புதிய ஹோண்டா ஜாஸும், கவரும் அந்த 8 விஷயங்களும்...!

By Saravana

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய ஹோண்டா ஜாஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. ஹூண்டாய் எலைட் ஐ20 காருக்கு நேர் போட்டியாக வந்திருக்கும் இந்த புதிய மாடலில் இருக்கும் சில முக்கிய விஷயங்கள் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

மார்க்கெட்டின் ஆணழகன் ஹூண்டாய் எலைட் ஐ20 காரை விட்டு, புதிய ஹோண்டா ஜாஸ் காரை தேர்வு செய்வதற்கு இந்த முக்கிய விஷயங்களே காரணமாக இருக்கலாம். அவறறை ஸ்லைடரில் காணலாம்.

 01. லட்சணமான முகப்பு

01. லட்சணமான முகப்பு

புதிய ஹோண்டா ஜாஸ் காரின் முகப்பு க்ரில் மற்றும் ஹெட்லைட்ஸ் அமைப்பு மிகச்சிறப்பான வசீகரத்தை வழங்குகிறது. பார்த்தவுடன் பலருக்கு பிடித்து போகச் செய்யும் வடிவமைப்பாக இருக்கிறது.

 02. அலாய் வீல்கள்

02. அலாய் வீல்கள்

புதிய ஹோண்டா ஜாஸ் காரின் அலாய் வீல் டிசைனும் வாடிக்கையாளர்களை கவரும் விஷயங்களில் ஒன்றாக இருக்கிறது. காரின் கவர்ச்சிக்கு இந்த அலாய் வீல் டிசைனும் முக்கிய பங்காற்றுகிறது.

03. பின்புற டிசைன்

03. பின்புற டிசைன்

வால்வோ கார்களின் சாயலில் உள்ள டெயில் லைட் க்ளஸ்ட்டர் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும். மேலும், நவநாகரீகமான டிசைனுடன் வந்திருப்பதும் இதற்கான வாடிக்கையாளர்கள் வட்டம் விரிவடைவதற்கான காரணமாக இருக்கலாம்.

04. மீட்டர் கன்சோல்

04. மீட்டர் கன்சோல்

மீட்டர் கன்சோல் டிசைன் நாகரீகமாக இருப்பது மட்டுமின்றி, ஓட்டுதல் நிலைக்கு ஏற்ப விளக்கொளி வண்ணமும் மாறும். இது நிச்சயம் ஓட்டுனர்களுக்கு புதுமையான அனுபவத்தை வழங்கும்.

05. மேஜிக் சீட்ஸ்

05. மேஜிக் சீட்ஸ்

பயன்பாட்டை பொறுத்து பல்வேறு விதங்களில் மடக்கி வைத்துக் கொள்ளக்கூடிய இருக்கை அமைப்பை ஹோண்டா ஜாஸ் கார் பெற்றிருக்கிறது. இதுவும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சூழல்களில் உதவும்.

 06. சிவிடி கியர்பாக்ஸ்

06. சிவிடி கியர்பாக்ஸ்

புதிய ஹோண்டா ஜாஸ் காரின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று சிவிடி கியர்பாக்ஸ். பெட்ரோல் மாடலில் சிவிடி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட மாடலில் பேடில் ஷிப்ட் வசதியும் உண்டு. மேலும், தற்போது புதிய ஹோண்டா ஜாஸ் காருக்கு கிடைத்திருக்கும் முன்பதிவுகளில் 40 சதவீதம் சிவிடி கியர்பாக்ஸ் கொண்ட மாடலுக்கே கிடைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

07. ஸ்பாய்லர்

07. ஸ்பாய்லர்

டாப் வேரியண்ட்டில் மட்டும் ஸ்போர்ட்டியான ஸ்பாய்லர் கொண்டதாக வருகிறது. இது காரின் கவர்ச்சியை பன்மடங்கு உயர்த்துகிறது. மேலும், சாதாரண வேரியண்ட்டுகளில் இன்டகிரேடட் ஸ்பாய்லர் பொருத்தப்பட்டிருக்கிறது.

08. பூட் ரூம்

08. பூட் ரூம்

போட்டியாளரான ஹூண்டாய் எலைட் ஐ20 கார் 285 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட்ரூம் கொண்டிருக்கிறது. ஆனால், புதிய ஹோண்டா ஜாஸ் கார் 354 லிட்டர் பூட்ரூம் கொண்டிருக்கிறது. அதாவது, சில காம்பேக்ட் செடான் கார்களைவிட அதிக பூட் ரூம் இடவசதி கொண்டது. இதன் மேஜிக் சீட் அமைப்பும் பொருட்களுக்கான இடவசதிக்கு கூடுதல் ஒத்துழைப்பு அளிக்கும்.

 09. விலை

09. விலை

இந்தியாவில் விற்பனை நிறுத்தப்பட்ட முந்தைய தலைமுறை மாடல் விலை அதிகம் என்ற அவப்பெயரால் மார்க்கெட்டை இழந்தது. ஆனால், புதிய ஹோண்டா ஜாஸ் கார் போட்டியாளர்களை மனதில் வைத்து மிகச்சரியான விலையில், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வந்திருப்பதும் வாடிக்கையாளர்களை கவரும்.

Most Read Articles
English summary
Honda has launched its all-new Jazz in Mumbai on 9th July, 2015. It is offered with petrol as well as diesel engine options. We point out a few features and elements that caught our attention at the launch event. Do let us know if you like or dislike the all-new Jazz by Honda.
Story first published: Monday, July 13, 2015, 9:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X