ஹோண்டா பிஆர்வி Vs ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி: ஒப்பீடு

By Saravana

இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான கார் மாடல்களின் பட்டியலில் ஹூண்டாய் நிறுவனத்தின் க்ரெட்டா எஸ்யூவியும் மிக முக்கிய இடத்தை பெற்றிருக்கிறது. இதுவரை 90,000க்கும் அதிகமான முன்பதிவுகளுடன் விற்பனையில் வெற்றி நடை போட்டு வரும் ஹூண்டாய் க்ரெட்டாவின் மார்க்கெட்டை உடைக்க, புதிய மாடல் பிறந்துதான் வரவேண்டும் என்ற நிலை உள்ளது.

இந்த நிலையில், மிக முக்கியமான இந்த காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்ட்டில் ஹோண்டா கார் நிறுவனமும் தனது பிஆர்வி எஸ்யூவியை விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது. ஹூண்டாய் க்ரெட்டாவின் வலுவான மார்க்கெட்டை உடைத்து, வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ஹோண்டா பிஆர்வி எஸ்யூவி வர இருக்கிறது. இந்த நிலையில, இந்த இரு மாடல்களில் எது சிறந்த தேர்வாக இருக்கும் என்பதை பார்க்கும் விதமாக இந்த செய்தித் தொகுப்பு அமைகிறது.

விலை விபரம்

விலை விபரம்

  • ஹூண்டாய் க்ரெட்டா: ரூ.9.74 லட்சம்
  • ஹோண்டா பிஆர்வி: ரூ.10 லட்சம்[எதிர்பார்க்கும் விலை]
  • இரண்டும் டெல்லி ஆன்ரோடு விலையை அடிப்படையாகக் கொண்டு கொடுக்கப்பட்டிருக்கிறது.

    டிசைன்: ஹோண்டா பிஆர்வி

    டிசைன்: ஹோண்டா பிஆர்வி

    பார்த்தவுடன் ஹோண்டா மொபிலியோ காரின் தோற்றத்தை நினைவூட்டுவதை தவிர்க்க முடியாது. ஏனெனில் இது, மொபிலியோ எம்பிவி காரின் அடிப்படையிலான எஸ்யூவி என்பதுடன் தோற்றத்திலும் அதிக வித்தியாசங்கள் தென்படவில்லை. ஆனால், முகப்பு க்ரில், பிளாஸ்டிக் பாடி கிளாடிங் பாகங்கள், ரூஃப் ரெயில்கள், ஸ்பாய்லர், பிளாஸ்டிக் பாகங்களுடன் கூடிய வீல் ஆர்ச்சுகள், அதிகரிக்கப்பட்ட கிரவுண்ட் கிளியரன்ஸ் போன்றவை இதற்கு எஸ்யூவி தோற்றத்தை பெற்றுத் தருகிறது. அதேநேரத்தில், மொபிலியோ காரைவிட தோற்றத்தில் சிறப்பாகவே இருக்கிறது என்று கூறலாம்.

     டிசைன்: ஹூண்டாய் க்ரெட்டா

    டிசைன்: ஹூண்டாய் க்ரெட்டா

    ஹூண்டாய் க்ரெட்டாவின் விற்பனை இந்தளவு உயர பறப்பதற்கு காரணமே, அதன் அட்டகாசமான டிசைன்தான். ஹூண்டாய் நிறுவனத்தின் வெற்றிகரமான மாடல்கள் உருவாகிய புளூயிடிக் டிசைன் தாத்பரியத்தில்தான் க்ரெட்டாவும் டிசைன் செய்யப்பட்டுள்ளது. எந்த மாடல்களிலும் இல்லாத ஒன்று இந்த எஸ்யூவியில் இருக்கிறது. அதுதான் வசீகரம். எந்த இடத்திலும் குறை சொல்ல முடியாத அளவுக்கு வாடிக்கையாளர்களை மருகி, உருகச் செய்கிறது இதன் டிசைன். ஹோண்டா பிஆர்வி எஸ்யூவி டிசைனில் குறை சொல்ல முடியாவிட்டாலும், டிசைனில் க்ரெட்டாவே முன்னிலை பெறுகிறது.

    சிறப்பம்சங்கள்: ஹோண்டா பிஆர்வி

    சிறப்பம்சங்கள்: ஹோண்டா பிஆர்வி

    ஹோண்டா பிஆர்வி எஸ்யூவி மூன்று இருக்கை வரிசையுடன் வருவதால், இரண்டாவது இருக்கை வரிசைக்கு மேல்புறத்தில் ஏசி வென்ட்டுகள் கொடுக்கப்பட்டிருக்கும். 16 இன்ச் அலாய் வீல்கள், பவர் விண்டோஸ், ரியர் பார்க்கிங் சென்ரார், டச் ஸ்கிரீன் ஆடியோ- வீடியோ நேவிகேஷன் சிஸ்டம், கீ லெஸ் என்ட்ரி, புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ் போன்ற சிறப்பம்சங்களை பெற்றிருக்கும்.

    சிறப்பம்சங்கள்: ஹூண்டாய் க்ரெட்டா

    சிறப்பம்சங்கள்: ஹூண்டாய் க்ரெட்டா

    ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியிலும் ஏராளமான வசதிகள் நிறைவாக இருக்கின்றன. ஆடியோ - வீடியோ நேவிகேஷன், டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புஷ் பட்டன் ஸ்டார்ட், 17 இன்ச் வீல்கள், புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் உள்ளிட்ட எண்ணற்ற வசதிகள் உள்ளன. இரண்டும் வசதிகளில் ஒன்றையொன்று சளைத்ததாக இருக்காது என்றாலும், ஹூண்டாய் க்ரெட்டா வசதிகள் சற்றே முன்னிலை பெறும் வாய்ப்புள்ளது.

    இருக்கை வசதி: ஹோண்டா பிஆர்வி

    இருக்கை வசதி: ஹோண்டா பிஆர்வி

    போட்டி நிறைந்த இந்த செக்மென்ட்டில் முன்னிலை பெறுவதற்கு ஹோண்டா பிஆர்வி எஸ்யூவியிடம் இருக்கும் ஒரே ஆயுதம் கூடுதல் இருக்கை வசதி. ஆம், காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்ட்டில் 7 பேர் பயணிக்கும் இருக்கை வசதி கொண்ட மாடலாக வருவதே ஹோண்டா பிஆர்வி எஸ்யூவியின் மிகப்பெரிய பலம். ஏனெனில், 7 பேர் பயணிக்கும் எஸ்யூவி மாடல் வேண்டுவோர், ரூ.15 லட்சம் பட்ஜெட்டில் விற்பனையாகும் மஹிந்திரா எக்ஸயூவி 500 மாடலையே தேர்வு செய்யும் கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். ஆனால், ஹோண்டா பிஆர்வி எஸ்யூவி வரும்போது ரூ.10 லட்சம் பட்ஜெட் தாரரர்களுக்கு சிறப்பான சாய்ஸாக இருக்கும்.

    இருக்கை வசதி: ஹூண்டாய் க்ரெட்டா

    இருக்கை வசதி: ஹூண்டாய் க்ரெட்டா

    ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியில் 5 பேர் பயணிக்கும் இடவசதியை கொண்டிருக்கிறது. இந்த ஒரு விஷயத்தில் வாடிக்கையாளர்களின் கவனம் ஹோண்டா பிஆர்வி., எஸ்யூவியை தேர்வு செய்வதற்கான வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்க இடமளிக்கும்.

    பாதுகாப்பு: ஹோண்டா பிஆர்வி

    பாதுகாப்பு: ஹோண்டா பிஆர்வி

    ஹோண்டா பிஆர்வி எஸ்யூவியில் ஏர்பேக்குகள், இபிடி.,யுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்றவை நிரந்தர அம்சமாக இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பாதுகாப்பு: ஹூண்டாய் க்ரெட்டா

    பாதுகாப்பு: ஹூண்டாய் க்ரெட்டா

    ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டியூவல் ஏர்பேக்குகள் மற்றும் கர்ட்டெயின் ஏர்பேக்குகள் இடம்பெற்றுள்ளன. தவிரவும், வாகனத்தை கவிழாமல் செலுத்த உதவும், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், மலைச் சாலைகளில் வாகனம் பின்னோக்கி நகர்வதை தடுகக்கும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மென்ட் தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது.

    எஞ்சின்: ஹோண்டா பிஆர்வி

    எஞ்சின்: ஹோண்டா பிஆர்வி

    ஹோண்டா மொபிலியோ காரில் பயன்படுத்தப்படும் அதே 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் ஹோண்டா பிஆர்வி எஸ்யூவியிலும் எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 117 பிஎச்பி பவரையும் 145 என்எம் டார்க்கையும், டீசல் எஞ்சின் 99 பிஎச்பி பவரையும் 200 என்எம் டார்க்கையும் வழங்கும். ஆனால், சற்றே கூடுதல் பவரை அளிக்கும் விதத்தில் ட்யூனிங் செய்வதற்கும் வாய்ப்புள்ளது. இரண்டு மாடல்களிலு் மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெறும். ஆட்டோமேட்டிக் மாடலிலும் எதிர்பார்க்கலாம்.

    எஞ்சின்: ஹூண்டாய் க்ரெட்டா

    எஞ்சின்: ஹூண்டாய் க்ரெட்டா

    ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி ஒரு பெட்ரோல் மற்றும் இரண்டு டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. பெட்ரோல் மாடலில் இருக்கும் 1.6 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 122 பிஎச்பி பவரையும், 154 என்எம் டார்க்கையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 224 என்எம் டார்க்கையும் வழங்கும். மூன்றாவதாக 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 126 பிஎச்பி பவரையும், 265 என்எம் டார்க்கையும் வழங்கும். டீசல் மாடல் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாகவும், டாப் வேரியண்ட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாகவும் கிடைக்கிறது. இரண்டு மாடல்களில் இருக்கும் எஞ்சின்கள் ஏற்கனவே இந்திய மாடல்களில் பயன்படுத்தப்படுவதால், இந்தியர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவையாகவே இருக்கின்றன.

    மைலேஜ்: ஹோண்டா பிஆர்வி

    மைலேஜ்: ஹோண்டா பிஆர்வி

    ஹோண்டா மொபிலியோ காரின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 17.3 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 24.2 கிமீ மைலேஜையும் தருவதாக இருக்கும் வேளையில், இந்த அளவு மைலேஜை ஹோண்டா பிஆர்வி எஸ்யூவியிலும் எதிர்பார்க்கலாம். குறிப்பாக, டீசல் மாடல் மிகச்சிறப்பான மைலேஜை வழங்குவதாக இருக்கும்.

    மைலேஜ்: ஹூண்டாய் க்ரெட்டா

    மைலேஜ்: ஹூண்டாய் க்ரெட்டா

    ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 15.29 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 21.38 கிமீ மைலேஜையும், 1.6 லிட்டர் டீசல் மாடல் லிட்டருக்கு 19.67 கிமீ மைலேஜையும் வழங்குவதாக இருக்கிறது. இந்த விஷயத்தில் ஹோண்டா பிஆர்வி முன்னிலை பெறுகிறது.

    பூட் ரூம்

    பூட் ரூம்

    ஹூண்டாய் க்ரெட்டா 400 லிட்டர் கொள்ளளவு கொண்ட பொருட்கள் வைப்பதற்கான இடவசதியை கொண்டிருக்கிறது. ஆனால், மூன்று வரிசை இருக்கை இருப்பதால், ஹோண்டா பிஆர்வியின் பூட் ரூம் கொள்ளளவு வெகுவாக குறையும். மொபிலியோவில் 223 லிட்டர் கொள்ளளவு உடைய பூட் ரூம் இருப்பதை எடுத்துக் கொள்ளலாம்.

    எது பெஸ்ட்?

    எது பெஸ்ட்?

    டிசைன், வசதிகள், விலை என அனைத்திலும் ஹூண்டாய் க்ரெட்டா வாடிக்கையாளர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருக்கிறது. அதேநேரத்தில், கூடுதல் இருக்கை வசதி, செயல்திறன் மிக்க நம்பகமான எஞ்சின்கள், சிறப்பான மைலேஜ் போன்றவை ஹோண்டா பிஆர்விக்கு பக்கபலமாக இருக்கின்றன. ஹோண்டா பிஆர்வி எஸ்யூவிக்கு சரியான விலை நிர்ணயித்தால் ஹோண்டா பிஆர்வி எஸ்யூவியின் விற்பனையில் நிச்சயம் ஜெயம் உண்டாகும். இல்லையெனில், மொபிலியோ கதிதான். அதேநேரத்தில், டிசைன் வசீகரத்தை வைத்து வாடிக்கையாளர்களின் கண்களை மயங்க செய்து போட்டியாளர்களை எளிதாக வீழ்த்திவிடுகிறது ஹூண்டாய் க்ரெட்டா.

Most Read Articles
English summary
Let's compare the Honda BR-V to with the Hyundai Creta in terms of engine specification, design, and features and see which of the two Compact SUVs is a better buy.
Story first published: Tuesday, February 16, 2016, 17:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X