புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

Written By:

எஸ்யூவி ரக கார்கள் மீது இந்தியர்களுக்கு இருக்கும் மோகத்தை உணர்ந்து கொண்டு, ஹேட்ச்பேக் கார்களை எஸ்யூவி அம்சங்களுடன் மேம்படுத்தி களமிறக்கும் போக்கு சில ஆண்டுகளுக்கு முன் துளிர்விட்டது. அதாவது, குறைவான பட்ஜெட்டில் எஸ்யூவி அம்சங்கள் கொண்ட கார்கள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் முயற்சியாக இது பார்க்கப்பட்டது.

 புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

முதலாவதாக ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் அடிப்படையில் கிராஸ் போலோ கார் வந்தது. இதனைத்தொடர்ந்து, டொயோட்டா எட்டியோஸ் கிராஸ், ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ், ஃபியட் அவென்ச்சுரா மற்றும் மாருதி செலிரியோ எக்ஸ் ஆகிய மாடல்கள் கோதாவில் குதித்தன. இந்த வரிசையில், ஃபோர்டு நிறுவனமும் தனது புதிய ஃப்ரீஸ்டைல் மாடலுடன் விரைவில் களம் புக ஆயத்தமாகி வருகிறது.

 புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

ஃபிகோ காரின் அடிப்படையில் கிராஸ்ஓவர் மாடலாக மாற்றங்கள் செய்யப்பட்ட இந்த புதிய க்ராஸ்ஓவர் ரக கார் ஃப்ரீஸ்டைல் என்ற பெயரில் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது ஃபோர்டு நிறுவனம். காம்பேக்ட் யுட்டிலிட்டி வெஹிக்கிள்[CUV] என்ற புதிய ரகத்தில் இந்த மாடலை அழைக்கிறது ஃபோர்டு.

 புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

இந்த நிலையில், இந்த புதிய மாடலை அண்மையில் ஜெய்ப்பூரில் நடந்த மீடியா டிரைவ் நிகழ்ச்சியில் வைத்து சோதித்து பார்த்தோம். அப்போது இந்த காரின் சாதக, பாதகங்கள் குறித்து தெளிந்து கொண்ட விஷயங்களை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.

டிசைன்

டிசைன்

ஃபோர்டு நிறுவனத்தின் புதிய டிசைன் தாத்பரியத்தில் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த ஃப்ரீஸ்டைல் கார் முதல் பார்வையிலேயே பார்ப்போரை வசியம் செய்கிறது. ஃபிகோ காரின் ஹேட்ச்பேக் தோற்றத்தை எஸ்யூவி ரக கார் போன்று மாற்றுவதற்கு ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறது ஃபோர்டு நிறுவனம். அதற்கு பலனும் கிட்டி இருக்கிறது.

 புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரின் முகப்பில் மிக முக்கிய மாற்றமாக அறுகோண வடிவத்திலான கருப்பு வண்ண க்ரில் அமைப்பும், மிரட்டலான தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கும் முன்பக்க பம்பரும் ஃபிகோ காரிலிருந்து இந்த காரை வேறுபடுத்தும் முக்கிய விஷயம். அதேநேரத்தில், ஃபிகோ காரில் உள்ள ஹெட்லைட் ஹவுசிங்தான் இதிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால், கரும்பூச்சு பின்னணி கொடுக்கப்பட்டு இருப்பது தனித்துவமாக தெரிகிறது.

 புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் கார் 190மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. ஃபோர்டு ஃபிகோ காரைவிட இது 16 மிமீ கூடுதல் கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாக இருப்பது முக்கியமான அம்சம். இதனால், கார் மிகவும் எடுப்பாகவும், வசீகரமாகவும் தெரிகிறது.

 புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

இந்த காரில் கிரவுண்ட் கிளியரன்ஸை அதிகரிக்கும் ஒரு யுக்தியாக 15 அங்குல அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இந்த அலாய் வீல் சக்கரங்கள் காருக்கு கம்பீரத்தை கொடுக்கிறது. காரை சுற்றிலும் பாடி கிளாடிங் எனப்படும் பிளாஸ்டிக் சட்டங்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. சில்வர் வண்ண ரூஃப் ரெயில்களும் எஸ்யூவி ரகத்திற்கு மாறி இருப்பதை காட்டும் அம்சம்.

 புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

பம்பர் அமைப்பு மாறி இருப்பதுடன், அதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் பனி விளக்குகள் அறை வித்தியாசமாக டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. பம்பரின் கீழே ஆஃப்ரோடு பயன்பாடுகளுக்கான ஸ்கிட் பிளேட் பொருத்தப்பட்டு இருக்கின்றன. கருப்பு வண்ண ரியர் வியூ மிரர்கள் இடம்பெற்றிருக்கின்றன.

 புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

ஃபிகோ காரிலிருந்து வேறுபடுத்துவதற்காக புதிய டெயில் லைட் ஹவுசிங் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், எல்இடி விளக்குகள் இல்லை. பம்பர் அமைப்பிலும் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதுடன், பின்புறத்திலும் ஸ்கிட் பிளேட் இடம்பெற்றிருக்கிறது.ஒட்டுமொத்தத்தில் கூடுதல் ஆக்சஸெரீகள் மற்றும் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் காரணமாக ஃபிகோ காரைவிட கூடுதல் வசீகரத்தை பெற்றிருக்கிறது.

இன்டீரியர்

இன்டீரியர்

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரின் உட்புறம் ஃபிகோ காரின் இன்டீரியரை ஒத்திருக்கிறது. டேஷ்போர்டு டிசைன் கூட ஃபிகோ காரின் அடிப்படையிலேயே கொடுக்கப்பட்டு இருக்கிறது. டேஷ்போர்டு சாக்லேட் மற்றும் கருப்பு வண்ணம் என்று இரட்டை வண்ணக் கலவையில் கவர்கிறது. டேஷ்போர்டு தரமானதாக தெரிந்தாலும், சில இடங்களில் பிளாஸ்டிக் பாகங்கள் தரம் சுமார் ரகம்தான்.

 புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

இந்த காரில் 6.5 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் பொருத்தப்பட்டு இருக்கிறது. டேஷ்போர்டின் நடுநாயகமாக அமர்ந்து காரின் இன்டீரியரின் அந்தஸ்துக்கு வலு சேர்க்கிறது. இந்த சாதனத்துடன் ஃபோர்டு நிறுவனத்தின் சிங்க் - 3 என்ற விசேஷ சாஃப்ட்வேர் இடம்பெற்றிருக்கிறது.

 புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

இந்த காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இயக்குவதற்கு மிக எளிமையாகவும், சவுகரியமாகவும் இருக்கிறது. 10 லட்ச ரூபாய் பட்ஜெட் மார்க்கெட்டில் மிகச் சிறப்பான இன்ஃபோடெயின்மென்ட் சாதனங்களில் ஒன்றாக இதனை கூறலாம்.

 புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

இந்த இன்ஃபோடெயிமென்ட் சிஸ்டத்தை புளுடூத் மூலமாக ஸ்மார்ட்போனுடன் இணைத்துக் கொள்ள முடியும். ஆப்பிள் கார் ப்ளே அல்லது ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய சாஃப்ட்வேர்களை சப்போர்ட் செய்கிறது. இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் திசை காட்டும் வசதியும் உள்ளது. கார் எந்த திசையில் செல்கிறது என்பதை இன்ஃபோடெயின்மென்ட் திரையில் பார்க்கலாம்.

நடைமுறை பயன்பாடு

நடைமுறை பயன்பாடு

இந்த காரில் போதுமான அளவு ஸ்டோரேஜ் வசதிகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. க்ளவ் பாக்ஸ் மற்றும் கதவுகளில் இருக்கும் ஸ்டோரேஜ் பகுதிகள் போதிய இடவசதியை பெற்றிருக்கின்றன. முன் இருக்கைக்கு இடையில் போன் வைத்துக் கொள்வதற்கான இடவசதி உள்ளது.

 புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

இந்த காரின் இருக்கைகள் மற்றும் மிதியடிகள் மிகச் சிறப்பானதாக சொல்லலாம். இருக்கை வண்ணம் மற்றும் டிசைனும் மிகவும் நன்றாக இருக்கிறது. முன் இருக்கைகள் அமர்ந்து செல்வதற்கு சவுகரியமான உணர்வை தருவதால், நீண்ட தூர பயணங்களுக்கும் வசதியாக இருக்கும்.

 புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

பின்புற இருக்கை சற்று உயரமாக அமைக்கப்பட்டு இருக்கிறதுத. போதிய இடவசதியை அளித்தாலும், மூன்று பெரியவர்கள் தாராளமாக அமர்ந்து செல்வதற்கு வசதியாக இல்லை. குறைந்த தூர பயணத்திற்கு இது பரவாயில்லை. நீண்ட தூர பயணங்களின்போது வசதியாக இருக்காது.

 புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

பின் இருக்கையை மடக்கி வைக்கும் வசதி இருக்கிறது. இதன்மூலமாக, இந்த காரின் 257 லிட்டர் கொள்திறன் கொண்ட பொருட்கள் வைப்பதற்கான இடவசதியை சற்று அதிகரித்துக் கொள்ளலாம். பின் இருக்கையை தனியாக கழற்ற இயலாது.

எஞ்சின் விபரம்:

எஞ்சின் விபரம்:

பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் கார் வர இருக்கிறது. இந்த காரில் புத்தம் புதிய 1.2 லிட்டர் டிராகன் சீரிஸ் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த மூன்று சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 96 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது.

 புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

அதேபோன்று, கெட்ராக் நிறுவனத்திடம் இருந்து சப்ளை பெறப்படும், புதிய 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் இல்லை.

 புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

இந்த காரில் பொருத்தப்பட்டு இருக்கும் புதிய 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்தான் மிகவும் சக்திவாய்ந்ததாக கூற முடியும். டர்போசார்ஜர் துணை இல்லாமல் இயங்கும் இந்தியாவின் சக்திவாய்ந்த 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் என்ற பெருமைக்குரியதாகவும் சொல்லலாம். ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் இருக்கும் அதே 1.5 லிட்டர் டீசல் எஞ்சின்தான் இந்த காரிலும் இடம்பெற்றிருக்கிறது.

 புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

எஸ்யூவி கார்கள் போன்றே, இந்த கார் மிகவும் சிறப்பான பார்வை திறனை ஓட்டுனருக்கு அளிக்கிறது. இதனுடன் சக்திவாய்ந்த 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் சேர்ந்து கொண்டு நமக்கு உற்சாகசமான ஓட்டுதல் அனுபவத்தை வழங்குகிறது.

 புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

எஞ்சின் மிக சீராகவும், சிறப்பான பவர் டெலிவிரியை வழங்குகிறது. 6,800 ஆர்பிஎம் வரை அதிகபட்ச இயக்கத்தை தருகிறது. மேலும், 3,000 ஆர்பிஎம்.,மிற்கு மேலும் எஞ்சின் மிக சிறப்பான செயல்திறனை அளிக்கிறது. இதன் இலகுவான க்ளட்ச் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் ஓட்டுவதற்கு எளிதாக இருக்கும்.

 புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

ஃபோர்டு கார்களுக்கு உரிய தனித்துவம் அதன் கையாளுமைதான். இந்த காரும் தான் ஒரு ஃபோர்டு வாரிசு என்பதை ஓட்டும்போதே சொல்லிவிடுகிறது. கிரவுண்ட் கிளியரன்ஸ் அதிகம் இருந்தாலும், புதிய ஃபிகோ காரின் கையாளுமையைவிட இதன் கையாளுமை மிக துல்லியமாக இருப்பது ஆச்சர்யமான விஷயம்தான்.

கையாளுமையில் ஃபோர்டு வாரிசு...

கையாளுமையில் ஃபோர்டு வாரிசு...

மோசமான சாலைகளில் கூட இந்த கார் எளிதாக சமாளிக்கிறது. இந்த காரின் கையாளுமை சிறப்பாக இருப்பதற்கு கீழ் காணும் விஷயங்கள் முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

  • எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம் அடிப்படையில், கார் சக்கரங்களுக்கு சரியான விகிதத்தில் டார்க் திறனை வழங்கி கவிழ்வதை தவிர்க்கும் ஆன்ட்டி ரோல்ஓவர் பிரிவன்ஷன் தொழில்நுட்பம் இருப்பது முக்கிய பாதுகாப்பு விஷயம்.
  • இந்த காரில் 185/60 அளவுடைய டயர்களும், 15 அங்குல சக்கரங்களும் இருப்பதும் கையாளுமையின் சிறப்புக்கு காரணம்.
  • ஃபிகோ காரைவிட சற்று கடினமான சஸ்பென்ஷன் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது.
  • முன்புறத்தில் சிறப்பான ஆன்ட்டி ரோல் பார் அமைப்பு.
  • ஃபிகோ காரைவிட பின்புற சக்கரங்களுக்கு இடையில் 30 மிமீ கூடுதல் இடைவெளி ஆகியவை கையாளுமைக்கு உதவும் சிறப்பு அம்சங்களாக இருக்கின்றன.
 புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

இந்த காரில் முன்புறத்தில் வென்டிலேட்டட் டிஸ்க் பிரேக்குகளும், பின்சக்கரங்களில் டிரம் பிரேக்குகளும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இந்த பிரேக்குகள் மிகச் சிறப்பான செயல்திறனை அளிப்பதோடு, ஓட்டுனர் நினைக்கும் அளவுக்கும் பிரேக்கிங் திறனை வழங்கி நம்பிக்கையை அதிகப்படுத்துகிறது.

ஆஃப்ரோடு

ஆஃப்ரோடு

முழுமையான ஆஃப்ரோடு பயன்பாடுகளுக்கு ஏற்றதாக இல்லாவிட்டாலும், மைல்டு ஆஃப்ரோடு விஷயங்களுக்கு இதன் எஸ்யூவி ரக அம்சங்கள் துணைநிற்கிறது. ஜெய்ப்பூர் அருகே உள்ள சம்பார் சால்ட் லேக்கில் வைத்து ட்ரிஃப்ட் செய்து பார்த்த அனுபவத்தில் மிக சிறப்பான அனுபவத்தை வழங்கியது.

மைலேஜ்

மைலேஜ்

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 19 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 24.4 கிமீ மைலேஜையும் வழஙகும். நடைமுறையில் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 15-16 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 19-20 கிமீ மைலேஜையும் வழங்கும் என நம்பலாம். இந்த காரில் 42 லிட்டர் கொள்திறன் கொண்ட எரிபொருள் கலன் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

 புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் கார் ஆம்பியன்ட், டிரென்ட், டைட்டானியம் மற்றும் டைட்டானியம் ப்ளஸ் ஆகிய வேரியண்ட்டுகளில் வர இருக்கிறது. கேன்யோன் ரிட்ஜ், மூன்டஸ்ட் சில்வர், ஸ்மோக் க்ரே, ஒயிட் கோல்டு, ஆக்ஸ்ஃபோர்டு ஒயிட் மற்றும் அப்சொலியூட் பிளாக் ஆகிய 6 வண்ணங்களில் கிடைக்கும்.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரில் பல பாதுகாப்பு வசதிகள் இருக்கின்றன. இரண்டு ஏர்பேக்குகள், அனைத்து சக்கரங்களுக்கும் சரியான விகிதத்தில் பிரேக் பவரை பிரித்தனுப்பும் இபிடி நுட்பம், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எஞ்சின் இம்மொபைலைசர், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், தடைகள் அல்லது பொருட்கள் குறித்து எச்ச்ரிக்கும் அப்ரோச் சென்சார் ஆகியவை நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இருக்கும்.

 புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

ஆம்பியன்ட் என்ற பேஸ் வேரியண்ட்டை தவிர்த்து மற்ற மூன்று வேரியண்ட்டுகளிலும் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா இடம்பெற்றிருக்கிறு. டைட்டானியம் ப்ளஸ் வேரியண்ட்டில் ஆக்டிவ் ரோல்பார்க் புரொடெக்ஷன், பக்கவாட்டு ஏர்பேக்குகள், எமெர்ஜென்சி அசிஸ்ட் போன்ற உயரிய பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் உள்ளன.

 புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

இந்த காரில் பவர் ஃபோல்டு ரியர் வியூ மிரர்கள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட், ஆட்டோமேட்டிக் வைப்பர், எஞ்சின் புஷ் பட்டன் ஸ்டார்ட் மற்றும் ஃபோர்டு மைகீ என்ற ஸ்மார்ட் சாவியும் கொடுக்கப்படுகிறது.

 புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரின் டிசைன், பாதுகாப்பு அம்சங்கள், நடைமுறை பயன்பாட்டு விஷயங்கள் வாடிக்கையாளர்களை நிச்சயம் கவரும். அதேநேரத்தில், எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்யும் என்று கூற முடியாது.

ஜோபோ குருவில்லா கருத்து

ஜோபோ குருவில்லா கருத்து

ஒட்டுமொத்தத்தில் காம்பேக்ட் க்ராஸ்ஓவர் களத்தில் இருக்கும் மாடல்களில் ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் சிறப்பான அம்சங்களை பெற்றிருக்கிறது. இதன் டிசைன், எஞ்சின், ஓட்டுதல் தரம், பாதுகாப்பு வசதிகள் நிச்சயம் சரியான தேர்வாகவே அமையும் என்று நம்பலாம்.

மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Fast forward to 2018, Ford India is all set to take on the crossover hatchback segment with the Freestyle. Is the Freestyle worth the money or is it just a jacked-up cosmetic Figo? Let's find out...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark