ஜாகுவார் எக்ஸ்இ 20டீ பிரிமியம் கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

Written By:

கடந்த 2016ம் ஆண்டு நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஜாகுவார் நிறுவனத்தின் எக்ஸ்இ பிரிமியம் செடான் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஜாகுவார் எக்ஸ்இ கார் முதலில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடலில் மட்டுமே விற்பனைக்கு வந்தது.

ஜாகுவார் எக்ஸ்இ 20டீ பிரிமியம் கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த நிலையில், அண்மையில் ஜாகுவார் எக்ஸ்இ காரின் டீசல் மாடலும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் ஜாகுவார் நிறுவனத்தின் விலை குறைவான மாடலாக விற்பனைக்கு வந்துள்ள இந்த பிரிமியம் கார் இந்தியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஜாகுவார் எக்ஸ்இ 20டீ பிரிமியம் கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஜாகுவார் எக்ஸ்இ 20டீ என்ற டீசல் மாடலில் பிரஸ்டீஜ் வேரியண்ட்டை டிரைவ்ஸ்பார்க் டீம் அண்மையில் டெஸ்ட் டிரைவ் செய்தது. அப்போது கிடைத்த அனுபவங்களை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.

ஜாகுவார் எக்ஸ்இ 20டீ பிரிமியம் கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த கார் குறித்து ஜாகுவார் நிறுவனத்தின் வடிவமைப்புப் பிரிவு தலைவர் இயான் கல்லம் கூறுகையில்," இந்த ரகத்தில் மிக அழகிய காராக குறிப்பிட முடியாவிட்டாலும், அழகும், துறுதுறுப்பும் நிறைந்த மாடலாக வடிவமைத்துள்ளோம்," என்று தெரிவித்துள்ளார்.

ஜாகுவார் எக்ஸ்இ 20டீ பிரிமியம் கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஜாகுவார் கார்களுக்கு அழகை கொடுக்கும் கம்பீரமான முகப்பு க்ரில் அமைப்பு, அதன் நடுவில் ஜாகுவார் இலட்சினையும் கவர்ச்சியாக இருக்கிறது. ஹெட்லைட் ஹவுசிங்கில் இடம்பெற்றிருக்கும் பகல்நேர விளக்குகள் வசீகரத்தை தருகின்றன.

ஜாகுவார் எக்ஸ்இ 20டீ பிரிமியம் கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய ஜாகுவார் எக்ஸ்இ காரின் ஹெட்லைட் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ட வடிவிலான எல்இடி பகல்நேர விளக்குகள் ஹெட்லைட் அமைப்பிற்கு வலு சேர்க்கிறது.

ஜாகுவார் எக்ஸ்இ 20டீ பிரிமியம் கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த கார் மிகச் சிறப்பான ஏரோடைனமிக்ஸ் தத்துவத்திலான டிசைனை பெற்றிருக்கிறது. முன்புறம் தாழ்வாகவும், அதிலிருந்து காரின் அமைப்பு உயர்த்தப்பட்டு பின் பகுதியில் தாழ்ந்துவிடுகிறது. கண்ணாடி ஜன்னல்களை சுற்றிலும் க்ரோம் பீடிங் கொடுக்கப்பட்டு இறுக்கிறது. கம்பீரமான அலாய் சக்கரங்கள் காருக்கு வலிமையான தோற்றத்தை தருகிறது.

ஜாகுவார் எக்ஸ்இ 20டீ பிரிமியம் கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

அதிவேகத்தில் செல்லும்போது கார் சக்கரங்களுக்குள் செல்லும் காற்று எளிதாக வெளியேறுவதற்கான அனைத்து ஜாகுவார்களிலும் இருப்பது போல இந்த காரிலும் காற்று வெளியேற்று அமைப்பு பக்கவாட்டில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அது காரின் டிசைனை எவ்விதத்திலும் பாதித்து விடாத வகையில், க்ரோம் அலங்காரத்துடன் கவர்ச்சி சேர்க்கிறது.

ஜாகுவார் எக்ஸ்இ 20டீ பிரிமியம் கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த காரின் பின்புறத்தில் இரண்டு பெரிய டெயில் லைட் க்ளஸ்ட்டர் அமைப்பு பிரதானமாக இருக்கிறது. இரண்டிற்கும் நடுவில் ஜாகுவார் நிறுவனத்தின் சிறுத்தை லோகோ இடம்பெற்றிருக்கிறது. பம்பர் அழகுற செதுக்கப்பட்டு இருப்பதுடன், இரட்டை குழல் துப்பாக்கி போன்ற சைலென்சரும் சிறப்பு.

ஜாகுவார் எக்ஸ்இ 20டீ பிரிமியம் கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஜாகுவார் எஃப்- டைப் காரில் இருப்பது போன்றே, இந்த காரில் எல்இடி டெயில் லைட் கொடுக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்க விஷயம். இது தனித்துவமான விஷயமாகவும் கூறலாம்.

ஜாகுவார் எக்ஸ்இ 20டீ பிரிமியம் கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த காரில் பின்புற பூட் ரூம் மூடியிலேயே சிறப்பான டக்ட்டெயில் ஸ்பாய்லர் அமைப்புடன் இருப்பது சிறந்த ஏரோடைனமிக்ஸ் தத்துவத்துடன் வடிவமைக்கப்பட்டு இருப்பதற்கு சான்றாக இருக்கிறது.

ஜாகுவார் எக்ஸ்இ 20டீ பிரிமியம் கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

வெளிப்புறத்தை போன்றே உட்புறத்திலும் ஏராளமான சிறப்பம்சங்கள் நம்மை கவர்ந்து இழுக்கின்றன. ஜாகுவார் எஃப் பேஸ் கார் போன்றே, இதன் சென்டர் கன்சோல் அமைப்பு வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்ம், க்ளைமேட் கன்ட்ரோல் சுவிட்சுகள் என பல்வேறு விதமான கட்டுப்பாட்டு வசதிகள் சென்டர் கன்சோலில் உள்ளன.

ஜாகுவார் எக்ஸ்இ 20டீ பிரிமியம் கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த காரில் 9 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. காரின் வடிவத்திற்கு சற்றே சிறியதாக தெரிகிறது. மெரிடியன் ஆடியோ சிஸ்டம் சிறப்பான ஒலி தரத்தை வெளிப்படுத்துகிறது.

ஜாகுவார் எக்ஸ்இ 20டீ பிரிமியம் கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த காரில் ஜாகுவார் டிரைவ் கன்ட்ரோல் என்ற கியர் மோடுகளை மாற்றும் வசதி உள்ளது. அதாவது, லிவர் போன்று அல்லாமல், டயல் மூலமாக கியர் மோடுகளை மாற்றக்கூடிய இந்த வசதி மிகவும் தனித்துவமாகவும், எளிதாகவும் இருக்கிறது.

ஜாகுவார் எக்ஸ்இ 20டீ பிரிமியம் கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

முன் இருக்கைகள் மிகவும் சவுகரியமாக இருக்கின்றன. கால்களுக்கு நல்ல சப்போர்ட்டை வழங்குகிறது. ஓட்டுனர் இருக்கைக்கு மட்டும், சீட் மெமரி வசதி உள்ளது. உங்களுக்கு பொருத்தமான இருக்கை அமைப்பை பதிவு செய்து, தேவைப்படும்போது மாற்றும் வசதியை இதன் மூலமாக பெற முடியும்.

ஜாகுவார் எக்ஸ்இ 20டீ பிரிமியம் கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த காரின் பின் இருக்கையும் மிக சொகுசான அனுபவத்தை வழங்குகிறது. ஆனால், தாழ்வான கூரை அமைப்பு, உயரமானவர்களுக்கு சற்றே நெருக்கடியான உணர்வை தரும். இந்த கார் 5 சீட்டர் மாடலாக இருந்தாலும், பின் இருக்கையில் 2 பேர் வசதியாக அமர்ந்து செல்லலாம்.

ஜாகுவார் எக்ஸ்இ 20டீ பிரிமியம் கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய ஜாகுவார் எக்ஸ்இ 20டீ காரில் 300 லிட்டர் பூட்ரூம் இடவசதி உள்ளது. வார இறுதியில் வெளியூர்ர செல்வோருக்கு இது போதுமானதாக இருக்கும். அகலமாக இருப்பதால், பொருட்களை உள்ளே வைத்து எடுப்பதற்கு வசதியாக இருக்கும்.

ஜாகுவார் எக்ஸ்இ 20டீ பிரிமியம் கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த காரில் எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் வசதியுடன் பனோரமிக் சன்ரூஃப் கொடுக்கப்பட்டு இருக்கிறது. வெளிக்காற்று உள்ளே வருவதற்கும், மாலை வேளைகளில் பயணிக்க உகந்ததாக மிக பெரியதாகவே இருக்கிறது. இந்த காரின் முக்கிய அம்சங்களில் இதுவும் ஒன்று.

ஜாகுவார் எக்ஸ்இ 20டீ பிரிமியம் கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த காரில் 2.0 லிட்டர் இன்ஜெனியம் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஜாகுவார் எஸ்எஃப் காரிலும் இதே எஞ்சின்தான் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 182 பிஎச்பி பவரையும், 430 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஜாகுவார் எக்ஸ்இ 20டீ பிரிமியம் கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 9 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 228 கிமீ வேகம் வரை அதிகபட்சமாக தொடும் வல்லமையை பெற்றிருக்கிறது.

ஜாகுவார் எக்ஸ்இ 20டீ பிரிமியம் கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த காரில் Eco, Normal/City, Dynamic மற்றும் Rain/Snow ஆகிய 4 விதமான டிரைவிங் மோடுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. ஈக்கோ மோடில் அதிக எரிபொருள் சிக்கனத்தையும், டைனமிக் மோடில் மிகச் சிறப்பான செயல்திறனையும், ரெயின் மோடில் அதிகப்பட்ச தரைப்பிடிப்புடன் செல்வதற்கான இயக்கவியல் மாற்றங்களை செய்துகொள்ளும்.

ஜாகுவார் எக்ஸ்இ 20டீ பிரிமியம் கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய ஜாகுவார் எக்ஸ்இ காரில் டைனமிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், இபிடி, பிரேக் அசிஸ்ட் நுட்பங்களுடன் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல், 5 ஏர்பேக்குகள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்று இருக்கின்றன.

ஜாகுவார் எக்ஸ்இ 20டீ பிரிமியம் கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த காரில் 17 அங்குல அலாய் வீல்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இந்த காரின் செயல்திறனுக்கு தக்கவாறு, சஸ்பென்ஷன் சற்று கடினமானதாக உணர முடிகிறது.

ஜாகுவார் எக்ஸ்இ 20டீ பிரிமியம் கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய ஜாகுவார் எக்ஸ்இ 20டீ கார் நகர்ப்புறத்தில் லிட்டருக்கு 11.2 கிமீ மைலேஜையும், நெடுஞ்சாலையில் 14.5 கிமீ மைலேஜையும் வழங்குகிறது. இது மிகச் சிறப்பான மைலேஜாக கூற முடியும்.

ஜாகுவார் எக்ஸ்இ 20டீ பிரிமியம் கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஒட்டுமொத்தத்தில் புதிய ஜாகுவார் எக்ஸ்இ 20டீ கார் ஓட்டுனர்களுக்கு உற்சாகத்தை தரும் மாடலாக இருக்கிறது. வளைவுகளில் அதிவேகத்தில் திருப்பும்போதும் சிறப்பான நிலைத்தன்மையை வழங்குகிறது.

ஜாகுவார் எக்ஸ்இ 20டீ பிரிமியம் கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஜாகுவார் நிறுவனத்தின் ஆரம்ப ரக சொகுசு கார் மாடலாக விற்பனை செய்யப்படும் இந்த கார் இந்தியாவில் ரூ.43.21 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. அதேநேரத்தில், இதன் ரகத்திலான கார்களைவிட சற்றே கூடுதல் விலையாக தோன்றுகிறது.

ஜாகுவார் எக்ஸ்இ 20டீ பிரிமியம் கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

எனினும், பிராண்டு மதிப்புக்கு இந்த விலை ஒரு பொருட்டாக இருக்காது. சொகுசு, செயல்திறன் என இரண்டிலும் தன்னிறைவை தருவதால், நடுத்தர வகை சொகுசு செடான் கார் வாங்க விரும்புவோருக்கு சிறந்த சாய்ஸாக இருக்கும்.

English summary
Jaguar introduced the XE in India at the Auto Expo 2016. Initially, the Jaguar XE was available only with a 2.0-litre petrol engine. Now, Jaguar has come up with a diesel variant, the XE 20d, which is also the cheapest offering from the brand.
Story first published: Saturday, March 10, 2018, 17:03 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark