நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற முரட்டுத்தனமான கார்... மஹிந்திரா பொலிரோ நியோ ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

மஹிந்திரா பொலிரோ கார் கடந்த 2000ம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது முதல் தற்போது வரை மஹிந்திரா பொலிரோ காருக்கு நல்ல வரவேற்பு இருந்து வருவதுடன், வாடிக்கையாளர்களின் விருப்பமான எஸ்யூவி மாடலாகவும் இது திகழ்கிறது. இந்த சூழலில், மஹிந்திரா பொலிரோ குடும்பத்தில் பொலிரோ நியோ என்ற புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கனவே டியூவி300 என்ற பெயரில் இருந்த எஸ்யூவி காரில் சில மாற்றங்களை செய்து, பிஎஸ்-6 எஞ்சினுடன் பொலிரோ நியோ என்ற பெயரில் இந்த புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

8.48 லட்ச ரூபாய் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் மஹிந்திரா பொலிரோ நியோ விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது மஹிந்திரா பொலிரோ நியோ காருக்கு முன்பதிவுகள் ஏற்கப்பட்டு வருகின்றன. டெலிவரி பணிகள் வெகு விரைவில் தொடங்கப்படவுள்ளது.

புதிய பொலிரோ நியோ காரை ஓட்டி பார்ப்பதற்காக, மஹாராஷ்டிரா மாநிலம் சாகன் நகரில் உள்ள மஹிந்திரா நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு நாங்கள் அழைக்கப்பட்டோம். அங்கு சில மணி நேரங்கள் புதிய மஹிந்திரா பொலிரோ நியோ காரை ஓட்டி பார்த்தோம். அப்போது எங்களுக்கு கிடைத்த அனுபவங்களை இந்த செய்தியின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

மஹிந்திரா பொலிரோ நியோ ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

டிசைன்

வழக்கமான பொலிரோ காரின் பழைய 'பாக்ஸி' ஸ்டைலில்தான் புதிய பொலிரோ நியோ காரும் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனினும் புதிய தோற்றம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, டிசைனில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் மஹிந்திரா டியூவி300 காரின் டிசைன் ஆதிக்கத்தையும் பார்க்க முடிகிறது.

முன் பகுதியில் பேஸிக் ஹெட்லேம்ப்பை மஹிந்திரா பொலிரோ நியோ பெற்றுள்ளது. இதில், ஹை மற்றும் லோ பீம் ஆகியவற்றுக்காக ரெஃப்லெக்டர் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் கார்னரிங் லைட்டும் க்ளஸ்ட்டரிலேயே இடம்பெற்றுள்ளது. க்ளஸ்ட்டருக்கு மேலே பிரகாசமான எல்இடி பகல் நேர விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் முன் பகுதியில் மஹிந்திரா நிறுவனத்திற்கே உரித்தான க்ரில் அமைப்பு, 6 செங்குத்தான ஸ்லாட்கள் உடன் வழங்கப்பட்டுள்ளது. முன் பகுதியை க்ரோம் மூலம் அழகுபடுத்தியும் உள்ளனர். அதே சமயம் பம்பரின் கீழ் பகுதியில் பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஹூட் பகுதியில் உள்ள லைன்கள் மற்றும் மடிப்புகள் காரை கம்பீரமாக காட்டுகின்றன.

மஹிந்திரா பொலிரோ நியோ ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

பக்கவாட்டு பகுதியை பொறுத்தவரை, 15 இன்ச் 5 ஸ்போக் அலாய் வீல்கள் கவனம் ஈர்க்கின்றன. காரின் ஒட்டுமொத்த அளவுடன் இது நன்றாக பொருந்தி போகிறது. மேலும் பாடியின் நிறத்திலேயே ஓஆர்விஎம்கள் வழங்கப்பட்டுள்ளன. முன் மற்றும் பின் பக்க டோர்களில் ஃபுட்ஸ்டெப்களும் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே காரில் ஏறுவதும், இறங்குவதும் எளிமையாக உள்ளது. அதே சமயம் காரை சுற்றிலும் வழங்கப்பட்டுள்ள பாடி கிளாடிங், முரட்டுத்தனமான தோற்றத்தை வழங்குகிறது.

மஹிந்திரா பொலிரோ நியோ ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

பின் பகுதியில் ஒருங்கிணைந்த ஸ்பாய்லரையும், அதற்கு அப்படியே கீழாக எல்இடி ஸ்டாப் லைட் பாரையும் இந்த கார் பெற்றுள்ளது. அத்துடன் டெயில்கேட்டின் மீது ஸ்பேர் வீலும் கொடுக்கப்பட்டுள்ளது. X வடிவ கவரை இது பெற்றிருப்பதுடன், அதன் மீது 'BOLERO' என எழுதப்பட்டுள்ளது. டெயில்கேட்டின் இடது பக்கம் Bolero Neo பேட்ஜூம், வலது பக்கம் N10 (வேரியண்ட்) பேட்ஜூம் வழங்கப்பட்டுள்ளன. இந்த கார் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்களை பெற்றுள்ளது. ஆனால் கேமரா வசதி வழங்கப்படவில்லை.

மஹிந்திரா பொலிரோ நியோ ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

இன்டீரியர்

இனி காரின் உள்ளே செல்வோம். புதிய மஹிந்திரா பொலிரோ நியோ விசாலமான கேபினை பெற்றுள்ளது. இந்த காரின் இன்டீரியரை இத்தாலியை சேர்ந்த உலகப்புகழ் பெற்ற ஆட்டோமொபைல் டிசைன் நிறுவனமான பினின்ஃபரீனா வடிமைத்துள்ளது. எனவே இன்டீரியர் சிறப்பாக உள்ளது.

இந்த காரின் டேஷ்போர்டு ட்யூயல் டோன் வண்ணத்தில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. தொடுவதற்கு கடினமாக இருந்தாலும், தரமான பிளாஸ்டிக் வழங்கப்பட்டுள்ளது. டோர் ட்ரிம் மற்றும் சென்டர் கன்சோல் ஆகிய இடங்களிலும் இதே பிளாஸ்டிக்கை காண முடிகிறது. டேஷ்போர்டில் ஸ்டோரேஜ் ஸ்பேஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே செல்போன், பர்ஸ் ஆகியவற்றை வைத்து கொள்ள முடியும்.

இந்த காரில் 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. க்ளைமேட் கண்ட்ரோலுக்கான பட்டன்கள் இந்த ஸ்க்ரீனுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இங்கே சில சார்ஜிங் சாக்கெட்களும் இடம்பெற்றுள்ளன. பவர் விண்டோவிற்கான ஸ்விட்ச்கள், ஹேண்ட்பிரேக்கிற்கு அருகில் வழங்கப்பட்டுள்ளன. இங்கேயும் ஸ்டோரேஜ் ஸ்பேஸ் இருக்கிறது.

மஹிந்திரா பொலிரோ நியோ ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

இந்த காரின் ஸ்டியரிங் வீல், சாஃப்ட் டச் மெட்டீரியலால் சுற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக க்ரில் நன்றாக கிடைக்கிறது. மேலும் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் எம்ஐடி ஸ்க்ரீன் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்காக ஸ்டியரிங் வீலில் சில கண்ட்ரோல்களும் வழங்கப்பட்டுள்ளன.

மஹிந்திரா பொலிரோ நியோ ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

இந்த காரின் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரின் மைய பகுதியில், 3.5 இன்ச் அளவுடைய எம்ஐடி ஸ்க்ரீன் கொடுக்கப்பட்டுள்ளது. காரை பற்றிய பல்வேறு தகவல்களை இது வழங்குகிறது. இந்த காரின் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் செமி-டிஜிட்டல் ஆகும். எம்ஐடி ஸ்க்ரீனின் இருபுறமும் டேக்கோ மீட்டர் மற்றும் ஸ்பீடோமீட்டர் இடம்பெற்றுள்ளன.

மஹிந்திரா பொலிரோ நியோ ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

சௌகரியம், நடைமுறை பயன்பாடு மற்றும் பூட் ஸ்பேஸ்

முன் பகுதியில் உள்ள ஓட்டுனர் மற்றும் பயணி என இருவருக்குமான இருக்கைகளையும் மேனுவலாகதான் அட்ஜெஸ்ட் செய்ய முடியும். ஆனால் ஓட்டுனர் இருக்கைக்கு உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. முன் பகுதி இருக்கைகள் சௌகரியமாகவே உள்ளன. ஆனால் கீழ் தொடைக்கு போதிய சப்போர்ட் இல்லை. அதேபோல் ஸ்டியரிங் வீல் டில்ட் ஆப்ஷனை மட்டுமே பெற்றுள்ளதால், சரியான டிரைவிங் பொஷிஷனை பெறுவதற்கு சற்று நேரம் ஆகலாம்.

மஹிந்திரா பொலிரோ நியோ ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

அதே நேரத்தில் இந்த காரின் இரண்டாவது வரிசை இருக்கைகளும் சௌகரியமாக உள்ளன. முன் பகுதியில் உள்ள இரண்டு இருக்கைகளுடன் ஒப்பிடும்போது, இங்கே கீழ் தொடைக்கு நல்ல சப்போர்ட் கிடைக்கிறது. இரண்டு பேர் மட்டும் பயணிப்பதாக இருந்தால் சென்டர் ஆர்ம்ரெஸ்ட்டை பயன்படுத்தி கொள்ள முடியும். ஆனால் சென்டர் ஆர்ம்ரெஸ்ட்டில் கப்ஹோல்டர்கள் வழங்கப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். கடைசியாக எதிர் எதிரே பார்த்தபடி இரண்டு இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. இவை குழந்தைகளுக்கோ அல்லது உயரம் குறைவானர்களுக்கோதான் ஏற்றதாக இருக்கும்.

மஹிந்திரா பொலிரோ நியோ ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

லக்கேஜ் வைக்க அதிக இடவசதி தேவைப்பட்டால் இந்த இருக்கைகளை மடக்கி வைத்து கொள்ள முடியும். இரண்டாவது வரிசை இருக்கைகள் உயர்ந்து இருக்கும்போது இந்த காரின் பூட் ஸ்பேஸ் 384 லிட்டர்கள் ஆகும். உங்களுக்கு இன்னும் அதிக இடவசதி தேவைப்பட்டால், இரண்டாவது வரிசை இருக்கைகளையும் மடக்கி வைத்து கொள்ளலாம்.

Dimensions Mahindra Bolero Neo
Length 3,995mm
Width 1,795mm
Height 1,817mm
Wheelbase 2,680mm
Boot Space 384 Litres
Ground Clearance 160mm
மஹிந்திரா பொலிரோ நியோ ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

இன்ஜின் செயல்திறன் & ஓட்டுதல் அனுபவம்

மஹிந்திரா பொலிரோ நியோ காரில், 1.5 லிட்டர் mHawk இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது டர்போ டீசல் இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 3,750 ஆர்பிஎம்மில் 100 பிஹெச்பி பவரையும், 2,250 ஆர்பிஎம்மில் 260 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது. ஆரம்பத்தில் பவர் டெலிவரி மந்தமாக இருக்கிறது. ஆனால் டர்போ வெளிப்பட தொடங்கிய பின், நல்ல டார்க் இருப்பதால் மஹிந்திரா பொலிரோ நியோ சிறப்பாக செயல்பட தொடங்குகிறது.

மஹிந்திரா பொலிரோ நியோ ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

அதே நேரத்தில் ECO டிரைவ் மோடை மஹிந்திரா பொலிரோ பெற்றுள்ளது. மேலும் திறன்மிக்க டிரைவிங்கிற்காக ESS (Electronic Start-Stop) உடன் மைக்ரோ ஹைப்ரிட் தொழில்நுட்பத்தையும் இந்த கார் பெற்றுள்ளது. கூடுதலாக மல்டி-டெர்ரெயின் தொழில்நுட்பத்தையும் இந்த கார் பெற்றுள்ளது. டிஃப்ரன்ஷியல் போல செயல்படும் இது, அதிக டிராக்ஸன் உடன் சக்தியை வீல்களுக்கு அனுப்பும். மஹிந்திரா பொலிரோ நியோ ரியர்வீல் டிரைவ் செட்-அப்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த காரில் கிளட்ச் இலகுவாக உள்ளது. கியர்களை மாற்றுவது எளிதாக இருக்கிறது. அதேபோல் ஸ்டியரிங் வீலின் ரெஸ்பான்சும் நன்றாக உள்ளது. ஆனால் அதிவேகத்தில் பயணிக்கும்போது பாடி ரோலை அதிகமாக உணர முடிகிறது. இந்த காரில் டார்க் திறன் நன்றாக இருப்பதால், நீங்கள் டாப் கியரில் குறைவான வேகத்தில் சென்று கொண்டிருந்தாலும் கூட, உடனடியாக வேகம் பிக்-அப் ஆகி விடுகிறது.

மஹிந்திரா பொலிரோ நியோ ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

ஆனால் டர்போ லேக் காரணமாக, இன்ஸ்டன்ட் ஆக்ஸலரேஷன் இல்லை. விரைவான ஆக்ஸலரேஷன் கிடைக்க வேண்டுமென்றால், நீங்கள் சரியான கியரில், சரியான வேகத்தில் இருக்க வேண்டும். இந்த காரின் முன் பகுதியில் டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் ட்ரம் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த பிரேக்குகள் சிறப்பாக செயலாற்றுகின்றன. மூன்று இலக்க வேகத்தில் சென்று கொண்டிருந்தாலும் கூட, காரை உடனடியாக நிறுத்த முடிகிறது.

ஆனால் நேரம் குறைவாக இருந்த காரணத்தால் மைலேஜை எங்களால் சோதிக்க முடியவில்லை. ஆனால் நகர பகுதிகளில் ஒரு லிட்டருக்கு 12 கிலோ மீட்டர் மைலேஜூம், நெடுஞ்சாலைகளில் ஒரு லிட்டருக்கு 15 கிலோ மீட்டர் மைலேஜூம் கிடைக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

மஹிந்திரா பொலிரோ நியோ ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

பாதுகாப்பு & முக்கியமான வசதிகள்

மஹிந்திரா பொலிரோ நியோ காரில் வழங்கப்பட்டுள்ள வசதிகளின் பட்டியல் நீளமானதாக இல்லை. எனினும் முக்கியமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

மஹிந்திரா பொலிரோ நியோ பாதுகாப்பு வசதிகள்:

 • அதிக வலிமையான ஸ்டீல் பாடி
 • ட்ரைவர் மற்றும் கோ-டிரைவருக்கு ட்யூயல் ஏர்பேக்குகள்
 • இபிடி உடன் ஏபிஎஸ்
 • ஆட்டோமேட்டிக் டோர் லாக்
 • அதிவேகத்தில் சென்றால் எச்சரிக்கும் வசதி
 • மஹிந்திரா பொலிரோ நியோவில் வழங்கப்பட்டுள்ள மற்ற முக்கியமான வசதிகள்:

  • 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம்
  • 3.5 இன்ச் எம்ஐடி டிஸ்ப்ளே
  • அனலாக் டயல்கள்
  • ப்ளூடூத்
  • க்ரூஸ் கண்ட்ரோல்
  • 6 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம்
  • டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?

   மஹிந்திரா பொலிரோ நியோ காரின் ஒரு சில விஷயங்களை நாங்கள் விரும்பவில்லை. குறிப்பாக கதவுகளை ஒரே முறையில் முழுமையாக மூட முடியவில்லை. இதற்கு அதிக சக்தியை பயன்படுத்த வேண்டியுள்ளது. அதேபோல் 3,000 ஆர்பிஎம்மை கடந்த பிறகு, இன்ஜின் சத்தம் கேபினுக்கு உள்ளே கேட்கிறது. என்விஹெச் லெவல்கள் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம். அதேபோல் நியூட்ரலில் இருக்கும்போது கியர் லிவர் அதிகமாக அதிர்கிறது.

   இவற்றை எல்லாம் தவிர்த்து விட்டு பார்த்தால், மஹிந்திரா பொலிரோ நியோ நிச்சயமாக நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற அருமையான கார்தான். இதில், நீங்கள் சிறிய அளவில் ஆஃப் ரோடு பயணங்களையும் செய்யலாம். நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற, அதே சமயம் முரட்டுத்தனமான மற்றும் ஓட்டுவதற்கும் நன்றாக உள்ள ஒரு காரை நீங்கள் தேடி கொண்டிருந்தால், புதிய மஹிந்திரா பொலிரோ நியோவை பரிசீலிக்கும்படி நாங்கள் உங்களுக்கு பரிந்துரை செய்கிறோம்.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra Bolero Neo First Drive Review: Design, Interior, Engine Performance & Driving Impressions. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X