2017 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

Written By:

4 மீட்டர் நீளத்திற்கும் குறைவான எஸ்யூவி மார்க்கெட்டில் முதலாவது மாடலாக இந்தியாவில் களமிறங்கிய மாடல் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட். அறிமுகம் செய்யப்பட்டபோது மிகப்பெரிய சூப்பர் ஹிட் மாடலாக ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மாறியது.

2017 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த நிலையில், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, மஹிந்திரா டியூவி300, டாடா நெக்ஸான் உள்ளிட்ட மாடல்களின் வரவால், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனை போக்கிக் கொள்ளும் விதத்தில், வடிவமைப்பிலும், வசதிகளிலும் மேம்படுத்தப்பட்ட ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது ஃபோர்டு கார் நிறுவனம்.

2017 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மாடலை கோவாவில் நடந்த மீடியா டிரைவ் நிகழ்ச்சியில் வைத்து டெஸ்ட் டிரைவ் செய்தோம். இந்த காரை ஓட்டியபோது கிடைத்த அனுபவத்தை இந்த டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்டில் பகிர்ந்து கொள்கிறோம்.

Recommended Video - Watch Now!
[Tamil] 2017 Skoda Octavia RS Launched In India - DriveSpark
2017 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

கடந்த ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த ஆட்டோமொபைல் கண்காட்சியில் இந்த புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் அறிமுகம் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட ஓர் ஆண்டு கழித்து இந்தியாவில் களமிறங்க இருக்கிறது.

டிசைன்

டிசைன்

இது ஃபேஸ்லிஃப்ட் எனப்படும் மேம்படுத்தப்பட்ட மாடல் என்பதால், ஒட்டுமொத்த தோற்றத்திலும் பெரிய மாற்றங்கள் செய்யப்படவில்லை. அதேநேரத்தில்,முகப்பில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. பெரிய க்ரில் அமைப்பு முகப்பை பிரம்மாண்டமாக காட்டுகிறது.

2017 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பகல்நேர எல்இடி விளக்குகள், இரட்டை பேரல் அமைப்புடைய புரொஜெக்டர் ஹெட்லைட் கொண்ட ஹெட்லைட் ஹவுசிங் பொருத்தப்பட்டு இருக்கிறது. இது காருக்கு புதுப்பொலிவை தருகிறது. இன்டிகேட்டர் மற்றும் பனி விளக்குகள் துணை ஹெட்லைட் அமைப்பு போல காட்சி தருகிறது. முன்புற பம்பர் அமைப்பு மாற்றம் செய்யப்பட்டிருப்பதுடன், ஸ்கிட் பிளேட்டும் அதில் இணைக்கப்பட்டு இருக்கிறது.

2017 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பக்கவாட்டில் டிசைன் மாற்றங்கள் தெரியவில்லை. ஆனால், புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் 17 அங்குல அலாய் வீல்கள் டாப் வேரியண்ட்டில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. தனித்துவமான டிசைன் கொண்ட இந்த அலாய் சக்கரங்களில் 205/50 ஆர்17 டயர்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. ரூஃப் ரெயில்களும் புதிது.

2017 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பின்புறத்தில் பம்பர் அமைப்பு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. வெளிநாடுகளில் ஸ்பேர் வீல் பின்புற கதவிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், இந்திய மாடலில் ஸ்பேர் வீல் பின்புற கதவிலேயே தொடர்ந்து பொருத்தப்பட்ட வர இருக்கிறது. மேலும், பின்புற கதவை திறப்பதற்கான பட்டனும் நேரடியாக தெரியாத வகையில் அமைக்கப்பட்டு இருக்கிறது.

2017 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த எஸ்யூவியில் 352 லிட்டர் கொள்திறன் கொண்ட பொருட்கள் வைப்பதற்கான இடவசதி கொடுக்கப்பட்டு இருக்கிறது. பின் இருக்கையை மடக்கி வைக்கும்போது 1,178 லிட்டர் கொள்திறன் கொண்டதாக மாற்றிக் கொள்ளலாம். விலை மதிப்பு மிக்க பொருட்களை பார்வையில் படாதபடி வைப்பதற்கான பிரத்யேக இடவசதியும் உண்டு.

இன்டீரியர்

இன்டீரியர்

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் ஏற்கனவே இருந்த முழுவதும் கருப்பு வண்ண இன்டீரியர் தீம்தான் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. உட்புறத்தில் மிக முக்கிய மாற்றமாக புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது.

2017 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

கான்ட்ராஸ்ட் தையல் வேலைப்பாடுகளுடன் கூடிய லெதர் இருக்கைகள் இந்த காரின் அந்தஸ்தை உயர்த்தும் விஷயம். முன் இருக்கைகள் நல்ல இடவசதியுடன், கால் தொடைகளுக்கு நல்ல சப்போர்ட் தரும் விதத்திலும் உள்ளன. ஓட்டுனர் இருக்கையின் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதியும் உள்ளது. ஆனால், வலிமையான ஏ பில்லர் பார்வை திறனுக்கு இடைஞ்சல் தரும் விஷயம்.

2017 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

முந்தைய மாடலைவிட பின் இருக்கை மேம்படுத்தப்பட்டு இருப்பதாக ஃபோர்டு நிறுவனம் தெரிவிக்கிறது. ஆனால், உயரமானவர்களுக்கு நெருக்கடியான உணர்வை தரும் விதத்தில் இருக்கிறது. மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான் கார்களை ஒப்பிடும்போது, இன்னமும் மேம்படுத்தினால் சிறப்பாக இருக்கும்.

2017 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டில்ட் வசதியுடன் கூடிய ஸ்டீயரிங் வீல் அமைப்பு ஃபோர்டு ஃபோகஸ் காரிலிருந்து எடுத்து பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இது சிறப்பான பிடிமானத்தை அளிப்பதாக இருக்கிறது. இந்த காரில் மிக முக்கிய மற்றொரு மாற்றம், குடுவை போன்ற அமைப்புக்கு பதிலாக, புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

2017 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த சாதனம் 3ம் தலைமுறை ஃபோர்டு சிங்க் சாஃப்ட்வேர் கொடுக்கப்பட்டு இருப்பதும் முக்கிய சிறப்பாக இருக்கிறது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே ஆகிய சாஃப்ட்வேர்களையும் சப்போர்ட் செய்யும். இந்த காரில் 7 ஸ்பீக்கர்களுடன் கூடிய மியூசிக் சிஸ்டம் உள்ளது.

2017 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா உள்ளிட்ட வசதிகள் உள்ளன. விலை குறைவான மாடல்களில் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

2017 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் குளிர்ச்சியை வழங்கும் கூல்டு க்ளவ்பாக்ஸ் அமைப்பு உள்ளது. இதுதவிர, எண்ணற்ற ஸ்டோரேஜ் வசதிகளை இந்த காரில் இருக்கிறது. முன்புற ஆர்ம் ரெஸ்ட்டுக்கு கீழே பொருட்கள் வைப்பதற்கான விசேஷ இடவசதியும் உள்ளது.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

பொதுவாகவே ஃபோர்டு கார்கள் சிறப்பான பாதுகாப்பு வசதிகளுடன் வரும். அந்த வகையில், புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் 6 ஏர்பேக்குகள், இபிடி நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட், ஸ்பீடு லிமிட்டர் வசதியுடன் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை முக்கியமானவை.

2017 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் புத்தம் புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் ட்ரான் என்ற புதிய குடும்ப வரிசையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 121 பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

2017 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய டிராகன் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி 5 ஸ்பீடு மேனுவல் அல்லது புதிய 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மாடல்களில் கிடைக்கும். ஏற்கனவே ட்யூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இருந்த நிலையில், தற்போது டார்க் கன்வெர்ட்டர் நுட்பத்திலான ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலையே நாம் டெஸ்ட் டிரைவ் செய்தோம்.

2017 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புத்தம் புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினின் ஆட்டோமேட்டிக் மாடலில், எஞ்சினை ஸ்டார்ட் செய்த உடன் அதிர்வுகள் மிக குறைவாக இருந்தது கவர்ந்தது. இந்த புத்தம் புதிய எஞ்சின் ஆரம்ப மற்றும் நடுத்தர நிலைகளில் மிகவும் சீராக சக்தியை வெளிப்படுத்துகிறது. ஆனால், 5,000 ஆர்பிஎம்.,க்கு மேல் எஞ்சின் செல்லும்போது அதிர்வுகளும், சப்தமும் தான் ஒரு மூன்று சிலிண்டர் எஞ்சின் என்பதை காட்ட ஆரம்பித்து விடுகிறது.

2017 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸுக்கு பதிலாக, இந்த மாடலில் கொடுக்கப்பட்டிருக்கும் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் மாடல் பழைய நுட்பத்தை கொண்டிருந்தாலும், இந்தியர்களுக்கு மிக சரியான விலையில் கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை ஃபோர்டு கையாண்டு உள்ளதாக கருதலாம். இந்த ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் எதிர்பார்த்த அளவு சிறப்பான இயக்கத்தை வெளிப்படுத்தவில்லை.

2017 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

மேலும், ஸ்போர்ட்ஸ் மோடில் வைத்து இயக்கும்போது கூட மாற்றத்தை உணரமுடியவில்லை. பேடில் ஷிஃப்ட் வசதி இருந்தாலும், கியர் மாற்றம் என்பது ஒரு திருப்தியான அனுபவத்தை தரவில்லை என்பது ஏமாற்றம். எஞ்சின் செயல்திறன் சிறப்பாக இருந்தோபோதிலும், அதற்கு இந்த ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் முழு ஒத்துழைப்பை வழங்கவில்லை. இந்த மாடல் லிட்டருக்கு 14.8 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

2017 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டீசல் மாடலில் 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 97 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும். வாடிக்கையாளர்களிடம் பேராதரவை பெற்ற மற்றொரு 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனில் தொடர்ந்து கிடைக்குமா என்பது குறித்த தகவல் இல்லை.

2017 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த காரின் ஸ்டீயரிங் வீல் முந்தைய மாடலை போன்று மிக சிறப்பானதாக இல்லை. ஆரம்ப நிலையில் வைத்திருக்கும்போதே, ஸ்டீயரிங் வீலில் ப்ளே இருக்கிறது. இதனால், உடனடி ரெஸ்பான்ஸ் தரவில்லையோ என்ற சந்தேகம் எழுந்தது. அதேநேரதத்தில், இந்த காரின் சஸ்பென்ஷன் சிறப்பாக இருக்கிறது. இதனால், ஓட்டுதல் தரத்திலும் மேம்பட்டிருக்கிறது.

2017 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி, வளைவுகளில் திரும்பும்போது லேசான பாடி ரோல் இருக்கிறது. 200 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் இருப்பதால், இந்த பாடி ரோல் தவிர்க்க முடியாது என்பதால், வளைவுகளில் அதிவேகத்தில் செல்லும்போது கவனமாக செல்ல வேண்டும். நகர்ப்புறத்தில் ஓட்டும்போது சிறிய அளவிலான இந்த பாடி ரோல் இருப்பது தெரியாது என்பது ஆறுதல்.

டெஸ்ட் டிரைவ் மாடல் விபரம்

டெஸ்ட் டிரைவ் மாடல் விபரம்

மாடல் விபரம் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் டைட்டானியம் ப்ளஸ் [ஆட்டோமேட்டிக்]
எஞ்சின் விபரம் 1.5 லிட்டர் மூன்று சிலிண்டர் பெட்ரோல்
கியர்பாக்ஸ் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக்
அதிகபட்ச பவர் 121 பிஎச்பி @ 6,500ஆர்பிஎம்
அதிகபட்ச டார்க் 150என்எம் @ 4,500ஆர்பிஎம்
எரிபொருள் கலன் கொள்திறன் 52 லிட்டர்கள்
மைலேஜ் 14.8 கிமீ/லி
கிரவுண்ட் கிளியரன்ஸ் 200மிமீ
 தீர்ப்பு

தீர்ப்பு

முந்தைய மாடலைவிட வசீகரமான தோற்றம், புதிய பெட்ரோல் எஞ்சின், பெரிய திரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்றவை இந்தியர்களை கவரும் விஷயங்களாக இருக்கின்றன. புதிய மாடலின் விலை ரூ.30,000 வரை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. போட்டியாளர்களை எதிர்கொள்வதற்கு அதிக சிறப்பம்சங்களை பெற்றிருக்கும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் விலை நிர்ணயத்தை பொறுத்து, வாடிக்கையாளர்களை கவரும்.

மேலும்... #ஃபோர்டு #ford
English summary
We got behind the wheel of the 2017 Ford EcoSport facelift to find out.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark