செம சூப்பரா இருக்கே... ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் ரிவியூ!

ஹோண்டா சிட்டி கார் இந்திய சந்தையில் கடந்த 1998ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஹோண்டா சிட்டி காரின் வருகையின் மூலம் இந்திய சந்தையில், செயல்திறன், கையாளுமை மற்றும் ரீஃபைன்மெண்ட் ஆகிய அம்சங்களில் புதிய ஸ்டாண்டர்டு நிர்ணயிக்கப்பட்டது. அத்துடன் ஹோண்டா சிட்டி காருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமும் உருவானது.

ஹோண்டா சிட்டி விற்பனைக்கு வந்து கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இடைப்பட்ட இந்த இரண்டரை தசாப்தங்களில் ஹோண்டா சிட்டி பல்வேறு விதங்களில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. தற்போது 5வது தலைறை மற்றும் 4வது தலைமுறை சிட்டி கார்களை ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்த சூழலில், புதிய தொழில்நுட்பத்துடன் விற்பனைக்கு அறிமுகமாவதற்கு ஹோண்டா சிட்டி தற்போது முழுமையாக தயாராகி விட்டது.

ஆம், ஹோண்டா சிட்டி இ:ஹெச்இவி (Honda City e:HEV) மாடல்தான் அது. ஹோண்டா நிறுவனம் சமீபத்தில்தான் சிட்டி இ:ஹெச்இவி மாடலை வெளியிட்டது. இது மைல்டு ஹைப்ரிட் மாடல் எல்லாம் கிடையாது. முறையான, வலுவான ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை கொண்டுள்ள மாடல் ஆகும். இந்த புதிய மாடலை டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. இந்த புதிய மாடல் ஓட்டுவதற்கு எப்படி உள்ளது? டிசைன் மற்றும் வசதிகள் உள்பட அனைத்து விதமான தகவல்களையும் தெரிந்து கொள்ள செய்தியை தொடர்ந்து படியுங்கள்.

செம சூப்பரா இருக்கே... ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் ரிவியூ!

டிசைன்

முதல் பார்வையில், ஹோண்டா சிட்டி காரின் ஸ்டாண்டர்டு மாடலின் டிசைன், புதிய ஹைப்ரிட் மாடலில் அப்படியே தக்க வைக்கப்பட்டுள்ளது என நீங்கள் நினைக்க கூடும். ஆனால் உன்னிப்பாக கவனித்தால், ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பது தெரியவரும்.

ஸ்டாண்டர்டு மாடலில் க்ரில் அமைப்பிற்கு மேலே தடிமனான க்ரோம் பட்டையுடன் எல்இடி ஹெட்லேம்ப் வழங்கப்பட்டிருக்கும். அந்த டிசைன் அப்படியே தக்க வைக்கப்பட்டுள்ளது. எனவே ஸ்டாண்டர்டு மாடலில் உள்ள அதே க்ரில் அமைப்புதான் ஹைப்ரிட் மாடலிலும் கொடுக்கப்பட்டுள்ளது என நீங்கள் நினைக்கலாம். ஆனால் க்ரில் அமைப்பு மாற்றப்பட்டுள்ளது. ஸ்டாண்டர்டு மாடலின் க்ரில் அமைப்பில் கிடைமட்ட ஸ்லாட்கள் வழங்கப்பட்டிருக்கும். ஆனால் ஹைப்ரிட் மாடலின் க்ரில் அமைப்பில் தேன் கூடு வடிவ பேட்டர்ன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அதேபோல் பனி விளக்குகள் அறையும் முற்றிலும் ரீ-டிசைன் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் முன் பகுதியில் புதிய ஹோண்டா லோகோவும் வழங்கப்பட்டுள்ளது. ப்ளூ அசெண்ட்களை இது பெற்றுள்ளது. இது ஹைப்ரிட் கார் என்பதை இது நமக்கு சொல்கிறது.

செம சூப்பரா இருக்கே... ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் ரிவியூ!

ஆனால் பக்கவாட்டு பகுதியை பொறுத்தவரையில், பெரும்பாலான டிசைன் அம்சங்கள் அப்படியே இருக்கின்றன. கருப்பு நிற B-பில்லர், க்ரோம் டோர் ஹேண்டில்கள், சுறா துடுப்பு ஆண்டெனா, வலுவான ஷோல்டர் லைன் ஆகியவற்றை இது பெற்றுள்ளது. ஸ்டாண்டர்டு மாடலில் உள்ள அதே 16 இன்ச் ட்யூயல்-டோன் டைமண்ட் கட் அலாய் வீல்கள்தான் ஹைப்ரிட் மாடலிலும் கொடுக்கப்பட்டுள்ளன.

இடது பக்க ஓஆர்விஎம்மின் கீழே கேமரா வழங்கப்பட்டிருப்பதுதான் ஹைப்ரிட் மாடலின் பக்கவாட்டு பகுதியில் செய்யப்பட்டிருக்கும் முக்கியமான மாற்றமாகும். இடது பக்க டர்ன்-சிக்னல் இன்டிகேட்டரை டிரைவர் ஆன் செய்தவுடன், இந்த கேமரா இன்போஃடெயின்மெண்ட் திரையில் காட்சிகளை வழங்குகிறது. இடது பக்க வியூ டிரைவருக்கு தெளிவாக தெரிய வேண்டும் என்பதற்காக இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டிரைவர் முடிவுகளை தெளிவாக எடுக்கலாம். பயணம் பாதுகாப்பானதாக இருக்கும்.

செம சூப்பரா இருக்கே... ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் ரிவியூ!

அதே சமயம் பின் பகுதியில் பெரிதாக மாற்றங்கள் செய்யப்படவில்லை. இங்கே பூட் லிட் மீது லிப் ஸ்பாய்லர் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் பூட் பகுதியின் மேலே ப்ளூ அசெண்ட்களுடன் மேம்படுத்தப்பட்ட ஹோண்டா லோகோ இடம்பெற்றுள்ளது. மேலும் பின் பகுதியில் 'City' மற்றும் 'ZX' பேட்ஜ்களும் வழங்கப்பட்டுள்ளன. இது டாப் வேரியண்ட் என்பதை இது குறிக்கிறது. அத்துடன் 'e:HEV' பேட்ஜ், இது ஹைப்ரிட் மாடல் என்பதை அடையாளம் காண உதவி செய்கிறது. ஒட்டுமொத்தத்தில் ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் காரின் டிசைன் அட்டகாசமாக இருக்கிறது.

செம சூப்பரா இருக்கே... ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் ரிவியூ!

காக்பிட் & இன்டீரியர்

கதவை திறந்து உள்ளே சென்றதும் புதிய ட்யூயல்-டோன் இன்டீரியர் நம்மை வரவேற்கிறது. ஐவரி மற்றும் பிளாக் இன்டீரியர் கலர் ஸ்கீம் புதியது ஆகும். அத்துடன் ஐவரி லெதர், கேபினை பிரீமியமாக காட்டுகிறது. இருக்கையில் அமர்ந்த உடன் இது நேர்த்தியான இன்டீரியர் என்பதை நீங்கள் உணர்வீர்கள்.

இந்த காரில் லெதர் சுற்றப்பட்ட ஸ்டியரிங் வீல் வழங்கப்பட்டுள்ளது. அது பெரிதாக இருப்பதுடன், அருமையாகவும் உள்ளது. ஹோண்டா நிறுவனம் எப்போதுமே சிறப்பான ஸ்டியரிங் வீல்களைதான் தனது கார்களில் வழங்கி வருகிறது. இதற்கு இந்த ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் காரும் விதிவிலக்கு அல்ல. ஆடியோ, வாய்ஸ் கமாண்ட்கள், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் அடாஸ் (ADAS) வசதியின் ஒரு சில அம்சங்களுக்கான கண்ட்ரோல்கள் ஸ்டியரிங் வீலில் வழங்கப்பட்டுள்ளன. லேன் கீப் அஸிஸ்ட் போன்ற வசதிகளுக்கான பட்டன்கள் பிரத்யேகமாக கொடுக்கப்பட்டுள்ளன.

செம சூப்பரா இருக்கே... ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் ரிவியூ!

ஸ்டியரிங் வீலுக்கு பின்னால் அனலாக்-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்பட்டுள்ளது. ஸ்பீடோமீட்டர் அனலாக் வடிவத்தில் உள்ளது. இதற்கு இடது பக்கம் 7.0 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே இடம்பெற்றுள்ளது. இது உண்மையில் நிறைய தகவல்களை டிரைவருக்கு வழங்குகிறது. ஹைப்ரிட் டிரைவ் மோடுகள், பவர் சோர்ஸ், ஓடோமீட்டர், ரேஞ்ச், நிகழ்நேர எரிபொருள் நுகர்வு உள்பட பல்வேறு தகவல்களை இது கொடுக்கிறது.

அதேபோல் ஸ்டியரிங் வீலுக்கு பின்னால் பேடில் ஷிஃப்டர்களும் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இவை கியர் பாக்ஸ்க்கானது அல்ல. இந்த பேடில் ஷிஃப்டர்கள் பற்றிய தகவல்களை பின்வரும் இன்ஜின் செயல்திறன் மற்றும் ஹேண்ட்லிங் பகுதியில் வழங்கியுள்ளோம்.

செம சூப்பரா இருக்கே... ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் ரிவியூ!

அதே நேரத்தில் டேஷ்போர்டின் மைய பகுதியில், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ சப்போர்ட் வசதியுடன் 8.0 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்துவதற்கு எளிமையாக உள்ளது. எனினும் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதி வழங்கப்படவில்லை. அதை வழங்கியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

செம சூப்பரா இருக்கே... ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் ரிவியூ!

இருப்பினும் இந்த காரில் வழங்கப்பட்டுள்ள 6 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் சிறப்பாக உள்ளது. இதற்கிடையே இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கு கீழே ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோலுக்கான கண்ட்ரோல்கள் இருக்கின்றன. ஃபேன் ஸ்பீடு, டெம்ப்ரேச்சர் போன்ற தகவல்களை எல்சிடி திரை காட்டுகிறது. அதே நேரத்தில் ஸ்டாண்டர்டு மாடலுடன் ஒப்பிடுகையில் சென்டர் கன்சோல் சற்றே உயர்த்தப்பட்டுள்ளது. இது 2 கப் ஹோல்டர்களை பெற்றுள்ளது. அத்துடன் உங்கள் செல்போன்களை வைத்து கொள்வதற்கான இட வசதியும் உள்ளது. ஆனால் வயர்லெஸ் செல்போன் சார்ஜிங் வசதி இங்கே இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செம சூப்பரா இருக்கே... ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் ரிவியூ!

நடைமுறை பயன்பாடு, சௌகரியம் & பூட் ஸ்பேஸ்

முதல் தலைமுறை மாடலில் இருந்தே இந்த செடான் நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்றதாக இருந்து வருகிறது. இடைப்பட்ட ஆண்டுகளில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டாலும் கூட, சிறப்பான நடைமுறை பயன்பாடு என்ற அம்சம் அப்படியே தொடர்கிறது. இன்னும் சொல்லப்போனால் ஹோண்டா சிட்டி காரின் நடைமுறை பயன்பாடும், சௌகரியமும் நன்றாக மேம்பட்டுள்ளன.

இந்த ஹைப்ரிட் காரில் ஸ்டோரேஜ் வசதி சிறப்பாக உள்ளது. டோர் பாக்கெட்களில் தாராளமாக 1 லிட்டர் வாட்டர் பாட்டில்களை வைத்து கொள்ள முடியும். சென்டர் கன்சோலில் உள்ள ஆர்ம்ரெஸ்ட்டை திறந்தாலும் கூட சிறிய பொருட்களை வைத்து கொள்வதற்கான இட வசதி இருக்கிறது.

செம சூப்பரா இருக்கே... ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் ரிவியூ!

அதேபோல் இந்த ஹைப்ரிட் காரின் இருக்கைகள் மிகவும் சௌகரியமாக உள்ளன. முன் பகுதி இருக்கைகளை பொறுத்தவரை, தொடைக்கு நல்ல சப்போர்ட் கிடைக்கிறது. எனவே ஒவ்வொரு பயணமும் சௌகரியமாக இருக்கும்.

செம சூப்பரா இருக்கே... ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் ரிவியூ!

பின் பகுதி இருக்கைகள் இந்த சௌகரியத்தை அளவை அடுத்த கட்டத்திற்கே கொண்டு சென்று விடுகின்றன. அந்த அளவிற்கு சிறப்பாக உள்ளது. லெக் ரூம், ஹெட் ரூம் என அனைத்து அம்சங்களும் சிறப்பாக இருக்கின்றன. பின் பகுதி இருக்கைகளில் குறைகளை கண்டுபிடிப்பது இயலாத காரியம்.

ரியர் ஏசி வெண்ட்கள், இரண்டு 12V சார்ஜர் ஸ்லாட்கள், கப் ஹோல்டர்களுடன் ஆர்ம்ரெஸ்ட்கள் என பின் பகுதி பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. பூட் ஸ்பேஸ் என வந்து விட்டால், ஹோண்டா சிட்டி எப்போதுமே மிக சிறப்பான கார்தான். ஆனால் ஹைப்ரிட் மாடலில் இந்த கதை வித்தியாசமானது.

செம சூப்பரா இருக்கே... ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் ரிவியூ!

டிரைவர் இருக்கையின் ஓரத்தில் உள்ள லேட்ச் மூலமாகவோ அல்லது பூட் மீது உள்ள ரெக்வஸ்ட் சென்சார் மூலமாகவோ அல்லது கீ ஃபாப்பில் உள்ள பட்டன் மூலமாகவோ பூட் பகுதியை திறக்க முடியும். ஆனால் ஸ்டாண்டர்டு மாடலை காட்டிலும் ஹைப்ரிட் மாடலின் பூட் ஸ்பேஸ் குறைவானது என்பது ஏமாற்றமான விஷயம்.

ஃப்ளோர்போர்டை நீங்கள் தூக்கும்போது இதற்கான காரணம் தெரியவரும். இதற்கு அடியில் ஸ்பேர் வீல், டூல் கிட் மற்றும் பெரிய பேட்டரி தொகுப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. ஆம், ஹைப்ரிட் பவர்ட்ரெயினில் பயன்படுத்தப்பட்டுள்ள லித்தியம் அயான் பேட்டரி தொகுப்பு பூட் பகுதியில்தான் இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக பூட் ஸ்பேஸ் சுமார் 200 லிட்டர்கள் குறைந்து விட்டது. ஹைப்ரிட் மாடலின் பூட் ஸ்பேஸ் சுமார் 306 லிட்டர்களாக உள்ளது.

செம சூப்பரா இருக்கே... ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் ரிவியூ!

இன்ஜின் செயல்திறன், ஹைப்ரிட் ட்ரைவ்ட்ரெயின் & ஓட்டுதல் அனுபவம்

பொதுவாக ஹோண்டா சிட்டி காரின் இன்ஜின் செயல்திறன் சிறப்பாக இருக்கும். இந்த நிலையில், ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் காரின் ட்ரைவ்ட்ரெயினும் சிறப்பாக உள்ளது. ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் காரில், 1.5 லிட்டர், i-VTEC 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அத்துடன் 2 எலெக்ட்ரிக் மோட்டார்களும், லித்தியம்-அயான் பேட்டரியும் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் ஒருங்கிணைந்த பவர் அவுட்புட் 126 பிஹெச்பி மற்றும் 253 என்எம் ஆகும். ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் காரில் பல்வேறு டிரைவ் மோடுகள் வழங்கப்பட்டுள்ளன.

செம சூப்பரா இருக்கே... ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் ரிவியூ!

எலெக்ட்ரிக் டிரைவ்:

ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் கார், முழுமையாக எலெக்ட்ரிக் மூலம் இயங்கும் திறனை கொண்டுள்ளது. 'EV' இன்டிகேஷன், இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரில் தோன்றும். எலெக்ட்ரிக் மோடில் இந்த காரை ஓட்டுவது எளிமையாக உள்ளது.

செம சூப்பரா இருக்கே... ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் ரிவியூ!

ஹைப்ரிட் டிரைவ்:

இது ஸ்ட்ராங் ஹைப்ரிட் கார் ஆகும். ஹைப்ரிட் டிரைவ்வில், பெட்ரோல் இன்ஜின் ஆக்டிவ்-ஆக இருக்கும். ஜெனரேட்டர் மோட்டார் மூலம் சக்தியை உருவாக்கும். உருவாக்கப்படும் மின்சாரம், பின் பகுதியில் உள்ள லித்தியம்-அயான் பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு பயன்படுகிறது.

செம சூப்பரா இருக்கே... ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் ரிவியூ!

இன்ஜின் டிரைவ்:

இந்த டிரைவ் மோடில், எலெக்ட்ரிக் மோட்டார் முற்றிலுமாக ஆஃப் ஆகி விடும். eCVT கியர் பாக்ஸ் மூலமாக இன்ஜின் முன் பக்க சக்கரங்களை இயக்கும். நிகழ்நேர டிரைவிங் சூழ்நிலைகளுக்கு எந்த மோடு பொருத்தமாக இருக்கும்? என்பதை இந்த காரே தீர்மானித்து, ஆட்டோமேட்டிக்காக அதற்கு மாற்றி விடும். அப்படி மாறுவது தடையில்லாமல் நடக்கும். காரை ஓட்டிக்கொண்டிருக்கும்போது அதை உணர முடியாது. பயன்படுத்தப்படும் எரிபொருளின் அளவை குறைப்பதுதான் இதன் முக்கியமான நோக்கம்.ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் காரில், எனர்ஜி ரீஜெனரேஷன் வசதி வழங்கப்பட்டுள்ளது. கியர் லிவர் 'B'-யில் இருக்கும்போது இது நடக்கும். இங்கேதான் பேடில் ஷிஃப்டர்கள் வருகின்றன. கியர்களை மாற்றுவதற்கு பதிலாக, ரீஜெனரேஷின் அளவை அதிகரிப்பதற்கும், குறைப்பதற்கும் பேடில் ஷிஃப்டர்கள் பயன்படுகின்றன. '+' ரீஜெனரேஷின் அளவை குறைக்கும். '-' ரீஜெனரேஷின் அளவை அதிகரிக்கும்.

அத்துடன் ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் காரில் அடாஸ் தொழில்நுட்பமும் இடம்பெற்றுள்ளது. அடாஸ் தொழில்நுட்பத்தின் ஒரு சில வசதிகள் இயங்குவதற்கு கார் மணிக்கு 72 கிலோ மீட்டருக்கும் மேலான வேகத்தில் சென்று கொண்டிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி தொகுப்பின் எடையை மனதில் வைத்து, பின் பக்க சஸ்பென்ஸன் சற்று மாற்றிமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஹேண்ட்லிங்கில் எந்தவொரு மாற்றமும் தென்படவில்லை. ஸ்டாண்டர்டு மாடலை போலவே ஹைப்ரிட் மாடலும் செயல்படுகிறது.

செம சூப்பரா இருக்கே... ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் ரிவியூ!

பாதுகாப்பு வசதிகள்

ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் காரில், அடாஸ் தொழில்நுட்பம் தவிர இன்னும் ஏராளமான பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன. அவை பின்வருமாறு:

  • ஹோண்டா சென்சிங் தொழில்நுட்பம்
  • லேன் கீப் அஸிஸ்ட் சிஸ்டம்
  • அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல்
  • ஆட்டோ ஹை-பீம்
  • பிரேக் ஹோல்டு
  • 6 ஏர்பேக்குகள்
  • ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட்
  • வெய்கில் ஸ்டெபிளிட்டி அஸிஸ்ட்
  • முக்கிய வசதிகள்

    பாதுகாப்பு தவிர, பயணிகளின் சௌகரியத்திற்காக ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் காரில் இன்னும் ஏராளமான வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:

    • 8.0 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட்
    • ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே
    • 6 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம்
    • எல்இடி லைட்டிங்
    • 7.0 இன்ச் டிஎஃப்டி
    • ஒன்-டச் சன்ரூஃப்
    • வண்ண தேர்வுகள்

      ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் கார், 5 வண்ண தேர்வுகளில் கிடைக்கும். அவை பின்வருமாறு:

      • ரேடியண்ட் ரெட் மெட்டாலிக்
      • மீட்டோராய்ட் க்ரே மெட்டாலிக்
      • பிளாட்டினம் ஒயிட் பேர்ல்
      • லூனார் சில்வர் மெட்டாலிக்
      • கோல்டன் ப்ரவுன் மெட்டாலிக்
      • செம சூப்பரா இருக்கே... ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் ரிவியூ!

        டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?

        ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் காருடன் இன்னும் அதிக நேரத்தை செலவிட வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு தோன்றியது. அந்த அளவிற்கு இந்த கார் மிகவும் சிறப்பாக உள்ளது என்பதுதான் எங்கள் கருத்து.

Most Read Articles
மேலும்... #ஹோண்டா #honda
English summary
Honda city e hev review design features engine performance hybrid drivetrain driving impressions
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X