புதிய டட்சன் ரெடிகோ 1.0 லிட்டர் எஞ்சின் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

Written By:

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் டட்சன் கார் பிராண்டை இந்தியாவில் அறிமுகம் செய்தது நிஸான் கார் நிறுவனம். பட்ஜெட் கார்களுக்காகவே அறிமுகம் செய்யப்பட்ட இந்த பிராண்டில் டட்சன் கோ, டட்சன் கோ ப்ளஸ் மற்றும் டட்சன் ரெடிகோ உள்ளிட்ட மூன்று கார்கள் களமிறக்கப்பட்டன.

புதிய டட்சன் ரெடிகோ 1.0 லிட்டர் எஞ்சின் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இதில், கோ மற்றும் கோ ப்ளஸ் கார்கள் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. அதேநேரத்தில், கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ரெடிகோ கார் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. வித்தியமாசன வடிவமைப்பு, அதிக கிரவுண்ட் கிளிரயன்ஸ், அதிக மைலேஜ் போன்ற விஷயங்கள் இந்திய பட்ஜெட் வாடிக்கையாளர்களை கவர்ந்துவிட்டது.

புதிய டட்சன் ரெடிகோ 1.0 லிட்டர் எஞ்சின் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த நிலையில், டட்சன் ரெடிகோ கார் 800சிசி எஞ்சினுடன் விற்பனைக்கு வந்த நிலையில், தற்போது 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்ட மாடலும் வரும் 26ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Recommended Video - Watch Now!
Kawasaki Ninja Z1000 Tamil
புதிய டட்சன் ரெடிகோ 1.0 லிட்டர் எஞ்சின் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

மாருதி ஆல்ட்டோ கே10, ஹூண்டாய் இயான் மற்றும் ரெனோ க்விட் ஆகிய கார்களின் வரிசையில், தற்போது டட்சன் ரெடிகோ காரின் 1.0 லிட்டர் மாடலும் போட்டியில் குதிக்க இருக்கிறது. இந்த காரை அண்மையில் கோவாவில் வைத்து டெஸ்ட் டிரைவ் செய்தோம். இந்த காரின் சாதக, பாதகங்களை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.

டிசைன்

டிசைன்

ரெனோ க்விட் காரின் 800சிசி மாடலுக்கும், 1.0 லிட்டர் மாடலுக்கும் சில புறத்தோற்ற வித்தியாசங்கள் கொடுக்கப்பட்டு இருந்தன. ஆனால், டட்சன் ரெடிகோ காரின் 800சிசி பெட்ரோல் எஞ்சின் மாடலுக்கும், புதிதாக வரும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடலுக்கும் வித்தியாசம் எதுவும் இல்லை.

புதிய டட்சன் ரெடிகோ 1.0 லிட்டர் எஞ்சின் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

முன்புறத்தில் டட்சன் கார்களுக்குரிய முத்தாய்ப்பான ஹனிகோம்ப் க்ரில் அமைப்பு, கூர்மையான தோற்றத்தில் காணப்படும் ஹெட்லைட் அமைப்பு, வலிமையான பம்பர் அமைப்பு இந்த காரின் முகப்புக்கு சிறப்பு சேர்க்கின்றன. முன்புற பம்பரில் எல்இடி பகல்நேர விளக்குகளும் கூடுதல் சிறப்பு தரும் விஷயம்.

புதிய டட்சன் ரெடிகோ 1.0 லிட்டர் எஞ்சின் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பக்கவாட்டில் வலிமையான வீல் ஆர்ச்சுகள், அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் போன்றவற்றுடன் ஒரு மினி க்ராஸ்ஓவர் போல காட்சியளிக்கிறது. இந்த காரில் 13 இன்ச் வீல்களும், 155/80 அளவுடைய ஆர்3 சியட் டயர்களும் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

புதிய டட்சன் ரெடிகோ 1.0 லிட்டர் எஞ்சின் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பின்புறத்தில்தான் ரெடிகோ காரின் 800சிசி மாடலையும், 1.0 லிட்டர் மாடலையும் பிரித்தரிய முடியம், பின்புற டெயில்கேட்டில் 1.0 லிட்டர் பேட்ஜ் பொருத்தப்பட்டிருப்பதுதான் இந்த காரை வேறுபடுத்தும் விஷயம். மிக வித்தியாசமான டெயில் லைட் அமைப்பு மற்றும் பம்பர் அமைப்பும், போட்டியாளர்களிடத்தில் இருந்து சற்று வேறுபட்ட டிசைன் கொண்ட மாடலாக இருக்கிறது.

புதிய டட்சன் ரெடிகோ 1.0 லிட்டர் எஞ்சின் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இன்டீரியரில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. டட்சன் ரெடிகோ காரின் 1.0 லிட்டர் மாடலில் கருப்பு வண்ண இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், ரூஃப் லைனில் பீஜ் வண்ணக் கலவை கொடுக்கப்பட்டு இருக்கிறது. இருப்பினும், கருப்பு வண்ண இன்டீரியர் பாகங்கள் காருக்கு சற்று நவீன யுக கார் மாடலாக சொல்ல முடிகிறது. மேலும், உட்புறத்தில் பாகங்களுக்கு இடையிலான இடைவெளியும் மூடி மறைப்பதற்கு இந்த கருப்பு வண்ண இன்டீரியர் அமைப்பு வெகுவாக உதவுகிறது.

புதிய டட்சன் ரெடிகோ 1.0 லிட்டர் எஞ்சின் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த காரில் இருக்கை கவர்களும் இரட்டை வண்ணத்தில் கொடுக்கப்பட்டு இருப்பது சிறப்பாக சொல்லலாம். மேலும், உயர்வான இருக்கை அமைப்பும் ஓட்டுனருக்கு சாலையை தெளிவாக பார்த்து ஓட்டுவதற்கு துணை புரிவது இதன் முக்கிய சிறப்பு. இதன் ஏ பில்லர் சற்று தடிமனாக இருப்பது, வளைவுகளில் திரும்பும்போது பார்வை திறனுக்கு பங்கமாக இருக்கிறது.

புதிய டட்சன் ரெடிகோ 1.0 லிட்டர் எஞ்சின் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பின் இருக்கையில் இரண்டு பெரியவர்களும், ஒரு சிறியவரும் அமர்ந்து செல்ல முடியும். அதேநேரத்தில், உயரமானவர்கள் காரை ஓட்டும்போது, ஓட்டுனர் இருக்கையை பின் தள்ளினால், பின் இருக்கையல் அமர்ந்திருப்பவருக்கு கால் வைக்க போதிய இடவசதி இல்லை.

புதிய டட்சன் ரெடிகோ 1.0 லிட்டர் எஞ்சின் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ரெனோ க்விட் காரில் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கும் நிலையில், புதிய டட்சன் ரெடிகோ காரில் 1.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலில் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இல்லை. சாதாரண மியூசிக் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆக்ஸ் போர்ட் மற்றும் யுஎஸ்பி போர்ட் இருக்கின்றன. ஆனஆல், புளூடூத் இணைப்பு வசதி இல்லை.

புதிய டட்சன் ரெடிகோ 1.0 லிட்டர் எஞ்சின் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

உட்புறத்தில் போதிய அளவு ஸ்டோரேஜ் இடவசதி இருக்கின்றன. டட்சன் ரெடிகோ காரில் கீலெஸ் என்ட்ரி மற்றும் சென்ட்ரல் லாக்கிங் வசதியும் உள்ளன. அதேநேரத்தில், ஓட்டுனர் பக்கத்திற்கான ஏர்பேக் மட்டும் முக்கிய பாதுகாப்பு வசதியாக இடம்பெற்றிருக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

ரெனோ க்விட் காரில் பயன்படுத்தப்படும் மூன்று சிலிண்டர்கள் கொண்ட அதே 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்தான் புதிய டட்சன் ரெடிகோ 1.0 லிட்டர் மாடலிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும், 91 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 800சிசி மாடலைவிட இது 14 பிஎச்பி கூடுதல் பவரையும், 19 என்எம் கூடுதல் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது.

புதிய டட்சன் ரெடிகோ 1.0 லிட்டர் எஞ்சின் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

அராய் சான்றுபடி இந்த கார் லிட்டருக்கு 22.5 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. எமது டெஸ்ட் டிரைவின்போது நடைமுறையில் இந்த கார் லிட்டருக்கு 19 முதல் 20 கிமீ மைலேஜை வழங்கியது.

புதிய டட்சன் ரெடிகோ 1.0 லிட்டர் எஞ்சின் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டட்சன் ரெடிகோ காரில் இருக்கும் புதிய 1.0 லிட்டர் எஞ்சின் 800சிசி எஞ்சினைவிட குறிப்பிடத்தக்க அளவு கூடுதல் சக்தியை வெளிப்படுத்தும் திறனை வெகுவாக உணர முடிந்தது. ஆரம்ப நிலையில் சுமாராக இருந்தாலும், 2,000 ஆர்பிஎம்., கடந்தவுடன் எஞ்சினின் சக்தியை வெளிப்படுத்தும் திறன் மிகவும் சிறப்பாகவும், சீராகவும் இருக்கிறது. அதேவேளை, நெடுஞ்சாலையில் செல்லும்போது 4,000 ஆர்பிஎம்., கடந்தவுடன் எஞ்சினில் அதிர்வுகள் மிக அதிகமாக இருக்கிறது. மேலும், செங்குத்தான சாலைகளில் ஏறும்போது எஞ்சின் திணறுகிறது.

புதிய டட்சன் ரெடிகோ 1.0 லிட்டர் எஞ்சின் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த காரின் ஸ்டீயரிங் வீலும், எஞ்சினும் நகர்ப்புறத்துக்கு சிறப்பானதாக இருக்கிறது. இதன் வடிவமும் சிறியதாக இருப்பதால், போக்குவரத்து நெரிசலில் ஓட்டுவதற்கு எளிதாக உள்ளது. அதேநேரத்தில், நெடுஞ்சாலையில் செல்லும்போது இதன் ஸ்டீயரிங் வீல் நம்பிக்கை தருவதாக இல்லை. இதன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் சீரான கியர் மாற்றத்திற்கு உதவுகிறது.

புதிய டட்சன் ரெடிகோ 1.0 லிட்டர் எஞ்சின் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த காரில் இருக்கும் சஸ்பென்ஷன் அமைப்பும், டயர்களும் மோசமான சாலைகளையும் எளிதாக கடக்க உதவுகிறது. இதன் மென்மையான சஸ்பென்ஷன் அமைப்பு வளைவுகளில் வேகமாக திரும்புகையில், பாடி ரோல் அதிகம் இருப்பதால் கவனமாக திருப்ப வேண்டி இருக்கிறது.

டட்சன் ரெடிகோ 1.0 லிட்டர் மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

The Facts

வேரியண்ட் விபரம் ரெடிகோ 1.0லி எஸ்
எதிர்பார்க்கும் விலை ரூ.3.55 லட்சம்(எக்ஸ்ஷோரூம்)
எஞ்சின் 999சிசி, 3-சிலிண்டர் பெட்ரோல்
கியர்பாக்ஸ் 5 ஸ்பீடு மேனுவல்
எரிபொருள் கலன் கொள்ளளவு 28லிட்டர்கள்
மைலேஜ் 22.5கிமீ/லி (அராய்)
பவர்/ டார்க் 68பிஎச்பி @ 5,500ஆர்பிஎம்/ 91என்எம் @ 4,250ஆர்பிஎம்
பூட் ரூம் 222 லிட்டர்கள்
டயர் அளவு 155/80 ஆர்13
டர்னிங் ரேடியஸ் 4.7 மீட்டர்கள்
தீர்ப்பு

தீர்ப்பு

டட்சன் ரெடிகோ காரின் 1.0 லிட்டர் மாடல் நிச்சயம் பட்ஜெட் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான தேர்வாக அமையும். டட்சன் ரெடிகோ காரின் விலை போட்டியாளர்களைவிட சவாலாக நிர்ணயிக்கப்பட்டு விட்டால், முதல்முறையாக கார் வாங்குவோரின் கவனத்தை வெகுவாக ஈர்க்கும்.

ரோடு டெஸ்ட் எடிட்டர் கருத்து

ரோடு டெஸ்ட் எடிட்டர் கருத்து

இடவசதி, அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ், அதிக மைலேஜ், போட்டியாளர்களிடமிருந்து வேறுபட்ட டிசைன் போன்றவையும் இந்த காருக்கான வரவேற்பை தக்க வைக்கும் என சொல்லலாம். இதுதவிர, டட்சன் ரெடிகோ காருக்கான நீட்டிக்கப்பட்ட வாரண்டி பேக்கேஜ் மற்றும் 24 மணி நேர அவசர சேவை உதவி திட்டம் ஆகியவையும் வாடிக்கையாளர்களை கவரும்.

மேலும்... #டட்சன் #datsun #test drive
English summary
Now one year down the line, Datsun has given the redi-GO a new heart in the form of a 1.0-litre engine as it aims to keep pace with the Maruti Alto, the Hyundai Eon and its alliance sibling the Renault Kwid. So, how does the addition of the new 1.0-litre engine change the redi-GO? Is the new Datsun redi-GO a good choice for the first time car buyer?

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark