இந்த விலைக்கு இப்படி ஒரு எலெக்ட்ரிக் காரா! டாடாவின் தூக்கத்தைக் கெடுத்த பிரான்ஸ் நிறுவனம்!

சிட்ரோன் நிறுவனம் தனது சி3 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனாக இசி3 காரை இந்தியாவில் களம் இறக்கியுள்ளது. இந்த காரை எங்கள் டிரைவ்ஸ்பார்க் குழு ஓட்டி பார்த்து அதன் ரிவியூவை உங்களுக்காக வழங்கியுள்ளனர். இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

சிட்ரோன் நிறுவனம் இந்தியாவிற்குள் சி5 ஏர்கிராஸ் காருடன் சந்தைக்குள் தன் காலடித் தடத்தைப் பதித்தது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இந்நிறுவனம் வெற்றிகரமாக இந்தியச் சாலைகளுக்குத் தகுந்த ஒரு சொகுசான காரை அறிமுகப்படுத்தியது. கடந்தாண்டு இந்நிறுவனம் பிரான்ஸ் ஸ்டைலிங், மற்றும் கம்ஃபோர்ட் வசதியுடன் சி3 கிராஸ் ஓவர் ஹேட்ச் பேக் காரை அறிமுகப்படுத்தியது. அதன் அறிமுக விழாவிலேயே இந்த கார் எலெக்ட்ரிக் வெர்ஷனை அறிமுகப்படுத்திவுள்ளது.

இந்த விலைக்கு இப்படி ஒரு எலெக்ட்ரிக் காரா! டாடாவின் தூக்கத்தைக் கெடுத்த பிரான்ஸ் நிறுவனம்!

அடுத்த சில மாதங்களிலேயே சிட்ரோன் நிறுவனம் சிட்ரோன் நிறுவனம் தனது சி3 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனாக இசி3 காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சிட்ரோன் இசி3 கார் எப்படி இருக்கிறது? டாடா மார்கெட்டில் அதிகமான எலெக்ட்ரிக் காரை விற்பனை செய்து வரும் நிலையில் அதற்குப் போட்டியாக இந்த கார் விற்பனையைப் பெறுமா? இதைத் தெரிந்து கொள்ள புதிய சிட்ரோன் இசி3 காரை டெஸ்ட் டிரைவ் செய்ய எங்கள் குழு சென்னைக்குச் சென்றது. எங்களது டெஸ்ட் டிரைவ் அனுபவங்களைக் காணலாம் வாருங்கள்.

சிட்ரோன் இசி3 - டிசைன் மற்றும் அம்சங்கள்

இந்த சிட்ரோன் இசி3 கார் சி3 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் தான் இந்த எலெக்ட்ரிக் வெர்ஷனில் உள்ள இசி3யில் இ-யை நீக்கி விட்டால் இந்த இரண்டு காருக்கும் வித்தியாசமே கண்டுபிடிக்க முடியாது அந்த அளவிற்கு இரண்டும் ஒரே கார்கள் தான். பெரியதாக எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தி சிட்ரோன் சி3 காரின் டிசைன் மொழியைக் கெடுக்க வேண்டாம் என அந்நிறுவனம் நினைத்ததோ என்னவோ அதே டிசைனிலேயே எலெக்ட்ரிக் காரையும் வெளியிட்டுள்ளது.

முன்பக்கம் சிட்ரோன் பேட்ஜ்கள் ஸ்பிலிட் ஹெட்லைட்டை இணைக்கும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மேல் பக்க பார் டிஆர்எல் உடனும், கீழ் பக்க பார் ஹெட்லைட் டிஆர்எல் உடனும் இணைக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. கீழ் பகுதியில் பம்பர் பிளாஸ்டிக் கிளாடு செக்ஷனாக உருவாக்கப்பட்டுள்ளது. அதில் ஃபாக் லேம்ப் பொருத்தப்பட்டுள்ளது. இதைச் சுற்றி போலார் ஒயிட் நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த போலார் ஒயிட் நிறுவனம் புதிய இசி3 காரின் புதிய டூயல் டோன் தீம்க்கு தேர்வாக இருக்கிறது. சிட்ரோன் இசி3 காருக்கு மொத்தம் 3 டூயல் டோன் இசி3 கலர் ஆப்ஷன்கள் இருக்கிறது. போலார் ஒயிட் ரூஃப் மற்றும் ஸெஸ்ட்டி ஆரஞ்ச் / பிளாட்டினம் க்ரே / ஸ்டீல் க்ரே ஆகியன நிறங்களில் பாடி கலர் ஆப்ஷன்களுடன் இருக்கிறது. போலார் ஒயிட் சரவுண்ட் மற்றும் ரூஃப் ஆகியன ரெகுலர் சி3 காரிலேயே இருக்கிறது. புதிய எலெக்ட்ரிக் காரில் மொத்தம் 13 வெளிப்புற கலர் காம்பினேஷன்கள், 3 பேக்களுடன் 47 கஸ்டமைசேஷன் உடன் வருகிறது.

போலார் ஒயிட் வைப் காரை சுற்றிப் பல இடங்களில் காணப்படுகிறது. குறிப்பாக டோர்களில் இருக்கிறது. எலெக்ட்ரிக் காருக்கும் ரெகுலர் காருக்கும் உள்ள வித்தியாசம் பெரியதாகத் தெரியவில்லை. ஆனால் முன்பக்கத்தில் இரண்டு கதவுகளிலும் இ என்ற பேட்ஜ் இருக்கிறது.

அடுத்து இவி காருக்கு இருக்கும் வித்தியாசம் சார்ஜிங் போர்ட் தான் இது முன்பக்கம் வலது புறம் உள்ள வீல் ஆர்ச் பகுதிக்கு மேல் வழங்கப்பட்டுள்ளது. வழக்கமான சி3 காரில் உள்ள ஃப்யூயல் ஃபில்லர் கேப் அப்படியே இதிலும் இருக்கிறது. எலெக்டரிக் காரில் இது சீல் செய்யப்பட்டுள்ளது. அங்கு சார்ஜிங் போர்டை வைக்க முடியவில்லை. இதற்கு காரணம் அங்கு சார்ஜிங் போர்டை வைப்பதால் எக்ஸ்ட்ரா ஒயரிங் தேவைப்படுகிறது. இது போக ஹீட்டிங் பிரச்சனையும் வருகிறது.

இந்த காரின் பின்புறம் ஐசிஇ இன்ஜினை போலவே இதிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்புறம் உள்ள பம்பரில் உள்ள சரவுண்ட்கள் காண்ட்ராஸ்ட் நிறத்தில் உள்ளது மிக முக்கியமான அம்சமாக இருக்கிறது. இது போகப் பின்புறம் இசி3 பேட்ஜ் இருக்கும் இது போகப் பெரிய அளவில் வித்தியாசத்தை கொடுப்பது பச்சை நிற நம்பர் பிளேட் தான்.

இந்த விலைக்கு இப்படி ஒரு எலெக்ட்ரிக் காரா! டாடாவின் தூக்கத்தைக் கெடுத்த பிரான்ஸ் நிறுவனம்!

இசி3 காருக்கு உள்ளேயும் அதே சி3 டிசைன் தான் இதிலும் உள்ளது . உட்புறம் கியர் லிவருக்கு பதிலாக டாகிஸ் ஸ்விட்சை கொடுத்துள்ளனர். இந்த லிவருக்கு அருகே இசி3யை எக்கோ மோடிற்கு மாற்றும் பட்டனும் வழங்கப்பட்டுள்ளது. உட்புறத்தில் பெரிய மாற்றங்கள் இல்லாததால் வருத்தப்பட வேண்டாம். முக்கிய மாற்றமாக டேஷ் போர்டை ஆர்ஞ்சு ஷெடில் வழங்கியுள்ளன். உங்களுக்கான வைப் கலரை நீங்கள் தேர்வு செய்யும் ஆப்ஷன் இருக்கிறது.

இந்த சிட்ரோன் இசி3 காரில் 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரின் வழங்கப்பட்டுள்ளது. இதில் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆப்பிள் கார்பிளே ஆகியவற்றை சப்போர்ட் செய்யும். இதன் டிஸ்பிளே, மை சிட்ரோன் அப் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது காருக்கான 35 கனெக்டெட் கார் அம்சங்களை வழங்குகிறது. முக்கியமாக இந்த இசி3 காரில் நீங்கள் செல்லும் பாதையில் உள்ள சார்ஜிங் ஸ்டேஷன் குறித்த தகவல்கள், காரில் உள்ள பேட்டரியின் அளவு, ஜியோஃபென்சிங், SOS அலர்ட் மூலம் காரை கண்டுபிடிப்பது, கார் திருட்டைத் தடுப்பது எனப் பல அம்சங்கள் இந்த காரில் இருக்கிறது.

சீட்கள் இந்த இசி3 காரில் சற்று சொகுசாக வழங்கப்பட்டுள்ளன. பின் சீட்டில் இருப்பவர்கள் லேசாக முட்டியை உயர்த்தி வைக்க வேண்டியது இருக்கும். பேட்டரிக்காக இதன் உயர் 70 மிமீ வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் பேட்டரி பேக்கிற்காக பூட் ஸ்பேஸ் இடம் அதிகம் எடுக்கப்படவில்லை. இந்த காரிலும் 315 லிட்டர் பூட் ஸ்பேஸ் இருக்கிறது.

இந்த விலைக்கு இப்படி ஒரு எலெக்ட்ரிக் காரா! டாடாவின் தூக்கத்தைக் கெடுத்த பிரான்ஸ் நிறுவனம்!

சிட்ரோன் சி3 - பவர் டெரைன்

சிட்ரோன் சி3 காரின் மிகப்பெரிய மாற்றம் பானட்டிற்கு கீழும், ஃப்ளோர் பகுதிக்கு கீழும் தான் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காரில் பிஇவி பவர் டெரைன் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த காரில் 29.2 கிலோ வாட் ஹவர் ஏர் கூல்டு லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி இந்த காருக்கு 320 கி.மீ ரேஞ்சை வழங்கும் என எம்ஐடிசி டெஸ்டில் சான்றளிக்கப்பட்டுள்ளது.

இந்த சிட்ரோன் இசி3 காரில் சிசிஎஸ்2 ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டாண்டர்டு கொடுக்கப்பட்டுள்ளது. டிசி ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் சார்ஜ் ஏற்றினால் 10-80 சதவீதமான சார்ஜை வெறும் 57 நிமிடங்களில் நிரம்பி வருகிறது. இதுவே 3.3 கிலோ வாட் ஆன் போர்டு சார்ஜரை 15 A சாக்கெட்டில் மாட்டி சார்ஜ் ஏற்றினால் முழு பேட்டரி ஃபுல் ஆக 10.5 மணி நேரம் எடுத்துக்கொள்ளும்.

காரின் பேட்டரியின் காரணமாக காரின் எடை 280 கிலோ வரை அதிகரித்துள்ளது. இசி3 காரை பொருத்தவரை 1316 கிலோ எடையில் உருவாக்கப்பட்டுள்ளது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 10 மிமீ குறைக்கப்பட்டு தற்போது 170 மிமீ ஆக உள்ளது. இந்த காரில் சிங்கிள் எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது காரின் முன்பக்க ஆக்ஸிலில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 56.2 பிஎச்பி பவரையும், 143 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

சிட்ரோன் இசி3 காரின் வாரண்டியை பொருத்தவரை ஒட்டு மொத்த காருக்கும் 3 ஆண்டுகள் அல்லது 1,25,000 கி.மீ ரேஞ்ச் வாரண்டியாக வழங்கப்படுகிறது. மோட்டாரை பொருத்தவரை 5 ஆண்டுகள்/ 1 லட்சம் கி.மீ வரை வாரண்டி வழங்கப்படுகிறது. பேட்டரி பேக்கை பொருத்தவரை 7 ஆண்டுகள் அல்லது 1,40,000 கி.மீ வரை வாரண்டி வழங்கப்படுகிறது.

சிட்ரோன் இசி3 - டிரைவிங் இம்பிரஷன்

இந்த சிட்ரோன் இசி3 காரை ஓட்டும் போது நாம முதலில் உணருவது இந்த காரின் உள்ள சைலென்ஸ் தான் எலெக்ட்ரிக் கார் என்றாலே சத்தம் இருக்காது. அதே போல இந்த காரின் உள்ளேயும் என்விஎச் லெவல் குறைவாக இருக்கிறது. அடுத்தாக இசி3 கார் தான் சிட்ரோன் நிறுவனத்தின் சி3 லைன் அப்களிலேயக குறைான டார்க் திறனை கொண்வ காராக இருக்கிறது. இந்த காரில் 143 என்எம் டார்க் திறன் கிடைக்கிறது.

ஆனால் இது போதுமான பவரை காருக்கு வழங்கவில்லை. கார் ஸ்மூத்தாக தான் ஸ்பீடு ஏறுகிறது. அதிகபட்சமாக இந்த கார் 107 கிலோ மீட்டர் வேகத்தில் தான் செல்ல முடிகிறது. சிட்ரோன் சி3 கார் இன்னும் அதிக வேகத்தில் செல்லும்படி டிசைன் செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் இது அதிக ரேஞ்ச் வேண்டும் என்பதற்காக இதன் வேகம் சற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த காரில் மொத்தம் 2 விதமான டிரைவிங் மோட்கள் உள்ள எக்கோ மற்றும் ஸ்டாண்டர்டு ஆகிய ஆப்ஷன்கள் உள்ள. இரண்டிற்கும் பெரிய அளவில் எந்த வித்தியாசமும் இல்லை. எப்பொழுதுமே ஸ்டாண்டர்டுலேயே இந்த கார் இயங்குகிற உணர்வே இருக்கிறது. நாங்கள் இந்த காரில் சென்னை வேகப்கோ டெஸ்ட் டிராக்கில் ஓட்டி பார்த்தோம். அதனால் எங்களுக்குப் பல்லாங்குழியான சாலைகளில் ஓட்டு பார்க்க முடியவில்லை. சிட்ரோன் சி3 காரிலிருந்து இந்த எலெக்ட்ரிக் காரில் சஸ்பென்சஸ் செட்டப்பை சற்று ஸ்மூத்தாக வைத்துள்ளன. அதிக பேட்டரி எடை காரணமாக இதைச் செய்துள்ளனர். இதை டெஸ்ட் செய்ய முடியவில்லை.

அதிக எடை மற்றும் குறைவான சென்டர் ஆஃப் கிராவிட்டி காரணமாக இந்த சிட்ரோன் இசி3 கார் கார்னர்களில் சிறப்பாகச் செயல்படுகிறது. இருந்தாலும் காருக்குள் கொஞ்சம் பாடி ரோல் இருக்கிறது. இந்த காரின் பிரேக்கை பொருத்தவரை முன்பக்க வீல்களில் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. பின்பக்கம் டிரம் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. இது போக ரீஜென் பிரேக்கிங் காரின் ஆக்ஸிலேட்டரிலிருந்து காலை எடுத்ததும் மிக வேகமாக வேகம் குறைந்துவிடுகிறது. இதனால் ஒன் பெடல் டிரைவிங் சுலபமாகிறது.

இந்த காரை ஓட்டும் போது துவக்கத்திலேயே புஷ் கிடைக்காததால் சற்று சிரமமாக இருக்கிறது. ஆனால் இது ஓட்டி பழகப் பழக செட் ஆகிவிடும். சிட்ரோன் இசி3 காரை பொருத்தவரை ஐசிஇ காரைவிட சிறப்பாக, அமைதியாக, பசுமையான காராக மாறியுள்ளது. இந்த காரின் ரேஞ்சை டெஸ்ட் செய்யும் அளவிற்கு எங்களுக்கு நேரம் வழங்கப்படவில்லை. ஆனால் இந்த கார் டாடா டியாகோ இவி காருக்கு செம டஃப் போட்டியை கொடுக்கும். இதன் விலையும் ரூ 8.99 லட்சம் என்ற விலையில் விற்பனையாகும் என கூறப்படுகிறது. அப்படியான விலைக்கு வந்தால் மார்கெட்டில் டாடாவிற்கு டஃப் கொடுத்து விற்பனை எகிறும் என்பதில் அச்சமில்லை.

Most Read Articles

English summary
Citroen eC3 Electric car First Drive Review
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X