இந்திய சாலைகளை கலக்க வரும் பிரெஞ்சு தயாரிப்பு... சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

பிரான்ஸை சேர்ந்த முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்று சிட்ரோன். கடந்த 1919ம் ஆண்டில் இருந்து சிட்ரோன் நிறுவனம் வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. 100 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றில், உலகின் பல்வேறு சந்தைகளிலும் தனக்கென தனி பெயரை சிட்ரோன் நிறுவனம் சம்பாதித்துள்ளது.

தற்போது இந்திய சந்தையில் தங்களது முதல் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு சிட்ரோன் நிறுவனம் தயாராகி விட்டது. சி5 ஏர்க்ராஸ் என்ற பெயரில் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள இந்த எஸ்யூவி இந்திய வாடிக்கையாளர்களின் ஆவலை தூண்டியுள்ளது. முதலில் 2020ம் ஆண்டே இந்திய சந்தையில் கால் பதித்து விடுவதற்கு சிட்ரோன் நிறுவனம் திட்டமிட்டது.

ஆனால் 2020ம் ஆண்டில் என்ன நடந்தது? என்பது நம் அனைவருக்கும் தெரியும். கொரோனா வைரஸ் பிரச்னையால் சிட்ரோன் நிறுவனத்தின் இந்திய வருகை சற்று தாமதமாகி விட்டது. எனினும் தற்போது இந்திய மண்ணில் தனது வர்த்தகத்தை தொடங்குவதற்கு சிட்ரோன் தயாராகி விட்டது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி, பல்வேறு வசதிகளுடனும், சௌகரியமான பயணத்தை உறுதி செய்யும் வகையிலும் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என சிட்ரோன் நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த புதிய எஸ்யூவி சிறப்பான கையாளுமை பண்புகளை பெற்றிருக்கும் என்றும், மென்மையான ஓட்டுதல் அனுபவம் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் சிட்ரோன் அதனை நிரூபித்து காட்டுவதற்கான நேரம் வந்து விட்டது. புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியை நாங்கள் சமீபத்தில் டெஸ்ட் டிரைவ் செய்தோம். இதன் மூலம் இந்திய சாலைகளில் ஓட்டுவதற்கு, சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி எப்படி உள்ளது? என்ற கேள்விக்கான விடையை கண்டறிந்துள்ளோம். இந்த பதிவின் மூலம் அதனை உங்களுக்கு தெரிவிப்பதுடன், இந்த புதிய எஸ்யூவியின் டிசைன், வசதிகள் உள்பட அனைத்து தகவல்களையும் வழங்கியுள்ளோம்.

இந்திய சாலைகளை கலக்க வரும் பிரெஞ்சு தயாரிப்பு... சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

டிசைன் & ஸ்டைல்

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி மிகவும் கவர்ச்சிகரமாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. இதன் டிசைன் சாலையில் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் என்பது உறுதி.

முன்பகுதியில் கம்பீரமான பானெட்டை இந்த எஸ்யூவி பெற்றுள்ளது. இந்த காரில் ஸ்பிளிட் ஹெட்லேம்ப் யூனிட்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன் மேலே எல்இடி டிஆர்எல்களும், கீழே எல்இடி விஷன் புரொஜெக்டர் யூனிட்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அதே சமயம் எல்இடி டிஆர்எல்கள், 2 க்ரோம் பட்டைகளுடன் ஒருங்கிணைந்த வகையில் வழங்கப்பட்டுள்ளன. நடுவில் சிட்ரோன் லோகோ கம்பீரமாக வீற்றுள்ளது.

அப்படியே கீழே முன் பக்க பம்பருக்கு வந்தால், இங்கே சிட்ரோன் நிறுவனத்திற்கே உரிய 'ஏர்பம்ப்' பாதுகாப்பு பேனல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மையப்பகுதியில் ஏர் இன்டேக் அமைந்துள்ளது. ஏர்பம்ப்களுக்கு அடுத்தபடியாக எல்இடி பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்த காரில் வழங்கப்பட்டுள்ள கருப்பு நிற பாடி கிளாடிங் சட்டங்கள், சற்றே முரட்டுத்தனமான தோற்றத்தை வழங்குகின்றன.

இந்திய சாலைகளை கலக்க வரும் பிரெஞ்சு தயாரிப்பு... சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

இந்த காரின் பக்கவாட்டு தோற்றமும் கவர்ச்சிகரமாக உள்ளது. இங்கே டோர்களுக்கு கீழாக கருப்பு நிற பாடி கிளாடிங் சட்டங்களிலும் ஏர்பம்ப்களை காண முடிகிறது. அதே சமயம் இந்த காரில், 18 இன்ச் 2-டோன் டைமண்ட் கட் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஓஆர்விஎம்கள் கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன. இதனுடன் எல்இடி டர்ன் இன்டிகேட்டர்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

இந்திய சாலைகளை கலக்க வரும் பிரெஞ்சு தயாரிப்பு... சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

இந்த காரின் பின் பகுதியை பொறுத்தவரை, 3டி எல்இடி டெயில்லைட்கள் தனித்துவமான அம்சமாக உள்ளன. அத்துடன் மேற்கூரையுடன் ஒருங்கிணைந்த வகையில் ஸ்பாய்லரும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், எல்இடி ஸ்டாப் லேம்ப் இடம்பெற்றுள்ளது. பூட் லிட் பகுதியில் இரண்டு டெயில்லைட்களுக்கும் இடையே சிட்ரோன் லோகோவும், அதற்கு கீழாக சி5 ஏர்க்ராஸ் பேட்ஜூம் வழங்கப்பட்டுள்ளது. கருப்பு நிற பாடி கிளாடிங் சட்டங்கள் மற்றும் இரு முனைகளிலும் பிரதிபலிப்பான்களுடன் பின் பக்க பம்பரும் நன்றாக உள்ளது.

ஒட்டுமொத்தத்தில் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி கவர்ச்சிகரமாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. இந்த டிசைன் அம்சங்கள், இந்திய சந்தையில் போட்டியாளர்களிடம் இருந்து தனித்து தெரிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவிக்கு உதவும்.

இந்திய சாலைகளை கலக்க வரும் பிரெஞ்சு தயாரிப்பு... சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

காக்பிட் மற்றும் இன்டீரியர்கள்

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு உள்ளே சென்றால், பிரீமியமான கேபின் நம்மை வரவேற்கிறது. இங்கே 'மெட்ரோபொலிட்டன் க்ரே' வண்ணம் இன்னும் பிரீமியமான உணர்வை தருகிறது.

இந்த காரில் ஆடியோ மற்றும் கால் அலர்ட்கள் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளுக்கான ஸ்விட்ச்களுடன் பெரிய ஸ்டியரிங் வீல் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 12.3 இன்ச் டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றுள்ளது. தேர்வு செய்யப்படும் டிரைவிங் மோடுகளுக்கு ஏற்ப இதனை கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும்.

இந்திய சாலைகளை கலக்க வரும் பிரெஞ்சு தயாரிப்பு... சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

அதே சமயம் ஸ்டியரிங் வீல் மற்றும் கீழே உள்ள பெடல்களில் சில்வர் தகடுகளால் செய்யப்பட்டுள்ள அலங்காரம் இன்டீரியருக்கு கூடுதல் கவர்ச்சியை கொடுக்கிறது. மேலும் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தி கொள்வதற்கு ஏதுவாக ஸ்டியரிங் வீலுக்கு பின்னால் பேடில்-ஷிப்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்திய சாலைகளை கலக்க வரும் பிரெஞ்சு தயாரிப்பு... சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

மேலும் 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் டிஸ்ப்ளேவின் இருபுறமும் மற்றும் டேஷ்போர்டின் இருபுறமும் இரட்டை சதுர வடிவ ஏசி வெண்ட்கள் செங்குத்தாக கொடுக்கப்பட்டுள்ளன. இந்த காரின் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி வசதிகளுடன் வருகிறது. இன்போடெயின்மெண்ட் சிஸ்டமை இயக்குவதற்கு எளிதாக உள்ளது. இந்த காரில் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை சிட்ரோன் வழங்கியுள்ளது. மேலும் யுஎஸ்பி சார்ஜிங் போர்ட்கள் மற்றும் 12V சாக்கெட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்திய சாலைகளை கலக்க வரும் பிரெஞ்சு தயாரிப்பு... சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

நடைமுறை பயன்பாடு & பூட் ஸ்பேஸ்

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காரின் இருக்கைகள், லெதர் மற்றும் ஃபேப்ரிக் அப்ஹோல்ட்ரியின் கலவையில் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரின் ஓட்டுனர் இருக்கைக்கு எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் முன் பக்க பாசஞ்சர் இருக்கையை 6 வழிகளில் மேனுவலாக அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும். அத்துடன் ஓட்டுனர் மற்றும் முன் பக்க பயணியின் இருக்கைகளுக்கு லம்பார் சப்போர்ட் வசதி உள்ளது. ஆனால் இதனை மேனுவலாகதான் அட்ஜெஸ்ட் செய்ய வேண்டும்.

முன் பக்க இருக்கைகள் மிகவும் சௌகரியமாக இருக்கின்றன. முன் பக்க பயணிக்கு நல்ல ஹெட்ரூம் மற்றும் லெக்ரூம் உள்ளது. பயணிகளின் தொடை, முதுகுக்கு நல்ல சப்போர்ட் கிடைக்கும் வகையில் இருக்கைகள் சிறப்பாக பொருத்தப்பட்டுள்ளன.

இந்திய சாலைகளை கலக்க வரும் பிரெஞ்சு தயாரிப்பு... சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

அதே சமயம் பின் பகுதியில் மூன்று தனித்தனி முழு அளவிலான இருக்கைகள் வழங்கப்பட்டிருப்பதை சிறப்பான விஷயமாக கூறலாம். இந்த மூன்று இருக்கைளையும் முன்னும், பின்னும் நகர்த்தி கொள்ள முடியும் என்பதுடன், சாய்மான வசதியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் லக்கேஜ்களை வைப்பதற்கான இட வசதியை அதிகரித்து கொள்ள ஏதுவாக, இந்த இருக்கைகளை முழுவதுமாகவும் மடித்து வைத்து கொள்ள முடியும்.

பின் வரிசை இருக்கைகளில் பயணிகளுக்கு நல்ல இடவசதி உள்ளது. முன் வரிசை இருக்கைகளில் உள்ள அதே சௌகரியம் பின் வரிசை இருக்கைகளிலும் கிடைக்கிறது. பின் பகுதியிலும் போதுமான அளவிற்கு ஹெட்ரூம், லெக் ரூம் உள்ளது. எனினும் பின் வரிசையில் மூன்று பேர் அமர்ந்தால், சற்று நெருக்கடியான உணர்வு ஏற்படலாம்.

இந்திய சாலைகளை கலக்க வரும் பிரெஞ்சு தயாரிப்பு... சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

இந்த காரில் பெரிய பனரோமிக் சன்ரூஃப் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் விசாலமான உணர்வு ஏற்படுவதுடன், கேபின் நன்கு காற்றோட்டமாகவும் உள்ளது. இந்த காரின் கேபினில் தாராளமான இட வசதி வழங்கப்பட்டுள்ளது.

இந்திய சாலைகளை கலக்க வரும் பிரெஞ்சு தயாரிப்பு... சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

இந்த காரில் அனைத்து இருக்கைகளும் உயர்த்தப்பட்ட நிலையில் இருந்தால், 580 லிட்டர்கள் பூட் ஸ்பேஸ் கிடைக்கும். ஆனால் நாங்கள் ஏற்கனவே கூறியபடி இருக்கைகளை மடித்து வைத்து கொள்ள முடியும். இதன்படி மூன்று இருக்கைகளையும் மடித்து வைத்து கொண்டால், பூட் ஸ்பேஸை 1,630 லிட்டர்களாக அதிகரித்து கொள்ள முடியும்.

Dimensions Citroen C5 Aircross
Length 4500mm
Width 2099mm
Height 1710mm
Wheelbase 2730mm
Min. Turning Radius 5.35m
Boot Space 580-Litres
இந்திய சாலைகளை கலக்க வரும் பிரெஞ்சு தயாரிப்பு... சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

இன்ஜின் செயல்திறன் & ஓட்டுதல் அனுபவம்

இந்திய சந்தையில் ஒரே ஒரு இன்ஜின் தேர்வுடன் மட்டுமே சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி கிடைக்கும். 2.0 லிட்டர் (1997 சிசி) டீசல் யூனிட் வடிவில் இந்த இன்ஜின் தேர்வு வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 3750 ஆர்பிஎம்மில் 175 பிஎச்பி பவரையும், 2000 ஆர்பிஎம்மில் 400 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது. மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வு இல்லை.

இன்ஜின் சக்தி முன் சக்கரங்களுக்கு மட்டுமே செலுத்தப்படுகிறது. 4 வீல் டிரைவ் ஆப்ஷன் இல்லை. ஆனால் இது பெரிய குறை என்று சொல்ல முடியாது. ஏனெனில் ஆஃப்ரோடு பயணங்களின்போது மட்டுமே, இந்த எஸ்யூவி திணறக்கூடும். எனவே அசலான ஆஃப்ரோடு பயணங்கள் எதற்கும் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியை கொண்டு செல்வதற்கு, நாங்கள் உங்களுக்கு பரிந்துரைக்க மாட்டோம்.

இந்திய சாலைகளை கலக்க வரும் பிரெஞ்சு தயாரிப்பு... சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

அதே சமயம் இந்த காரின் இன்ஜின் மிகவும் மென்மையாக உள்ளது. குறைவான ஆர்பிஎம்களில் கூட கார் நன்றாக பயணிக்கிறது. அதேபோல் நடுத்தர நிலையில் ஆக்ஸலரேட்டர் பெடலை லேசாக மிதித்தாலே, நிறைய பவர் மற்றும் டார்க் கிடைக்கிறது. இப்படி ஆரம்ப மற்றும் நடுத்தர நிலைகளில் பவர் தாராளமாக கிடைப்பதால், மூன்று இலக்க வேகத்தை மிகவும் வேகமாக தொட முடிகிறது. அதேபோல் ஓவர்டேக் செய்வதும் மிகவும் எளிமையாக இருக்கிறது.

அதே சமயம் 8 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் சிறப்பாக செயலாற்ற சற்று நேரம் எடுப்பது போல் தோன்றுகிறது. எனினும் கார் போக போக விரைவான கியர் மாற்றங்கள் மூலம் டிரான்ஸ்மிஷன் சிறப்பாக வேலை செய்கிறது. அத்துடன் இந்த காரில் பேடில்-ஷிப்டர்களும் வழங்கப்பட்டுள்ளன. பேடில்-ஷிப்டர்கள் மென்மையாக இருப்பதுடன், கியர்களை விரைவாக மாற்றுவதற்கு உதவி செய்கின்றன.

இந்திய சாலைகளை கலக்க வரும் பிரெஞ்சு தயாரிப்பு... சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

ஈக்கோ மற்றும் ஸ்போர்ட் என சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காரில் 2 டிரைவிங் மோடுகள் வழங்கப்படுகின்றன. ஈக்கோ மோடில் சௌகரியமான பயணம் கிடைப்பதுடன், எரிபொருள் சிக்கனம் சிறப்பாக உள்ளது. அதே சமயம் இந்த காரின் ஸ்போர்ட் மோடு அவ்வளவு சிறப்பாக இல்லை என்பது ஒரு குறையாக உள்ளது. ஓட்டுதல் அனுபவத்தில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் எதுவுமே இல்லை.

இந்திய சாலைகளை கலக்க வரும் பிரெஞ்சு தயாரிப்பு... சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

அதே சமயம் இந்த காரின் ஸ்டியரிங் வீல் இலகுவாக உள்ளது. எனவே போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர சூழல்களில் ஓட்டுவதற்கு எளிதாக இருக்கிறது. அதே சமயம் காருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது போன்ற உணர்வு ஏற்படலாம். ஸ்டியரிங் வீல் மிகவும் இலகுவாக இருப்பதே இதற்கு காரணம். குறிப்பாக நெடுஞ்சாலைகளில் செல்லும்போது, ஸ்டியரிங் வீல் இலகுவாக இருப்பதால், வேகமாக செல்வதற்கான நம்பிக்கை ஏற்படவில்லை.

அத்துடன் குறிப்பிடத்தக்க அளவில் பாடி ரோலும் உள்ளது. எனினும் என்விஹெச் லெவல்கள் மிகவும் சிறப்பாக உள்ளன. வெளிப்புறத்தில் இருந்து கொஞ்சம் கூட சத்தம் வரவில்லை. டீசல் இன்ஜினாக இருந்தாலும், மிகவும் அமைதியாக உள்ளது. அதேபோல் டிரைவர் இருக்கையும் நன்கு பார்க்க கூடிய நிலையை வழங்கி, தனது வேலையை சிறப்பாக செய்கிறது.

இந்திய சாலைகளை கலக்க வரும் பிரெஞ்சு தயாரிப்பு... சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

ஆனால் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி எங்களிடம் சிறிது நேரமே இருந்ததால், எங்களால் மைலேஜை துல்லியமாக கணக்கிட முடியவில்லை. ஆனால் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி ஒரு லிட்டருக்கு 18.6 கிலோ மீட்டர் மைலேஜ் தரும் என சிட்ரோன் கூறுகிறது. இந்த அளவுடைய ஒரு எஸ்யூவி காருக்கு இது சிறப்பான மைலேஜ்தான்.

அதே சமயம் இந்த காரின் சஸ்பென்ஸன் சிறப்பாக உள்ளது. அத்துடன் 'ப்ராக்ரஸீவ் ஹைட்ராலிக் குஷன்ஸ்' என்ற தொழில்நுட்பத்தை சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காரில் சிட்ரோன் வழங்கியுள்ளது. இந்த தொழில்நுட்பம் சொகுசான பயண அனுபவத்தை உறுதி செய்கிறது.

பொதுவாக இந்திய சாலைகள் குண்டும், குழியுமாகவும், பெரிய வேக தடைகள் நிரம்பியும் காணப்படும். சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி அவற்றை ஓரளவிற்கு எதிர்கொண்டு விட்டாலும், கேபினின் உள்ளே அமர்ந்திருக்கும் ஓட்டுனர் மற்றும் பயணிகளால் அவற்றை உணர முடிகிறது. அதே சமயம் இந்த காரின் நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. வேகமாக சென்றாலும், பெரிய தோற்றம் கொண்ட இந்த எஸ்யூவியை எளிதாக நிறுத்த முடிகிறது.

இந்திய சாலைகளை கலக்க வரும் பிரெஞ்சு தயாரிப்பு... சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

வேரியண்ட்கள், வண்ண தேர்வுகள் மற்றும் விலை

ஃபீல் மற்றும் ஷைன் என மொத்தம் 2 வேரியண்ட்களில் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி கிடைக்கும். இந்த இரண்டு வேரியண்ட்களிலும் ஏராளமான வசதிகளும், தொழில்நுட்பங்களும் நிறைந்துதான் காணப்படும்.

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காரில், வெள்ளை, சாம்பல், நீலம் மற்றும் கருப்பு ஆகிய 4 சிங்கிள் டோன் வண்ண தேர்வுகள் வழங்கப்படவுள்ளன. இதில், கருப்பு தவிர எஞ்சிய மூன்று வண்ண தேர்வுகளும், கருப்பு நிற மேற்கூரையுடனும் கிடைக்கும்.

ஆனால் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காரின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. வரும் மார்ச் மாதம் இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போதுதான் விலை அறிவிக்கப்படும். எனினும் 27-30 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) என்ற அளவில் விலை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சாலைகளை கலக்க வரும் பிரெஞ்சு தயாரிப்பு... சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

பாதுகாப்பு மற்றும் முக்கியமான வசதிகள்

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காரில் வழங்கப்படவுள்ள சில முக்கியமான வசதிகளை நீங்கள் கீழே காணலாம்.

  • முழு எல்இடி லைட்டிங் (ஹெட்லேம்ப்கள், டிஆர்எல்கள், டெயில்லைட்கள் & டர்ன் சிக்னல்கள்)
    • 18 இன்ச் 2-டோன் டைமண்ட் கட் அலாய் வீல்கள்
      • ஹேண்ட்ஸ்-ஃப்ரீ எலெக்ட்ரிக் டெயில்கேட்
        • பிரீமியம் 'மெட்ரோபொலிட்டன் க்ரே' லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி
          • 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம்
            • 12.3 இன்ச் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர்
              • எல்இடி மூட் லைட்டிங்
                • மேஜிக் வாஷ்
                  • ஓட்டுனர் இருக்கைக்கு எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதி
                    • பின் பகுதியில் மூன்று தனித்தனி இருக்கைகள்
                      • ட்யூயல்-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல்
                        • கீலெஸ் எண்ட்ரி
                          • புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப்
                            • பனரோமிக் சன்ரூஃப்
                            • இதேபோல் ஏராளமான பாதுகாப்பு வசதிகளுடனும் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி வரவுள்ளது. அவற்றில் சிலவற்றை கீழே காணலாம்.

                              • 6 ஏர்பேக்குகள்
                                • ப்ளைண்ட் ஸ்பாட் இன்ஃபர்மேஷன் சிஸ்டம்
                                  • ஹில்-ஹோல்டு கண்ட்ரோல், ட்ராக்ஸன் கண்ட்ரோல், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல்
                                    • இபிடி உடன் ஏபிஎஸ்
                                      • காஃபி பிரேக் அலர்ட்
                                        • எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக்
                                          • ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா
                                          • இந்திய சாலைகளை கலக்க வரும் பிரெஞ்சு தயாரிப்பு... சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

                                            போட்டியாளர்கள்

                                            இந்திய சந்தையில் ஹூண்டாய் டூஸான் மற்றும் 2021 ஜீப் காம்பஸ் உள்ளிட்ட கார்களுடன், சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி போட்டியிடும். இந்த மூன்று கார்களுக்கு இடையேயான ஒப்பீட்டை நீங்கள் கீழே பார்க்கலாம்.

                                            Specifications Citroen C5 Aircross Hyundai Tucson 2021 Jeep Compass
                                            Engine 2.0-Litre Diesel 2.0-Litre Diesel 2.0-Litre Diesel
                                            Power 176bhp 183bhp 168bhp
                                            Torque 400Nm 400Nm 350Nm
                                            Transmission 8-Speed Automatic 8-Speed Automatic 9-Speed Automatic
                                            Starting Price* TBA ₹22.55 Lakh ₹16.99 Lakh

                                            *All Prices are Ex-Showroom (Delhi)

                                            **To Be Announced

                                            இந்திய சாலைகளை கலக்க வரும் பிரெஞ்சு தயாரிப்பு... சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

                                            தீர்ப்பு

                                            சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காரின் டிசைன் கவர்ச்சிகரமாக உள்ளது. இதன் இன்ஜின் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துவதுடன், நல்ல ஓட்டுதல் அனுபவமும் கிடைக்கிறது. ஆனால் இது ஸ்போர்ட்டியான எஸ்யூவி கிடையாது. எனவே ஸ்போர்ட்டியான எஸ்யூவிக்களை ஓட்டுவது போல், இயக்க கூடாது. மாறாக நெடுஞ்சாலைகள் போன்ற மென்மையான மேற்பரப்புகளில் ஓட்டுவதற்கு ஏற்ற, அதே சமயம் சௌகரியமான பயணத்தை வழங்க கூடிய எஸ்யூவி போலவே இது தோன்றுகிறது.

Most Read Articles
மேலும்... #சிட்ரோன் #citroen
English summary
Citroen C5 Aircross SUV First Drive Review: Design, Interiors, Engine Performance, Driving Impressions. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X