சிட்டிக்குள்ள ஓட்ட செம எலெக்ட்ரிக் கார் - டாடா டியாகோ இவி ரிவியூ!

டாடா நிறுவனம் தனது பெட்ரோல்/ டீசல் இன்ஜின் கார்களை எல்லாம் எலெக்ட்ரிக் கார்களாக மாற்றி விற்பனைக்குக் கொண்டு வந்து கொண்டு இருக்கிறது. அந்த வரிசையில் தற்போது அதன் என்ட்ரி லெவல் காரான டியாகோ ஹேட்ச் பேக் காரையும் எலெக்ட்ரிக் காராக மாற்றி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டியாகோவி இவி காரில் டாடா நிறுவனம் என்ன மாறுதலைச் செய்துள்ளது. பெட்ரோல் காரை விட எலெக்ட்ரிக் கார் சிறப்பாக இருக்கிறதா? உங்கள் பணத்தை மிச்சம் செய்கிறதா? இதையெல்லாம் அறிய டிரைவ்ஸ்பார்க் குழு கோவாவில் இந்த காரை டெஸ்ட் டிரைவ் செய்யச் சென்றது.

டாடா டியாகோ இவி டிசைன் மற்றும் அம்சங்கள்

ஒட்டு மொத்த டிசைனில் டியாகோ இவி காரின் பெட்ரோல் இன்ஜின் காரை விட சில மாற்றங்களைப் பெற்றுள்ளது. இரண்டு கார்களுக்கும் வேறுபாட்டை ஏற்படுத்த இந்த மாற்றத்தைச் செய்துள்ளது. முக்கிய மாற்றமாக இந்த காரில் ஆங்காங்கே நீல நிற அஸ்சென்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இது காருக்கு வெளிப்புறம் மற்றும் உட்புறத்திலும் இந்த டிசைன் வழங்கப்பட்டுள்ளது.

சிட்டிக்குள்ள ஓட்ட செம எலெக்ட்ரிக் கார் - டாடா டியாகோ இவி ரிவியூ!

முன்பக்க கிரில் பகுதியைப் பொருத்தவரை பெட்ரோல் இன்ஜின் காரை போல இல்லாமல் முற்றிலும் கருப்பு பிளாஸ்டிக் ஸ்டிரிப்பை கொண்டு மூடப்பட்ட டிசைனில் வழங்கப்பட்டுள்ளது. இதில் டாடா நிறுவனத்தின் லோகா மற்றும் இவி பேட்ஜூம் வழங்கப்பட்டுள்ளது. இதன் இருபுறத்திலும் ஆரோ வடிவ டிசைன் வழங்கப்பட்டுள்ளது. இதன் ஹைட்லைட்களை இணைக்கும் வகையில் நீல நிற ஸ்டிப் மூடப்பட்ட கிரில்லிற்கு கீழே வழங்கப்பட்டுள்ளது. இதன் டிஆர்எல்கள் முன்பக்க பம்பருக்கு கீழே வழங்கப்பட்டுள்ளது. அதிலும் நீல நிற ஹைலட்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த டியாகோ இவி காரின் பக்கவாட்டு பகுதியில் பாடி நிறத்திலேயே டோர் ஹேண்டில் வழங்கப்பட்டுள்ளது. அதில் பியானோ பிளாக் நிற ஸ்டிரிப் வழங்கப்பட்டுள்ளது. டியாகோ இவி காரில் உள்ள மற்றொரு பெரிய மாற்றம் இதன் ரூஃப் பகுதி கான்ட்ராஸ்ட் நிறமான கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. இது போக இனஜ் வீல்கள் 14 இன்ச்சில் ஹைப்பர் ஸ்டைல் வீலாக வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் பின்பக்க செக்ஷன் எந்த மாற்றமும் இல்லை இவி பேட்ஜ் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

சிட்டிக்குள்ள ஓட்ட செம எலெக்ட்ரிக் கார் - டாடா டியாகோ இவி ரிவியூ!

இந்த டியாகோ இவி காரின் உட்புறத்தைப் பொருத்தவரை ஏசி வென்ட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்ர் ஆகிய பகுதியை சுற்றி நீல நிற அசென்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. ஸ்டியரிங் வீலை பொருத்தவரை பிளாட் பாட்டம் ஸ்டியரிங் வீல் வழங்கப்பட்டுள்ளது. இது போக உட்புற கதவு ஹேண்டில்களில் கரோம் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை பொருத்தவரை அதே 7 இன்ச் ஸ்கிரின் தான் வழங்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே சப்போர்ட் செய்யக்கூடியது. இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் டாடா ஸி கனெக்ட் சூட் உடன் இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது 45 விதமான கனெக்ட்டிவிட்டி வசதிகளை வழங்குகிறது. முக்கியமாக இந்த செக்மெண்டிலேயே முதன் முறையாக டெலிமேட்டிக்ஸ் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த காரை வைத்திருப்பவர்கள் ஸி கனெக்டை தங்கள் ஸ்மார்ட் போன் மற்றும் ஸ்மார்ட் வாட்ச்களுடன் இணைத்துக் கொள்ள முடியும்.

சிட்டிக்குள்ள ஓட்ட செம எலெக்ட்ரிக் கார் - டாடா டியாகோ இவி ரிவியூ!

இந்த டாடா டியாகோ இவி காரின் பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை முன்பக்கம் 2 ஏர்பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் இருக்கிறது.

டாடா டியாகோ மோட்டார் மற்றும் டிரைவிங் இம்பிரஷன்

டாடா டியாகோ இவி காரை பொருத்தவரை 2 விதமான பேட்டரி பேக்குகளுடன் வருகிறது. ஒன்று 19.2kWh பேட்டரி பேக் இது முழு சார்ஜில் 250 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்டது. இது 3.3 kW ஹோம் சார்ஜர் உடன் வருகிறது. இந்த இவி வெர்ஷனில் 60.3 பிஎச்பி திறன் கொண்ட சிங்கிள் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது 110 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இது 0-60 கி.மீ வேகத்தை வெறும் 6.2 நொடியில் எட்டி பிடிக்கும் திறன் கொண்டது.

நாங்கள் இந்த டெஸ்ட் டிரைவிற்காக அடுத்தவெர்ஷனான 24kWh பேட்டரி பேக் கொண்ட காரை ஓட்டி பார்த்தோம். இந்த காரின் பேட்டரியை சார்ஜ் செய்ய 3.3kW மற்றும் 7.2 kWh ஏசி ஹோம் சார்ஜிங் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகிறது. இது போக இரண்டு பேட்டரிகளும் 50 kW டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் பேட்டரியை வழங்குகிறது. இது 10 சதவீதத்திலிருந்து பேட்டரியை 80 சதவீதம் வரை சார்ஜ் ஏற்ற 57 நிமிடங்கள் வரை எடுத்துக்கொள்கிறது.

நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்த காரில் 73.75 பிஎச்பி திறன் கொண்ட ஒரு எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது 114 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. இந்த கார் 0-60 கி.மீ வேகத்தை வெறும் 5.7 நொடியில் எட்டி பிடிக்கிறது. இந்த கார் முழு சார்ஜில் 315 கி.மீ வரை ரேஞ்ச் தருகிறது.

நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்யும் போது டியாகோ இவி கார் 0-60 கி.மீ வேகத்தை மிக வேகமாக எட்டி பிடக்கிறது. இந்த விலையில் வரும் எலெக்ட்ரிக் கார் இவ்வளவு சிறப்பாக செயல்படும் என எதிர்பார்க்கவேயில்லை. இந்த காரில் மொத்தம் 2 டிரைவ் மோட்கள் இருக்கிறது. சிட்டி மற்றும் ஸ்போர்ட் இந்த இரண்டு மோட்டிற்கும் வித்தியாசம் த்ராட்டல் பெடலின் சென்சிட்டிவிட்டி தான்.

இந்த டாடா டியாகோ இவி காரில் மொத்தம் 4 ரீஜென் மோட்கள் உள்ளன. மோட்0 முதல் மோட் 3 வரை இருக்கிறது. மோட் 0 என்பது சுத்தமாக ரீஜென் இல்லாமல் செயல்படுகிறது மோட் 3 என்பது சிங்கிள் பெடல் டிரைவிங் முறையில் செயல்படுகிறது. மேலும் பேட்டரி 80 சதவீத சார்ஜ்ஜிற்கு மேல் இருந்தால் ரீஜென் வேலை செய்வதில்லை. மோட் 3 ரீஜென்னில் வைத்து டிரைவ் செய்யும் போது வெறும் 9 கி.மீ வேகத்தில் பயணிக்கலாம். இது பம்பர் டூ பம்பர் டிராபிக்கில் பயணிக்க ஏற்றதாக இருக்கும்.

இந்த காரின் ஸ்டியரிங் லேசாகவும் பயன்படுத்த எளிதாகவும் இருந்தது. முக்கியமாகக் குறைந்த வேகத்தில் சிட்டி பயன்பாட்டிற்குச் சிறப்பாக இருக்கிறது. அதே நேரம் வேகமாகச் செல்லும்போது ஸ்டியரிங் மெல்ல மெல்ல டைட் ஆகிறது. இதனால் நம்பிக்கையுடன் துணிந்து வேகமாகச் செல்ல முடிகிறது.

சஸ்பென்சன் செட்டப்பை பொருத்தவரை டியாகோ இவி காரில் சாஃப்டான சஸ்பென்சன் வழங்கப்பட்டுள்ளது. இது பள்ளம் மேடுகளில் ஹெவியான எலெக்ட்ரிக் பாகங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. கார்னர்களில் டியாகோ இவி சிறப்பாக செயல்படுகிறது பாடி ரோல் இல்லை.

பிரேக்கிங் பெர்ஃபாமென்ஸை பொருத்தவரை டியாகோ இவி காரில் பெடலிலேயே இதை உணர முடிகிறது. இந்த காரின் டியாகோ இவி காரை பொருத்தவரை இன் ரேஞ்சை டெஸ்ட் செய்ய எங்களுக்கு போதுமான நேரம் கிடைக்கவில்லை. ஆனால் அதன் பெரிய பேட்டரி கேப்பாசிட்டி மற்றும் ஹெவியான ரீஜென் ஆகியவற்றைப் பார்க்கும் போது இது 220-230 கி.மீ ரேஞ்சை தாராளமாகத் தரும் என எதிர்பார்க்கலாம்.

முதன் முறையாக எலெக்ட்ரிக் காரை வாங்குபவர்களுக்கு டியாகோ இவி சிறப்பான தேர்வாக இருக்கிறது. இதில் நாங்கள் பரிந்துரை செய்வது பெரிய பேட்டரி பேக்கை தான். இது சிறப்பாகச் செயலாற்றுகிறது என்பதில் சந்தேகமில்லை.

Most Read Articles
English summary
First Drive Review of tata tiago ev
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X