல் உள்ள 1.2 லிட்டர் இன்ஜின் லினியர் டிரைவ் எக்ஸ்பிரியன்ஸை தருகிறது. அதிகமான வேகத்திலும் இந்த இன்ஜின் சிறப்பாகச் செயல்படுகிறது. 5 ஸ்பீடு கியர் பாக்ஸில் 5வது கியர் போட நெடுஞ்சாலையில் தான் பயணிக்க வேண்டும் .ஊருக்குள் 5வது கியருக்கு தகுந்த வேகம் கிடைப்பது கடினம்.

ஃபெர்பாமென்ஸில் பிச்சு உதறும் சிட்ரோன் சி3 கார் ரிவியூ . . .

இந்த காரின் ஸ்டியரிங் பொருத்தவரை பிடிப்பதற்குச் சிறப்பாக இருக்கிறது. குறைவாக வேகத்தை லேசாகவும், வேகம் கூட கூட வெயிட்டாகவும் மாறுகிறது. இதில் சர்போ சார்ஜ் இன்ஜின் காரில் மட்டும் லேசான டார்க் ஸ்டீர் வருவதை உணர முடிகிறது.

ஃபெர்பாமென்ஸில் பிச்சு உதறும் சிட்ரோன் சி3 கார் ரிவியூ . . .

இந்த சிட்ரோன் சி3 காரில் சாஃப்டான சஸ்பென்சன் இருக்கிறது. இது காருக்கு நல்ல பாடி ரோல் இருக்கிறது. இதனால் ரைடு குவாலிட்டி சிறப்பாக இருக்கிறது. இது இந்த செக்மெண்ட் காரில் சிறப்பாக இருக்கிறது. இது 2-3 செக்மெண்டை உயர்த்தி காட்டியுள்ளது.

ஃபெர்பாமென்ஸில் பிச்சு உதறும் சிட்ரோன் சி3 கார் ரிவியூ . . .

சிட்ரோன் கார்கள் சிறப்பான ரைடிங் குவாலிட்டிக்கு பெயர் பெற்றது. சி3 காரும் அதற்கு எந்த விதத்திலும் சளைத்தது இல்லை. குறைவான மற்றும் மிதமான வேகத்தில் எந்த விதமான அதிர்வுகளும் இல்லை. 100 கி.மீ வேகத்திற்கும் அதிகமாகச் செல்லும் போது தான் காருக்கு லேசான அதிர்வுகள் தெரிகிறது.

ஃபெர்பாமென்ஸில் பிச்சு உதறும் சிட்ரோன் சி3 கார் ரிவியூ . . .

இந்த காரின் பிரேக்கின் அம்சங்களைப் பொருத்தவரை முன்பக்கம் டிஸ்க் பிரேக்களும், பின்பக்க டிரம் பிரேக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பிரேக்கள் எல்லாம் சிறப்பாகச் செயல்படுகிறது. ஒட்டு மொத்தத்தில் சிட்ரோன் சி3 கார் சிறப்பான டிரைவங் எக்ஸ்பிரியன்ஸ் தருகிறது. குறை சொல்ல எதுவுமில்லை.

ஃபெர்பாமென்ஸில் பிச்சு உதறும் சிட்ரோன் சி3 கார் ரிவியூ . . .

பாதுகாப்பு மற்றும் முக்கிய அம்சங்கள்

சிட்ரோன் சி3 காரில் சில முக்கியமான அம்சங்கள் இருக்கிறது. ஆனால் அதுவும் எடுத்துச் சொல்லும் அளவிற்குப் பெரிய அளவில் இல்லை. பெரும்பாலான வாகனங்களில் இருக்கும் அதே அம்சங்கள் தான். இது குறித்த பட்டியலைக் கீழே காணுங்கள்

ஃபெர்பாமென்ஸில் பிச்சு உதறும் சிட்ரோன் சி3 கார் ரிவியூ . . .

சிட்ரோன் சி3 பாதுகாப்பு அம்சங்கள் (Citroen c3 safety features)

 • டிரைவர் மற்றும் பாசஞ்சர்களுக்கான ஏர்பேக்கள்
 • ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்
 • ரியர் டோர் சைல்டு லாக்
 • இன்ஜின் இம்மொபிலைஸர்
 • ஸ்பீடு-சென்சிடிவ் டோர் லாக்
 • சிட்ரோன் சி3 முக்கிய அம்சங்கள்(Citroen c3 features)

  • எல்இடி டிஆர்எல்கள்
  • சிட்ரோன் கனெக்ட் 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட்
  • வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டி
  • ஃபோல்டு ஃபிளாட் ரியர் சீட்
  • ஒன் டச் டவுண் விண்டோஸ்
  • டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர்
  • ஃபெர்பாமென்ஸில் பிச்சு உதறும் சிட்ரோன் சி3 கார் ரிவியூ . . .

   சிட்ரோன் சி3 கலர் ஆப்ஷன்கள் (Citroen c3 colour options)

   சிங்கிள் டோன்:

   • போலார் ஒயிட்
   • ஸேஸ்டி ஆரஞ்ச்
   • பிளாட்டினம் க்ரே
   • ஸ்டீல் க்ரே
   • டூயல் டோன்:

    • போலார் ஒயிட் பாடி - ஸேஸ்டி ஆர்ஞ்ச் ரூஃப்
    • பிளாட்டினம் க்ரே பாடி ஸேஸ்டி ஆர்ஞ்ச் ரூஃப்
    • போலார் ஒயிட் பாடி - பிளாட்டினம் க்ரே ரூஃப்
    • ஸ்டீல் க்ரே பாடி-ஸேஸ்டி ஆர்ஞ்ச் ரூஃப்
    • ஸேஸ்டி ஆர்ஞ்ச் பாடி - பிளாட்டினம் க்ரே ரூஃப்
    • ஸ்டீல் க்ரே பாடிபிளாட்டினம் க்ரே ரூஃப்
    • ஃபெர்பாமென்ஸில் பிச்சு உதறும் சிட்ரோன் சி3 கார் ரிவியூ . . .

     சிட்ரோன் சி5 ஏர் கிராஸ் என்ற பிரிமியம் காருடன் இந்தியாவில் களம் இறங்கிய சிட்ரோன் நிறுவனம் அடுத்ததாகப் பெரிய மார்கெட்டில் தடம்பதிக்க சி3 காருடன் களம் இறங்கியுள்ளது. இதன் வெற்றி இந்த காருக்காக நிர்ணயம் செய்யப்படும் விலையை பொறுத்தே அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் டிரைவிங் பெர்ஃபாமென்ஸை ஒப்பிடும்போது சி3 அதன் வாடிக்கையாளர்களை சிறிதும் ஏமாற்றாது. இந்த இடத்தில் சி3 வெற்றி பெற்றுவிட்டது என்றே கூறலாம். மார்கெட் பங்கு மற்றும் விற்பனையில் என்ன செய்யப்போகிறது எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Most Read Articles

English summary
Citroen c3 sub compact SUV review performance engine spec colour option details
Story first published: Wednesday, June 15, 2022, 12:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X