போட்டியாளர்களை விஞ்சும் விதத்திலான ஃபோர்டு ஆஸ்பயர் காரின் சிறப்புகள்!

மாருதி டிசையர் உள்ளிட்ட ஜாம்பவான் கார் மாடல்களை எதிர்கொள்ள வேண்டுமெனில், சில கூடுதல் சிறப்பம்சங்களை கொண்டிருக்க வேண்டும்.

அப்போதுதான், வாடிக்கையாளர்களை தம் பக்கம் இழுக்க முடியும். இதனை மனதில் வைத்து ஃபோர்டு ஆஸ்பயர் காரில் இடம்பெற்றிருக்கும் பிரத்யேகமான சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

01. லெதர் அப்ஹோல்ஸ்டரி

01. லெதர் அப்ஹோல்ஸ்டரி

இந்த செக்மென்ட்டிலேயே முதல்முறையாக லெதர் அப்ஹோல்ஸ்டரியுடன் வந்திருக்கும் முதல் மாடல் ஃபோர்டு ஆஸ்பயர்தான். இந்த காரில் பீஜ் வண்ணத்திலான லெதர் அப்ஹோல்ஸ்டரி கொடுக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் டேஷ்போர்டு கருப்பு வண்ணக் கலவையுடன் மிக ரம்மியமான இன்டிரியரை பெற்றிருக்கிறது.

02. ஸ்டோரேஜ் வசதி

02. ஸ்டோரேஜ் வசதி

பெரும்பாலான கார்களில் காருக்குள் பொருட்கள் மற்றும் பாட்டில் வைப்பதற்கான இடவசதி குறைவாக இருக்கும். ஆனால், ஃபோர்டு ஆஸ்பயர் காரின் கேபினில் பொருட்கள் மற்றும் பாட்டில்களை வைப்பதற்கு 20 ஸ்டோரேஜ் அறைகள் மற்றும் ஹோல்டர்கள் உள்ளன.

03. டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ்

03. டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ்

இந்த செக்மென்ட்டில் முதல்முறையாக டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் கொண்ட மாடலாக ஃபோர்டு ஆஸ்பயர் வந்திருக்கிறது. 1.5 லிட்டர் பெட்ரோல் மாடலில் மட்டும், டைட்டானியம் என்ற ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டும் இந்த கியர்பாக்ஸ் கொண்ட மாடல் கிடைக்கும். சாதாரண ஆட்டோமேட்டிக் மாடலைவிட அதிக மைலேஜ், சிறப்பான செயல்திறன், மென்மையான ஓட்டுதல் சுகம், போக்குவரத்து நெரிசலுக்கு உகந்தது என பல்வேறு நன்மைகளை கொண்டது.

04. ஏர்பேக்ஸ்

04. ஏர்பேக்ஸ்

பேஸ் மாடல் உள்பட அனைத்து வேரியண்ட்டுகளிலும் ஓட்டுனர் மற்றும் முன் இருக்கை பயணிக்கான டியூவல் ஏர்பேக்குகள் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றிருக்கிறது. டாப் வேரியண்ட்டில் பக்கவாட்டு மோதல்களின்போது பயணிகளை காக்கும் சைடு கர்டெயின் ஏர்பேக் உள்பட 6 ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது.

05. ஸ்மார்ட் சாவி

05. ஸ்மார்ட் சாவி

ஃபோர்டு மை கீ என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட் சாவி மூலமாக, விரும்பும் ஓட்டுதல் நிலைகளுக்கு எஞ்சின் செயல்திறனை மாற்றிக் கொள்ள முடியும். மேலும், அதிகபட்ச வேகத்தை கூட குறைத்து வைத்துக் கொள்ள முடியும். மியூசிக் சிஸ்டம் வால்யூம் கன்ட்ரோலையும், ஓட்டுனர் சீட் பெல்ட் அணிவதை நினைவூட்டும் வசதிகளையும் இந்த ஸ்மார்ட் சாவி மூலமாக பெற முடியும்.

06. டாக்கிங் ஸ்டேஷன்

06. டாக்கிங் ஸ்டேஷன்

காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஸ்மார்ட்போன் அல்லது நேவிகேஷன் சாதனத்தை இணைத்துக் கொள்வதற்கும், வைத்துக் கொள்வதற்கும் ஏதுவாக மைஃபோர்டு டாக்கிங் ஸ்டேஷன் என்ற இடவசதி கொடுக்கப்பட்டிருக்கிறது. இதுவும் போட்டி கார் மாடல்களில் இல்லாத ஒரு வசதியாகவே கூறலாம்.

07. ஃபோர்டு சிங்க் வசதி

07. ஃபோர்டு சிங்க் வசதி

கார் ஓட்டும்போது போன் அழைப்புகளை வாய்மொழி உத்தரவு மூலமாக எடுத்து பேசுவதற்கும், அழைப்புகளை செய்வதற்கும் உதவியாக இருக்கும். அதேபோன்று, வாய்மொழி உத்தரவு மூலமாக மியூசிக் சிஸ்டத்தை கட்டுப்படுத்த உதவும். அதைவிட, விபத்து ஏற்படும்பட்சத்தில், தானியங்கி முறையில், அவசர உதவி மையங்களுக்கு தகவல் அனுப்பும் வசதியும் உள்ளது.

08. சவாலான விலை

08. சவாலான விலை

முன்னணி போட்டியாளர்களின் விலையுடன் ஒப்பிடும்போது, ஃபோர்டு ஆஸ்பயர் மிக சவாலான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. ரூ.4.90 லட்சம் முதல் ரூ.8.24 லட்சம் வரையிலான டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த கார் கிடைக்கிறது.

Most Read Articles
English summary
Here is something about the Figo Aspire we love the most, apart from its attractive price and its powertrain. Here are 7 things that we love about the car and that will interest a potential customer who wants something worth his or her money:
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X