ரேஞ்ச் மட்டுமல்ல எல்லாமே சூப்பர்... மஹிந்திரா எக்ஸ்யூவி 400 காரின் ரிவியூ இதோ...

மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் தனது எக்ஸ்யூவி 400 என்ற எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தியது. இந்த காரின் ப்ரீ புரோடெக்ஷன் காரை ஓட்டிப்பார்க்க வாய்ப்பு கிடைத்தது. அதை ரிவியூவை காணலாம்.

ரேஞ்ச் மட்டுமல்ல எல்லாமே சூப்பர் . . . மஹிந்திரா எக்ஸ்யூவி 400 காரின் ரிவியூ இதோ . . .

மஹிந்திரா நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் தனது எக்ஸ்யூவி 300 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனாக இஎக்ஸ்யூவி300 என்ற காரின் கான்செப்ட் காரை அறிமுகப்படுத்தியது. அப்பொழுதே இந்த காருக்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாகவிட்டது.

ரேஞ்ச் மட்டுமல்ல எல்லாமே சூப்பர் . . . மஹிந்திரா எக்ஸ்யூவி 400 காரின் ரிவியூ இதோ . . .

ஆனால் அதன் பின்பு வந்த கொரோனா பரவல் மற்றும் சப்ளை ஷாட்டேஜ் காரணமாக இந்த காரின் அறிமுகம் தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது. இதற்கிடையில் மஹிந்திரா நிறுவனம் பார்ன் எலெக்ட்ரிக் என்ற தனது சப் பிராண்டை உருவாக்கியது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி இந்நிறுவனம் 5 எலெக்ட்ரிக் கார்களை டீஸ் செய்தது. அதில் இந்த இஎக்ஸ்யூவி 300 கார் இல்லை.

ரேஞ்ச் மட்டுமல்ல எல்லாமே சூப்பர் . . . மஹிந்திரா எக்ஸ்யூவி 400 காரின் ரிவியூ இதோ . . .

இந்நிலையில் தற்போது மஹிந்திரா நிறுவனம் இந்த இஎக்ஸ்யூவி 300 கார் காரை எக்ஸ்யூவி 400 என்ற பெயரில் தற்போது பொதுப் பார்வைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் இந்தியாவின் எலெக்டரிக் மாற்க்கெட்டையே தலைகீழாக மாற்றம் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ரேஞ்ச் மட்டுமல்ல எல்லாமே சூப்பர் . . . மஹிந்திரா எக்ஸ்யூவி 400 காரின் ரிவியூ இதோ . . .

இந்நிலையில் இந்த எக்ஸ்யூவி 400 காரின் ப்ரீ புரோடெக்ஷன் காரை சென்னையில் உள்ள அந்நிறுவனத்தின் ஃபெசிலிட்டியில் ஓட்டிப்பார்த்தோம். இந்த எக்ஸ்யூவி 400 காரின் ரிவியூவை இங்கே காணலாம் வாருங்கள்.

ரேஞ்ச் மட்டுமல்ல எல்லாமே சூப்பர் . . . மஹிந்திரா எக்ஸ்யூவி 400 காரின் ரிவியூ இதோ . . .

டிசைன்

புதிய எலெக்ட்ரிக் மஹிந்திரா எக்ஸ்யூவி 400 காரின் டிசைனை பொருத்தவரை எக்ஸ்யூவி300 காரின் டிசைனை லேசாக மாற்றி புதிய காப்பர் கலர் ஹைலேட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காரின் முகப்பு பக்க கிரில் முற்றிலும் மூடப்பட்ட நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் வாகனத்திற்கு குறைவான கூலிங்கே போதுமானது என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளது.

ரேஞ்ச் மட்டுமல்ல எல்லாமே சூப்பர் . . . மஹிந்திரா எக்ஸ்யூவி 400 காரின் ரிவியூ இதோ . . .

முகப்பில் உள்ள கிரில் பகுதியில் மஹிந்திராவின் இரட்டை இறகு லோகோ காப்பர் ஃபினீஷில் கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற காப்பர் ஹைலேட்கள் கார்களை சுற்றிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இதே போல காரின் பின்புறத்திலும் இரட்டை இறகு லோகோ கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காரின் ரூஃப் கிளாஸி காப்பர் ஷேடில் கொடுக்கப்பட்டுள்ளது.

