ஃபியட் புன்ட்டோ அபார்த்... இதற்காக காத்திருக்கலாம் என்பதற்கான காரணங்கள்!!

Written By:

இந்தியாவில் அபார்த் பிராண்டில் இரண்டாவது மாடலாக ஃபியட் புன்ட்டோ அபார்த் கார் இன்னும் சில வாரங்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

இந்தியாவின் அதிசக்திவாய்ந்த ஹேட்ச்பேக் கார் மாடலாக வர இருக்கும், இந்த புதிய காருக்காக பெர்ஃபார்மென்ஸ் விரும்பிகள் நிச்சயம் காத்திருக்கலாம். அவர்களது காத்திருப்பு வீண் போகாது என்பதற்கான முக்கிய காரணங்களை ஸ்லைடரில் காணலாம்.

பவர்ஃபுல் எஞ்சின்

பவர்ஃபுல் எஞ்சின்

இந்த காரின் மிக முக்கிய அம்சமே, இதன் டி-ஜெட் பெட்ரோல் எஞ்சின்தான். இந்த காரில் இருக்கும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 143 பிஎச்பி பவரையும், 215 என்எம் டார்க்கையும் வாரி வழங்கும்.

செயல்திறன்

செயல்திறன்

இந்த கார் 0- 100 கிமீ வேகத்தை 9.54 வினாடிகளில் கடந்துவிடும். இந்தியாவின் அதிவேக ஆக்சிலரேசன் கொண்ட கார் மாடல் என்ற பெருமையையும் இந்த கார் பெற இருக்கிறது.

அதிக டார்க்...

அதிக டார்க்...

இந்த காரின் எஞ்சின் அதிகபட்சமாக 215 என்எம் டார்க் வரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது என்பதால், பிக்கப்பில் பின்னும். சிக்னல்களிலிருந்து சிட்டாய் பறக்கும். மேலும், மிட் ரேஞ்ச்சில் இதன் பவர் வெளிப்பாடு சிறப்பாக இருக்கும் காரணத்தால், அசால்ட்டாக ஓவர்டேக் செய்ய முடியும்.

 சஸ்பென்ஷன்

சஸ்பென்ஷன்

அதிக செயல்திறன் இந்த காரின் எஞ்சினுக்கு ஈடுகொடுக்கும் விதத்தில், முன்புறத்தில் இன்டிபென்டென்டட் காயில் ஸ்பிரிங், ஸ்டெபிளைசர் பார் கொண்ட சஸ்பென்ஷன் அமைப்பும், பின்புறத்தில் டார்சன் பீம், ஸ்டெபிளைசர் பார் கொண்ட சஸ்பென்ஷன் அமைப்பும் பொருத்தப்பட்டிருக்கின்றன.

பிரேக் சிஸ்டம்

பிரேக் சிஸ்டம்

பூஸ்டர் பிரேக்கிங் சிஸ்டத்துடன், அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க்குகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது மிகச்சிறப்பான நிறுத்துதல் திறனை வழங்கும்.

கையாளுமை

கையாளுமை

இந்த காரின் சேஸீயும், குறைவான தரை இடைவெளியின் மூலமாக, மிக மிக சிறப்பான கையாளுமையை வழங்கும். குறிப்பாக, இதன் கையாளுமையை டிராக்கில் ஓட்டும்போது உணர முடியும்.

பட்ஜெட் குறைவு

பட்ஜெட் குறைவு

மிகச்சிறப்பான செயல்திறன் கொண்ட இந்த கார் ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் வர இருக்கிறது. மேலும், இதனை பெர்ஃபார்மென்ஸ் கார் மாடல்களின் வரிசையில் வைத்து ஒப்பீடு செய்யும்போது, குறைந்த பட்ஜெட் கொண்ட மாடலாகவும் குறிப்பிடலாம்.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

பெர்ஃபார்மென்ஸ் மட்டுமே போதுமா என்ன? இந்த பிராண்டின் தேள் உருவத்தை பிரதிபலிக்கும் டிசைன் கொண்ட அலாய் வீல்கள், லோ ப்ரொஃபைல் டயர்கள், அபார்த் பேட்ஜ், ஸ்டீல் பெடல்கள் போன்ற பல சிறப்பு ஆக்சஸெரீகளும் இந்த காரின் மதிப்பை கூட்டும் அம்சங்களாக இருக்கின்றன. எனவே, இந்த காருக்காக சில மாதங்கள் காத்திருப்பது வீண் போகாது என்றே கூறலாம்.

 
மேலும்... #ரிவியூ #review
English summary
The Fiat Punto Abarth was revealed at the launch of the Fiat Abarth 595 Competizione at the Buddh International Circuit. Here are some important things about Fiat Punto Abarth.
Story first published: Tuesday, August 25, 2015, 10:35 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark