புதிய ஃபோர்டு ஃபிகோ கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஃபோர்டு நிறுவனத்திற்கு இந்தியாவில் முகவரியை ஏற்படுத்தி கொடுத்த மாடல் ஃபிகோ கார். கடந்த 2011ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதியால் அறிமுகம் செய்யப்பட்ட இந்த பட்ஜெட் கார் குறுகிய காலத்தில் பெரிய அளவிலான வரவேற்பை பெற்றது. வாடிக்கையாளர்களின் வரவேற்பை பார்த்து உற்சாகமான ஃபோர்டு கார் நிறுவனம் 2012ல் ஃபிகோ காருக்கு புதுப்பொலிவு கொடுத்தது.

துள்ளுவதோ இளமை... புதிய ஃபோர்டு ஃபிகோ கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த நிலையில், புதிய போட்டியாளர்களின் வருகையால் சந்தைப் போட்டி அதிகரித்ததையடுத்து, முற்றிலும் புதிய ஃபோர்டு ஃபிகோ கார் 2015ல் களமிறக்கப்பட்டது. வடிவமைப்பு, வசதிகளில் முற்றிலும் வேறுபட்ட இந்த மாடல் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் சிறந்த பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட கார் மாடல்களில் ஒன்றாக வந்தது. எனினும், முதல் தலைமுறை மாடல் பெற்ற வரவேற்பு அளவுக்கு இந்த மாடல் பெறவில்லை.

துள்ளுவதோ இளமை... புதிய ஃபோர்டு ஃபிகோ கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த நிலையில், மூன்றாண்டுகளுக்கு பின்னர் தற்போது பல்வேறு புதிய மாற்றங்கள் மற்றும் கூடுதல் வசதிகளுடன் 2019 மாடலாக ஃபோர்டு ஃபிகோ கார் இந்தியாவில் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரை அண்மையில் ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் வைத்து டிரைவ்ஸ்பார்க் குழு டெஸ்ட் டிரைவ் செய்தது. அப்போது, இந்த கார் குறித்து எமக்கு கிடைத்த அனுபவங்களை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.

துள்ளுவதோ இளமை... புதிய ஃபோர்டு ஃபிகோ கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டிசைன்

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வந்திருக்கும் புதிய ஃபோர்டு ஃபிகோ காரின் விலை உயர்ந்த வேரியண்ட்டானது ஃபிகோ புளூ என்ற பெயரில் வந்துள்ளது. இந்த மாடலையே நாம் டெஸ்ட் டிரைவ் செய்தோம். வெளிப்புற டிசைனில் பெரிய மாற்றங்கள் செய்யப்படவில்லை. எனினும், பேஸ் வேரியண்ட்டுகளைவிட கூடுதல் கவர்ச்சிகரமான அம்சங்கள் இந்த வேரியண்ட்டில் இடம்பெற்றிருக்கின்றன.

புதிய ஃபோர்டு ஃபிகோ புளூ காரில் பளபளப்பான விசேஷ கருப்பு வண்ண பூச்சு கொண்ட தேன்கூடு வடிவ க்ரில் முகப்பில் பிரதானமாக காட்சியளிக்கிறது. ஹாலஜன் பல்புகள் கொண்ட ஹெட்லைட் க்ளஸ்ட்டர் டிசைனிலும் சிறிய மாற்றங்களுடன் புதுப்பொலிவு பெற்றிருக்கிறது. புதிய பனி விளக்குகள் அறை, அதனை சுற்றிலும் நீல வண்ண அலங்கார ஸ்டிக்கர் மற்றும் புதிய பம்பர் அமைப்பு வசீகரத்தை கூட்டுகின்றன.

புதிய ஃபோர்டு ஃபிகோ காரில் 15 அங்குல விட்டமுடைய கருப்பு வண்ண அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. கருப்பு வண்ணத்திலான சைடு மிரர்கள், கருப்பு வண்ண கூரை என காரின் கவர்ச்சியை கூட்டும் ஏராளமான விஷயங்கள் உள்ளன. பின்புறத்தில் டெயில் லைட்டுகளின் டிசைனிலும் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. கிரவுண்ட் க்ளியரன்ஸ் சற்றே உயர்த்தப்பட்டுள்ளன.

துள்ளுவதோ இளமை... புதிய ஃபோர்டு ஃபிகோ கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இன்டீரியர்

வெளிப்புறத்தை போலவே, இன்டீரியரிலும் பெரிய வித்தியாசங்கள் இல்லை. அதேநேரத்தில், புதிய ஃபோர்டு ஆஸ்பயர் செடான் காரின் இன்டீரியர் அம்சங்களிலிருந்து பல கவர்ச்சிகர அம்சங்களை எடுத்து இந்த காரிலும் பயன்படுத்தி உள்ளனர். நீல வண்ண முட்களுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், அனலாக் ஸ்பீடோமீட்டர் மற்றும் டாக்கோமீட்டர் இடையில் நீளவாக்கிலான மல்டி இன்ஃபர்மேஷன் மின்னணு திரை ஆகியவை முக்கிய மாற்றங்களாக உள்ளன. மேலும், ஓட்டுனரின் கவனக்குறைவு இல்லாமல், எளிதாக பார்க்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

புதிய ஃபோர்டு ஃபிகோ காரில் 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல் அமைப்பு லெதர் உறையுடன் கொடுக்கப்பட்டுள்ளது. பிடிப்பதற்கு போதுமான தடினமுடன், கைகளுக்கு பிடிப்பாக இருப்பது சிறப்பு. ஸ்டீயரிங் வீலிலேயே ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சகள் இருப்பதும் நன்று. எனினும், இன்டிகேட்டர் மற்றும் வைப்பர்களை இயக்குவதற்கான ஸ்டால்க் எனப்படும் சிறிய லிவர்கள் தரம் ஏமாற்றம் அளிக்கிறது.

பழைய மாடலை போலவே வட்ட வடிவிலான ஏசி வென்ட்டுகளுடன்தான் வந்துள்ளது. இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தின் இருபுறத்திலும் பெரிய ஏசி வென்ட்டுகள் உள்ளன. அதனை சுற்றிலும் க்ரோம் வளையம் இருக்கிறது. சென்டர் கன்சோலில்தான் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசிக்கான கட்டுப்பாட்டு சுவிட்சுகள் பொருத்தப்பட்டுள்ளன.

துள்ளுவதோ இளமை... புதிய ஃபோர்டு ஃபிகோ கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஹெட்லைட்டை எளிதாக அட்ஜெஸ்ட் செய்வதற்கான வசதி, மின்னணு கட்டுப்பாட்டு முறையில் சைடு மிரர்களை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி, பவர் விண்டோ சுவிட்சுகளை எளிதாக கட்டுப்படுத்த முடிகிறது. இந்த காரின் உட்புறத்திலும் நீல வண்ண ஆக்சஸெரீகள் மூலமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.

MOST READ:ஒருவழியாக விற்பனைக்கு வந்தது புதிய பஜாஜ் க்யூட் குவாட்ரிசைக்கிள் வாகனம்!

துள்ளுவதோ இளமை... புதிய ஃபோர்டு ஃபிகோ கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

ஃபோர்டு ஆஸ்பயர் காரில் இருக்கும் அதே 7.0 அங்குல தொடுதிரை கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்தான் இந்த புதிய ஃபிகோ காரிலும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த தொடுதிரையை பார்ப்பதற்கும், இயக்குவதற்கும் எளிதாக இருக்கிறது. இந்த சாதனத்தில் ஆடியோ சிஸ்டம் மற்றும் நேவிகேஷனை இயக்கும் வசதிகள் உள்ளன. புளூடூத் தொடர்பு வசதி மூலமாக ஸ்மார்ட்போனை இணைக்கலாம்.

எனினும், ஆன்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஃபோர்டு சிங்க்-3 செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி இல்லாதது பெருத்த ஏமாற்றமே. இந்த காரில் 4 ஸ்பீக்கர்களுடன் கூடிய மியூசிக் சிஸ்டம் உள்ளது. முன்புற மற்றும் பின்புற ஸ்பீக்கர்களில் போதுமான அளவு சப்தத்தை வைத்துக் கொள்வதற்கான வாய்ப்பு இருப்பதும் சிறப்பு. தொடுதிரை வழியாக மட்டுமின்றி, பட்டன்கள் மூலமாகவும், மியூசிக் சிஸ்டத்தை கட்டுப்படுத்தும் வசதியும் இருக்கிறது.

துள்ளுவதோ இளமை... புதிய ஃபோர்டு ஃபிகோ கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இடவசதி

புதிய ஃபோர்டு ஃபிகோ கார் பார்ப்பதற்கு வடிவத்தில் அடக்கமாக தெரிந்தாலும், உட்புறத்தில் போதுமான இடவசதியை பெற்றிருக்கிறது. இந்த ரக கார்களில் மிக நீளமான வீல்பேஸ் கொண்ட கார் மாடல் இதுதான். இந்த கார் 2,490 மிமீ வீல் கொண்டிருப்பதால், இடவசதி சிறப்பாக இருக்கிறது.

துள்ளுவதோ இளமை... புதிய ஃபோர்டு ஃபிகோ கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த காரில் ஃபேப்ரிக் இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன. அமர்ந்து செல்வதற்கு சொகுசாக இருக்கிறது. தொடைகளுக்கும் நல்ல சப்போர்ட் இருப்பதால் நீண்ட தூர பயணங்களின்போது கூட கால் வலி அதிகம் இருக்காது என்று நம்பலாம். எனினும், முன்புற இருக்கையில் பக்கவாட்டில் கூடுதல் பஞ்சு பொதி இல்லாமல் இருப்பதால், வளைவுகளில் திரும்பும்போது வழுக்கிக் கொண்டு செல்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

டில்ட் ஸ்டீயரிங் வீல் இருப்பதும், ஓட்டுனர் இருக்கையை லிவர் மூலமாக அட்ஜெஸ்ட் செய்ய முடியும் என்பதால், இருக்கையை வசதியாக அமைத்துக் கொண்டு ஓட்ட முடிகிறது. பின்புறத்தில் இருக்கும் பெஞ்ச் இருக்கையில் இரண்டு பேர் மட்டுமே வசதியாக அமர்ந்து செல்ல முடியும். இந்த காரில் 6 அடி உயரம் கொண்டவர்களுக்கும் போதுமான ஹெட்ரூம், லெக் ரூம் இடவசதி உள்ளது. ஆனாலும், மூன்று பேர் பின் இருக்கையில் அமர்ந்து செல்வதற்கு வசதியாக இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

துள்ளுவதோ இளமை... புதிய ஃபோர்டு ஃபிகோ கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஸ்டோரேஜ் வசதிகள்

புதிய ஃபோர்டு ஃபிகோ காரில் பல இடங்களில் பொருட்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை வைப்பதற்கான இடவசதி உள்ளது. நான்கு கதவுகளிலும் தண்ணீர் பாட்டில் வைப்பதற்கான வசதி உள்ளது. ஹேண்ட்பிரேக் லிவருக்கு பக்கத்திலும் சிறிய வாட்டர் பாட்டில்களை வைத்துக் கொள்ள முடியும். ஆவணங்களை வைப்பதற்கு போதுமான இடவசதியை க்ளவ் பாக்ஸ் வழங்குகிறது.

துள்ளுவதோ இளமை... புதிய ஃபோர்டு ஃபிகோ கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய ஃபோர்டு ஃபிகோ காரில் 257 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதி உள்ளது. பின்புற இருக்கைகளை 60:40 என்ற விகிதத்தில் மடக்கி வைத்து பூட்ரூம் இடவசதியை அதிகரித்துக் கொள்ள முடியும். பின்புற இருக்கைகளை முழுவதுமாக மடக்கினால் அதிக பூட் ரூம் இடவசதி கிடைக்கும். எனினும், இதன் பின்புற கதவு அமைப்பானது பொருட்களை வைத்து எடுப்பதற்கு கூடுதல் சிரத்தை எடுக்க வைக்கிறது. இந்த காரில் 14 அங்குல ஸ்டீல் ஸ்பேர் வீல் பூட் ரூம் கீழாக வைக்கப்பட்டு இருக்கிறது.

