புதிய டட்சன் ரெடிகோ 1.0 லி ஏஎம்டி மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டட்சன் ரெடிகோ காரின் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலை கேரளாவில் வைத்து டெஸ்ட் டிரைவ் செய்தோம். அந்த அனுபவங்களை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.

Recommended Video

Tata Nexon Faces Its First Recorded Crash

மாருதி கார்களுக்கு மாற்றான பட்ஜெட் கார்களுடன் 2013ம் ஆண்டில் டட்சன் பிராண்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது நிஸான் கார் நிறுவனம். டட்சன் பிராண்டில் அறிமுகம் செய்யப்பட்ட கோ மற்றும் கோ ப்ளஸ் கார்கள் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை.

புதிய டட்சன் ரெடிகோ 1.0 லி ஏஎம்டி மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஆனால், டட்சன் ரெடிகோ கார் வாடிக்கையாளர் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்றது. வித்தியாசமான வடிவமைப்பு, அதிக தரை இடைவெளி, பட்ஜெட் விலை போன்ற அம்சங்கள் இந்த காருக்கு நல்ல விற்பனையை தந்தது.

புதிய டட்சன் ரெடிகோ 1.0 லி ஏஎம்டி மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இதனை கவனத்தில் கொண்டு டட்சன் ரெடிகோ காரின் ஏஎம்டி 1.0 லிட்டர் எஞ்சின் மாடல் இப்போது ஏஎம்டி கியர்பாக்ஸ் வசதியுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரை அண்மையில் டெஸ்ட் டிரைவ் செய்தோம். அதன் விபரங்களை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.

புதிய டட்சன் ரெடிகோ 1.0 லி ஏஎம்டி மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டட்சன் ரெடிகோ காரின் 800சிசி மாடலுக்கும், 1.0 லிட்டர் மாடலுக்கும் தோற்றத்தில் வித்தியாசங்கள் இல்லை. ரெனோ க்விட் காரில் 800சிசி மற்றும் 1.0 லிட்டர் மாடலை வேறுபடுத்துவதற்காக கருப்பு- வெள்ளை கட்டம் கொண்ட பாடி டீக்கெல் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதுகூட இந்த காரில் இல்லை.

புதிய டட்சன் ரெடிகோ 1.0 லி ஏஎம்டி மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

முன்புறத்தில் க்ரோம் பட்டையுடன் வரையறுக்கப்பட்ட பிரம்மாண்ட க்ரில் அமைப்பு இடம்பிடித்துள்ளது. இந்த சிறிய காரின் கம்பீரத்தை கூட்டுவது இதன் முகப்பு பம்பர் அமைப்பும், பானட்டும்தான். பம்பரில் எல்இடி பகல்நேர விளக்குகள் கொடுக்கப்பட்டு இருப்பதுடன், ஸ்கிட் பிளேட் அமைப்பும் உள்ளது.

புதிய டட்சன் ரெடிகோ 1.0 லி ஏஎம்டி மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பக்கவாட்டில் எஸ்யூவி கார்களை போன்று உயர்த்தப்பட்ட அமைப்புடன் காட்சியளிக்கிறது. இரண்டு வீல் ஆர்ச்சுகளுக்கும் மேலாக கொடுக்கப்பபட்டு இருக்கும் வலிமையான பாடி லைன் கம்பீரமாக தெரிகிறது. இந்த காரில் 13 அங்குல சக்கரங்களும், 155/80 ஆர்13 அளவுடைய ஜேகே டயர்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

புதிய டட்சன் ரெடிகோ 1.0 லி ஏஎம்டி மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டட்சன் ரெடிகோ காரின் பின்புறத்தில் 1.0 லிட்டர் பேட்ஜ் கொடுக்கப்பட்டு இருப்பதுடன், பின்னால் வரும் வாகனங்களுக்கு எளிதாக தெரியும் வகையில் உயர்த்தப்பட்ட அமைப்பில் டெயில் லைட்டுகள் பொருத்தப்பட்டு இருப்பது பாதுகாப்பை மேம்படுத்தும் விஷயம்.

புதிய டட்சன் ரெடிகோ 1.0 லி ஏஎம்டி மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த காரில் சிறிய அளவிலான பின்புற விண்ட் ஸ்க்ரீன் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் 222 லிட்டர் கொள்திறன் கொண்ட பொருட்கள் வைப்பதற்கான பூட் ரூம் இடவசதி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய டட்சன் ரெடிகோ 1.0 லி ஏஎம்டி மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த காரின் இன்டீரியர் கருப்பு வண்ண பாகங்களுடன் கவர்கிறது. ஆனால், டட்சன் ரெடிகோ 1.0 லிட்டர் காரின் மேனுவல் வேரியண்ட்டைவிட, இந்த காரில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய டட்சன் ரெடிகோ 1.0 லி ஏஎம்டி மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

முதல் மாற்றம், க்ரோம் அலங்காரத்துடன் காட்சியளிக்கும் புதிய ஏஎம்டி கியர் லிவர் கவர்கிறது. அடுத்த விஷயம், இந்த காரில் இருக்கும் மியூசிக் சிஸ்டம் புளூடூத் வசதியை பெற்றிருக்கிறது. இந்த ஆடியோ சிஸ்டம் இரண்டு ஸ்பீக்கர்களுடன் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய டட்சன் ரெடிகோ 1.0 லி ஏஎம்டி மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டட்சன் ரெடிகோ காரின் இருக்கைகள் உயர்த்தப்பட்ட அமைப்புடன், அமர்வதற்கு சிறப்பாக இருக்கிறது. பின் இருக்கையில் இரண்டு பெரியவர்கள் தாராளமாக அமர்ந்து செல்ல முடியும்.

புதிய டட்சன் ரெடிகோ 1.0 லி ஏஎம்டி மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

அத்துடன், டட்சன் ரெடிகோ காரின் உட்புறம் உயரமானவர்கள் கூட எளிதாக அமர்ந்து செல்லும் வகையில் அதிக ஹெட்ரூம் வசதியை பெற்றிருக்கிறது. அதேநேரத்தில், உயரமானவர்களுக்கு கால்கள் வைப்பதற்கு சற்றே நெருக்கடியாக இருக்கிறது.

புதிய டட்சன் ரெடிகோ 1.0 லி ஏஎம்டி மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டட்சன் ரெடிகோ ஏஎம்டி காரில் 3 சிலிண்டர்கள் கொண்ட 999சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும்,91 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய டட்சன் ரெடிகோ 1.0 லி ஏஎம்டி மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஆக்சிலரேட்டரை மென்மையாக கொடுக்கும்போது, இந்த காரின் ஏஎம்டி கியர்பாக்ஸ் சிறப்பாக இருக்கிறது. அதேநேரத்தில், ஆக்சிலரேட்டரை அதிகம் கொடுத்தால், கியர் மாற்றத்தின்போது அதிர்வுகள் ஏற்படுவதை உணர முடிகிறது.

புதிய டட்சன் ரெடிகோ 1.0 லி ஏஎம்டி மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த கார் லிட்டருக்கு 23 கிமீ மைலேஜ் தரும் என்று டட்சன் நிறுவனம் தெரிவிக்கிறது. கேரளாவில் நாம் டெஸ்ட் டிரைவ் செய்த கார், நிகழ்நேரத்தில் சராசரியாக 20 கிமீ வரை மைலேஜ் தருவதாக காட்டியது. நடைமுறையில் லிட்டருக்கு 18 கிமீ வரை மைலேஜை எதிர்பார்க்கலாம்.

புதிய டட்சன் ரெடிகோ 1.0 லி ஏஎம்டி மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டட்சன் ரெடிகோ ஏஎம்டி காரில் க்ரீப் ஃபங்ஷன் வசதியானது, அதிக போக்குவரத்து உள்ள நேரங்களிலும், பார்க்கிங் செய்யும்போது ஆக்சிலரேட்டரை கொடுக்காமலேயே கார் மெதுவாக நகரும் வசதியை அளிக்கிறது. இந்த காரில் இருக்கும் ஏஎம்டி கியர்பாக்ஸை தேவைப்படும்போது மேனுவல் கியர்பாக்ஸ் மோடில் வைத்தும் இயக்கலாம்.

புதிய டட்சன் ரெடிகோ 1.0 லி ஏஎம்டி மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிதாக கார் கற்றுக் கொண்டு முதல்முறையாக கார் வாங்குவோருக்கு மிகச் சிறந்த தேர்வாக டட்சன் ரெடிகோ ஏஎம்டி கார் இருக்கும். குறிப்பாக, நகர்ப்புறத்தில் பயன்படுத்துவோருக்கு ஏஎம்டி கியர்பாக்ஸ் வசதி மிகச் சிறந்ததாக இருக்கும்.

புதிய டட்சன் ரெடிகோ 1.0 லி ஏஎம்டி மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டட்சன் ரெடிகோ ஏஎம்டி கார் ரூ.3.80 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலிருந்து கிடைக்கிறது. இதன் மூலமாக பட்ஜெட் கார் மார்க்கெட்டில் மிகச் சிறந்த ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலாக இதனை கூறலாம். 4 பேர் செல்வதற்கான போதுமான இடவசதி, பட்ஜெட் விலை போன்றவை முதல்முறையாக கார் வாங்குவோருக்கு சிறப்பான தேர்வாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

Most Read Articles
மேலும்... #டட்சன் #datsun #review
English summary
The newest car from the revived Japanese brand, the Datsun redi-GO 1.0 AMT, looks to continue that trend by offering a clutchless car for first-time owners looking to avoid the constant gearshifts that come hand in hand with the daily grind of rush hour traffic. We got behind the wheel of the all-new Datsun redi-GO AMT to find out.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X