ஆஃப்ரோடில் வல்லமையை காட்டிய புதிய ஃபோர்டு எண்டெவர்... ஓர் த்ரில் அனுபவம்!!

ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியின் ஆஃப்ரோடு தொழில்நுட்பங்களை சோதித்து பார்த்த அனுபவத்தை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

By Saravana Rajan

கரடுமுரடான சாலைகள் மற்றும் மோசமான சூழல்களில் பயன்படுத்துவதற்கும் ஏற்ற தொழில்நுட்பமும், கட்டமைப்பும் கொண்ட 'உண்மையான' எஸ்யூவி மாடல்கள் என்று பார்க்கும்போது எண்ணிக்கை மிக குறைவாக இருக்கிறது. அப்படி, அனைத்து விதத்திலும் உண்மையான எஸ்யூவி ரக கார்களை பட்டியலிடும்போது, அதில், சிறப்பான தேர்வுகளில் ஒன்றாக ஃபோர்டு எண்டெவர் விளங்குகிறது.

ஃபோர்டு எண்டெவர் எக்ஸ்ட்ரீம் டிரைவ்- அனுபவம்!

ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியில் இருக்கும் ஆஃப்ரோடு தொழில்நுட்பங்களை ஒவ்வொன்றாக பரிசோதிக்கும் விதத்தில், மலைச்சரிவான பகுதியை தேர்வு செய்திருந்தனர். இயற்கையாக அமைந்த தடைகள், செயற்கையாக உருவாக்கப்பட்ட தடைகளை ஃபோர்டு எண்டெவர் கடந்து வருவதற்கான வாய்ப்புகள் இருந்தன.

ஃபோர்டு எண்டெவர் எக்ஸ்ட்ரீம் டிரைவ்- அனுபவம்!

எக்ஸ்ட்ரீம் டிரைவ் நிகழ்ச்சியில் 3.2 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட ஆட்டோமேட்டிக் மாடல் பயன்படுத்தப்பட்டன. ஒவ்வொரு ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவிக்கும் ஒரு சிறப்பு பயிற்றுனரும்ம் இருந்தார். ஆஃப்ரோடு தொழில்நுட்பத்தை எந்த இடத்தில், எப்போது பயன்படுத்த வேண்டும் என்பதை அவர்கள் ஓட்டுபவருக்கு சொல்லிக் கொடுத்தனர்.

ஃபோர்டு எண்டெவர் எக்ஸ்ட்ரீம் டிரைவ்- அனுபவம்!

ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியை கையில் பெற்றவுடனே, அதில் இருந்த ஆஃப்ரோடு தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்கான டயலை மாற்றுவதற்கான செயல்முறை, 4 வீல் டிரைவ் சிஸ்டத்தை பயன்படுத்துவதற்கான முறைகளையும் அவர் சொல்லிக் கொடுத்தார்.

Normal Mode

Normal Mode

சாதாரண சாலைகளில் பயன்படுத்துவதற்கு Normal Mode பயன்படுத்தலாம். இந்த மோடில் டயலை வைக்கும்போது முன்புற சக்கரத்திற்கு 40 சதவீதமும், பின்புற சக்கரத்திற்கு 60 சதவீதம் என்ற அளவில் எஞ்சின் சக்தி பிரித்தனுப்படுகிறது.

Snow Mode/Mud/Grass

Snow Mode/Mud/Grass

முதலாவதாக, சேறும், நீரும் நிறைந்த பகுதியை கடக்க முற்பட்டோம். எண்டெவர் எஸ்யூவியின் டயலை Normal Mode-ல் இருந்து Snow மோடிற்கு மாற்றினோம். பனிபடர்ந்த சாலை, சேறு நிறைந்த சாலை, புல்வ நிறைந்த பகுதிகள் என மூன்று நிலைகளிலும் இந்த Snow Mode பயன்படுத்த முடியும்.

ஃபோர்டு எண்டெவர் எக்ஸ்ட்ரீம் டிரைவ்- அனுபவம்!

குறிப்பாக, வழுக்குத் தரைகளில் இந்த டிரைவிங் மோடு உதவியாக இருக்கிறது. அதிக தரைப்பிடிப்பை கொடுத்து காரின் சக்கரங்கள் சேறு நிறைந்த பகுதிகளில் சக்கரங்கள் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்கு இந்த வசதி பயன்பட்டது. மேலும், இதுபோன்ற சமயங்களில் ஸ்டீயரிங் வீல் மிக உறுதியாக பிடிமானத்தில் வைத்திருப்பது அவசியம். அத்துடன், எந்த பக்கம் கார் வழுக்குகிறதோ அதற்கு எதிர்திசையில் ஸ்டீயரிங் வீலை திருப்பி பின்னர் கட்டுப்படுத்த வேண்டியிருந்தது.

Sand Mode

Sand Mode

இந்த மோடிற்கு மாற்றியவுடனே லேசாக ஆக்சிலரேட்டரை கொடுத்தவுடன், மிகச் சிறப்பான டார்க் திறன் சக்கரங்களுக்கு செலுத்தப்படுவதால், பொதி மணல் சார்ந்த அந்த இடத்தை அனாயசமாக கடந்தது ஃபோர்டு எண்டெவர்.

Rock Mode

Rock Mode

அடுத்ததாக, செங்குத்தான இடத்தின் மீது ஏறும் வகையில் தடை இருந்தது. Rock Mode-ல் வைத்து எண்டெவர் எஸ்யூவியை நிறுத்தி இப்போது, 4 வீல் டிரைவ் லோ சுவிட்சை இயக்கியதும், இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் அதற்கான வசதியை காட்டுகிறது. மேலும், ஸ்டீயரிங் வீலில் வேகத்தை கூட்டி, குறைப்பதற்கான வசதியும் உள்ளது.

ஃபோர்டு எண்டெவர் எக்ஸ்ட்ரீம் டிரைவ்- அனுபவம்!

உதாரணத்திற்கு 10 கிமீ வேகத்தை செட் செய்துவிட்டால், தானாகவே அந்த செங்குத்தான இடத்தை மெதுவாக ஏறி அசத்துகிறது ஃபோர்டு எண்டெவர். ஆக்சிலரேட்டர் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ராக் மோடு தேர்வு செய்வதற்கு முன் கியரை நியூட்ரலில் வைத்துக் கொள்வது அவசியம். மற்ற டிரைவிங் மோடுகளில் இது தேவையில்லை.

ஃபோர்டு எண்டெவர் எக்ஸ்ட்ரீம் டிரைவ்- அனுபவம்!

அடுத்ததாக, ஒருபக்கம் சரிவாக அமைக்கப்பட்டிருந்த இடத்தில் எண்டெவரை செலுத்தினோம். எண்டெவர் எஸ்யூவி 30 டிகிரி வரை சாய்வாக செலுத்த முடியும் என்று பயிற்றுனராக வந்தவர் தெரிவித்தார். மிகுந்த நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுனர்கள் அதிகபட்சமாக 35 டிகிரி வரை சாய்வாக செலுத்த முடியுமாம். அந்த சரிவு மேடையில் இடது பக்க சக்கரங்களை ஏற்றி பாதியில் நிறுத்த சொன்னார். அப்போது இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் 24 டிகிரி சாய்வாக எண்டெவர் எஸ்யூவி நின்றிருப்பதை காட்டினார்.

ஃபோர்டு எண்டெவர் எக்ஸ்ட்ரீம் டிரைவ்- அனுபவம்!

அடுத்து, வலதுபுற சக்கரங்களை செலுத்தியபோது 23 டிகிரி சாய்வான கோணத்தில் ஃபோர்டு எண்டெவர் கடந்தது. இதுவும் மிக த்ரில்லாக இருந்தது. அடுத்ததாக, ஒரு அடி ஆழத்தில் விட்டு விட்டு அமைக்கப்பட்டிருந்த பள்ளங்கள் வழியாக ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியை மிதமான வேகத்தில் செலுத்தினோம். ஆச்சரியப்படும்படியாக, அப்படியொரு பெரிய பள்ளங்களை கடப்பது போன்ற உணர்வே உள்ளே தெரியவில்லை. சிறிய பள்ளங்களில் செல்லும்போது ஏற்படும் உணர்வுதான் தெரிந்தது.

ஃபோர்டு எண்டெவர் எக்ஸ்ட்ரீம் டிரைவ்- அனுபவம்!

இறுதியாக 70 டிகிரி கோணத்தில் மேடான இடத்தின் உச்சியிலிருந்து கீழே ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியை இறக்குவதற்கான வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், பாதுகாப்பு கருதி, காரை தானே ஓட்டுவதாக பயிற்றுனர் தெரிவித்தார். பின்னர், அவரிடம் காரை கொடுத்துவிட்டு, இருக்கைக்கு வைத்து சீட் பெல்ட்டை இறுக்கிக் கொண்டு அமர்ந்தோம்.

ஃபோர்டு எண்டெவர் எக்ஸ்ட்ரீம் டிரைவ்- அனுபவம்!

மேலிருந்து கீழே எண்டெவர் இறங்கியதும், தலைக்குப்புற விழுவது போன்று சறுக்கிக் கொண்டே சென்றது. ஹில் டிசென்ட் கன்ட்ரோல் பயன்படுத்தப்பட்டிருந்தது. இருப்பினும், பிரேக்கை பிடித்து காரை கட்டுப்படுத்தினார் அந்த பயிற்றுனர். அந்த சரிவை மிக எளிதாக கடந்து கீழே இறங்கியது எண்டவெர். இது மிகவும் த்ரில்லான அனுபவமாக இருந்தது.

ஃபோர்டு எண்டெவர் எக்ஸ்ட்ரீம் டிரைவ்- அனுபவம்!

நீர் நிலைகளை கடக்கும் திறனும் ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியில் இருக்கிறது. ஆனால், அந்த தொழில்நுட்பத்தை பரிசோதிப்பதற்கான நீர் நிறைந்த தடம் அமைக்கப்படவில்லை என்பது சற்று ஏமாற்றம். அதேநேரத்தில், மிக கரடுமுரடான அந்த நிலப்பரப்பு முழுவதையும் மிக எளிதாக கடந்தது. குறிப்பாக, இந்த எஸ்யூவியின் தொழில்நுட்பங்களும், ஸ்டீயரிங் சிஸ்டம் மற்றும் சஸ்பென்ஷனும் மிகச் சிறப்பானதாக இருந்ததை உணர முடிந்தது.

ஃபோர்டு எண்டெவர் எக்ஸ்ட்ரீம் டிரைவ்- அனுபவம்!

ஆஃப்ரோடு தொழில்நுட்பங்களை முழுமையாக பயன்படுத்தும்போது 80 சதவீதம் கட்டுப்பாடு காரின் கையில்தான் இருக்கிறது. ஸ்டீயரிங் வீலை மட்டுமே சரியாக இயக்கினால் போதுமானது. முதல்முறையாக இந்த ஆஃப்ரோடு சாகசத்தில் ஈடுபட்டவர்கள் கூட மிக எளிதாக தடைகளை கடக்க முடிந்ததாக எம்மிடம் தெரிவித்தனர். ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியின் ஸ்டீயரிங்கும் மிக இலகுவாகவும், நம்பிக்கையூட்டுவதாகவும் உள்ளது.

ஃபோர்டு எண்டெவர் எக்ஸ்ட்ரீம் டிரைவ்- அனுபவம்!

ரூ.35 லட்சம் ஆன்ரோடு விலையில் புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியை வாங்கி வைத்திருப்பவர்கள் கூட, அதனை இதுபோன்ற அபாயகரமான இடங்களில் வைத்து சோதிக்க தயங்குவார்கள். ஆஃப்ரோடு சாகசங்களில் ஈடுபடுவர்கள் கூட முறையான பயிற்றுனர் இல்லாமல், இதுபோன்ற சாகசங்களில் ஈடுபடுவதை தவிர்க்க முற்படுவர்.

ஃபோர்டு எண்டெவர் எக்ஸ்ட்ரீம் டிரைவ்- அனுபவம்!

ஆஃப்ரோடு சாகசங்களில் நிபுணத்துவம் பெற்ற பயிற்றுனர்களின் வழிகாட்டுதல்களுடன், ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியின் ஆஃப்ரோடு தொழில்நுட்பங்களை முழுமையாக அறிந்து கொள்ளவும், நம்பிக்கையுடன் இதுபோன்ற சாகசங்களில் வாடிக்கையாளர்கள் ஈடுபடுவதற்கும் இந்த நிகழ்ச்சி மிகச் சிறந்த வாய்ப்பாக அமைந்தது. பலர் குடும்பத்துடன் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டு ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியில் பயிற்றுனர் உதவியுடன் ஓட்டியும், பயணித்தும் வியந்தனர்.

ஃபோர்டு எண்டெவர் எக்ஸ்ட்ரீம் டிரைவ்- அனுபவம்!

மோசமான சாலைகளிலும், நிலங்களிலும் ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியை நம்பிக்கையுடன் செலுத்துவதற்கு இதன் தொழில்நுட்பங்கள் பெரிதும் உறுதுணையாக நிற்கின்றன என்றால் மிகையில்லை. இன்றைய எக்ஸ்ட்ரீம் டிரைவில் ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியை ஓட்டிய விதத்தில், தோற்றத்தில் மட்டுமல்ல, தொழில்நுட்பத்திலும், கட்டமைபப்பிலும் இது ஒரு 'உண்மையான' எஸ்யூவி என்பதை மறுப்பதற்கில்லை.

ஃபோர்டு எண்டெவர் எக்ஸ்ட்ரீம் டிரைவ்- அனுபவம்!

இதுபோன்ற கரடுமுரடான சாலைகளுக்கு ஏற்ற தொழில்நுட்பங்களை பெற்றிருக்கும் ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியின் தரை இடைவெளி மிக அதிகம். மேலும், ஆஃப்ரோடு சாகசகங்களுக்கு தக்கவாறுதான் சஸ்பென்ஷன் அமைப்பு இருக்கும் என்று எண்ணுவது இயற்கை. ஆனால், அதிவேகத்தில் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது இதன் சஸ்பென்ஷன் மிக சிறப்பாகவும், கையாள்வதற்கு ஏற்றதாகவும் இருக்கும் என்பது கூடுதல் தகவல்.

புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியின் படங்கள்!

புதியத ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

Most Read Articles
மேலும்... #ford
English summary
Read in Tamil: The Ford Endeavour's Off-Road capabilities get tested to the max as we take the big Ford off the beaten path.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X