புதிய ஜாகுவார் எஃப்- பேஸ் எஸ்யூவி: டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

Written By:

கடந்த சில ஆண்டுகளாகவே செடான் கார்கள் மற்றும் எம்பிவி கார்களுக்கான வரவேற்பு குறைந்து, எஸ்யூவி ரக கார்கள் மீதான மோகம் அதிகரித்து வருகிறது. இதனால், பட்ஜெட் கார் தயாரிப்பாளர்களிலிருந்து பிரிமியம் கார் தயாரிப்பு நிறுவனங்கள் வரை எஸ்யூவி கார்களை களமிறக்குவதில் தீவிரம் காட்டி வருகின்றன.

 புதிய ஜாகுவார் எஃப்- பேஸ் எஸ்யூவி: டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பயணிகள் மற்றும் பொருட்கள் வைக்க அதிக இடவசதி, வலிமையான கட்டமைப்பு, அதிக கிரவுண்ட் க்ளியரன்ஸ் உள்ளிட்டவை வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில், டாடா மோட்டார்ஸ் கீழ் செயல்படும் இங்கிலாந்தை சேர்ந்த ஜாகுவார் நிறுவனமும் 80 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் எஸ்யூவி தயாரிப்பில் இறங்குவதாக 2015ம் ஆண்டு டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் அறிவித்தது.

 புதிய ஜாகுவார் எஃப்- பேஸ் எஸ்யூவி: டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இதனால், எஸ்யூவி பிரியர்களின் கவனத்தை ஜாகுவார் நிறுவனத்தின் எஸ்யூவி வெகுவாக ஆவல் கொள்ள செய்தது. மேலும், 2015ம் ஆண்டு பிராங்க்ஃபர்ட் ஆட்டோ ஷோவில் ஜாகுவார் நிறுவனத்தின் எஃப் பேஸ் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

 புதிய ஜாகுவார் எஃப்- பேஸ் எஸ்யூவி: டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஜாகுவார் நிறுவனத்தின் எக்ஸ்இ மற்றும் எக்ஸ்எஃப் செடான் கார்கள் உருவாக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்மில்தான் புதிய ஜாகுவார் எஃப்- பேஸ் எஸ்யூவியும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. உறுதிமிக்க அலுமினிய பாகங்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டு இருப்பதால், போட்டியாளர்களைவிட மிக வலுவானதாகவும், இலகுவானதாகவும் இருக்கிறது.

இந்தியாவில் ஜாகுவார் எஃப்- பேஸ் எஸ்யூவி பிரஸ்டீஜ் 20டீ என்ற டீசல் மாடலில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த எஸ்யூவியின் சாதக, பாதகங்களை தொடர்ந்து காணலாம்.

 டிசைன்

டிசைன்

ஜாகுவார் எஃப் - பேஸ் எஸ்யூவி மிக பிரம்மாண்டமான தோற்றத்தை பெற்றிருக்கிறது. எல்இடி ஹெட்லைட்டுகள், J- வடிவிலான பகல்நேர விளக்குகள், கார்னரிங் லைட்டுகள், ஜாகுவார் நிறுவனத்தின் பாரம்பரிய க்ரில் அமைப்பு ஆகியவை மிக சிறப்பான முக அமைப்பை கொடுக்கிறது.

 புதிய ஜாகுவார் எஃப்- பேஸ் எஸ்யூவி: டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பக்கவாட்டிலும் டிசைன் மிக பிரமாதமாக இருக்கிறது. வலிமையான தோற்றத்தை தரும் பிரம்மாண்டமமான 18 அங்குல அலாய் சக்கரங்கள், பின்புறத்தில் தாழ்வாகும் கூரை அமைப்பு, வலிமையான வீல் ஆர்ச்சுகள் ஆகியவை சிறப்பு சேர்க்கின்றன. அழகு சேர்க்கும் பிட்ட வடிவமைப்பும் இந்த எஸ்யூவிக்கு தனித்துவத்தை அளிக்கிறது.

 புதிய ஜாகுவார் எஃப்- பேஸ் எஸ்யூவி: டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பின்புறத்தில் இன்னும் பிரம்மாண்டமாக இருக்கிறது. சிறிய விண்ட்ஷீல்டு கண்ணாடி இருந்தாலும், பிட்டப் பகுதி பிரம்மாண்ட தோற்றத்தை தருகிறது. டெயில் லைட்டுகள் டிசைன் ஜாகுவார் எஃப்- டைப் ஸ்போர்ட்ஸ் காரை ஒத்திருக்கிறது. ஸ்பாய்லரும், இரட்டைக் குழல் சைலென்சரும் கூட சிறப்பு சேர்க்கிறது.