ரேஞ்ச் மட்டுமல்ல எல்லாமே சூப்பர் . . . மஹிந்திரா எக்ஸ்யூவி 400 காரின் ரிவியூ இதோ . . .

இந்த எக்ஸ்யூவி 400 காரின் ஒட்டு மொத்த புரோஃபைலை பார்கஅகம் போது அப்படியே எக்ஸ்யூவி 300 காரின் லுக்கையே கொண்டுள்ளது. இந்த எக்ஸ்யூவி 400 கார் எஸ்யூவி 300 காரை விட நீளம் அதிகமாக இருந்தாலும் அதே 16 இன்ச் அலாய் வீல்கள் தான் கொடுக்கப்பட்டுள்ளது. டெயில் லேம்ப்களும் அதே வடிவில் அதே அம்சத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

ரேஞ்ச் மட்டுமல்ல எல்லாமே சூப்பர் . . . மஹிந்திரா எக்ஸ்யூவி 400 காரின் ரிவியூ இதோ . . .

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி 400 கார் மொத்தம் 5 கலர் ஆப்ஷன்களில் வருகிறது. ஆர்க்டிக் ப்ளு, எவரெஸ்ட் ஒயிட், கேலக்ஸி க்ரே, நேப்போலி பிளாக் மற்றும் இன்ஃபினிட்டி ப்ளு ஆகிய கலர்களில் வருகிறது. இத்தனை கலர்களிலும் டூயல் டோன் ரூஃப் ஆப்ஷனாக காப்பர் கலர் ரூப் ஆப்ஷனுடனும் வருகிறது.

ரேஞ்ச் மட்டுமல்ல எல்லாமே சூப்பர் . . . மஹிந்திரா எக்ஸ்யூவி 400 காரின் ரிவியூ இதோ . . .

உட்கட்டமைப்பு மற்றும் அம்சங்கள்

மஹிந்திரா எக்ஸ்யூவி 400 காரின் உட்புறத்தைப் பொருத்தவரை எக்ஸ்யூவி 300 காரின் உட்கட்டமைப்பில் சில மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. உட்புறம் முழுவதும் கருப்பு நிற ஃபினிஷ் கொடுக்கப்பட்டுள்ளது. ஏசி வென்ட்கள், சவுண்ட் மற்றும் ஏசி கண்ட்ரோல் ஆகிய பகுதிகளைச் சுற்றிலும் காப்பர் நிறம் கொடுக்கப்பட்டுள்ளது.ஸ்டியரிங் வீல் நடுவே இரட்டை இறகு லோகா காப்பர் நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. கியர் செலக்டர் பகுதியைச் சுற்றிலும் ஸ்டெயின் காப்பர் நிறம் கொடுக்கப்பட்டுள்ளது.

ரேஞ்ச் மட்டுமல்ல எல்லாமே சூப்பர் . . . மஹிந்திரா எக்ஸ்யூவி 400 காரின் ரிவியூ இதோ . . .

சீட்களை பொருத்தவரை சொகுசாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஸ்போர்ட் ப்ளு நிற நூல்களால் தைக்கப்பட்டுள்ளது சிறப்பாக இருக்கிறது. இந்த புதிய எக்ஸ்யூவி 400 காரின் உட்புறத்தில் பெரும் பகுதியில் ஹார்டு பிளாஸ்டிக் பிளானோ பிளாக் நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. சென்டர் கன்சோலில் ஃபிங்கர் மேனேஜ்மெண்ட் எல்லாம் ஸ்பால்ஜி ஃபீலை தருகிறது.

ரேஞ்ச் மட்டுமல்ல எல்லாமே சூப்பர் . . . மஹிந்திரா எக்ஸ்யூவி 400 காரின் ரிவியூ இதோ . . .

சென்டர் கன்சோலில் 7 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் கார் பிளே ஆகியவற்றை சப்போர்ட் செய்யும். இந்த இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மஹிந்திராவின் புதிய அட்ரென்னோ எக்ஸ் என்ற சாஃப்ட்வேரில் இயங்கும். மேலும் இந்த காரில் ப்ளு சென்ஸ்+ என்ற கனெக்டெட் தொழிற்நுட்பம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் OTA அப்டேட், டீட்டெய்ல்டு ரூட் பிளானிங், ஆகிய அம்சங்கள் இருக்கிறது. ஆனால் இந்த அம்சங்களை எங்கள் டிரைவிங்கின் போது பயன்படுத்த முடியவில்லை. நாங்கள் ப்ரீ புரோடெக்ஷன் காரை தான் ஓட்டிப்பார்த்தோம்.

ரேஞ்ச் மட்டுமல்ல எல்லாமே சூப்பர் . . . மஹிந்திரா எக்ஸ்யூவி 400 காரின் ரிவியூ இதோ . . .

புதிய எக்ஸ்யூவி 400 காரை பொருத்தவரை டூயல் சோன் கிளைமேட் கண்ட்ரோல், சிங்கள் பேன் சன் ரூப், க்ரூஸ் கண்ட்ரோல் ஆகிய அம்சங்கள் இருக்கிறது. இந்த காரின் பாதுகாப்பு அம்சமாக 6 ஏர்பேக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக், ஐஎஸ்ஓ ஃபிக்ஸ் சைல்டு சீட், பேட்டரி மற்றும் மோட்டாருக்காக IP67 தூசு மற்றும் தண்ணீர் ப்ரூப் கொடுக்கப்பட்டுள்ளது.

ரேஞ்ச் மட்டுமல்ல எல்லாமே சூப்பர் . . . மஹிந்திரா எக்ஸ்யூவி 400 காரின் ரிவியூ இதோ . . .

பவர் டெரைன் மற்றும் டைமென்ஷன்

மஹிந்திரா நிறுவனம் பல எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்காக லைன்அப் செய்து வைத்து வரும் நிலையில் இதில் முதல் காராக இந்த எக்ஸ்யூவி 400 கார் வருகிறது. இந்த காரில் ஒரு எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. அதுவும் முன்பக்க ஆக்ஸில் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

ரேஞ்ச் மட்டுமல்ல எல்லாமே சூப்பர் . . . மஹிந்திரா எக்ஸ்யூவி 400 காரின் ரிவியூ இதோ . . .

இந்த பெர்மனென்ட் மேக்னட் சிங்க்ரோனைசஸ் மோட்டார் 147.5 பிஎச்பி பவரையும் 310 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இது சிங்கிள் ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் மொத்தம் 3 முக்கியமான டிரைவ் மோட்கள் உள்ளது. இது பவர் டெலிவரி, ரீஜெனரேட்டிவ் சிஸ்டம், ஸ்டிரிங் ஃபீல் ஆகியவற்றை மாற்றியமைக்கிறது. ஃபன்,ஃபாஸ்ட், ஃபியர்லெஸ் ஆகிய 3 மோட்கள் இந்த காரில் உள்ளது. இதுவும் சிங்கிள் பெடல் டிரைவ் மோடில் இயங்கும் திறன் கொண்டது.

ரேஞ்ச் மட்டுமல்ல எல்லாமே சூப்பர் . . . மஹிந்திரா எக்ஸ்யூவி 400 காரின் ரிவியூ இதோ . . .

இந்த காரில் 39.5kWh அதிக அடர்த்தி கொண்ட பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இது முழு சார்ஜில் 456 கீ.மீ வரை இயங்கும் திறன் கொண்டது. இந்தகாரின் பேட்டரியை சார்ஜ் செய்ய 3 வெவ்வேறு சார்ஜிங் ஸ்பீடு ஆப்ஷன்கள் உள்ளன. இந்த காரில் உள்ள 16A (3.3kW AC) டொமெஸ்டிக் சாக்கெட் மூலம் 0-100 சதவீத சார்ஜ் ஏற 13 மணி நேரம் எடுத்துக்கொள்ளும். இதுவே 7.2kW பிளக் பாய்ண்டில் இதன் நேரம் பாதியாக குறையும். அதிகபட்சமாக 50kW DC சார்ஜர் மூலம் 0-80 சதவீத பேட்டரியை 50 நிமிடத்தில் சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

ரேஞ்ச் மட்டுமல்ல எல்லாமே சூப்பர் . . . மஹிந்திரா எக்ஸ்யூவி 400 காரின் ரிவியூ இதோ . . .

