புதிய லெக்சஸ் என்எக்ஸ் 300எச் எஃப்- ஸ்போர்ட் காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

Posted By:

டொயோட்டா நிறுவனத்தின் சொகுசு கார் பிராண்டான லெக்சஸ் இந்தியாவின் சொகுசு கார் மார்க்கெட்டில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடிக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறது. தனது ஆர்எக்ஸ், எல்எக்ஸ் எஸ்யூவி மாடல்கள் மற்றும் இஎஸ் செடான் கார்களுடன் இந்தியாவில் களமிறங்கிய அந்தத நிறுவனம் அண்மையில் புதிய என்எக்ஸ் என்ற சிறிய வகை சொகுசு எஸ்யூவி காரை அறிமுகப்படுத்தியது.

 புதிய லெக்சஸ் என்எக்ஸ் 300எச் காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த நிலையில், புதிய லெக்சஸ் எஸ்யூவி ஹைப்ரிட் வகை எரிபொருள் நுட்பத்துடன் லெக்சஸ் என்எக்ஸ்300எச் லக்சுரி மற்றும் எஃப் ஸ்போர்ட் என்ற இரண்டு மாடல்களில் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த காரை அண்மையில் டிரைவ்ஸ்பார்க் டீம் டெஸ்ட் டிரைவ் செய்தது. அதில், கிடைத்த சாதக, பாதக அம்சங்களை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.

 டிசைன்

டிசைன்

லெக்சஸ் கார்களுக்குரிய முத்தாயப்பான க்ரில் அமைப்பு முன்பக்கத்தில் பிரம்மாண்டப்படுத்துகிறது. அத்துடன், மிக நவீன டிசைனிலான ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகள் கவர்ச்சியை தருகின்றன.

இந்த காரின் எல்இடி பகல்நேர விளக்குகள் ஹெட்லைட்டுகள் கீழே கொடுக்கப்பட்டு இருப்பதுடன் மிக கூர்மையான வடிவமைப்புடன் அசத்துகிறது.

Recommended Video - Watch Now!
Andhra Pradesh State Transport Bus Crashes Into Bike Showroom - DriveSpark
 புதிய லெக்சஸ் என்எக்ஸ் 300எச் காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய லெக்சஸ் என்எக்ஸ் 300 எஃப்- ஸ்போர்ட் மாடலில் மூன்று எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. பம்பரில் கச்சிதமாக பனி விளக்குகள் இருக்கின்றன.

 புதிய லெக்சஸ் என்எக்ஸ் 300எச் காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பக்கவாட்டில் பாடி லைன்கள் இந்த காருக்கு எஸ்யூவி முரட்டுத்தனத்தை கொடுக்க முனைகின்றன. இந்த காரின் பிரம்மாண்டமான 18 அங்குல சக்கரங்களும், வீல் ஆர்ச்சுகளும் கம்பீரமான தோற்றத்தை வழங்குகிறது. இந்த காரில் 18 அங்குல இரட்டை வண்ண அலாய் வீல்களில் 225/60 ஆர்18 அளவுடைய பிரிட்ஜ்ஸ்டோன் டயர்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

 புதிய லெக்சஸ் என்எக்ஸ் 300எச் காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பின்புறத்தில் மிக கச்சிதமான விண்ட் ஸ்க்ரீன் கண்ணாடி கொடுக்கப்பட்டு இருக்கிறது. டெயில் லைட்டுகளும் இந்த காருக்கு வசீகரத்தை அதிகரிக்கிறது. கூரையுடன் இயைந்த ரூஃப் ஸ்பாய்லர் இருப்பதுடன், அதிலேயே பிரேக்லைட்டும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

பூட் ரூம் இடவசதி நெருக்கடியாக இருக்கிறது. இதற்கு ஸ்பேர் வீல் கொடுக்கப்பட்டு இருப்பது மட்டுமின்றி, பின்புற சக்கரங்களுக்கு கூடுதல் சக்தியை வழங்கும் மின் மோட்டார் கொடுக்கப்பட்டு இருப்பதும் முக்கிய காரணம்.

இன்டீரியர்

இன்டீரியர்

லெக்சஸ் என்எக்ஸ் 300எச் சொகுசு காரில் இன்டீரியரும் கவர்ச்சியாக இருக்கிறது. இந்த காருக்கு 11 விதமான இன்டீரியர் வண்ணத் தேர்வுகளை லெக்சஸ் வழங்குகிறது. லெதர் வேலைப்பாடுடன் கூடிய டேஷ்போர்டு அமைப்பு மிக சரியான கோணத்தில் செதுக்கப்பட்டு இருப்பதால், ஓட்டுனர் சாலையை தெளிவாக பார்த்து ஓட்ட துணை புரிகிறது. இன்டீரியரில் அலுமினிய தகடு அலங்காரமும், கான்ட்ராஸ்ட் தையல் வேலைப்பாடும் கவர்ச்சியை கூட்டுகிறது.

 புதிய லெக்சஸ் என்எக்ஸ் 300எச் காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய லெக்சஸ் என்எக்ஸ் 300எச் எஃப்- ஸ்போர்ட் காரில் முன்புற இருக்கைகள் தாராள இடவசதியையும், சவுகரியமான உணர்வையும் தருகின்றன. அட்ஜெஸ்ட் செய்யும் வசதியும் உள்ளது.

பின் இருக்கைகளும் சவுகரியமாக இருப்பதுடன், கால்களுக்கு நல்ல சப்போர்ட் தருகிறது. இந்த இருக்கைகள் சாய்மான வசதியையும் அளிப்பது நீண்ட தூர பயணங்களை சுகமாக்கும். அதேநேரத்தில், உயரமானவர்கள் பின் இருக்கையில் அமரும்போது ஹெட்ரூம் இடவசதி பிரச்னையால் சவுகரியமாக அமர்ந்து பயணிக்க முடியாது.

 புதிய லெக்சஸ் என்எக்ஸ் 300எச் காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

லெக்சஸ் என்எக்ஸ் 300எச் காரில் 10.3 அங்குல திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இருக்கிறது. இந்த காரில் 14 ஸ்பீக்கர்களுடன் கூடிய மார்க் லெவின்சன் ஆடியோ சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. சாட் நவ் நேவிகேஷன் வசதியும், 360 டிகிரி கோண கேமராவும் முக்கிய அம்சங்கள்.

 புதிய லெக்சஸ் என்எக்ஸ் 300எச் காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

லெக்சஸ் என்எக்ஸ் 300எச் காரில் இருக்கும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை டச்பேடு மூலமாக கட்டுப்படுத்த முடியும். இது மிகச்சிறப்பான வசதி என்பதுடன், இந்தியாவில் இருக்கும் லெக்சஸ் கார்களில் முக்கிய சிறப்பம்சமாகவும் கூற முடியும்.

 புதிய லெக்சஸ் என்எக்ஸ் 300எச் காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய லெக்சஸ் என்எக்ஸ் 300எச் எஃ-ஸ்போர்ட் காரில் பெரிய அளவிலான சன்ரூஃப் கண்ணாடி கொாடுக்கப்பட்டு இருக்கிறது. 360 கேமரா மட்டுமின்றி, முன்புற, பின்புற பார்க்கிங் சென்சசார்கள் இருக்கின்றன. ஆட்டோமேட்டிக் ஹெட்லைட், ஆட்டோமேட்டிக் வைப்பர், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, வயர்லெஸ் சார்ஜிங் வசதி ஆகியவையும் முக்கிய சிறப்பம்சங்கள்.

பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

புதிய லெக்சஸ் என்எக்ஸ் 300எச் காரில் 8 ஏர்பேக்குகள் உள்ளன. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டிராக்ஷன் கன்ட்ரோல், கார்னரிங் லைட்ஸ் போன்றவை முக்கிய பாதுகாப்பு வசதிகள்.

எஞ்சின்

எஞ்சின்

புதிய லெக்சஸ் என்எக்ஸ் 300எச் கார் இரட்டை எரிநுட்பத்தில் வந்துள்ளது. இந்த ஹைப்ரிட் காரில் 2.5 லிட்டர்ர பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு ஆக்சிலிலும் ஒரு எலக்ட்ரிக் மோட்டாரும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் எஞ்சின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார்கள் இணைந்து அதிகபட்சமாக 194 பிஎச்பி பவரையு், 210 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இ-சிவிடி கியர்பாக்ஸ் உள்ளதுடன், எஞ்சின் சக்தி அனைத்து சக்கரங்களுக்கும் செலுத்தப்படுகிறது.

செயல்திறன்

செயல்திறன்

ஆரம்ப நிலையில் மின்மோட்டார்கள் சிறப்பான பவர் டெலிவிரியை வழங்குகின்றன. அதனையே தொடர்ந்தால், எஞ்சின் செயல்திறன் மந்தமாக தெரிகிறது. 1905 கிலோ எடை கொண்ட இந்த காரின் இ- சிவிடி கியர்பாக்ஸ் செயல்பாடு எதிர்பார்த்த செயல்திறனை கொடுக்கவில்லை.

அதேநேரத்தில், க்ரூஸ் செய்து சீரான வேகத்தில் ஓட்டும்போது எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸில் அதிர்வுகள் குறைவாகவும், அமைதியான பயணத்தையும் தருகிறது. மேலும், இந்த எஸ்யூவியின் சப்த தடுப்பு அமைப்பும் மிக சிறப்பாக செய்யப்பட்டுள்ளதையும் குறிப்பிட வேண்டும்.

சிறப்பு சப்தம்

சிறப்பு சப்தம்

இந்த காரை வாங்கும் சில வாடிக்கையாளர்கள் சைலென்சர் சப்தம் அலாதியாக வேண்டும் என்று விரும்புபவர்களுக்காக எஃப்- ஸ்போர்ட் மாடலில் சப்தத்தை எழுப்பும் சவுண்ட் ஜெனரேட்டர் ஒன்றையும் பெற்று பொருத்திக் கொள்ளலாம். டேஷ்போர்டுக்கு கீழே உள்ள ஸ்பீக்கர் மூலமாக வரும் இந்த சிறப்பு சப்தம் பயணிப்போரையும், ஓட்டுபவரையும் பரவசப்ப்டுத்தும்.

சஸ்பென்ஷன்

சஸ்பென்ஷன்

புதிய லெக்சஸ் என்எக்ஸ் 300எச் சொகுசு கார் அடாப்டிவ் வேரியபிள் சஸ்பென்ஷன் அமைப்பை பெற்றிருக்கிறது. சாலை நிலைகளுக்கு தக்கவாறு இந்த சஸ்பென்ஷன் அமைப்பின் டேம்பர் தானியங்கி முறையில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும். இதனால், அலுங்கல் குலுங்கல் குறைவாக இருக்கிறது.

 புதிய லெக்சஸ் என்எக்ஸ் 300எச் காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

லெக்சஸ் என்எக்ஸ் காரின் சிறப்பான சஸ்பென்ஷன் அமைப்பு காரணமாக வளைவுகளில் பாடி ரோல் குறைவாக இருக்கிறது. இந்த காரின் பிரேக் சிஸ்டம் மிக சிறப்பாக இருப்பதால், நம்பிக்கையுடன் வேகம் எடுக்க முடிகிறது.

 புதிய லெக்சஸ் என்எக்ஸ் 300எச் காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

காரின் முக்கிய விபரங்கள்

மாடல் விபரம் லெக்சஸ் என்எக்ஸ் 300எச் எஃப்-ஸ்போர்ட்;
எஞ்சின் 2.5 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் + 2 எலக்ட்ரிக் மோட்டார்கள்
கியர்பாக்ஸ் இ- சிவிடி கியர்பாக்ஸ்;
அதிகபட்ச பவர் 194பிஎச்பி @ 5,700ஆர்பிஎம்;
அதிகபட்ச டார்க் 210என்எம் @ 4,200-4,400ஆர்பிஎம்;
எரிபொருள் கலன் கொள்திறன் 56 லிட்டர்கள்;
மைலேஜ் 18.32கிமீ/லி
டிரைவ்ஸ்பார்க் கருத்து

டிரைவ்ஸ்பார்க் கருத்து

புதிய லெக்சஸ் என்எக்ஸ் 300எச் சொகுசு எஸ்யூவியின் லக்சுரி மாடல் ரூ.53.18 லட்சம் விலையிலும், லெக்சஸ் என்எக்ஸ் 300எச் எஃப் -ஸ்போர்ட் மாடல் ரூ.55.18 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கின்றன. மிரட்டலான தோற்றம், ஹைப்ரிட் எரிநுட்பம், பாதுகாப்பு அம்சங்கள் என அனைத்திலும் சிறப்பாக இருந்தாலும், இதன் ரகத்தில் விலை அதிகமான மாடலாக இருப்பதே இதற்கு பாதகமான விஷயம்.

எடிட்டர் கருத்து

எடிட்டர் கருத்து

வசீகரமான தோற்றமும், ஹைப்ரிட் எரிநுட்பமும் இதன் முக்கிய சிறப்பம்சங்களாக கூற முடியும். அதேநேரத்தில், குறைவான ஹெட்ரூம், சிறிய பூட் ரூம் இடவசதி, செயல்திறன் குறைவான கியர்பாக்ஸ் போன்றவை இந்த காரை தேர்வு செய்வதிலிருந்து வாடிக்கையாளர்களை விலக செய்யும்.

மேலும்... #லெக்சஸ் #lexus #review
English summary
The NX for India is only available in hybrid guise in the form of the NX 300h. However, Lexus is offering the NX 300h in both Luxury and F-Sport trims. So does the Lexus NX 300h have what it takes to take on its German rivals like the Mercedes GLC, the BMW X3 and the Audi Q5 in the mid-size luxury SUV market? We got behind the wheel of the Lexus NX 300h F-Sport to find out.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark