மாருதி டிசையர் Vs ஃபோர்டு ஆஸ்பயர்: ஒப்பீட்டு பார்வை

Written By:

4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட மினி செடான் மார்க்கெட்டில் 5வது மாடலாக புதிய ஃபோர்டு ஆஸ்பயர் களமிறங்கியுள்ளது. போட்டியாளர்கள் தொட முடியாத உச்சத்தில் இருந்து வரும் மாருதி டிசையர், வலுவான காரணங்களும், சிறப்பம்சங்களும் கொண்ட ஹோண்டா அமேஸ் போன்ற இந்த மார்க்கெட்டின் ஜாம்பவான்களை விஞ்சி சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்த கார் வந்துள்ளது.

இந்த நிலையில், மினி செடான் கார் மார்க்கெட்டில் மட்டுமின்றி, விற்பனையில் இந்தியாவின் நம்பர்- 1 கார் மாடலாக வலம் வரும் மாருதி டிசையருடன், புதிய ஃபோர்டு ஆஸ்பயரின் சிறப்பம்சங்களை ஒப்பீடு செய்து வழங்கியிருக்கிறோம். இந்த இரண்டில் எது வாங்குவது உகந்தது என்பதையும் இந்த செய்தித் தொகுப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

விலை ஒப்பீடு

விலை ஒப்பீடு

மாருதி டிசையர்:

ரூ.4.89 லட்சம் முதல் ரூ.8.24 லட்சம் வரை

புதிய ஃபோர்டு ஆஸ்பயர்

ரூ.5.16 லட்சம் முதல் ரூ.7.90 லட்சம் வரை

டிசைன்: மாருதி டிசையர்

டிசைன்: மாருதி டிசையர்

சமீபத்தில் கூடுதல் அலங்காரங்களுடன் மாருதி டிசையர் கார் விற்பனைக்கு வந்தது. க்ரோம் பட்டை க்ரில் அமைப்பு, கருப்பு பூச்சு பின்னணி உடைய ஹெட்லைட், மறு வடிவமைப்புடன் கூடிய பம்பர்கள், புதிய அலாய் வீல்களுடன் வந்திருக்கிறது. முன்புறத்தில் கம்பீரமான மாடலாகவே இருந்தாலும், இந்த காரின் பூட் ரூம் ஒட்டப்பட்ட விதம் இன்னும் குறையாகவே இருக்கிறது.

டிசைன்: ஃபோர்டு ஆஸ்பயர்

டிசைன்: ஃபோர்டு ஆஸ்பயர்

அஸ்டன் மார்ட்டின் கார்களை போன்ற க்ரில் அமைப்பு, அழகான ஹெட்லைட், சிறப்பான முறையில் காருடன் இயைந்து நிற்கும் பூட் ரூம் ஆகியவை இதனை ஒரு சிறந்த டிசைன் கொண்ட மாடலாக காட்டுகிறது. அலாய் வீல்கள் டிசைனும் கவர்கிறது. டிசைனை பொறுத்தவரையில், ஃபோர்டு ஆஸ்பயர் முன்னிலை பெறுகிறது.

எஞ்சின்: மாருதி டிசையர்

எஞ்சின்: மாருதி டிசையர்

மாருதி டிசையர் காரில் அதிகபட்சமாக 83 பிஎச்பி பவரையும், 115 என்எம் டார்க்கையும் வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினும், 74 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க்கையும் வழங்கும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சினும் பொருத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக, ஃபியட் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படும் டீசல் எஞ்சின் வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மையை பெற்றுள்ளது. பெட்ரரோல் மாடல் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்கிறது. டீசல் மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்கிறது.

எஞ்சின்: ஃபோர்டு ஆஸ்பயர்

எஞ்சின்: ஃபோர்டு ஆஸ்பயர்

இரண்டுவிதமான பெட்ரோல் எஞ்சின்கள் மற்றும் ஒரு டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும். இந்த காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 87 பிஎச்பி பவரையும், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 110 பிஎச்பி பவரையும், 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 99 பிஎச்பி பவரையும் வழங்கும். இந்த காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் மாடலும், 1.5 லிட்டர் டீசல் மாடலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்கும். இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் 6 ஸ்பீடு டியூவல் கிளட்ச் [ஆட்டோமேட்டிக்] கியர்பாக்ஸ் மாடலில் கிடைக்கிறது. செயல்திறனில் ஃபோர்டு ஆஸ்பயரும், நம்பகத்தன்மையில் மாருதி டிசையரும் முன்னிலை பெறுகின்றன.

மைலேஜ்: மாருதி டிசையர்

மைலேஜ்: மாருதி டிசையர்

மாருதி டிசையர் காரின் எஞ்சின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 20.85கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 26.59 கிமீ மைலேஜையும் தருவதாக மாருதி தெரிவிக்கிறது.

மைலேஜ்: ஃபோர்டு ஆஸ்பயர்

மைலேஜ்: ஃபோர்டு ஆஸ்பயர்

மறுபுறத்தில் ஃபோர்டு ஆஸ்பயர் காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு18.2 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 25.8 கிமீ மைலேஜையும், 1.5 லிட்டர் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 17.2 கிமீ மைலேஜையும் தருவதாக தெரிவிக்கப்படுகிறது. மைலேஜில் கில்லி மாருதி டிசையர்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நடைமுறையிலும் கூட...!!

முக்கிய வசதிகள்: மாருதி டிசையர்

முக்கிய வசதிகள்: மாருதி டிசையர்

ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், புளூடூத் கனெக்ட்டிவிட்டி கொண்ட மியூசிக் சிஸ்டம், க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் போன்றவை இடம்பெற்றிருக்கின்றன. 316 லிட்டர் கொள்ளளவு கொண்ட பொருட்கள் வைப்பதற்கான பூட் ரூமும், 42 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்கும் உள்ளது.

முக்கிய வசதிகள்: ஃபோர்டு ஆஸ்பயர்

முக்கிய வசதிகள்: ஃபோர்டு ஆஸ்பயர்

புதிய ஃபோர்டு ஆஸ்பயரில் காரில் ஏராளமான நவீன தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. ஸ்மார்ட் சாவி, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ஃபோர்டு சிங்க் தொழில்நுட்பம் போன்றவை இந்த காரை முன்னிலைப்படுத்துகின்றன. இந்த காரில் 359 லிட்டர் கொள்ளவு கொண்ட பூட் ரூமும், 42 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்கும் உள்ளது.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

மாருதி டிசையரின் டாப் வேரியண்ட்டில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டியூவல் ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், ஃபோர்டு ஆஸ்பயர் பேஸ் மாடலிலேயே டியூவல் ஏர்பேக்குகள் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக உள்ளது. மேலும், டாப் வேரியண்ட்டில் 6 ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. எனவே, பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த மாடலாக ஃபோர்டு ஆஸ்பயர் முன்னிலை பெறுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தீர்ப்பு

டிரைவ்ஸ்பார்க் தீர்ப்பு

வசதிகள், சிறப்புகள், டிசைன் என புதிய ஃபோர்டு ஆஸ்பயர் ஓர் சிறந்த பேக்கேஜ் கொண்ட மாடலாக இருக்கிறது. ஆனால், நடைமுறையில் வாடிக்கையாளர்களுக்கு சிக்கனமான பராமரிப்பு, அதிக மைலேஜ், தரமிக்க இன்டிரியர், மாருதியின் சர்வீஸ் நெட்வொர்க் போன்றவை மாருதி டிசையர் பக்கமே திரும்ப வைக்கிறது. எனவே, இது விருப்பத்தின் அடிப்படையிலான தேர்வாக அமையும். அடுத்த ஸ்லைடுக்கு வாருங்கள்.

எது பெஸ்ட்?

எது பெஸ்ட்?

டிசைன் மற்றும் சிறந்த பேக்கேஜை விரும்புவோர்க்கு ஃபோர்டு ஆஸ்பயர் பெஸ்ட் சாய்ஸ். நடைமுறையில் உள்ள சிக்கல்களை குறைக்கும் மாடலை விரும்புவோர்க்கு மாருதி டிசையர் சிறப்பானது. முந்தைய ஸ்லைடரில் உள்ள காரணங்களை தவிர்த்து, இரு கார்களின் பயன்பாடு அடிப்படையில் தரமிக்க உட்புற பாகங்கள், அதிக சொகுசான முன் இருக்கைகள், ஓட்டுனர் எளிதாக இயக்கும் வகையிலான சுவிட்சுகள் கொண்ட சென்டர் கன்சோல், சிறந்த சஸ்பென்ஷன் அமைப்பு, அதிக நிலைத்தன்மை போன்றவற்றை பெற்ற மாடல் மாருதி டிசையர். எனவே, மாருதி டிசையர் பக்கமே எமது தலையும் சாய்கிறது.

 

English summary
The newest entry to this segment however is the Ford Figo Aspire, the first sub-4 meter sedan in India from Ford. So how does it fare when compared to the Swift Dzire in terms of pricing, design, engine specification, features and safety? Here's a detailed look at the two:
Story first published: Friday, August 14, 2015, 13:47 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more