துள்ளுவதோ இளமை... புதிய ஃபோர்டு ஃபிகோ கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

எஞ்சின்

புதிய ஃபோர்டு ஃபிகோ காரானது புதிய 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில், 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடலையும், 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மாடலையும் நாம் டெஸ்ட் டிரைவ் செய்தோம்.

டிராகன் சீரிஸ் பெட்ரோல் எஞ்சின்

இந்த காரின் 1.2 லிட்டர் டிராகன் சீரிஸ் பெட்ரோல் எஞ்சினின் செயல்திறன் இந்த ரக கார்களில் மிகச் சிறப்பானதாக கூறலாம். இந்த எஞ்சின் 96 பிஎச்பி பவரையும், 120 என்எம் டார்க் திறனையும் அளிக்கும் திறனை பெற்றஇருக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கிறது.

MOST READ: கார் உற்பத்தியை அதிரடியாக குறைத்தது மாருதி நிறுவனம்: காரணம் என்ன?

துள்ளுவதோ இளமை... புதிய ஃபோர்டு ஃபிகோ கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிர்வுகள் குறைவாகவும், மிக மென்மையாக இருக்கிறது. அதேநேரத்தில், மிக சீராக செயல்திறனை வெளிப்படுத்தும் விதத்தில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. ஆரம்ப நிலைகளில் சற்று தடுமாறினாலும், எஞ்சின் சுழல் வேகம் நிமிடத்திற்கு 2,500 என்ற வேகத்தை தாண்டும்போது, இந்த எஞ்சினின் பவர் வெளிப்படுத்தும் திறன் அற்புதமாக இருக்கிறது. உற்சாகமான ஓட்டுதல்் அனுபவத்தை தருகிறது.

இந்த எஞ்சின் 2,500 முதல் 6,500 ஆர்பிஎம் வரை சிறந்த செயல்திறனை வெளிப்படுத்துவதும், க்ளட்ச் இயக்குவதற்கு எளிதாக இருப்பதும் நெடுஞ்சாலை பயணங்களில் சிறந்த ஓட்டுதல் அனுபவத்தை தரும். ஆரம்ப நிலைகளில் எஞ்சின் செயல்திறன் எதிர்பார்த்த அளவு இல்லை என்பதால், கியர்களை அடிக்கடி மாற்ற வேண்டி இருக்கிறது. இதனால், நகர்ப்புற பயன்பாட்டின்போது சற்றே பின்னடைவான விஷயமாக இருக்கும்.

துள்ளுவதோ இளமை... புதிய ஃபோர்டு ஃபிகோ கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டீசல் எஞ்சின்

மறுபுறத்தில் இதன் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 100 பிஎச்பி பவரையும், 215 என்எம் டார்க் திறனையும் வழங்கும் திறனை பெற்றிருக்கிறது. இந்த எஞ்சினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் வாடிக்கையாளர் மத்தியில் பிரபலமானதாகவும், நம்பிக்கையை பெற்ற எஞ்சின்தான். எனினும், 1,500 ஆர்பிஎம் வரை டர்போ லேக் தெரிவது இதன் சிறிய குறை. 1,500 ஆர்பிஎம் என்ற சுழல் வேகத்தை தாண்டியவுடன், எஞ்சின் பிக்கப் அருமையாக இருக்கிறது. அதிலிருந்து 5,000 ஆர்பிஎம் வரை எஞ்சின் சிறப்பான செயல்திறனை வழங்குகிறது.

இந்த டீசல் எஞ்சின் சப்தம் கேபினில் குறைவாக இருப்பது ஆறுதல். இதன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இந்த எஞ்சினுக்கு சரியான ஜோடி பொருத்தமாக இருப்பதால், ஓட்டுவதற்கான உற்சாகத்தை கூட்டுகிறது. மேலும், அதிர்வு இல்லாமல் கியர்கள் சட்டென விழுகிறது.

துள்ளுவதோ இளமை... புதிய ஃபோர்டு ஃபிகோ கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

மேற்கண்ட இரண்டு எஞ்சின் ஆப்ஷன்களை தவிர்த்து, புதிய ஃபோர்டு ஃபிகோ கார் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனிலும் கிடைக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 123 பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. இந்த எஞ்சின் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில், நடுத்தர விலை கொண்ட டைட்டானியம் வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கிறது.

மைலேஜ்

புதிய ஃபோர்டு ஃபிகோ காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் லிட்டருக்கு 20.5 கிமீ மைலேஜையும், டீசல் எஞ்சின் லிட்டருக்கு 25.5 கிமீ மைலேஜையும் வழங்கும். இதில், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்ட ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 16.6 கிமீ மைலேஜ் மட்டுமே கிடைக்கும் என்று ஃபோர்டு தெரிவிக்கிறது.

துள்ளுவதோ இளமை... புதிய ஃபோர்டு ஃபிகோ கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பொதுவாகவே, ஃபோர்டு கார்களின் சஸ்பென்ஷன் கையாளுமைக்கு பெயர் பெற்றது. இந்த காரிலும் சஸ்பென்ஷன் சிறப்பாகவே இருக்கிறது. மோசமான சாலைகளிலும் சொகுசான பயணத்தை அனுபவத்தை தருவதுடன், வளைவுகளிலும், நேரான சாலைகளிலும் சிறப்பான கையாளுமையை உணர முடிகிறது. ஆரம்ப நிலையில் இலகுவாகவும், வேகம் எடுக்கும்போது இதன் ஸ்டீயரிங் சிஸ்டம் கடினமாகவும் இருப்பதால் நம்பிக்கையுடன் ஓட்ட துணை புரிகிறது.

துள்ளுவதோ இளமை... புதிய ஃபோர்டு ஃபிகோ கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

வேரியண்ட் விபரம்

புதிய ஃபோர்டு ஃபிகோ காரின் பெட்ரோல், டீசல் மாடல்கள் ஆம்பியன்ட், டைட்டானியம், டைட்டானியம் புளூ என்ற மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. பெட்ரோல் ஆட்டோமேட்டிக் மாடலானது டைட்டானியம் வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கும்.

MOST READ: பாஜக எம்எல்ஏ வீடு அருகே கிடந்த வாக்குப்பதிவு இயந்திரம்... தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கை இதுதான்...

துள்ளுவதோ இளமை... புதிய ஃபோர்டு ஃபிகோ கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!
Fuel Petrol Diesel
Engine 1,194cc 1,497cc 1,498cc
No. Of Cylinders 3 4 4
Power (bhp) 96 123 100
Torque (Nm) 120 150 215
Transmission 5-Speed MT 6-Speed AT 5-Speed MT
Fuel Efficiency (km/l) 20.4 16.3 25.5
Kerb Weight (kg) 1016 - 1026kg 1078kg 1046 - 1057kg
Petrol
Ambiente Rs 5.15 Lakh
Titanium Rs 6.39 Lakh
Titanium (1.5-Litre) Rs 8.09 Lakh
Titanium Blu Rs 6.94 Lakh
Diesel
Ambiente Rs 5.95 Lakh
Titanium Rs 7.19 Lakh
Titanium Blu Rs 7.74 Lakh
துள்ளுவதோ இளமை... புதிய ஃபோர்டு ஃபிகோ கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பாதுகாப்பு அம்சங்கள்

புதிய ஃபோர்டு காரின் விலை உயர்ந்த மாடலில் 6 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பெரிமீட்டர் அலாரம், ரிமோட் கீ லெஸ் என்ட்ரி, ரியர் பார்க்கிங் கேமரா, எஞ்சின் இம்மொபைலைசர் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் உள்ளன. இந்த ரகத்தில் அதிக பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட மாடல்களில் ஒன்று ஃபோர்டு ஃபிகோ கார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

துள்ளுவதோ இளமை... புதிய ஃபோர்டு ஃபிகோ கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

வண்ணங்கள்

புதிய ஃபோர்டு ஃபிகோ கார் ஆக்ஸ்போர்டு ஒயிட், மூன்டஸ்ட் சில்வர், ஸ்மோக்கி க்ரே, டீம் இம்பேக்ட் புளூ, ரூபி ரெட், ஒயிட் கோல்டு மற்றும் அப்சொலியூட் பிளாக் ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. இதில், வெள்ளை, சில்வர் மற்றும் சாம்பல் ஆகிய வண்ணங்கள் டைட்டானியம் புளூ என்ற டாப் வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கும்.

துள்ளுவதோ இளமை... புதிய ஃபோர்டு ஃபிகோ கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஆக்சஸெரீகள் மற்றும் வாரண்டி விபரம்

புதிய ஃபிகோ காருக்கு ஏராளமான சிறப்பு ஆக்சஸெரீகளை ஃபோர்டு நிறுவனம் வழங்குகிறது. வாடிக்கையாளர் விருப்பம்போல் இவற்றை வாங்கி பொருத்திக் கொள்ளலாம். இந்த காருக்கு 5 ஆண்டுகளுக்கான வாரண்டியை ஃபோர்டு வழங்குகிறது. முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஸ்டான்டர்டு வாரண்டியும், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்ட வாரண்டி திட்டமும் உள்ளது.

பராமரிப்பு கால இடைவெளி

ஓர் ஆண்டு அல்லது 10,000 கிலோமீட்டருக்கு ஒருமுறை என்ற பராமரிப்பு கால இடைவெளி கொடுக்கப்படுகிறது. இதனால், வாடிக்கையாளர்கள் அடிக்கடி சர்வீஸ் மையத்திற்கு செல்லும் அவசியத்தையும், தேவையற்ற பராமரிப்பு செலவீனத்தையும் தவிர்க்க முடியும்.

துள்ளுவதோ இளமை... புதிய ஃபோர்டு ஃபிகோ கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

போட்டியாளர்கள்

புதிய ஃபோர்டு ஃபிகோ கார் மாருதி ஸ்விஃப்ட், ஹூண்டாய் க்ராண்ட் ஐ10, டாடா டியாகோ உள்ளிட்ட கார் மாடல்களுடன் போட்டி போடுகிறது.

Model Displacement (cc) Power/Torque (bhp/Nm) Starting Price
New Ford Figo 1194 96/120 Rs 5.15 Lakh
Tata Tiago 1199 84/114 Rs 4.21 Lakh
Maruti Suzuki Swift 1197 82/113 Rs 4.99 Lakh
Hyundai i10 Grand 1197 81/114 Rs 4.97 Lakh
துள்ளுவதோ இளமை... புதிய ஃபோர்டு ஃபிகோ கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டெஸ்ட் டிரைவ் எடிட்டர் கருத்து

புதிய ஃபோர்டு ஃபிகோ கார் உற்சாகமான ஓட்டுதல் அனுபவத்தை தருகிறது. தோற்றம், செயல்திறன், பாதுகாப்பு அம்சங்கள், விலை என அனைத்திலும் மதிப்பு மிக்க கார் மாடலாகவே கூறலாம். சிறிய குடும்பத்திற்கு ஏற்ற பக்கா பட்ஜெட் கார் மாடலாக இருக்கிறது. ஓட்டுவதற்கு உற்சாகமான அனுபவத்தை தேடும் இளம் வயது குடும்பத் தலைவர்களுக்கு இது மிகச் சிறந்த சாய்ஸாக இருக்கும் என்று கூறலாம்.

Most Read Articles

மேலும்... #ஃபோர்டு #ford
English summary
We got a chance to test drive the new Ford Figo BLU in the 'Blue City' of Jodhpur, Rajasthan. So what exactly has changed? And is the new Ford Figo worth its new price tag? Let's find out.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more