ஹோண்டா சிட்டி Vs பிஆர்-வி சிறப்பம்சங்கள் ஒப்பீடு: இரண்டில் ஹீரோ எது?

Written By: Krishna

ஆமா... இவரு பெரிய ஹோண்டா சிட்டி கார் ஓனர்...அப்படியே வந்து ஜக்குனு ஏறிப் போயிருவாரு... இதுபோன்ற டயலாக்குகள் நட்பு வட்டத்தில் அடிக்கடி உலா வருவதுண்டு. யாரையாவது உயர்த்திப் பேசி கலாய்க்க வேண்டுமென்றால் அங்கு ஹோண்டா சிட்டியின் பெயரும் சில சமயங்களில் அடிபடும்.

அப்படி பட்டி தொட்டியெல்லாம் பட்டையைக் கிளப்பிய ரெமோ மாடல் கார்தான் ஹோண்டா சிட்டி. கடந்த 1998-ஆம் ஆண்டு இந்த மாடல் அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதலே இதற்கென்று ஓர் ஆடியன்ஸ் கூட்டம் உள்ளதை மறுக்க முடியாது. செடான் கிளாஸ் வண்டியான ஹோண்டா சிட்டிக்கு, அதே க்ரூப்பில் இருந்து வந்த எஸ்யூவி மாடலான பிஆர்-வியே போட்டியாக இருக்கிறது என்றால் நம்புவீர்களா?

உண்மைதான்... விலை, எஞ்சின் திறன் இரண்டிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கிறது. செக்மெண்டில் வேறுபாடு இருந்தாலும் மேற்கூறிய இரண்டு அம்சங்களும் ஒன்றாக இருப்பதால், ஹோண்டா நிறுவன கார்களை வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு சிட்டியா? பிஆர்-வியா? என்ற சிறிய மனக் குழப்பம் ஏற்படுகிறது.

அதைத் தெளிவுபடுத்தும் விதமாக இரண்டுக்கும் இடையேயான ஒப்பீடைப் பார்க்கலாம்...

விலை ஒப்பீடு: ஹோண்டா பிஆர்வி

விலை ஒப்பீடு: ஹோண்டா பிஆர்வி

விலையை எடுத்துக் கொண்டால், ஹோண்டா பிஆர்-வியின் பெட்ரோல் மாடல் ரூ.8.10 லட்சம் முதல் ரூ.12.04 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. டீசல் மாடலின் விலை ரூ.9.32 லட்சம் முதல் ரூ.12.42 லட்சமாக உள்ளது.

விலை ஒப்பீடு: ஹோண்டா சிட்டி

விலை ஒப்பீடு: ஹோண்டா சிட்டி

அதே சிட்டி மாடலைப் பொருத்தவரை பெட்ரோல் கார் ரூ.8.75 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரையும், டீசல் கார், ரூ.9.90 லட்சம் முதல் ரூ.12.90 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

வடிவமைப்பு மற்றும் சிறப்பு வசதிகளை பார்க்கும்போது, இரண்டு மாடல்களுமே ஒன்றுக்கு ஒன்று சளைத்தது இல்லை எனத் தெரிகிறது. இருப்பினும், வடிவமைப்பு நேர்த்தி மற்றும் வசதிகளில் ஹோண்டா சிட்டி சற்று முன்னே நிற்கிறது.

வடிவம்

வடிவம்

நீளம் - சிட்டி: 4,440 மி.மீ., பிஆர்-வி: 4,456 மி.மீ.

அகலம் - சிட்டி: 1,695 மி.மீ., பிஆர்-வி: 1,735 மி.மீ.

உயரம் - சிட்டி: 1,495 மி.மீ., பிஆர்-வி: 1,666 மி.மீ.

வீல்பேஸ் - சிட்டி: 2,600 மி.மீ., பிஆர்-வி: 2,662 மி.மீ.

கிரவுண்ட் கிளியரன்ஸ் - சிட்டி: 165 மி.மீ., பிஆர்-வி: 210 மி.மீ.

அதிக வீல் பேஸ் மூலமாக சிறப்பான இடவசதியையும், அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டிருப்பதால் இந்திய சாலை நிலைகளுக்கு மிக ஏற்ற மாடலாக இருக்கிறது பிஆர்வி.

பூட்ஸ்பேஸ்

பூட்ஸ்பேஸ்

பொருட்களை வைப்பதற்கான பூட்ஸ்பேஸ் இடவசதியில் சிட்டி முன்னிலை பெறுகிறது. ஆம், சிட்டி காரில் 510 லிட்டர் பூட் ஸ்பேஸும், பிஆர்-வி காரில் 223 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் ஸ்பேஸும் உள்ளன. அதே நேரத்தில், பிஆர்வி எஸ்யூவியின் மூன்றாவது இருக்கையை மடக்கினால், 691 லிட்டர் கொள்ளளவு கொண்டதாக பூட் ஸ்பேஸை அதிகரித்துக் கொள்ள முடியும்.

இருக்கை வசதி

இருக்கை வசதி

பிஆர்-வி மாடலைப் பொருத்தவரை 7 இருக்கைகள் வசதி கொண்டது. விலாசமான இடவசதி உள்ளது. இதுதான் பிஆர்வி காரை முன்னிலை பெறச் செய்யும் முக்கிய அம்சம்.

வசதிகள்

வசதிகள்

சிட்டியில் கிளாஸான லுக், முகப்பு மற்றும் டெய்ல் லேம்ப்கள் நேர்த்தியாக டிசைன் செய்யப்பட்டுள்ளன. 6.5 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஹோண்டா சிட்டியில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த வசதி பிஆர்-வி மாடலில் இல்லை. அலாய் வீல், வெப்பநிலை கட்டுப்பாட்டு வசதி, 2 ஏர் பேக்-கள், பின்புற பார்க்கிங் கேமரா உள்ளிட்ட அம்சங்கள் இரு மாடல்களிலும் உள்ளன.

எஞ்சின்: ஹோண்டா சிட்டி

எஞ்சின்: ஹோண்டா சிட்டி

சிட்டியைப் பொருத்தவரை பெட்ரோல் மற்றும் டீசல் என இரு மாடல்களிலான எஞ்சின்கள் உள்ளன. 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 117 பிஎச்பி மற்றும் 145 என்எம் டார்க்கை உருவாக்கும் ஆற்றல் கொண்டது. 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 99 பிஎச்பி மற்றும் 200 என்எம் டார்க் உற்பத்தித் திறன் உள்ளது.

எஞ்சின்: ஹோண்டா பிஆர்வி

எஞ்சின்: ஹோண்டா பிஆர்வி

ஹோண்டா பிஆர்-வியில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்களைக் கொண்ட மாடல்கள் உள்ளன. பெட்ரோல் எஞ்சின் 117 பிஎச்பி (முறுக்கு விசை) மற்றும் 145 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. டீசல் எஞ்சினில் 99 பிஎச்பி மற்றும் 200 என்எம் டார்க் வெளியாகும் திறன் உள்ளது.

மைலேஜ்: சிட்டி

மைலேஜ்: சிட்டி

இந்த இரு மாடல்களிலும் ஆட்டோமேடிக் கியர் வசதி இருப்பது கூடுதல் சிறப்பு. மைலேஜைப் பொருத்தவரை, சிட்டி மாடல் பெட்ரோல் எஞ்சின் கார் லிட்டருக்கு 18 கிலோ மீட்டர் பயணிக்கும் என்றும், டீசல் எஞ்சின் கார் லிட்டருக்கு 26 கிலோ மீட்டர் பயணிக்கும் என்று ஹோண்டா உத்தரவாதம் அளிக்கிறது.

மைலேஜ்: பிஆர்வி

மைலேஜ்: பிஆர்வி

அதே பிஆர்-வியில் பெட்ரோல் எஞ்சின் கார் லிட்டருக்கு 16 கிலோ மீட்டரும், டீசல் எஞ்சின் கார் லிட்டருக்கு 21.9 கிலோ மீட்டரும் தரும் எனக் கூறப்படுகிறது.

எது பெஸ்ட்?

எது பெஸ்ட்?

மொத்தத்தில் இரு மாடல்களுமே வெவ்வேறு வகையில் சிறப்பானதாக உள்ளன. ஆஃப்-ரோட் டிரைவிங்குக்கு பிஆர்-வி மாடல் ஒரு நல்ல தேர்வு. கிளாஸ் லுக், காம்பேக்ட் செடானுக்கு சிட்டி மாடலைத் தேர்ந்தெடுக்கலாம். இருக்கை வசதியின் அடிப்படையிலேயே இந்த இரண்டில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.

ரெனால்ட் க்விட் Vs மாருதி செலிரியோ ஆட்டோ மேடிக்... முந்தப் போவது யார்?

ரெனால்ட் க்விட் Vs மாருதி செலிரியோ ஆட்டோ மேடிக்... முந்தப் போவது யார்?

 
English summary
Japanese Hunt: Comparing The Honda City With BR-V.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark