மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியின் 12 முக்கிய சிறப்பம்சங்கள்!!

By Saravana

எஸ்யூவி வடிவமைப்பில் ஸ்பெஷலிஸ்ட் என்ற பெருமைக்குரிய இந்திய நிறுவனம் மஹிந்திரா. பொலிரோ, ஸ்கார்ப்பியோ, எக்ஸ்யூவி 500 என பல சிறப்பான மாடல்களை தந்த மஹிந்திரா நிறுவனம், இப்போது 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட புதிய மாடலை, மிக சவாலான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

வாடிக்கையாளர்களின் ஆர்வத்தை தூண்டியிருப்பதோடு, பண்டிகை காலத்தில் எஸ்யூவி வாங்க இருப்பவர்களின் பட்டியலிலும் இணைந்துள்ளது. 2017ம் ஆண்டு நம் நாட்டில் கொண்டு வரப்பட இருக்கும் பாதுகாப்பு கொள்கைகளுக்கு இணையான தரத்துடன் தயாரிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படும், இந்த எஸ்யூவியின் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

சேஸீ

சேஸீ

புதிய லேடர் ஃப்ரேம் சேஸீயில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இதனால், மஹிந்திரா பொலிரோ எஸ்யூவியைவிட இலகு எடை கொண்டதாக மாறியிருக்கிறது. புதிய சேஸீ சிறப்பான கையாளுமையை வழங்கும் என்று மஹிந்திரா தெரிவிக்கிறது. புதிய ஸ்கார்ப்பியோ உருவாக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்மில்தான் இந்த புதிய எஸ்யூவியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

புதிய மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி உறுதியான உடற்கூடு கொண்டதாக கட்டமைக்கப்பட்டுள்ளது. அனைத்து பக்கங்களிலும் மோதல்களை உள்வாங்கி, பயணிகளை பாதுகாக்கும் க்ரம்பிள் ஸோன் கொண்டது. பேஸ் மாடலில் ஏர்பேக்ஸ் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆப்ஷனலாகவும், பிற வேரியண்ட்டுகளில் நிரந்தர பாதுகாப்பு அம்சமாகவும் இடம்பெற்றிருக்கிறது. கார்னர் பிரேக் கன்ட்ரோல் சிஸ்டமும், வளைவுகளில் கார் திரும்பும்போது, அந்த திசையில் ஒளியை வழங்கும் ஸ்டேட்டிக் ஹெட்லைட்ஸ் சிஸ்டமும் உள்ளது.

 பொருட்களுக்கான இடவசதி

பொருட்களுக்கான இடவசதி

இந்த எஸ்யூவியில், 384 லிட்டர் கொள்ளளவு கொண்ட பொருட்கள் வைப்பதற்கான இடவசதி உள்ளது. இருக்கைகளை மடக்குவதன் மூலமாக, 720 கொள்ளளவு கொண்டதாக விரிவுப்படுத்திக் கொள்ள முடியும்.

வசதிகள்

வசதிகள்

டி4 வேரியண்ட்

பேஸ் மாடலில் பவர் விண்டோஸ், டில்ட் ஸ்டீயரிங் டிஜிட்டல் இம்மொபைலசர், ஹீட்டருடன் கூடிய ஏசி சிஸ்டம் ஆகியவை குறிப்பிட்டு கூறும்படி உள்ளன.

டி6 வேரியண்ட்

டி6 வேரியண்ட்டில் இருக்கும் வசதிகளுடன் சேர்த்து, கூடுதலாக கீ லெஸ் என்ட்ரி, வாய்ஸ் மெசேஜ் சிஸ்டம், புளூடூத் இணைப்பு வசதி கொண்ட 2 டின் ஆடியோ சிஸ்டம், ஃபுட் ஸ்டெப்ஸ் போன்றவை இடம்பெற்றிருக்கின்றன.

டி8 வேரியண்ட்

பேஸ் மாடல் மற்றும் நடுத்தர மாடலில் இருக்கும் வசதிகளை சேர்த்து, கூடுதலாக அலாய் வீல்கள், டியூவல் ஏர்பேக்ஸ், ஸ்டாட்டிக் பென்டிங் ஹெட்லைட் சிஸ்டம், எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் வசதியுடன் சைடு மிரர்கள், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், மைக்ரோ ஹைபிரிட் சிஸ்டம், உயரத்தை கூட்டிக் குறைக்கும் வசதியுடன் கூடிய ஓட்டுனர் இருக்கை, லம்பார் சப்போர், ரிவர்ஸ் அசிஸ்ட், ஃபேப்ரிங் அப்ஹோல்ஸ்டரி ஆகியவை குறிப்பிட்டு கூறலாம்.

எஞ்சின்

எஞ்சின்

புதிய மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியில் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.5 லிட்டர் எம்-ஹாக் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. டர்போசார்ஜர்கள் துணையில் இயங்கும் இந்த எஞ்சின் பொலிரோவைவிட கூடுதல் எரிபொருள் சிக்கனம் மற்றும் செயல்திறன் கொண்டதாக இருப்பது கவனிக்கத்தக்கது. அதிகபட்சமாக 84 பிஎச்பி பவரையும், 230 என்எம் டார்க்கையும் வழங்கும். மேலும், டாப் வேரியண்ட் மைக்ரோ ஹைபிரிட் சிஸ்டம் கொண்டதாக கிடைக்கிறது.

கியர்பாக்ஸ் ஆப்ஷன்

கியர்பாக்ஸ் ஆப்ஷன்

புதிய மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியில், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தவிர்த்து, ஆட்டோமேட்டட் மேனுவல் கியர்ஷிஃப்ட் என்ற புதிய வகை ஆட்டோமேட்டிக் மாடலிலும் கிடைக்கிறது. இது நகர்ப்புறத்தில் ஓட்டுபவர்களுக்கு சிறப்பான சாய்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான ஏஎம்டி கியர்பாக்ஸ் ரிகார்டோ நிறுவனத்துடன் இணைந்து மஹிந்திரா உருவாக்கியுள்ளது.

மைலேஜ்

மைலேஜ்

எக்கானாமிக்கல் மோடு மற்றும் மைக்ரோ ஹைபிரிட் ஸ்டார்ட்/ ஸ்டாப் சிஸ்டமும் நடைமுறையிலும் குறிப்பிட்டத்தக்க அளவு எரிபொருள் சிக்கனம் பெற உதவும். இந்த எஸ்யூவி லிட்டருக்கு 18.49 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எஸ்யூவியில் 60 லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் டேங்க் இருப்பதால், நீண்ட தூர பயணங்களை சுகமானதாக்கும்.

இருக்கை வசதி

இருக்கை வசதி

புதிய மஹிந்திரா டியூவி 300 எஸ்யூவியில் 5 பேர் தாராளமாக பயணிக்கலாம். பின்புறத்தில் இரண்டு ஜம்ப் இருக்கைகள் இருப்பதால், அதிகபட்சமாக 7 பேர் வரை செல்லாம். இந்த செக்மென்ட்டிலேயே மிகச்சிறப்பான ஹெட்ரூம் மற்றும் லெக்ரூம் இடவசதி கொண்ட மாடல்களில் ஒன்றாக குறிப்பிடப்படுகிறது.

 வடிவம்

வடிவம்

நீளம் - 3,995மிமீ

அகலம் - 1,835மிமீ

உயரம் - 1,839மிமீ

வீல்பேஸ் - 2,680மிமீ

 தரை இடைவெளி

தரை இடைவெளி

இந்த எஸ்யூவி 184மிமீ தரை இடைவெளி கொண்டுள்ளது. இதன்மூலமாக, அனைத்து சாலை நிலைகளிலும் தங்கு தடையின்றி செல்ல ஏதுவாகும்.

பிரேக் சிஸ்டம் & சஸ்பென்ஷன்

பிரேக் சிஸ்டம் & சஸ்பென்ஷன்

முன்புறத்தில் டபுள் விஷ்போன் சஸ்பென்ஷனும், பின்புறத்தில் ரிஜிட் ஆக்ஸில் மல்டிலிங்க் சஸ்பென்ஷனும் இருக்கிறது. அனைத்து சாலை நிலைகளிலும் இது மிகச்சிறப்பான சொகுசு பயணத்தையும், நீடித்த உழைப்பையும் வழங்கும். இதேபோன்று, முன்புறத்தில் டிஸ்க் பிரேக்குகளும், பின்புற சக்கரங்களில் டிரம் பிரேக் சிஸ்டமும் உள்ளது.

 வண்ணங்கள்

வண்ணங்கள்

வெர்வ் புளூ, க்ளேசியர் புளூ, டைனமோ ரெட், மெஜஸ்டிக் சில்வர், போல்டு பிளாக், மால்டென் ஆரஞ்ச் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது.

Most Read Articles
English summary
Here are given some stand out features of the Mahindra TUV 300 suv.
Story first published: Friday, September 11, 2015, 12:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X