இந்த மஹிந்திரா எக்ஸ்யூவி 400 காரை பொருத்தவரை 4200 மிமீ நீளம், 1821 மிமீ அகலம், 1634 மிமீ உயரம் மற்றும் வீல்பேஸ் 2600 மிமீ நீளம் கொண்டது. முக்கியமாக இந்த கார் 378 லிட்டர் ஃபூட் வசதியைக் கொண்டுள்ளது.

ரேஞ்ச் மட்டுமல்ல எல்லாமே சூப்பர் . . . மஹிந்திரா எக்ஸ்யூவி 400 காரின் ரிவியூ இதோ . . .

டிரைவிங் இம்பிரஷன்

மஹிந்திரா எக்ஸ்யூவி 400 காரின் எலெக்ட்ரிக் பவர் டெரைனை பொருத்தவரை வேகமாக செயல்படும் டிரைவ் மோட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் டார்க் மிக விரைவாக கிடைத்து விடுகிறது மஹிந்திரா எக்ஸ்யூவி 400 கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 8.3 நொடியில் எட்டிப் பிடிக்கிறது. இந்த கார் அதிகபட்சமாக 150 கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது.

ரேஞ்ச் மட்டுமல்ல எல்லாமே சூப்பர் . . . மஹிந்திரா எக்ஸ்யூவி 400 காரின் ரிவியூ இதோ . . .

3 டிரைவ் மோட்கள் இந்த காரில் உள்ளன. ஃபன், ஃபாஸ்ட் மற்றும் ஃபியர்லெஸ் ஆகிய மோட்களும் ஸ்டியரிங், ரீஜென், பெர்பாமென்ஸ் ஆகியவற்றை ட்யூன் செய்கிறது. ஃபன் மோடில் அதிகபட்சம் 95 கி.மீ வேகம் வரை செல்ல முடியும். இதில் ஸ்டியரிங் லிட்டாகவும், த்ராட்டல் ரெஸ்பான்ஸ் லேக் ஆகவும் இருக்கிறது.

ரேஞ்ச் மட்டுமல்ல எல்லாமே சூப்பர் . . . மஹிந்திரா எக்ஸ்யூவி 400 காரின் ரிவியூ இதோ . . .

ஃபாஸ்ட் மோடை பொருத்தவரை மோட்டரின் 90 சதவீதச் செயல்பாட்டை எடுத்துக்கொள்கிறது. இந்த மோடில் 135 கி.மீ வேகம் வரைசெல்ல முடியும். த்ராட்டலும் வேகமாக ரெஸ்பான்ஸ் செய்கிறது. ஸ்டிரிங்கை பொருத்தவரை ஃபன் மோடை காட்டிலும் சற்று ஹெவியாக இருக்கிறது.

ரேஞ்ச் மட்டுமல்ல எல்லாமே சூப்பர் . . . மஹிந்திரா எக்ஸ்யூவி 400 காரின் ரிவியூ இதோ . . .

ஃபியர் லெஸ் மோட்டை பொருத்தவரை ஸ்டியரிங் இன்னும் ஹெவியாக இருக்கிறது. மோட்டாரின் முழுத் திறனும் காருக்கு கிடைக்கிறது. இந்த மோடில் 150 கீ.மீ வேகம் வரை பயணிக்க முடியும். நாங்கள் இந்தக் காரை மஹிந்திரா டெஸ்ட் டிராக்கில் 160 கி.மீ வேகம் வரை பயணித்தோம்.

ரேஞ்ச் மட்டுமல்ல எல்லாமே சூப்பர் . . . மஹிந்திரா எக்ஸ்யூவி 400 காரின் ரிவியூ இதோ . . .

இந்த 3 மோட்களும் வெவ்வேறு ரீஜெனரேட்டிவ் டிரைவ் மோட்களை வழங்குகிறது. ஃபன் மோடிலிருந்து பாஸ்ட் மோடிற்கு மாறும் போது ரீஜென் லெவல் குறைக்கிறது. இதே போலதான் ஃபியர்லெஸ் மோடும். மஹிந்திரா இந்தக் காரை ஒன் பெடல் டிரைவிங் சிஸ்டமாக உருவாக்கியுள்ளது. வெறும் த்ராட்டல் பெடல் வைத்தே இந்த காிரல் பயணிக்க முடியும். கடும் டிராஃபிக்கில் டிரைவ் செய்ய எரிச்சல் படுபவர்களுக்கு இந்த கார் சிறப்பான காராக இருக்கும்.

ரேஞ்ச் மட்டுமல்ல எல்லாமே சூப்பர் . . . மஹிந்திரா எக்ஸ்யூவி 400 காரின் ரிவியூ இதோ . . .

மஹிந்திரா எக்ஸ்யூவி 400 காரின் சஸ்பென்சன் கொஞ்சம் ஸ்டிஃபாக இருக்கிறது. ஸ்டிரிங்கள் குறைவான வேகத்தில் லைட்டாகவும், வேகம் செல்ல செல்ல ஹெவியாகவும் மாறுகிறது. இதனால் கார் 100கி.மீ வேகத்திற்கு மேல் பயணித்தாலும் காஃபிடென்ஸாக பயணிக்க முடிகிறது.

ரேஞ்ச் மட்டுமல்ல எல்லாமே சூப்பர் . . . மஹிந்திரா எக்ஸ்யூவி 400 காரின் ரிவியூ இதோ . . .

நாங்கள் இந்த காரை மஹிந்திராவின் டெஸ்டிங் டிராக்கில் மட்டுமே ஓட்டிப்பார்த்தோம். இது ஸ்மூத்தான ஒரு டிராக். இந்தியாவில் சாலைகளில் இது எப்படி இயங்குகிறது எனத் தெரிந்து கொள்ள முறையான டெஸ்ட் டிரைவிற்கு காத்திருக்க வேண்டும்.

ரேஞ்ச் மட்டுமல்ல எல்லாமே சூப்பர் . . . மஹிந்திரா எக்ஸ்யூவி 400 காரின் ரிவியூ இதோ . . .

மஹிந்திரா எக்ஸ்யூவி 400 காரில் அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பிரேக் சிறப்பாக செயல்படுகிறது. இதைச் சுலபமாக பயன்படுத்த முடிகிறது. ரீஜென் பிரேக்கிங் சிஸ்டம் இந்த காரில் சிறப்பாக இருக்கிறது. முக்கியமாக காரை விரைவாக ஸ்டாப் செய்ய இந்த சிஸ்டம் உதவுகிறது.

ரேஞ்ச் மட்டுமல்ல எல்லாமே சூப்பர் . . . மஹிந்திரா எக்ஸ்யூவி 400 காரின் ரிவியூ இதோ . . .

மஹிந்திரா நிறுவனம் சொல்லும் ரோஞ்ச் எந்த அளவிற்கு ரியல் வேர்ல்டில் சாத்தியம் எனத் தெரியாது. இதை ப்ரீ புரோடெக்ஷன் காரிலும் டெஸ்ட் செய்ய முடியாது. இந்த காரின் NVH லெவல் காருக்குள் சிறப்பாக இருக்கிறது. அதிக வேகத்தில் செல்லும் போதும் டயர் சத்தம் காருக்குள் கேட்கவில்லை.

ரேஞ்ச் மட்டுமல்ல எல்லாமே சூப்பர் . . . மஹிந்திரா எக்ஸ்யூவி 400 காரின் ரிவியூ இதோ . . .

இறுதி தீர்ப்பு

மஹிந்திரா நிறுவனத்தின் இந்த எலெக்ட்ரிக் கார் தற்போது எலெக்ட்ரிக் கார் உலகில் தனிக்காட்டு ராஜாவாக இருக்கும் டாடா நிறுவனத்திற்கு பெரும் சவாலை கொடுத்துள்ளது. டாடா கார்களை விட இந்த கார் பெரியதாகவும், அதிக பவர்ஃபுல் மற்றும் கிளைம் செய்யப்பட்ட ரேஞ்சும் அதிகமாக இருக்கிறது. இந்த கார் ஜனவரி 2023 விற்பனைக்கு வரும் போது எலெக்ட்ரிக் வாகன உலகை ஒரு கலக்கு கலக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இந்தக் காரை விரைவில் ரியல் வேர்ல்டில் ஒட்டும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைக்கும் என நம்புகிறோம். அப்பொழுது இதை விட அதிகத் தகவல்கள் கொண்ட ரிவியூவை நீங்கள் எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
English summary
Mahindra XUV 400 Electic Suv review in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X