இது உங்கள் சாய்ஸ்... புதிய ஃபோர்டு ஆஸ்பயர் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

Posted By:

சாலை தெரியாத அளவுக்கு வாகன தலைகளால் மூடப்பட்டு தத்தளிக்கும் நகர சாலைகளுக்கு இப்போது பெரும் வரப்பிரசாதமாக இருப்பது 4 மீட்டருக்குள் அடங்கிவிடும் செடான் கார்கள். தினசரி பயன்பாட்டுக்கும், நீண்ட தூர பயணங்களுக்கும், சிறிய குடும்பத்தினரின் தேவைகளை கச்சிதமாக பூர்த்தி செய்வதில் இந்த காம்பேக்ட் செடான் கார்களுக்கான வரவேற்பை பன்மடங்கு தூக்கி பிடித்துள்ளது.

அந்த வகையில், மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், ஹூண்டாய் எக்ஸ்சென்ட் போன்ற கார்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் காம்பேக்ட் செடான் கார் மார்க்கெட்டில் இப்போது ஃபோர்டு நிறுவனம் தனது ஆஸ்பயர் காருடன் களம் காண இருக்கிறது. ஈக்கோஸ்போர்ட் மூலம் தனது ஷோரூம்களை பிஸியாக்கிய ஃபோர்டு நிறுவனத்துக்கு ஆஸ்பயரின் வருகையால், அந்த பரபரப்பு மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

புதிய தலைமுறை மாடலாக வரும் ஃபிகோ காரில் பூட்ரூமை சேர்த்து, காம்பேக்ட் செடானாக மாற்றப்பட்டிருக்கும் புதிய ஃபோர்டு ஆஸ்பயர் கார் நகர்ப்புற வாடிக்கையாளர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த புதிய காம்பேக்ட் செடான் காரின் பெட்ரோல், ஆட்டோமேட்டிக் மாடலையும், டீசல் மாடலையும் ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் வைத்து டெஸ்ட் டிரைவ் செய்தோம். இந்த காரில் இருக்கும் சாதக, பாதகங்கள் குறித்த தகவல்களை உங்களுடன் இந்த செய்தித் தொகுப்பில் பகிர்ந்து கொள்கிறோம்.

 முகப்பு டிசைன்

முகப்பு டிசைன்

இதன் முகப்பில் உள்ள க்ரில் அமைப்பு அஸ்டன் மார்ட்டின் கார்களை நினைவூட்டுகிறது. இதன் சரிவக முகப்பு க்ரில் 4 க்ரோம் பட்டைகளுடன் வலுவானதாகவும், கவர்ச்சியாகவும் காட்சி தருகிறது. அதேபோன்று, ஹெட்லைட் க்ளஸ்ட்டர் அழகிய வளைவுகளுடன் க்ரோம் கம்பி கொண்ட எல்லையுடன் வரையறுக்கப்பட்டிருக்கிறது. பம்பரும் வலுவான அமைப்பை கொண்டிருப்பதால், போட்டியாளர்களை ஒப்பிடும்போது முகப்பு கம்பீரமாவும், அழகாகவும் தெரிகிறது.

பக்கவாட்டு டிசைன்

பக்கவாட்டு டிசைன்

கூரை வடிவமைப்பு, கருப்பு நிற பி பில்லர், கட்டுறுதியான உணர்வை தரும் பாடி லைன் போன்றவை கவர்ச்சியாக இருக்கின்றன. 4 மீட்டருக்கும் குறைவான செடான் காரை வடிவமைக்கும்போது ஏற்படும் சவால்களை மிக அழகாக எதிர்கொண்டு பூட்ரூமை காருடன் நேர்த்தியுடன் ஒட்டியிருக்கின்றனர். டெயில் லைட் க்ளஸ்ட்டிலிருந்து புறப்பட்டு முன்னோக்கி செல்லும் பாடி லைன் காரின் பக்கவாட்டை கட்டுறுதியான கார் போன்ற உணர்வை தருகிறது. இன்டிகேட்டர் விளக்குகள் கொண்ட ரியர் வியூ கண்ணாடிகள் பக்கவாட்டுக்கு அழகு சேர்க்கிறது. ஆனால், பின்புறத்தில் 14 இன்ச் அலாய் வீல்கள் காருடன் பொருந்தாமல் சிறியதாக தெரிகின்றன.

பின்புற டிசைன்

பின்புற டிசைன்

முகப்பு போன்றே பின்புற டிசைன் அழகாக இருக்கிறது. கச்சிதமான அமைப்புடைய டெயில் லைட் க்ளஸ்ட்டர், பூட்ரூம் கதவுக்கு குறுக்காக கொடுக்கப்பட்டிருக்கும் க்ரோம் பட்டை ஆகியவை கவர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கின்றன. இந்த க்ரோம் பட்டை இந்திய வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோரை கவரும் விஷயமாக இருக்கும்.

இன்டிரியர்

இன்டிரியர்

ஃபோர்டு கார்களுக்கு உரிய தனித்துவ இன்டிரியர் டிசைன் அம்சங்கள் நம்மை உள்ளே வரவேற்கின்றன. டேஷ்போர்டு மற்றும் அதிக இடவசதி கொண்ட உணர்வை ஏற்படுத்தும் கேபின் ஆகியவை கார் பிரியர்களை வசீகரிக்கும். பீஜ் மற்றும் பியானோ பிளாக் என்ற கருப்பு நிறத்திலான இரட்டை வண்ண இன்டிரியர் அனைவரையும் கவரும். உட்புற பிளாஸ்டிக் பாகங்களின் தரம், இருக்கையின் சொகுசு என அனைத்து விதத்திலும் காம்பேக்ட் செடான் கார் வாங்க விரும்புவர்களின் எதிர்பார்ப்புகளை கச்சிதமாக பூர்த்தி செய்யும்.

முன் இருக்கைகள்

முன் இருக்கைகள்

லெதர் இருக்கைகள், அட்ஜெஸ்ட்டபிள் ஹெட்ரெஸ்ட் போன்ற வசதிகளுடன் மிக சொகுசான ஓட்டுனர் மற்றும் முன்பக்க பயணி இருக்கையை கொண்டுள்ளது. இதனால், தினசரி அலுவலகங்களுக்கு காரில் செல்வோர்க்கான சிறந்த சாய்ஸில் இந்த காருக்கும் நிச்சயம் ஒரு முக்கிய இடமுண்டு என்று கூறலாம்.

பின்புற இருக்கை

பின்புற இருக்கை

பின்புற இருக்கையில் மூன்று அமர்ந்து செல்ல போதுமான இடவசதியை அளிக்கிறது. ஹெட்ரூம், லெக் ரூம் சிறப்பாக இருக்கிறது. ஆனால், மூன்று பேர் அமரும்போது தோள்பட்டைகளுக்கு சிறிது நெருக்கடி தெரிகிறது. இந்த வகை கார்களில் இதுவே அதிகபட்சமாக இருக்க முடியும் என்பதால், அதனை பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை என்றே சொல்லலாம்.

பூட் ரூம்

பூட் ரூம்

ஃபோர்டு ஆஸ்பயர் காரில் 359 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் ரூம் வசதி இருக்கிறது. ஹூண்டாய் எக்ஸ்சென்ட் மற்றும் ஹோண்டா அமேஸ் கார்களைவிட குறைவுதான் என்றாலும், சிறிய குடும்பத்தினர் வெளியூர் செல்லும்போது தேவையான பொருட்களை எடுத்து செல்ல போதிய இடவசதியை வழங்கும். பொருட்களை வைத்து எடுப்பதற்கும் எளிதாக இருக்கிறது.

ஸ்டீயரிங் வீல்

ஸ்டீயரிங் வீல்

ஃபோர்டு கார்களுக்கு உரிய நம்பிக்கையான ஸ்டீயரிங் வீல் இந்த காரிலும் இடம்பெற்றிருக்கிறது. 3 ஸ்போக்ஸ் ஸ்டீயரிங் வீலின் தரமாகவும், பிடித்து ஓட்டுவதற்கு லாவகரமாகவும் உள்ளது.

இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்

இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்

இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் டிசைன் கவர்ச்சியாக இருப்பதுடன், எழத்துக்கள், முட்கள் தெளிவாக பார்க்கும்படியாகவும், ரசனையாகவும் இருக்கிறது.

மை ஃபோர்டுடாக்

மை ஃபோர்டுடாக்

ஃபோர்டு ஆஸ்பயர் பேஸ் மாடல்களில் மொபைல்போன்களை சார்ஜ் செய்வதற்கும், நேவிகேஷன் சாதனங்களை வைத்துக் கொள்வதற்கும் இந்த டாக் ஸ்டேஷன் ஏதுவாக இருக்கும். மேலும், இதனுடன் எம்பி3 ப்ளேயரை இணைத்துக் கொள்ள முடியும். தேவையில்லாத பட்சத்தில் மூடி வைத்துவிடலாம்.

ஃபோர்டு சிங்க் ஆப்

ஃபோர்டு சிங்க் ஆப்

இந்த அப்ளிகேஷன் ஆபத்து சமயங்களில் ஆஸ்பயரில் பயணிப்போருக்கு ஆபத்பாந்தவனாக செயல்பட்டு உதவும். அத்துடன், போன் அழைப்புகளை எளிதாக கையாளவும் உதவும். எதிர்பாராத சமயங்களில் கார் விபத்தில் சிக்கினால், இந்த ஃபோர்டு சிங்க் அப்ளிகேஷன் மூலம் ஆம்புலன்ஸ் சேவை மையங்களுக்கு தகவல் பறந்துவிடும். விபத்தில் சிக்கிய இடத்தை மீட்புத் துறையினர் எளிதாக கண்டறிந்து கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு மிக விரைவான மருத்துவ உதவிகள் கிடைக்கும். மேப் மை இன்டியா வரைபட உதவியுடன் ஃபோர்டு சிங்க் ஆப் மூலமாக அருகிலுள்ள ரெஸ்ட்டாரண்டுகள், பெட்ரோல் நிலையங்கள் தகவல்களையும், கிரிக்கெட் ஸ்கோரையும் கூட தெரிந்துகொள்ள முடியும்.

ஃபோர்டு மை கீ

ஃபோர்டு மை கீ

ஃபோர்டு ஆஸ்பயர் காருக்கு வழங்கப்படும் ஸ்மார்ட் சாவி மூலமாக உங்கள் விருப்பத்திற்கும், பாதுகாப்பிற்கும் தகுந்தவாறு அதிகபட்ச வேகத்தை கட்டுப்படுத்தி புரொகிராம் செய்து கொள்ளலாம். அதேபோன்று, மியூசிக் சிஸ்டம் வால்யூம் அதிகபட்சமாக எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை முதலிலேயே செட் செய்து வைத்துவிடலாம். முன் இருக்கையில் சீட் பெல்ட் போட்டால்தான் ஆடியோ சிஸ்டம் ஆன் செய்யும் வசதியையும் இதில் செட் செய்து கொள்ளளாம்.

ஸ்டோரேஜ் வசதி

ஸ்டோரேஜ் வசதி

சிறப்பான ஸ்டோரேஜ் வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. முன்புறத்தில் 1.5 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் வாட்டர் பாட்டில்களை வைத்துக் கொள்வதற்கான ஸ்டோரேஜ் வசதி உள்ளன. முன்புற இருக்கைகளுக்கு நடுவிலும் பாட்டில் ஹோல்டர்கள் உள்ளன. சீட்டிற்கு பின்பகுதியில் பாக்கெட்டும் உள்ளன. இதில், பத்திரிக்கைகள், நாளிதழ்களை வைத்துக் கொள்ளலாம்.

இதர வசதிகள்

இதர வசதிகள்

யுஎஸ்பி மற்றும் ஆக்ஸ் இன் போர்டு கொண்ட மியூசிக் சிஸ்டம், பவர் ஃபோல்டிங் சைடு மிரர்கள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் போன்றவை இதர முக்கிய வசதிகளாக இருக்கின்றன. ஏசி.,யும் விரைவாக குளிர்ச்சியை தருகிறது.

எஞ்சின்

எஞ்சின்

டெஸ்ட் டிரைவ் செய்த டீசல் மாடலில் 100 பிஎஸ் பவரையும், 215 என்எம் டார்க்கையும் வழங்கும் 1.5 லிட்டர் எஞ்சின் உள்ளது. பெட்ரோல் கார் விரும்பிகள் கூட இந்த காரை ஓட்டினால், இதற்கு தாவிவிடுவர். அந்தளவுக்கு மிகச்சிறப்பான பவர் டெலிவிரியை அளிக்கிறது. மணிக்கு 180 கிமீ வேகம் வரை தொட முடிந்தது. அதேநேரத்தில், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்ட ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலையும் ஓட்டி பார்த்தோம். ஆனால், டீசல் எஞ்சினை ஓட்டி விட்டு உடனே, பெட்ரோல் எஞ்சினை ஓட்டியபோது மிகவும் சோம்பேறியாக இருப்பது போன்ற உணர்வை தந்தது. எந்தவொரு பெட்ரோல் மாடலும், டீசலுக்கு இணையான டார்க்கை வழங்க இயலாது என்பதே இதற்கு காரணம். இந்த கார் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடலில், மேனுவல் கியர்பாக்ஸுடன் வருவதும் குறிப்பிடத்தக்கது.

கையாளுமை

கையாளுமை

ஃபோர்டு கார்கள் கையாளுமையில் மிகச் சிறப்பானவை என்பது அதன் உரிமையாளர்கள் தெரிவிக்கும் ஏகோபித்த கருத்து. அதனை இந்த காரும் தவறவிடவில்லை. வேகம் அதிகரிக்க அதிகரிக்க ஸ்டீயரிங் வீல் சற்று கடுமையாகி ஓட்டும்போது மிக நம்பிக்கையான உணர்வை அளிக்கிறது. வளைவுகளில் கூட மிகச் சிறப்பான கையாளுமையை காண முடிந்தது.

கேபின் சப்தம்

கேபின் சப்தம்

டீசல் எஞ்சின் மாடல்களில் அதிர்வுகள், சப்தம் கேபினுக்குள் அதிகமிருப்பது குறையாக கூறலாகாது. அதேநேரத்தில், இந்த காரின் கேபினுக்குள் இறைச்சல் சப்தம் சற்று அதிகமாகவே இருப்பதாக தோன்றியது. இன்னும் கொஞ்சம் சிறப்பான சப்த தடுப்பு கட்டமைப்பை கொடுத்திருக்கலாம்.

ஓட்டுதல் தரம்

ஓட்டுதல் தரம்

துல்லியமான க்ளட்ச், சிறப்பான டார்க்கை வெளிப்படுத்தும் டீசல் எஞ்சின், கச்சிதமாகவும், மென்மையான உணர்வை தரும் கியர்பாக்ஸ், சிறப்பான கையாளுமை போன்றவற்றால் இந்த காரின் ஓட்டுதல் தரம் மிகச்சிறப்பானதாகவே இருக்கிறது. காரை ஓட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்று ஆர்வம் கொண்டுள்ளோரை நிச்சயம் இந்த கார் சுண்டி இழுக்கும்.

நிறைகள்

நிறைகள்

  • அனைத்து வேரியண்ட்டுகளிலும் டியூவல் ஏர்பேக்ஸ்
  • கவர்ச்சியான டிசைன்
  • ஸ்டோரேஜ் வசதி
  • தரமான பாகங்கள்
  • கேபின் இடவசதி
  • போட்டியாளர்களைவிட பேஸ் மாடலில் அதிக வசதிகள்
குறைகள்

குறைகள்

  • மைலேஜ்
  • நிறைவை தராத பெட்ரோல் எஞ்சின்
டிரைவ்ஸ்பார்க் தீர்ப்பு

டிரைவ்ஸ்பார்க் தீர்ப்பு

பேஸ் மாடலிலேயே டியூவல் ஏர்பேக்ஸ், போட்டியாளர்களைவிட அதிக வசதிகள் கொண்ட காராக வருகிறது. அதேநேரத்தில், விலையை மட்டும் போட்டியாளர்களுக்கு நெருக்கடியாக நிர்ணயித்துவிட்டால், இந்த கார் நிச்சயம் நல்ல வரவேற்பை பெறும் வாய்ப்புள்ளது. டிசைன், எஞ்சின், இடவசதி, வசதிகள் என அனைத்திலும் ஒரு நல்ல பேக்கேஜ் கொண்ட காம்பேக்ட் செடானாக இதனை கூறலாம். விலையை பொறுத்தே இதன் வெற்றி...!!

 விற்பனைக்கு எப்போது?

விற்பனைக்கு எப்போது?

அடுத்த மாதம் துவக்கத்தில் இந்த புதிய கார் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2 விதமான பெட்ரோல் எஞ்சின் மற்றும் ஒரு டீசல் எஞ்சின் மாடல்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த காரின் விற்பனை தேதி குறித்த தகவல்களை தெரிந்துகொள்ள டிரைவ்ஸ்பார்க் தளத்தை பின்தொடருங்கள்.

டெஸ்ட் டிரைவ்

டெஸ்ட் டிரைவ்

டெஸ்ட் டிரைவ் மற்றும் ரிப்போர்ட் தயாரிப்பு:

ஜோபோ குருவில்லா அண்ட் டிரைவ்ஸ்பார்க் டீம்

ஜோபோ குருவில்லா டுவிட்டர் பக்கம்

ஜோபோ குருவில்லா ஃபேஸ்புக் பக்கம்

 
English summary
Ford's much awaited compact sedan is here... the Ford figo aspire. Whether it is set to become an instant hit like the Figo and Ecosport models from their stable, it remains to be seen. Does it have what it takes to topple the segment leader... Maruti dzire? Let's find our together.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark