லெக்சஸ் எல்எக்ஸ்450டீ காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

Written By:

மிகுந்த எதிர்பார்ப்போடு இந்திய மார்க்கெட்டில் லெக்சஸ் சொகுசு கார் நிறுவனம் களம் இறங்கி உள்ளது. அந்த நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்திய மூன்று மாடல்களையும் சமீபத்தில் ஊட்டியில் வைத்து டெஸ்ட் டிரைவ் செய்தோம். அதில், எல்எக்ஸ்450டீ எஸ்யூவியின் சாதக, பாதகங்களை இந்த செய்தியில் காணலாம்.

லெக்சஸ் எல்எக்ஸ்450டீ காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

கடந்த 1996ம் ஆண்டு லெக்சஸ் எல்எக்ஸ்450 டீ எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டது. டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எஸ்யூவியின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சொகுசு வகை கார் மாடல்தான் இந்த லெக்சஸ் எல்எக்ஸ்450டீ எஸ்யூவி. மேலும், சொகுசு வகையில் ஆஃப்ரோடு சிறப்பம்சங்களை கொண்ட மாடலாகவும் கூற முடியும்.

லெக்சஸ் எல்எக்ஸ்450டீ காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த எஸ்யூவியின் பிரம்மாண்டம் வாடிக்கையாளர்களை கவரும். ஆஃப்ரோடு மட்டுமின்றி, நெடுஞ்சாலை பயணங்களிலும் இந்த எஸ்யூவி சிறந்த பயண அனுபவத்தை வழங்கும் என்பதை கூறமுடியும். இந்த எஸ்யூவியின் சிறப்பம்சங்கள் இந்தியர்களை கவர்ந்து இழுக்குமா என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.

டிசைன்

டிசைன்

லெக்சஸ் எல்எக்ஸ்450டீ மாடலானது மிக பிரம்மாண்டமான தோற்றத்தை கொண்டிருப்பதால், சாலையில் ஆளுமையில் பிரமாதமாக இருக்கிறது. கிட்டத்தட்ட 5 மீட்டருக்கும் அதிகமான நீளமும், 2 மீட்டருக்கும் அதிகமான அகலமும் கொண்ட இந்த எஸ்யூவி எல்லோரையும் கவரும் கம்பீரத்தை கொண்டுள்ளது.

லெக்சஸ் எல்எக்ஸ்450டீ காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

வழக்கம்போல் லெக்சஸ் கார்களுக்கே உரித்தான பிரம்மாண்ட முகப்பு க்ரில் காரின் கம்பீரத்தை பரைசாற்றும் விஷயம். க்ரில் அமைப்பில் க்ரோம் பட்டைகள் மூலமாக உயர் வகை மாடலாக காட்சி தருகிறது. எல்இடி ஹெட்லைட்டுகள், L வடிவிலான பகல்நேர விளக்குகள், வலிமையான பம்பர் அமைப்பு உள்ளிட்டவை தனித்துவமான வடிவமைப்பை பெற்றிருக்கிறது.

லெக்சஸ் எல்எக்ஸ்450டீ காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பக்கவாட்டில் பெரிய அளவிலான வீல் ஆர்ச்சுகளும், அதற்கு ஈடுகொடுக்கும் 18 இன்ச் அலாய் வீல்களும் கம்பீரத்தை கூட்டுகின்றன. காரின் பிரம்மாண்டத்தை கூட்டுவதற்கு பக்கவாட்டு வடிவமைப்பும் மிக முக்கிய காரணமாக இருக்கிறது.

லெக்சஸ் எல்எக்ஸ்450டீ காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பின்புறத்தில் க்ரோம் எல்இடி டெயில் லைட்டுகள் கவர்ச்சியாக உள்ளன. இந்த எஸ்யூவியில் பின்புறத்தில் இரண்டு கதவு அமைப்பு உள்ளதால், பொருட்களை வைத்து எடுப்பதற்கு வசதியாக இருக்கும். இந்த எஸ்யூவியில் 700 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட் ரூம் இடவசதி இருக்கிறது.

இன்டீரியர்

இன்டீரியர்

இந்த காரின் இன்டீரியர் லெதர் மற்றும் மர தகடுகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது. டேஷ்போர்டு அமைப்பும் தனித்துவத்துடன் இருக்கிறது. டேஷ்போர்டின் மேல் புறத்தில் பெரிய திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

லெக்சஸ் எல்எக்ஸ்450டீ காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஜாய் ஸ்டிக் கன்ட்ரோல் மூலமாக இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை கட்டுப்படுத்தும் வசதி உள்ளது. இந்த காரில் 19 ஸ்பீக்கர்கள் கொண்ட மார்க் லெவின்சன் ஆடியோ சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது.

லெக்சஸ் எல்எக்ஸ்450டீ காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

தற்போது சாதாரண கார்களிலேயே டச்ஸ்கிரீன் வசதி, வாய்ஸ் கன்ட்ரோல் வசதிகள் இருக்கும் நிலையில், இந்த காரில் அந்த வசதிகள் இல்லை. எனவே, டேஷ்போர்டிலும், ஸ்டீயரிங் வீலிலும் ஏராளமான சுவிட்சுகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

லெக்சஸ் எல்எக்ஸ்450டீ காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த காரின் சென்டர் கன்சோலில் கடிகாரம் ஒன்று கொடுக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன், ஹெட் அப் டிஸ்ப்ளே வசதியும் உள்ளது. மேலும், சன்ரூஃப் எனப்படும் கண்ணாடி கூரை அமைப்பும் உள்ளது.

இடவசதி

இடவசதி

முன்புற இருக்கை மிகவும் சிறப்பான இடவசதியுடன் இருக்கிறது. ஓட்டுனருக்கு போதிய பார்வை திறனை வழங்கும் விதத்தில் டேஷ்போர்டு அமைப்பு கொடுக்கப்பட்டு இருப்பதும் சிறப்பு.

லெக்சஸ் எல்எக்ஸ்450டீ காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த கார் பார்க்க பிரம்மாண்டமாக இருந்தாலும், பின் இருக்கை இடவசதியில் சொதப்புகிறது. இருக்கைகள் சொகுசாக இருந்தாலும் கால் வைப்பதற்கான லெக் ரூம் இடவசதி மிக குறைவாக இருப்பது ஏமாற்றம். அதேவேளையில், பின் இருக்கைகளை சாய்மான வசதி கொடுக்கப்பட்ருப்பது சிறப்பு.

எஞ்சின்

எஞ்சின்

லெக்சஸ் எல்எக்ஸ்450 டீ காரில் 4.5 லிட்டர் வி8 டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 261 பிஎச்பி பவரையும், 650 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலமாக எஞ்சின் சக்தி அனைத்து சக்கரங்களுக்கும் கடத்தப்படுகிறது.

லெக்சஸ் எல்எக்ஸ்450டீ காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த எஸ்யூவியில் ஈக்கோ, நார்மல், ஸ்போர்ட் எஸ் மற்றும் ஸ்போர்ட் எஸ் ப்ளஸ் என்ற நான்குவிதமான டிரைவிங் மோடுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொரு மோடிலும் வைத்து ஓட்டும்போது எஞ்சின் செயல்திறன், ஸ்டீயரிங் சிஸ்டம் மற்றும் சஸ்பென்ஷன் அமைப்பில் குறிப்பிடத்தக்க மாறுபாடு இருப்பதையும் உணர முடிகிறது.

லெக்சஸ் எல்எக்ஸ்450டீ காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த பிரம்மாண்ட எஸ்யூவியின் வி8 எஞ்சின் ஆரம்ப நிலையில் மந்தமாக தெரிந்தாலும், மிட் ரேஞ்ச் மற்றும் டாப் ரேஞ்சில் மிகச் சிறப்பான செயல்திறனை காட்டுகிறது. 2.9 டன் எடையுடைய இந்த கார் 0- 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 8.6 வினாடிகளை எடுத்துக் கொள்கிறது. மணிக்கு 210 கிமீ வேகம் வரை எட்டும் வல்லமையை பெற்றிருக்கிறது.

லெக்சஸ் எல்எக்ஸ்450டீ காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் செலுத்தும்போது இந்த எஸ்யூவி மிகச் சிறப்பான செயல்திறனையும், சிறந்த ஓட்டுதல் தரத்தையும் வழங்குகிறது. அத்துடன், இதன் அடாப்டிவ் சஸ்பென்ஷன் அமைப்பும், பாடி ஆன் ஃப்ரேம் சேஸி அமைப்பும் இணைந்து இந்த பிரம்மாண்ட எஸ்யூவியை மிக எளிதாக கையாளும் திறனை ஓட்டுனருக்கு வழங்குகின்றன.

லெக்சஸ் எல்எக்ஸ்450டீ காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இதுபோன்ற அதிக எடை கொண்ட எஸ்யூவிகள் வளைவில் திரும்பும்போது பாடி ரோல் இருப்பது சாதாரண விஷயமாகவே பார்க்க முடியும். ஸ்போர்ட் மோடில் வைத்து ஓட்டும்போது பாடி ரோல் குறைவாக இருக்கிறது.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

இந்த எஸ்யூவியில் 10 ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அதிக தரைபிடிப்பை வழங்கும் டிராக்ஷன் கன்ட்ரோல், அதிக நிலைத்தன்மையுடன் செல்ல உதவும் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், 360 கோணத்தில் காரை சுற்றிலும் கண்காணிக்க வசதியாக 4 கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதும் சிறந்த பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட கார் மாடலாக இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து...

டிரைவ்ஸ்பார்க் கருத்து...

பீரங்கி போல தோற்றமும், சிறந்த தொழில்நுட்ப அம்சங்களையும் இந்த எஸ்யூவி பெற்றிருப்பது நிச்சயம் இந்தியர்களை கவரும். அதேநேரத்தில், ரூ.2.32 கோடி விலை என்பதுதான் இந்த எஸ்யூவியை தேர்வுக்கு எடுத்துக் கொள்வதற்கு இருக்கும் முதல் தடையும், தடங்கலுமாக கூறலாம்.

சிறந்த ஆஃப்ரோடு சிறப்பம்சங்கள் கொண்ட லேண்ட்ரோவர் மாடல்கள், இந்த லெக்சஸ் எல்எக்ஸ்450டீ எஸ்யூவியைவிட ஒரு கோடி ரூபாய் குறைவான விலையில் கிடைப்பதையும் டொயோட்டா நிறுவனம் பரிசீலித்திருக்க வேண்டும். இருப்பினும், மிகுந்த பாதுகாப்பு வசதிகளுடன், சிறந்த பயணத்தை பெறுவதற்கு லெக்சஸ் எல்எக்ஸ்450டீ எஸ்யூவி மாடல் சிறந்த சாய்ஸாகவே இருக்க முடியும்.

மேலும்... #லெக்சஸ் #lexus
English summary
The fancy bodywork outside may deter buyers from taking it off-road. But, most owners will use the LX to make powerplays on the road. So is the LX 450d the ultimate luxury SUV for those who make the rules here in India?
Story first published: Thursday, June 8, 2017, 12:41 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark