உங்களுக்கு தேவையான எல்லாமே இருக்கு... ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

இந்தியர்கள் எஸ்யூவி கார்களை பெரிதும் விரும்புகின்றனர். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்தியாவில் பல லட்சக்கணக்கானோரிடம் எஸ்யூவி கார்கள் இருக்கின்றன. இன்னும் பலர் ஒரு எஸ்யூவி காரை சொந்தமாக்க விரும்புகின்றனர். இதனால் முன்னணி நிறுவனங்கள் பலவும் தொடர்ச்சியாக எஸ்யூவி கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றன.

இதில், ஹூண்டாய் நிறுவனமும் ஒன்று. ஆரம்பத்தில் ஹூண்டாய் நிறுவனம் தனது ஹேட்ச்பேக் கார்களைதான் பெரிதும் நம்பியிருந்தது. ஆனால் தற்போது காலம் மாறி விட்டது. தற்போது ஹேட்ச்பேக் கார்களை விட எஸ்யூவி கார்களைதான் ஹூண்டாய் நிறுவனம் அதிகம் விற்பனை செய்கிறது. வெனியூ, கிரெட்டா, கோனா எலெக்ட்ரிக் மற்றும் டூஸான் ஆகியவை இதில் குறிப்பிடத்தக்கவை.

இந்த வரிசையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அல்கஸார் எஸ்யூவியை ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த காரின் டாப் வேரியண்ட்டான 6 சீட்டர் சிக்னேச்சர் மாடலை நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்தோம். அந்த அனுபவங்களை இந்த செய்தியின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

உங்களுக்கு தேவையான எல்லாமே இருக்கு... ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

டிசைன்

ஹூண்டாய் அல்கஸாரின் டிசைன் மிகவும் கவர்ச்சிகரமாக உள்ளது. இதன் முன் பகுதி ஹூண்டாய் கிரெட்டாவை போல் உள்ளது. ஹூண்டாய் கிரெட்டாவின் அதே ஹெட்லேம்ப் மற்றும் பகல் நேர விளக்குகளை அல்கஸார் எஸ்யூவியும் பெற்றுள்ளது. அத்துடன் க்ரோம் பதிக்கப்பட்ட க்ரில் அமைப்பும் வழங்கப்பட்டுள்ளது. க்ரில் அமைப்பின் நடுவில் ஹூண்டாய் லோகோ இடம்பெற்றுள்ளது. அதே நேரத்தில் எல்இடி பனி விளக்குகளும், இன்டிகேட்டர்களும் பம்பரின் கீழ் பகுதியில் வழங்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தத்தில், ஹூண்டாய் அல்கஸாரின் முன் பகுதி கிரெட்டாவை போலவே உள்ளது.

உங்களுக்கு தேவையான எல்லாமே இருக்கு... ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

ஆனால் ஹூண்டாய் கிரெட்டா உடனான ஒற்றுமை இத்துடன் முடிந்து விடுகிறது. பக்கவாட்டு பகுதியை பார்த்தால், ஹூண்டாய் கிரெட்டாவின் அதே பிளாட்பார்மில்தான் அல்கஸார் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை நம்புவதற்கு கடினமாக இருக்கலாம். பக்கவாட்டு பகுதியை பொறுத்தவரை, பிரீமியம் டைமண்ட் கட் 18 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் க்ரோம் பூச்சுக்களுடன் கூடிய டோர் ஹேண்டில்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

உங்களுக்கு தேவையான எல்லாமே இருக்கு... ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

அதே நேரத்தில் இந்த காரின் பின் பகுதியும் அமர்க்களமாக உள்ளது. இங்கே ஸ்பிளிட் எல்இடி டெயில் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. க்ரோம் பட்டை ஒன்று அவற்றை இணைக்கிறது. இந்த க்ரோம் பட்டையில் அல்கஸார் என ஆங்கிலத்தில் பெரிதாக எழுதப்பட்டுள்ளது. மேலும் இரட்டை குழல் சைலென்சரையும் இந்த எஸ்யூவி பெற்றுள்ளது. நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்தது 2.0 லிட்டர் இன்ஜின் உடன் கூடிய சிக்னேச்சர் மாடல் ஆகும். இதை குறிப்பிடும் வகையில் டெயில்கேட்டின் இடது பக்கத்தில் 2.0 பேட்ஜூம், வலது பக்கத்தில் சிக்னேச்சர் பேட்ஜூம் இடம்பெற்றுள்ளன.

உங்களுக்கு தேவையான எல்லாமே இருக்கு... ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

இன்டீரியர்

ஹூண்டாய் அல்கஸார் காரின் கேபின் விசாலமாகவும், ஏராளமான வசதிகள் நிரம்பியதாகவும் உள்ளது. ட்யூயல்-டோன் இன்டீரியரை இந்த எஸ்யூவி பெற்றுள்ளது. இது பழுப்பு மற்றும் கருப்பு வண்ணத்தில் பிரீமியமாக உள்ளது.

அதே நேரத்தில் இந்த காரின் டேஷ்போர்டு சாஃப்ட் டச் மெட்டீரியல்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது என நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது உண்மையல்ல. கடினமான பிளாஸ்டிக் மூலம்தான் ஒட்டுமொத்த டேஷ்போர்டும் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் அது பார்ப்பதற்கு சாஃப்ட் டச் பிளாஸ்டிக் போல் தெரியலாம்.

உங்களுக்கு தேவையான எல்லாமே இருக்கு... ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

டேஷ்போர்டின் மைய பகுதியில், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே வசதிகளுடன் ப்ளூடூத் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டியை இது பெற்றுள்ளது. இந்த சிஸ்டத்துடன் உங்கள் ஸ்மார்ட்போனை இணைப்பதும், மற்ற வசதிகளை பயன்படுத்துவதும் மிகவும் எளிமையானது. அத்துடன் டச் ஸ்க்ரீனும் பயன்படுத்துவதற்கு நன்றாக உள்ளது. அத்துடன் 64 கலர் ஆம்பியண்ட் லைட்டிங் வசதியையும் ஹூண்டாய் அல்கஸார் பெற்றுள்ளது.

உங்களுக்கு தேவையான எல்லாமே இருக்கு... ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

அதே நேரத்தில் இந்த காரில் 10.25 இன்ச் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்பட்டுள்ளது. காரை பற்றிய பல்வேறு தகவல்களை இது டிரைவருக்கு வழங்குகிறது. இது முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகும்.

அத்துடன் இந்த காரில் வழங்கப்பட்டுள்ள போஸ் 8 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டமும் அமர்க்களமாக உள்ளது. இந்த காரின் இரண்டாவது வரிசையில் வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த செக்மெண்ட்டிலேயே அல்கஸார்தான் இந்த வசதியை பெற்றுள்ளது.

உங்களுக்கு தேவையான எல்லாமே இருக்கு... ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

நாங்கள் ஓட்டிய சிக்னேச்சர் வேரியண்ட் 6 சீட்டர் மாடல் ஆகும். இதன் இரண்டாவது வரிசையில் கேப்டன் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரின் மூன்றாவது வரிசை பயணிகளுக்கும் ஏசி வெண்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கே யூஎஸ்பி சார்ஜிங் போர்ட்களும் வழங்கப்பட்டுள்ளன.

இந்த செக்மெண்ட்டிலேயே அல்கஸார்தான் மிகவும் சௌகரியமான கார் என ஹூண்டாய் நிறுவனம் கூறுகிறது. இந்த காருடன் நாங்கள் செலவிட்ட சில மணி நேரங்களில், இது உண்மை என்பதை எங்களால் உறுதி செய்ய முடிந்தது. முதல் மற்றும் இரண்டாவது வரிசைகள் மிகவும் சௌகரியமாக உள்ளன. ஆனால் மூன்றாவது வரிசை அவ்வளவு சௌகரியமாக இல்லை.

இந்த காரின் வீல்பேஸ் நீளம் 2,760 மிமீ ஆகும். இதன் காரணமாக கேபின் தாராளமான இடவசதியுடன் உள்ளது. ஆனால் மூன்றாவது வரிசைதான் அவ்வளவு சௌகரியமாக இல்லை. மூன்றாவது வரிசையில் பெரியவர்கள் அமர்ந்தால், நெரிசலான உணர்வு ஏற்படும். எனவே பெரியவர்கள் இங்கே அமர்வதை தவிர்த்து விடலாம். இந்த இருக்கைகள் குழந்தைகளுக்குதான் ஏற்றவை. எனினும் மூன்றாவது வரிசைக்கு செல்வதும், வருவதும் எளிமையாகதான் உள்ளது.

உங்களுக்கு தேவையான எல்லாமே இருக்கு... ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

ஆனால் மூன்றாவது வரிசை இருக்கைகளுடன் ஒப்பிடுகையில் இரண்டாவது வரிசை இருக்கைகள் மிகவும் சௌகரியமாக உள்ளன. அத்துடன் இங்கே பயன்படுத்தப்பட்டுள்ள மெட்டீரியல்களும் சிறப்பாக இருக்கின்றன. கேப்டன் இருக்கைகளுக்கு இடையே கப் ஹோல்டர்கள் உடன் ஆர்ம்ரெஸ்ட்டும், மொபைல் போன் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியில் ஏர் ப்யூரிஃபையர் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த பெருந்தொற்று காலகட்டத்தில் இது மிகவும் பயனுள்ள வசதியாகும்.

இந்த காரில் இருப்பதிலேயே டிரைவர் அமரும் இருக்கைதான் மிகவும் சௌகரியமானது. இந்த இருக்கைகளை மின்னணு முறையில் 8 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும். அத்துடன் மூன்று லெவல் கூலிங் மற்றும் வெண்டிலேஷன் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் முன் பக்க பயணியின் இருக்கையும் சௌகரியமாகதான் உள்ளது.

மேலும் இந்த காரில் பெரிய பனரோமிக் சன்ரூஃப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இன்போடெயின்மெண்ட் யூனிட் மூலம் குரல் கட்டளையில் சன்ரூஃப்பை கட்டுப்படுத்தலாம். கேபின் காற்றோட்டமாக இருப்பதற்கு சன்ரூஃப் உதவுகிறது.

உங்களுக்கு தேவையான எல்லாமே இருக்கு... ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

அதே நேரத்தில் இந்த காரின் இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசை இருக்கைகளை முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவே மடக்கி வைத்து கொள்ள முடியும். மூன்று வரிசை இருக்கைகளும் உயர்ந்து இருக்கும்போது, ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியின் பூட் ஸ்பேஸ் 180 லிட்டர்கள் ஆகும். இருக்கைகளை மடக்கி வைப்பதன் மூலம் இதனை அதிகரித்து கொள்ள முடியும்.

Dimensions Hyundai Alcazar
Length 4,500mm
Width 1,790mm
Height 1,675mm
Wheelbase 2,760mm
Boot Space 180 litres
Ground Clearance 200mm
உங்களுக்கு தேவையான எல்லாமே இருக்கு... ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

இன்ஜின் செயல்திறன் மற்றும் ஓட்டுதல் அனுபவம்

நாங்கள் ஓட்டிய சிக்னேச்சர் வேரியண்ட்டில், 2.0 லிட்டர் எம்பிஐ இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த 1,999 சிசி, இன்லைன் நான்கு சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 6,500 ஆர்பிம்மில் 157 பிஎச்பி பவரையும், 4,500 ஆர்பிஎம்மில் 191 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. நாங்கள் ஓட்டியது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் வேரியண்ட் ஆகும். ஆனால் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்விலும் இந்த இன்ஜின் கிடைக்கிறது.

மேலும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் தேர்விலும் ஹூண்டாய் அல்கஸார் கிடைக்கிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 4,000 ஆர்பிஎம்மில் 113.4 பிஎச்பி பவரையும், 1,500-2,750 ஆர்பிஎம்மில் 250 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.

இந்த காரின் பெட்ரோல் இன்ஜினின் பவர் டெலிவரி சீராக உள்ளது. இது நேச்சுரலி அஸ்பிரேட்டட் இன்ஜின் என்பதால், த்ராட்டில் ரெஸ்பான்ஸ் சிறப்பாக உள்ளது. ஒரு சில டர்போசார்ஜ்டு கார்களை போல், பின்னடைவு எதுவும் இல்லை. ஆனால் கியர்பாக்ஸ் அவ்வளவு வேகமாக இல்லை. சற்று மந்தமான உணர்வை தருகிறது. பேடில் ஷிஃப்டர்கள் மூலமாகவும் கியர்பாக்ஸின் கண்ட்ரோலை டிரைவர் எடுத்து கொள்ளலாம்.

உங்களுக்கு தேவையான எல்லாமே இருக்கு... ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

ஈக்கோ, கம்ஃபோர்ட் மற்றும் ஸ்போர்ட் என இந்த காரில் மொத்தம் மூன்று டிரைவிங் மோடுகள் வழங்கப்படுகின்றன. ஈக்கோ மோடில் நல்ல மைலேஜ் கிடைக்கிறது. ஆனால் த்ராட்டில் ரெஸ்பான்ஸ் அவ்வளவு சிறப்பாக இல்லை. அதே சமயம் கம்ஃபோர்ட் மோடில் த்ராட்டில் ரெஸ்பான்ஸ் ஓரளவிற்கு நன்றாக உள்ளது. நகர பகுதிகளில் ஓட்டுவதற்கு இது உகந்தது. அதே சமயம் ஸ்போர்ட் மோடில் இந்த எஸ்யூவி அமர்க்களப்படுத்துகிறது. இந்த இன்ஜின் மோட்கள் உடன் மட், சாண்ட் மற்றும் ஸ்னோ என மூன்று டிராக்ஸன் கண்ட்ரோல் மோடுகளையும் இந்த எஸ்யூவி பெற்றுள்ளது.

அதே நேரத்தில் இந்த காரின் சஸ்பென்ஸன் உங்களுக்கு சௌகரியமான பயணத்தை வழங்கும். ஆனால் கையாளுமை அவ்வளவு சிறப்பாக இல்லை. கார்னர்களை இந்த கார் எளிதாக எதிர்கொள்கிறது. இருந்தாலும் இந்த விஷயத்தில் தலைசிறந்து விளங்குகிறது என சொல்ல முடியாது. அதேபோல் உருவத்தில் பெரிதாக இருப்பதால், பாடி ரோலையும் உணர முடிகிறது. ஆனால் உருவத்தில் இந்த அளவிற்கு உள்ள மற்ற எஸ்யூவிகளுடன் ஒப்பிடும்போது, பாடி ரோல் குறைவாகதான் ஏற்படுகிறது.

உங்களுக்கு தேவையான எல்லாமே இருக்கு... ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

எனினும் இந்த காரின் ஸ்டியரிங் வீல் சிறப்பாக உள்ளது. ஸ்டியரிங் சிஸ்டம் முன்பை விட இறுக்கமாக இருப்பதை குறிப்பிட்டாக வேண்டும். ஹூண்டாய் நிறுவனத்தின் முந்தைய கார்களில் ஸ்டியரிங் வீல் இலகுவாக இருக்கும். அதிவேகத்தில் செல்லும்போது இது ஆபத்தை ஏற்படுத்தலாம். ஆனால் அல்கஸாரில் அந்த பிரச்னை இல்லை.

இந்த காரின் பெட்ரோல்/மேனுவல் மாடல் லிட்டருக்கு 14.5 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என்றும், பெட்ரோல்/ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 14 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அராய் சான்று வழங்கிய மைலேஜ் ஆகும். அதே நேரத்தில் டீசல் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்கள் முறையே ஒரு லிட்டருக்கு முறையே 18.5 கிலோ மீட்டர் மைலேஜயும், 18 கிலோ மீட்டர் மைலேஜயும் வழங்கும்.

உங்களுக்கு தேவையான எல்லாமே இருக்கு... ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

பாதுகாப்பு மற்றும் முக்கியமான வசதிகள்

ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியில் ஏராளமான வசதிகள் நிரம்பியுள்ளன. இதில், பாதுகாப்பு வசதிகளுக்கும் பஞ்சமில்லை. இந்த காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டில் கூட ஏராளமான வசதிகள் இடம்பெற்றுள்ளன. இந்த காரின் முக்கியமான வசதிகளை கீழே காணலாம்.

ஹூண்டாய் அல்கஸார் பாதுகாப்பு வசதிகள்

  • ப்ளைண்ட் வியூ மானிட்டர்
  • இபிடி உடன் ஏபிஎஸ்
  • எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல்
  • ஹில் ஸ்டார்ட் கண்ட்ரோல்
  • ஆட்டோ ஹோல்டு உடன் எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக்
  • டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம்
  • ஆட்டோ ஹெட்லேம்ப்கள்
  • 360 டிகிரி கேமரா
  • 6 ஏர்பேக்குகள்
  • ரியர் பார்க்கிங் கேமரா
  • மற்ற முக்கியமான வசதிகள்

    • க்ரூஸ் கண்ட்ரோல்
    • 8 ஸ்பீக்கர் போஸ் ஆடியோ சிஸ்டம்
    • குரல் கட்டளை மூலம் இயக்க கூடிய சன்ரூஃப்
    • பேடில் ஷிஃப்டர்கள்
    • வேரியண்ட்கள், வண்ண தேர்வுகள் மற்றும் விலை

      6 சிங்கிள் டோண் வண்ண தேர்வுகளிலும், இரண்டு ட்யூயல் டோண் வண்ண தேர்வுகளிலும் ஹூண்டாய் அல்கஸார் கிடைக்கிறது.

      சிங்கிள் டோண் கலர்கள்

      • டைகா ப்ரவுண்
      • போலார் ஒயிட்
      • பாந்தம் பிளாக்
      • டைபூன் சில்வர்
      • ஸ்டேரி நைட்
      • டைட்டன் க்ரே
      • ட்யூயல் டோன் கலர்கள்

        பாந்தம் பிளாக் மேற்கூரை உடன் போலார் ஒயிட்

        பாந்தம் பிளாக் மேற்கூரை உடன் டைட்டன் க்ரே

        உங்களுக்கு தேவையான எல்லாமே இருக்கு... ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

        போட்டியாளர்கள்

        மிகவும் சவால் நிறைந்த செக்மெண்ட்டில் ஹூண்டாய் அல்கஸார் நுழைந்துள்ளது. புதிய டாடா சஃபாரி மற்றும் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் உள்ளிட்ட கார்களுடன் ஹூண்டாய் அல்கஸார் போட்டியிடும். விரைவில் விற்பனைக்கு வரவுள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரும் இந்த செக்மெண்ட்டில் போட்டியிடும். ஒரு சிலர் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா உடனும் அல்கஸார் எஸ்யூவியை ஒப்பிடுகின்றனர். முக்கியமான போட்டியாளர்கள் உடனான ஒப்பீட்டை நீங்கள் கீழே காணலாம்.

        Specifications Hyundai Alcazar Tata Safari MG Hector Plus
        Engine 2.0-litre Petrol / 1.5-litre Turbo-Diesel 2.0-litre Turbo-Diese 1.5-litre Turbo-Petrol / 1.5-litre Turbo-Petrol Hybrid / 2.0-litre Turbo-Diesel
        Power 157bhp / 113.4bhp 167.6bhp 141bhp / 141bhp / 167.6bhp
        Torque 191Nm / 250Nm 350Nm 250Nm / 250Nm / 350Nm
        Transmission 6-Speed Manual / 6-Speed Automatic 6-Speed Manual / 6-Speed Automatic 6-Speed Manual / DCT / CVT
        Starting Price Rs 16.30 lakh (ex-showroom) Rs 14.99 lakh (ex-showroom) Rs 13.62 lakh (ex-showroom)

        டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?

        ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியில் ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் டிசைனும் கவர்ச்சிகரமாக இருக்கிறது. மேலும் வெவ்வேறு விதமான இருக்கை அமைப்புகள் மற்றும் இன்ஜின் தேர்வுகள் உடனும் ஹூண்டாய் அல்கஸார் கிடைக்கிறது. எனவே ஹூண்டாய் அல்கஸார் உங்களுக்கு ஏற்ற காராக இருக்கும்.

Most Read Articles
English summary
Hyundai Alcazar First Drive Review: Design, Engine, Performance, Features And More. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X