இன்டீரியர்

இன்டீரியர்

இந்த காரின் வெளிப்புறத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் இதன் உட்புறம் மிக பிரிமியமாக இருக்கிறது. கருப்பு வண்ண டேஷ்போர்டும், வெள்ளை லெதர் சீட் கவர்களும் காரின் உட்புறத்தை கவர்ச்சியான வண்ணக் கலவையாக காட்டுகிறது. வடிவமைப்பும், பாகங்களின் தரமும் சிறப்பாக இருக்கிறது.

Recommended Video - Watch Now!
[Tamil] Skoda kodiaq Launched In India - DriveSpark
 புதிய ஜாகுவார் எஃப்- பேஸ் எஸ்யூவி: டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டமும், அதற்கான கட்டுப்பாட்டு அமைப்புகளும் ஜாகுவார் எக்ஸ்எஃப் காரிலிருந்து பெறப்பட்டிருக்கிறது. லெதர் உறையுடன் கூடிய ஸ்டீயரிங் வீல் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

 புதிய ஜாகுவார் எஃப்- பேஸ் எஸ்யூவி: டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஜாகுவார் எஃப்- பேஸ் காரில் தொடுதிரை வசதியுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. தொடுதிரை இயக்குவதற்கு மிகசிறப்பான அனுபவத்தை தருகிறது. இந்த காரில் 12 ஸ்பீக்கர்களுடன் கூடிய மெரிடியன் சவுண்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த சவுண்ட் சிஸ்டம் மிக துல்லியமான, தரமான இசையை வழங்குகிறது.

 புதிய ஜாகுவார் எஃப்- பேஸ் எஸ்யூவி: டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

முன் இருக்கைகளை எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதி இருக்கிறது. ஆனால், முன் இருக்கைகள் கால்களுக்கு நல்ல சப்போர்ட்டாக இல்லை. இந்த காரில் பெரிய அளவிலான கண்ணாடி கூரை கொடுக்கப்பட்டு இருக்கிறது.

 புதிய ஜாகுவார் எஃப்- பேஸ் எஸ்யூவி: டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இரண்டாவது வரிசை இருக்கை வசதியாகவும், சொகுசாகவும் இருக்கிறது. தனி ஏசி வென்ட்டுகள் மிக சிறப்பான குளிர்ச்சியை வழங்குகிறது. இந்த காரின் இருக்கைகளை மடக்கி விரிக்கும் வசதி கொண்டுள்ளது. ஜாகுவார் எஃப்- பேஸ் காரில் 650 லிட்டர் கொள்ளளவு உடைய பூட் ரூம் இடவசதி இருக்கிறது. இருக்கைகளை மடக்கினால் 1,740 லிட்டர் கொள்திறன் கொண்டதாக மாற்றலாம்.

 புதிய ஜாகுவார் எஃப்- பேஸ் எஸ்யூவி: டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டோர் பாக்கெட்டுகளில் பாட்டில் ஹோல்டர்கள் உள்ளன. க்ளவ் பாக்ஸ், ஆர்ம்ரெஸ்ட், சென்டர் கன்சோல் பகுதிகளிலும் பொருட்களை வைப்பதற்கான இடவசதி இருக்கிறது இந்த காரில் 3 12 வோல்ட் சார்ஜிங் பாயிண்ட்டுகள் உள்ளன.

பாதுகாப்பு

பாதுகாப்பு

புதிய ஜாகுவார் எஃப்- பேஸ் காரில் 6 ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. எமர்ஜென்சி பிரேக் அசிஸ்ட், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ட்ராக்ஷன் கன்ட்ரோல், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஸ்பீடு லிமிட்டருடன் கூடிய க்ரூஸ் கன்ட்ரோல் ஆகியவை முக்கிய பாதுகாப்பு அம்சங்கள்.

 புதிய ஜாகுவார் எஃப்- பேஸ் எஸ்யூவி: டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய ஜாகுவார் எஃப்- பேஸ் எஸ்யூவியில் ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் 2.0 லிட்டர் இங்கெனியம் அலுமினியம் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 177 பிஎச்பி பவரையும், 430 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த காரில் இசட்எஃப் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் 4 சக்கரங்களுக்கும் எஞ்சின் சக்தியை கடத்துகிறது.

 புதிய ஜாகுவார் எஃப்- பேஸ் எஸ்யூவி: டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஜாகுவார் எஃப்- பேஸ் எஸ்யூவியின் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் ஸ்டார்ட் செய்வதிலிருந்து அதிவேகத்தில் செல்வது வரை அதிர்வுகள் மிக குறைவாக இருக்கிறது. ஆரம்ப மற்றும் நடுத்தர வேகத்தில் இந்த எஞ்சின் மிகச் சிறப்பான டார்க்கை அளிக்கிறது. இந்த காரில் பேடில் ஷிஃப்ட் வசதியும் இருப்பதால், ஓட்டுனர் விரும்பினால் மேனுவல் முறையிலும் கியர் ஷிஃப் செய்து இயக்கலாம்.

 புதிய ஜாகுவார் எஃப்- பேஸ் எஸ்யூவி: டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த காரில் ஈக்கோ, டைனமிக், ஸ்போர்ட் மற்றும் வழுக்குத் தரைகளில் செல்வதற்கான [ரெயின்/ஐஸ்/ ஸ்நோ] விசேஷ டிரைவிங் மோடு உள்பட 4 டிரைவிங் மோடுகள் உள்ளன. ஈக்கோ மோடில் அதிக எரிபொருள் சிக்கனத்தை பெற முடியும்.

 புதிய ஜாகுவார் எஃப்- பேஸ் எஸ்யூவி: டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டைனமிக் மோடில் மிக விரைவான கியர் மாற்றம் மற்றும் ஆக்சிலரேசன் தெரிகிறது. ஸ்போர்ட் மோடில் மிக அதிகபட்ச செயல்திறனை எஞ்சின் வெளிப்படுத்துகிறது. ரெயின், ஐஸ், ஸ்நோ ஆகிய மோடுகளில் எஞ்சின் ஆக்சிலரேசன் குறைவாக கட்டுப்படுத்தப்படுவதுடன், கார் வழுக்கிச் செல்வதை தவிர்க்கும் வகையில் இருக்கிறது.

 புதிய ஜாகுவார் எஃப்- பேஸ் எஸ்யூவி: டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

எஸ்யூவி கார்கள் வளைவுகளில் சற்றே கையாளுமை மந்தமாக இருக்கும். ஆனால், இந்த பிரம்மாண்ட எஸ்யூவியின் சஸ்பென்ஷன் அமைப்பு வளைவுகளில் கூட குறைவான பாடி ரோல் தெரியும் அளவுக்கு இருப்பதுடன், ஸ்டீயரிங் வீல் செயல்பாடு மிக துல்லியமாக இருப்பதால் மிக நம்பிக்கையுடன் ஓட்ட முடிகிறது.

 புதிய ஜாகுவார் எஃப்- பேஸ் எஸ்யூவி: டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த எஸ்யூவியின் சஸ்பென்ஷன் கடினமாக இருந்தாலும், பயணத்தின்போது அதிக அலுங்கல் குலுங்கல் தெரியவில்லை. மிக மோசமான சாலைகளை கூட மிக எளிதாகவும், அதிர்வுகள் குறைவாகவும் கடந்து செல்கிறது.

 புதிய ஜாகுவார் எஃப்- பேஸ் எஸ்யூவி: டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய ஜாகுவார் எஃப்- பேஸ் எஸ்யூவி நகர்ப்புறத்தில் லிட்டருக்கு 11 கிமீ மைலேஜையும், நெடுஞ்சாலைகளில் லிட்டருக்கு 16 கிமீ மைலேஜ் வரை கொடுக்கிறது. இந்த பிரம்மாண்ட எஸ்யூவியின் ஆச்சரியத்தில் இதுவும் ஒன்று.

எடிட்டர் கருத்து

எடிட்டர் கருத்து

குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பிடித்தமான சிறப்பம்சங்களை கொண்ட ஓர் சிறந்த பிரிமியம் எஸ்யூவி மாடலாக ஜாகுவார் எஃப் பேஸ் எஸ்யூவியை கூற முடியும். அதேநேரத்தில், ரூ.60.02 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படும் இந்த எஸ்யூவி சற்றே விலை அதிகம் என்பது பாதகமான விஷயம்.

அதேநேரத்தில், அழகான டிசைன், சிறந்த கையாளுமை, ஜாகுவார் பிராண்டின் மதிப்புக்கு இந்த கூடுதல் விலை ஒரு பொருட்டாக இருக்காது. மீண்டும் ஒரு டெஸ்ட் டிரைவ் செய்தித் தொகுப்பில் சந்திக்கலாம்.

மேலும்... #ஜாகுவார் #jaguar
English summary
Here are our thoughts about Jaguar'sfirst venture into the world of SUVs.
Story first published: Saturday, December 2, 2017, 15:00 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark