ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் அனுகூலங்கள், குறைபாடுகள் - முழுமையான விவரங்கள்

Written By:

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் சார்பாக தயாரிக்கபடும் க்ரெட்டா எஸ்யூவி, நன்கு விற்பனையாகும் பிரபலமான எஸ்யூவிகளில் ஒன்றாக உள்ளது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யபட்ட க்ரெட்டா எஸ்யூவி, மக்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

மற்ற எந்த ஒரு எஸ்யூவியை போல், க்ரெட்டா எஸ்யூவியும் சில அனுகூலங்களையும், குறைபாடுகளையும் கொண்டுள்ளது. இது குறித்த தகவல்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

hyundai-creta-suv-advantages-and-disadvantages-detail

குறைபாடுகள்;

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி, அதன் போட்டி நிறுவனத்தின் மாடல்களின் விலைகளை காட்டிலும், கூடுதலான விலைகளில் விற்கபடுகிறது. இப்படி கூடுதலான விலைகளில் விற்கபடும் நிலையில் அதன் போட்டி மாடல்களை காட்டிலும் பிரத்யேகமான அம்சங்கள் கொண்டிருந்தால் விசேஷம் ஆகும்.

இப்படி என்ன என்ன அம்சங்கள் க்ரெட்டா எஸ்யூவியில் இல்லாமல் இருக்கிறது என தெரிந்து கொள்வோம்.

அம்சங்கள்;

ஒரு எஸ்யூவியின் முக்கியமான விஷயமே, அது கொண்டுள்ள அம்சங்களில் தான் உள்ளது.

க்ரெட்டா எஸ்யூவி இல்லாத அம்சங்கள்;

(*) ஏடபுள்யூடி (ஆல்-வீல் டிரைவ்)

(*) 3-வது வரிசை சீட்டீங் (3-வது வரிசை இருக்கை அமைப்பு)

(*) ஆட்டோமேட்டிக் ஃபோல்டிங் ஓஆர்விஎம் (அவுட்சைட் ரியர்-வியூ மிரர்)

(*) ஆட்டோமேட்டிக் டே / நைட் ஐஆர்விஎம் (இன்சைட் ரியர்-வியூ மிரர்)

(*) ஹைட் அட்ஜஸ்டபிள் சீட்பெல்ட்கள் (உயரம் மாற்றிக்கொள்ள கூடிய சீட்பெல்ட்கள்)

(*) அட்ஜஸ்டபிள் டிரைவர் ஆர்ம்ரெஸ்ட் (உயரம் மாற்றிக்கொள்ள கூடிய ஆர்ம்ரெஸ்ட்)

(*) கூல்ட் கிளவ் பாக்ஸ்

(*) சன்ரூஃப் (மேற்கூரை)

பெர்ஃபார்மன்ஸ் மற்றும் பாதுகாப்பு;

எந்த ஒரு நல்ல எஸ்யூவிக்கும், அதன் பெர்ஃபார்மன்ஸ் (திறன்) மற்றும் பாதுகாப்பு தொடர்பான அம்சங்கள் தான் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

இதில் க்ரெட்டா எஸ்யூவி இல்லாத அம்சங்கள்;

(*) வெர்னா மாடலை போன்றே விவரகுறிப்புகள் இருந்தும், இதன் பிக்-அப் எதிர்பார்ப்புகளுக்குறிய அளவில் இல்லை.

(*) ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டில் குறைபாடுகள்

(*) விலையை ஒப்பிடுகையில், க்ரூஸ் கண்ட்ரோல் இல்லை

(*) டாப்-எண்ட் வேரியண்ட்டில் மட்டுமே 6-ஏர் பேக்குகள் உள்ளது

(*) ஸ்பீட் சென்சிங் டோர்-லாக் (வேகத்தை உணரும் கதவுக்கான லாக்) இல்லை.

(*) ரியர் டோரில் (பின் பக்க கதவில்) மட்டுமே சைல்ட் லாக் உள்ளது.

அனுகூலங்கள்;

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியில் சில குறைபாடுகள் இருந்தாலும், இதில் நிறைய அனுகூலங்கள் உள்ளது.

அம்சங்கள்;

(*) இண்டீரியர் - இதன் செக்மெண்ட்டிலேயே சிறந்த டேஷ்போர்ட் டிசைன்

(*) திறன்மிக்க ஸ்டேட்டிக் கார்னரிங் லைட்கள்

(*) திறன்மிக்க புரொஜக்டர் ஹெட்லேம்ப்கள்

(*) அட்டோமேட்டிக் டர்ன் ஆஃப் ஹெட்லேம்ப் - நீங்கள் எஸ்யூவியில் இருந்து ஆஃப் செய்யாமல் வெளியே வந்துவிட்டாலும், தானாக ஆஃப் ஆகிவிடும்

(*) நைட் மோட் ஆன் தி ஆடியோ / வீடியோ நேவிகேஷன் சிஸ்டம் - ஹெட்லேம்ப் ஆன் ஆகி இருக்கும் நிலையில், நேவிகேஷன் சிஸ்டம் தானாக நைட் மோடுக்கு

மாறிவிடும்.

பெர்ஃபார்மன்ஸ் மற்றும் பாதுகாப்பு;

(*) சிற்ந்த இஞ்ஜின் தேர்வுகள் - 1.6 லிட்டர், 1.4 லிட்டர் (டீசல் / பெட்ரோல்) மற்றும் 1.6 லிட்டர் (பெட்ரோல்)

(*) நல்ல ஆட்டோமேட்டிக் வேரியண்ட் - போட்டி மாடல்களை காட்டிலும் சிறந்தது

(*) திறன்மிக்க பெட்ரோல் வேரியண்ட் - க்ரெட்டா எஸ்யூவியில் உள்ளது போல், சிறந்த பெட்ரோல் வேரியண்ட், இதன் போட்டி நிறுவனங்களிடம் இல்லை

பாதுகாப்பு அம்சங்கள்;

(*) ஹெச்ஏசி - ஹில் அசிஸ்ட் கண்ட்ரோல்

(*) ஈஎஸ்பி - எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம்

டிசைன்;

டிசைன் அம்சங்களை பொருத்த வரை, ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி பட்டையை கிளப்புகிறது. இதன் போட்டி மாடல்களை காட்டிலும், இது டிசைனில் சிறந்து

விளங்குகிறது.

(*) ஃப்ளூயிடிக் டிசைன் - தைரியமான மற்றும் மிரட்டும் வகையிலான டிசைன்

(*) 3 ஸ்லாட் குரோம் கிரில்

(*) ஸ்டோரேஜ் எர்க்கோனாமிக்ஸ் - முன் வரிரை முதல் பின் வரிசைகள் வரை நன்கு வடிவமைக்கபட்ட பயணியர் இருக்கைகள் லே அவுட் உள்ளது

(*) டிரைவர் டோர் சென்சார் - சாவி இல்லாமலேயே நுழையும் வசதி

(*) ப்ரண்ட் மற்றும் ரியர் வாஷர் - தண்ணீர் பீய்ச்சி அடித்து கண்ணாடிகளை சுத்தம் செய்யும் வாஷர் இயந்திரம், காரின் முன் பக்கத்தில் இருப்பதே தெரியாத வகையில் கச்சிதமாக பொருத்தபட்டுள்ளது. பின் பக்கத்தில், உயரத்தில் மாட்டபட்டுள்ள ஸ்டாப் லேம்ப்பில் இந்த வாஷர் பொருத்தபட்டுள்ளது.

(*) ரிவர்ஸ் கேமரா - இந்த ரிவர்ஸ் கேமரா, 5-வது கதவு குரோம் ஸ்ட்ரிப்பின் கீழ் பொருத்தபட்டுள்ளது.

இறுதி கருத்து;

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி சின்ன சின்ன விஷயங்களில் அதிக கவனம் செலுத்தியுள்ளது. எனினும், ஏர்பேக்குகள் மற்றும் ஏடபுள்யூடி போன்ற பெரிய விஷயங்களில் கோட்டைவிட்டுவிட்டது.

நன்கு ஆராய்ந்து பார்த்தால், ஹூண்டாய் நிறுவனத்தின் விலை குறைந்த மாடல்களான ஐ20 போன்ற கார்களில் உள்ள சில முக்கிய அம்சங்கள் கூட அதிகமாக விலை நிர்ணயிக்கபட்டுள்ள இந்த க்ரெட்டா எஸ்யூவியில் இல்லை.

Story first published: Friday, March 18, 2016, 19:55 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

X