லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

லேண்ட்ரோவர் நிறுவனம் தனது ப்ரீலேண்டர் 2 என்ற காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தி வெற்றி பெற்றது. ஆனால் அந்த காரின் பாக்ஸி டிசைனை சற்று பழைய போல் இந்திய மக்கள் கருதினர். இதையடுத்து ஜாகுவார் லேண்ட்ரோவர்

லேண்ட்ரோவர் நிறுவனம் தனது ப்ரீலேண்டர் 2 என்ற காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தி வெற்றி பெற்றது. ஆனால் அந்த காரின் பாக்ஸி டிசைனை சற்று பழைய போல் இந்திய மக்கள் கருதினர். இதையடுத்து ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனம் டிஸ்கவரி ஸ்போர்ட் என்ற காரை ப்ரீலேண்டர் 2 காருக்கு பதிலாக கடந்த 2015ம் ஆண்டு களம் இறக்கியது.

லேண்ட்ரோவர் டிஸ்கவர் ஸ்போர்ட்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

இந்த கார் புதிய லுக்கை கொண்டிருந்தது. எனினும் லேண்ட் ரோவரின் டிசைன் மொழியை ஒத்த ஒரு டிசைனை பெற்றிருந்தது. ஆனால் இதில் அதிக அம்சங்களும், வசதிகளும் நிறைந்திருந்தன.

லேண்ட்ரோவர் டிஸ்கவர் ஸ்போர்ட்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

பின்னர் கடந்த 2017ம் ஆண்டு லேண்ட்ரோவர் காரின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனை அந்நிறுவனம் வெளியிட்டது. பழைய காரில் உள்ள பெரும்பாலான டிசைன்கள் இந்த காரிலும் இடம் பெற்றிருந்தன. முக்கியமாக இந்த காரில் புதிய 2.0 லிட்டர் இன்கெனியம் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டிருந்தது.

லேண்ட்ரோவர் டிஸ்கவர் ஸ்போர்ட்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

இந்த லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் காரை சமீபத்தில் டிரைவ்ஸ்பார்க் குழு ரிவியூ செய்தது. இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள புதிய இன்ஜின் எப்படி இருக்கிறது? இந்த காரின் தயாரிப்பு எப்படி இருக்கிறது? என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

லேண்ட்ரோவர் டிஸ்கவர் ஸ்போர்ட்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

டிசைன்& ஸ்டைல்

ஸ்டைலிங்கை பொறுத்தவரை புதிய டிஸ்கவரி ஸ்போர்ட் கார் பழைய மாடலின் அதே டிசைனை பெற்றுள்ளது. இந்த கார் முறையான எஸ்யூவி கார்களுக்கான விதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் பழைய மாடலான ப்ரீலேண்டர் 2 காரில் உள்ள பாக்ஸி டிசைன் இதில் இல்லை. தற்போது இந்த கார் முழுவதும் ஸ்போர்ட்டி லுக்காக காட்சியளிக்கிறது.

லேண்ட்ரோவர் டிஸ்கவர் ஸ்போர்ட்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

இந்த காரின் முகப்பு பகுதி நல்ல போல்ட் லுக் உடன் வடிவைமக்கப்பட்டுள்ளது. இது பேனட் பகுதி ஸ்மூத் ப்ளோ உடன் தேன்கூடு போன்ற அமைப்பை உடைய கிரிலை பெற்றுள்ளது. அந்த க்ரில்லில் பெரிய பேட்ஜ் வழங்கப்பட்டுள்ளது. இதன் முகப்பு பகுதியில் எல்இடி டிஆர்எல்கள், புரேஜெக்டர் ஹெட்லைட் ஆகியன வழங்கப்பட்டுள்ளன.

லேண்ட்ரோவர் டிஸ்கவர் ஸ்போர்ட்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

இந்த காரின் பின்புறமும் அதே மாதிரியான ஸ்மூத்தான டிசைன் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் பக்கவாட்டு பகுதியில் சிம்பிளான டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ரூப்கள் காண்ட்ராஸ்ட் கலரான கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன.

லேண்ட்ரோவர் டிஸ்கவர் ஸ்போர்ட்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

இந்த காரின் பின்புற டிசைன் முகப்பு டிசைனிற்கு ஏற்றார் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், ஸ்மோக் டெயில் லேம்ப் கிளஸ்டர், சர்க்குலர் எல்இடி யூனிட் கொடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக டிஸ்கவரி ஸ்போர்ட் என்ற வார்த்தை, காரின் நம்பர் பிளோட்டிற்கு மேல் பகுதியில் பதிக்கப்பட்டுள்ளது. ரோட்டில் சென்றால் அனைவரும் திரும்பி பார்க்கும் வகையில் இதன் டிசைன் உள்ளது.

லேண்ட்ரோவர் டிஸ்கவர் ஸ்போர்ட்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

இன்டீரியர்

இந்த டிஸ்கவரி ஸ்போர்ட் காரின் இன்டீரியரை பொறுத்தவரை பழைய மாடல் காரில் இருந்து மிகச்சிறிய மாற்றங்களுடன் விற்பனையாகி வருகிறது. இந்த கார் 5 சீட்டர் மற்றும் 5+2 சீட்டர் என இரண்டு ஆப்ஷன்களில் விற்பனையாகிறது.

லேண்ட்ரோவர் டிஸ்கவர் ஸ்போர்ட்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

இந்த காரின் டேஷ்போர்டு பகுதி சாதாரண பங்ஷனல் டிசைனைதான் பெற்றிருக்கிறது. இதனால் ப்ரீமியம் ஃபீல் கிடைக்கவில்லை. உட்புறம் முழுவதும் கருப்பு நிற டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது. பெரிய ஜன்னல்கள் கொடுக்கப்பட்டுள்ளதால் காருக்குள் வெளிச்சம் தெளிவாக இருக்கிறது.

லேண்ட்ரோவர் டிஸ்கவர் ஸ்போர்ட்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

இந்த காரின் டேஷ்போர்டு அலுமினியம் அசென்ட்களை ஏர்கான் வென்ட் மற்றும் சென்டர் கன்சோல்களில் கொண்டுள்ளது. இது ஆங்காங்கே சற்று ஹைலைட் செய்து காண்பிக்கிறது.

லேண்ட்ரோவர் டிஸ்கவர் ஸ்போர்ட்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

டிரைவர் அருகே உள்ள பட்டன்கள் நாப்கள் எல்லாம் எளிதில் டிரைவர் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பவர் விண்டோ பட்டன்கள், ஓஆர்விஎம் பட்டன்கள் அமைக்கப்பட்ட இடம் டிரைவருக்கு அவ்வளவு எளிதாக இல்லை. இருந்தாலும் குறைசொல்வதற்கு இல்லை.

லேண்ட்ரோவர் டிஸ்கவர் ஸ்போர்ட்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

இந்த காரில் உள்ள லெதர் சீட்கள் சிறந்த சொகுசான வசதியை வழங்குகின்றன. டிரைவிங் பொஷிஷனும் உயரமாக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சீட்டில் அமர்ந்து கொண்டே ரோடு சரியாக தெரியும் படியாக உள்ளது.

லேண்ட்ரோவர் டிஸ்கவர் ஸ்போர்ட்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

எங்கள் குழு 5+2 சீட்டிங் பொஷிஷன் கொண்ட காரை டெஸ்ட் செய்தது. இந்த காரின் பின்பக்க சீட் நன்றாக சொகுசாக இருக்கிறது. முட்டி, ஹெட் க்ரூம், ஆகியன சரியான பொஷிஷனில் இருக்கிறது. மூன்றாவது சீட்டை பொறுத்தவரை சிறுவர்களுக்கு ஏற்ற சிறப்பான இடமாக இருக்கும். அப்பகுதியில் சிறிய இட வசதி மட்டும்தான் உள்ளது.

லேண்ட்ரோவர் டிஸ்கவர் ஸ்போர்ட்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

வசதிகள் மற்றும் அம்சங்கள்

இந்த காரின் விலை மதிப்பில் உள்ள மற்ற கார்களை ஒப்பிடும் போது, இந்த காரில் அதிக அளவு வசதிகள் இருக்கிறது. வசதிகளை பொறுத்தவரை இந்த கார் உங்களை நிச்சயம் ஏமாற்றாது.

லேண்ட்ரோவர் டிஸ்கவர் ஸ்போர்ட்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

இதில் 8 விதமாக எலெக்ட்ரிக்கல் முறையில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய முன் பக்க சீட்கள், மூன்று நினைவக சீட் பங்ஷன், முன் மற்றும் பின் பக்க பார்க்கிங் கிட்ஸ், ரியர் பார்க்கிங் கேமரா, ஹொஸ்ட் அசிஸ்ட் ஆகிய வசதிகள் இருக்கிறது.

லேண்ட்ரோவர் டிஸ்கவர் ஸ்போர்ட்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

மேலும் டிஸ்கவரி ஸ்போர்ட் காரில் மல்டி யூஎஸ்பி சார்ஜிங் போர்ட், 12V சார்ஜிங் பாயிண்ட்ஸ், பெரிய 8 இன்ச் டச் ஸ்கிரின் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், லேண்ட்ரோவர் நிறுவனத்தின் எவோக் காரில் உள்ள எல்லா வசதிகளும் இந்த காரிலும் இருக்கிறது. இதில் இன்பில்ட் நேவிகேஷன் சிஸ்டமும் இருக்கிறது.

லேண்ட்ரோவர் டிஸ்கவர் ஸ்போர்ட்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

மேலும் பின்பக்க சீட்டின் ஹெட் ரெஸ்டிற்கு பின்னால் இரண்டாம் வரிசையில் உள்ளவர்களுக்காக ஸ்கிரின் டிஸ்பிளேக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் எங்கள் குழு டெஸ்ட் செய்த காரில் பெரிய கிளாஸ் ரூப் வசதியும் இருந்தது. இது மட்டும் இல்லாமல் டெரைன் மேனேஜ்மெண்ட் சிஸ்டம், ஹில் டிசென்ட் கண்ட்ரோல், எலெக்ட்ரானிக் ட்ராக்ஸன் கண்ட்ரோல், ரோல் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் ஆகிய வசதிகளும் உள்ளன.

லேண்ட்ரோவர் டிஸ்கவர் ஸ்போர்ட்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

இன்ஜின் மற்றும் பெர்பார்மென்ஸ்

இந்த லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எச்எஸ் இ காரில் 2.0 லிட்டர் 4 சிலிண்டர் இன்கெனியம் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 148.31 பிஎச்பி பவரையும், 382 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த இன்ஜின் 9 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

லேண்ட்ரோவர் டிஸ்கவர் ஸ்போர்ட்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

148.31 பிஎச்பி பவர் என்பது எஸ்யூவி காருக்கு குறைந்ததுதான். இருந்தாலும் ஆச்சரியப்படுத்தும் வகையிலான திறனை வெளிப்படுத்துகிறது. லினியர் பவர் டெலிவரி மூலம் இன்ஜின் டியூன் செய்யப்பட்டுள்ளது. இது குறைந்த நேரத்தில் அதிக பவரை வெளிப்படுத்துகிறது.

லேண்ட்ரோவர் டிஸ்கவர் ஸ்போர்ட்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

இந்த இன்ஜின் ஓடும் சத்தம் காருக்குள் சுத்தமாக இல்லை. இதில் உள்ள ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஸ்மூத்தான கியர் ஷிப்ட்களை கொண்டுள்ளது. இதனால் ரிலாக்ஸான பயணத்தை அனுபவிக்க முடியும். இருந்தாலும் குறைவான வேகத்தில் செல்லும்போது சிறிய ஜெர்க் ஏற்படுகிறது.

லேண்ட்ரோவர் டிஸ்கவர் ஸ்போர்ட்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

காரை ஸ்போர்ட் மோடிற்கு மாற்றி பயணித்தால் காரின் செயல்பாடு மிக சிறப்பாக இருக்கிறது. மேனுவலாக கியரை மாற்றுவதற்கு பெடல் ஷிப்டர் அதிகமாக உதவி செய்கிறது.

லேண்ட்ரோவர் டிஸ்கவர் ஸ்போர்ட்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

டிரைவ் மற்றும் ஹேண்டிலிங்

லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் காரை பொறுத்தவரை மிகச்சிறந்த ஹேண்டிலிங் மற்றும் டிரைவிங் அனுபவத்தை தருகிறது. இந்த காரின் சஸ்பென்ஸன் மிக சிறந்த அனுபவத்தை வழங்குகிறது.

லேண்ட்ரோவர் டிஸ்கவர் ஸ்போர்ட்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

அதிக வேகத்தில் செல்லும் போதும், திருப்பங்களிலும் ஸ்டியரிங் மிக சிறப்பாக செயல்படுகிறது. திருப்பங்களில் காரின் உயரத்தால் சற்று கவனமாக இருக்க வேண்டும் என மனதிற்கு தோன்றினாலும், காரின் பெர்பார்மென்ஸ் அதை எல்லாம் தூக்கி சாப்பிடுகிறது.

லேண்ட்ரோவர் டிஸ்கவர் ஸ்போர்ட்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

இந்த காரின் டிசைனே ஆஃப் ரோட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள டெரைன் மேனேஜ்மென்ட் சிஸ்டம், 4 விதமான மோட்களை வழங்குகிறது. ஜெனரல் டிரைவிங், பனி மற்றும் புல்வெளிகளில் டிரைவிங், சகதி மற்றும் மணல் பரப்புகளில் டிரைவிங் ஆகிய ஆப்ஷன்கள் உள்ளன. மேலும் இதில் உள்ள 200 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் 19 இன்ச் அலாய் வீல் கூடுதல் பலத்தை தருகிறது.

லேண்ட்ரோவர் டிஸ்கவர் ஸ்போர்ட்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

இந்த காரின் சஸ்பென்ஸன்கள் சிறப்பாக செயல்பாட்டாலும் ரஃப் மற்றும் ஆஃப் ரோடுகளில் சற்று கடினமான உணர்வை தருகிறது. மற்றபடி சாதாரண ரோடுகளில் உள்ள பள்ள மேடுகளை எளிதாக சமாளித்து விட்டு செல்கிறது.

லேண்ட்ரோவர் டிஸ்கவர் ஸ்போர்ட்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

இந்த காரில், சிட்டி மற்றும் நெடுஞ்சாலை பகுதிகளில் பயணிக்கும்போது, சொகுசான அனுபவம் ஏற்படுகிறது. மேலும் காரில் உள்ள பெரிய ஜன்னல் நல்ல வீயூவையும் வழங்குகிறது. மேலும் காரில் உள்ள பார்க் அசிஸ்ட் டைட்டான பகுதிகளில் காரை நிறுத்த சிறப்பாக இருக்கிறது.

லேண்ட்ரோவர் டிஸ்கவர் ஸ்போர்ட்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

மைலேஜ்

இந்த லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் காரில், லிட்டருக்கு 12 கிமீ வரை மைலேஜ் கிடைக்கிறது. இந்த மைலேஜிற்கு தகுந்தபடி காரில் 70 லிட்டர் டீசல் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது. இது நீண்ட தூர பயணத்திற்கு ஏற்றதாக இருக்கும்.

லேண்ட்ரோவர் டிஸ்கவர் ஸ்போர்ட்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

பாதுகாப்பு அம்சங்கள்

லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் காரில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. ஸ்டாண்டர்டான பாதுகாப்பு அம்சமாக, டிரைவர் மற்றும் முன் பக்க சீட் பயணிகளுக்கு ஏர் பேக் வசதி உள்ளது. இரண்டாவது சீட்டில் உள்ளவர்களுக்கான சீட் பெல்ட் வார்னிங், ஐஎஸ்ஓ பிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட், ஆட்டோ லாக்கிங் மற்றும் விபத்து அன்லாக்கிங் சிஸ்டம், அதிக பிரஷரில் பிரேக் செய்யும் போது ஆட்டோமெட்டிக் ஹசார்டு லைட், 24X7 ரோடு அசிஸ்டண்ட் ஆகியவையும் குறிப்பிடத்தகுந்த பாதுகாப்பு அம்சங்களாகும்.

லேண்ட்ரோவர் டிஸ்கவர் ஸ்போர்ட்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

விலை மற்றும் கலர் ஆப்ஷன்கள்

இந்த லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் கார் ப்யூர், எஸ்இ, எச்எஸ்இ, மற்றும் லக்ஸரி எச்எஸ்இ ஆகிய 4 வேரியண்ட்களில் விற்பனையாகிறது. இந்த காரின் பேஸ் வேரியன்டான ப்யூர் வேரியன்ட் ரூ.44.68 லட்சம் என்ற மதிப்பிலும், டாப் வேரியண்ட் ஆன லக்ஸரி எச்எஸ்இ ரூ.60.44 லட்சம் என்ற மதிப்பிலும், எஸ்இ வேரியன்ட் ரூ.51.24 லட்சம் என்ற விலையிலும், எங்கள் குழு டெஸ்ட் செய்த எச்எஸ்இ வேரியண்ட் ரூ.54.76 லட்சம் என்ற விலையிலும் விற்பனையாகிறது.

லேண்ட்ரோவர் டிஸ்கவர் ஸ்போர்ட்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

மேலும் இந்த கார் மூன்று கலர் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது. ஃப்யூஜி ஒயிட், இன்டஸ் சில்வர், ஸ்கோட்டியா க்ரே, ஆகிய ஆப்ஷன்கள் உள்ளன. இந்த அனைத்து ஆப்ஷன்களுக்கும் கான்ட்ராஸ்ட் கலராக கருப்பு நிற ரூப் பொருத்தப்பட்டுள்ளது.

லேண்ட்ரோவர் டிஸ்கவர் ஸ்போர்ட்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

போட்டி

இந்த லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் கார் இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ எக்ஸ்1, மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ, ஆடி க்யூ3 ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கிறது.

Model Displacement (cc) Power/Torque (bhp/Nm) Price (Ex-Showroom)
Land Rover Discovery Sport 1999 148.31/382* Rs 54.76 Lakhs**
BMW X1 1995 190/400 Rs 44.50 Lakhs
Mercedes-Benz GLA 2143 170/350 Rs 38.03 Lakhs
Audi Q3 1968 184/380 Rs 41.54 Lakhs
லேண்ட்ரோவர் டிஸ்கவர் ஸ்போர்ட்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவி காரின் சிறப்பான ரோடு பிரஸன்ஸ், போதுமான இடவசதி, புதிய இன்கெனியம் இன்ஜினின் பெர்பார்மென்ஸ், ஆஃப் ரோடு ரைடிங் அனுபவம் ஆகியவற்றால் மொத்தத்தில் ஒரு பிரீமியம் அனுபவம் நமக்கு கிடைக்கிறது.

Most Read Articles

லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் காரின் புகைப்பட ஆல்பத்தை மேலே நீங்கள் காணலாம்.

மேலும்... #லேண்ட்ரோவர்
English summary
Landrover Discovery sport test drive review performance specifications features. Read in Tamil
Story first published: Wednesday, September 26, 2018, 13:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X